Tuesday, October 4, 2016

சு.சாமி, வைகோ போன்றவர்கள் வாய்திறக்காது ஆச்சரியம்தான்




இன்னும் முதல்வரின் உடல்நலம் குறித்து இந்த சுப்பிரமணியன் சாமி, வைகோ போன்றவர்கள் வாய்திறக்காது ஆச்சரியமாக இருக்கின்றது.


எங்கோ இருந்த புலிகளின் மர்மத்தை எல்லாம் விரல்நுனியில் வைத்திருந்த வைகோவிற்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிலவரம் தெரியாது என்பது நம்பகூடியதா? மனிதர் எங்கெல்லாம் நடையாய் நடந்தவர்


இந்த அப்பல்லோ வரை நடக்கமுடியாதா?





சரி, மனிதர் அவருக்கான டோக்கன் வரும் வரை காத்திருப்பார். திருமாவிற்கான டோக்கன் இப்பொழுதுதான் கிடைத்திருக்கின்றது, அடுத்து வைகோ தான்

சரி, இந்த சு.சாமி என்ன செய்துகொண்டிருப்பார்?

எமது யூகம் சரியாக இருந்தால் உலக நாடுகளில் இருந்து அவருக்கு தகவல்கள் சென்றுகொண்டே சென்று கொண்டு இருக்கும்.

எந்த மருந்து? எதற்கான சிகிச்சை? என்ன செலவு? வெளிநாட்டு டாக்டர்களுக்கு என்ன சம்பளம்? எப்படி செட்டில் செய்யபட்டது? எந்த வங்கி? என்ன தேதி? விசா எப்படி வழங்கபட்டது? இதுபோன்ற தகவல்கள் நிச்சயம் அவருக்கு வந்து சேர்ந்திருக்கும்

மனிதருக்கு அதோடு கூட இன்னொரு கட்டளையும் வந்திருக்கும்.

"ஸ்லீப்பிங் செல்லான நீ அமைதி காப்பாயாக, எப்பொழுது கட்டளை வருகின்றதோ அப்பொழுது வாய் திறந்தால் போதும்.."

ஆக எல்லாம் கையில் வைத்திருக்கும் சு.சாமி கட்டளை கிடைத்தவுடன் களத்தில் இறங்கி என்னிடம் அந்த ஆதாரம், ரிச்சர்டு ஜாதகம், அப்பல்லோ புளூ பிரிண்ட் எல்லாம் இருப்பதாக குதிப்பார்

கட்டளை வரவில்லை என்றால் தூங்கியே விடுவார், அவரை வைத்தும் ஒரு மாதிரியான அரசியல் நடக்கும் தேசமிது.






No comments:

Post a Comment