Tuesday, October 11, 2016

அதன் பிறகு ராகுல் என்ன செய்வார்?

திருநாவுக்கரசரை மாநில தலைவராக்கி அதன் மூலம் அதிமுகவுடன் காங்கிரஸ் நெருங்கும் திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் நடக்கின்றது என்கின்றார்கள்


ராகுல் அப்பல்லோ வந்ததும் அப்படித்தான் என்கின்றார் இன்னொருவர்.


இப்படி இவர்களாக சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், கூட்டணி உறுதி, உள்ளாட்சி தேர்தலில் உறவு வரும் என ஏராள தியரிகள்.




ஆனால் திருநாவுக்கரசர் அப்படி சரண்டர் ஆகவேண்டும் , பேசாமல் பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னால் நின்று, கேட்கவேண்டியதை கேட்டு ஹிஹிஹிஹி என கட்சியில் இணைந்து பொன்மன செம்மலின் 1980களை திரும்ப கொண்டுவர பாடுபடுவேன் என சொல்லி இருக்கலாம்


இப்படி காங்கிரசில் இருந்து அங்கே சரண்டர் ஆவது ஏன் என்பது தெரியவில்லை, அங்கு கூட்டணி என்றாலே இன்னொரு அடிமை என்றுதான் பொருள்.


பாதுகாபான சரண்டர் என ஏதும் நினைக்கின்றாரோ என்னமோ?


எப்படியும் போகட்டும், இவர்களாக பேசிகொண்டிருக்கின்றார்கள்


மாண்புமிகு முதல்வர் குணமடைந்து வரட்டும், அவரின் கோரிக்கைகள் எப்படி இருக்கும்? இப்படி இருக்கும்


"மிஸ்டர் ராகுல், இந்த திருநாவுக்கரசரை தலைவர் பதவியிலிருந்து தூக்குங்கள், இளங்கோவனை கட்சியினை விட்டே விரட்டுங்கள்


ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவியினை முடக்கவேண்டும், அவருக்கு உடல்நலம் நன்றாக இருக்கின்றதோ இல்லையா தெரியாது, ஆனால் அவரை அப்பல்லோவில் ஒருநாளாவது தங்க வைக்கவேண்டும்


கடைசியாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கவேண்டும்,


இதனை எல்லாம் செய்தால் உங்கள் கட்சியுடன் கூட்டணிக்கு ரெடி. சரியென்றால் சொல்லுங்கள் நான் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிடுகின்றேன்,


அதில் என் கட்சி சின்னத்தில் நீங்கள் கையில் இருக்கும் 5 விரல்போல எங்காவது 5 இடங்களில் மட்டும் போட்டியிட்டு கொள்ளலாம்


அதுவும் மேடையில் நான் பேசும்பொழுது ராகுல் கூட்டத்தை பார்த்து கைகூப்பி நிற்கவேண்டும், இந்த தங்கபாலு,இளங்கோவன் போன்றவர்கள் எல்லாம் அவர் அருகில் முழங்காலில் நிற்கவேண்டும், புரிகின்றதா?"


அதன் பிறகு ராகுல் என்ன செய்வார்? அப்பல்லோ ராக்கெட் ஏறி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கே ஓடிவிடுவார்



No comments:

Post a Comment