Tuesday, October 25, 2016

மருதிருவருக்கு "வீர வணக்கம்"...



Image may contain: 1 person , sunglasses


தெற்கே நடந்த சுதந்திரபோரில் மருது சகோதரர்களின் போராட்டம் குறிப்பிடதக்க வீர போராட்டம்.


வேலுநாச்சியார் தளபதிகளாகவும், ஊமைதுரையின் நண்பர்களாகவும் மானமிக்க போராட்டத்தினை அவர்கள் நடத்தி வெள்ளையனுக்கு சவால் விட்டவர்கள்


மிக சிறந்த வீரர்கள், வெள்ளையனே சொன்னது போல "இவர்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டால் இந்த இந்தியாவினையே பிடிக்கலாமே, முடிந்தவரை நம்பக்கம் இழுக்க நினைப்போம்"





ஆனால் மானமிக்க அவர்கள் இறுதிவரை மண்டியிடவில்லை.

வரலாற்றின் ரகசிய பக்கங்கள் அதனை சொல்கின்றன,

வெள்ளையன் காட்டிய தந்திரங்களில் ஒன்று தளபதிகளுக்கு ஆசையூட்டுவது, அடுத்த நிலையில் இருப்பவர்களை வளைத்துபோட்டு மன்னை கொல்வோம், உன்னை மன்னராக்குவோம் என துரோக வெறியூட்டி காரியம் சாதிப்பது

திப்பு சுல்தான், வங்கத்து நவாப் என பல இடங்களில் அப்படித்தான் வெள்ளையர் சாதித்தனர்.

ஆனால் விசுவாசமிக்க மருது சகோதரர்களிடம் அது எடுபடவில்லை, ராஜ விசுவாசமும் நாட்டு பற்றும் அவர்களின் ரத்ததில் கலந்திருந்தது.

மானமிழந்து, ராஜதுரோகம் செய்து கிடப்பது அரசே ஆயினும் அதனை ஏற்பது அவமானம் என கருதிய பெரும் உத்தம குணம் அவர்களிடம் இருந்தது, அதனை விட போராடி சாவது மேல் என்ற மான உணர்வு இருந்தது.

வீரமுடன் யுத்தத்தினை எதிர்கொண்டனர்.

பெரிய மருது கொல்லபட்டான், இளைய மருது சிக்கவில்லை

அவன் அகப்படவில்லை என்றால், அவனால் வணங்கபட்ட காளையார் கோவிலை தகர்க்கபோவதாக பீரங்கிகொண்டு மிரட்டினர் வெள்ளையர்

ஆலயம் காக்க தானே சரணடைந்தான் சின்ன மருது. காளையார் கோவில் கோபுரம் எக்காரணம் கொண்டும் இடிக்கபட கூடாது என சத்தியம் வாங்கிகொண்டபின் மரணத்தை தழுவினான் அவன்.

இன்று அவர்களின் நினைவு நாள்.

காளையார் கோவில் கோபுரமும், அதன் மீது அவன் கொண்ட தீவிர பற்றும் நினைவுக்கு வருகின்றன‌

அக்கோபுரமும், இந்திய தேசியமும் வாழும் காலம்வரை மருது சகோதரர்களும் வாழ்வார்கள்

"தேசியமும் தெய்வீகமும் எமது கண்கள்.." என பசும்பொன் சிங்கம் முழங்கியதும் இந்த வீர வரலாற்றில் இருந்தேதான்

அந்த வார்த்தையினை இப்பொழுது சொல்லலாம், ஆழ்ந்த அர்த்தமுண்டு

மருதிருவருக்கு "வீர வணக்கம்"












No comments:

Post a Comment