Thursday, June 30, 2016

இணையதள கொடூரமும், ஊடக தர்மமும்

ஒரு பெண்ணின் படத்தினை மார்பிங் செய்து உலவ விட்டிருக்கின்றான் ஒருவன்.

அப்பெண்ணின் குடும்பமோ கதறிகொண்டு காவல்நிலையம் சென்றிருக்கின்றது, அங்கோ சிலர் லஞ்சம் பெற்றுகொண்டு , சர்வர் அண்டார்டிக்கா அருகே இருக்கின்றது, படம் அழிப்பதற்கு நெடுநாள் ஆகும் என்றிருக்கின்றார்கள்.

FB_IMG_1467283800540

அவர்கள் தொழில்நுட்ப அறிவு அவ்வளவுதான்.

மகா அச்சமுற்ற அந்த அபலைபெண் தூக்கில் தொங்கி இறந்திருக்கின்றாள், விஷயம் பெரிதாக எஸ்பி மன்னிப்பு கேட்டு , சம்பந்தபட்ட காவலரை சஸ்பெண்ட் செய்துவிட்டாராம்.

2 நாளில் அப்படம் அகற்றபட்டது, விவகாரம் மூடிமறைக்கபட்டுகொண்டிருக்கின்றது, இன்னும் உருப்படியான குரல் எழவில்லை, முதல்வர் வாய் திறந்ததாக தெரியவில்லை.

இவ்வளவிற்கும் அவர் கையிலிருக்கும் துறையின் பெரும் தவறு இது, ஆனாலும் மவுனம் ஏன்?

காரணம் அவளுக்கு யாருமில்லை, வறுமையான குடும்பம், படிப்பறிவில்லா பெற்றோர், கேட்க யாருமில்லா பின்புலம்.

அவர்கள் பெற்றோரின் இந்த பெரும் கொடுமையான துயரத்திற்கு யார் காரணம்? இவர் பெற்றோரை யாரும் சென்று பார்க்கவுமில்லை, அவர்களுக்கு ஆதரவு சொல்லவுமில்லை,

காரணம் இவர்கள் ஏழைகள்.

காவல்துறை மின்னல்வேக நடவடிக்கை எடுத்திருந்தால் இக்குடும்பம் இப்படி சிதறாது

இதில் மகா கொடுமை என்னவென்றால் குற்றவாளி அப்பெண்ணின் போட்டோவினை மார்பிங் செய்து போனில் பரப்பி இருக்கின்றான்,

புகார் செய்த பெற்றோரிடம் காவலர் கேட்டது லஞ்சமாக ஒரு போன். செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. எப்படிபட்ட கொடூரம் இது.

இறுதியாக குற்றவாளி சிக்கிவிட்டான், படம் அகற்றபட்டுவிட்டது, ஆனால் அந்த அபலைபெண் உலகில் இல்லை. குற்றவாளி முகத்தை மூடி கொண்டு செல்லபடுகின்றான் (அந்த சவமுகத்தை காட்டினால்தான் என்ன?), லஞ்சம் வாங்கிய காவலர் முகத்தையே காணவில்லை,

ஊடக தர்மம்.

ஸ்வாதிக்காக பொங்கும் மீடியாக்கள் இப்பெண்ணை கண்டுகொள்ளவே இல்லை, ஆனால் இருவரும் இளம்பெண்கள், வாழவேண்டிய பெண்கள். வினுப்பிரியாவின் சாவு தடுத்திருக்ககூடியது

இம்மாதிரியான மகளிர் மீதான சைபர் குற்றங்களுக்கு தனி பிரிவு மாவட்டம்தோறும் அமைக்கபடவேண்டும் என்பதை உணர்த்தும் கொடூரம் இது

என்ன செய்வது இந்த திருநாட்டில் யாராவது செத்துதானே அடுத்தவர் சாகாமல் காப்பாற்ற வேண்டும், இந்நாட்டின் தலைவிதி அது.

மகள்களை இழந்த தந்தைகளுக்குத்தான் தெரியும் அந்த வலி,

ஆறாத பெரும் வலி, மரணம் வரை நொடிக்கு நொடி கொன்றுகொண்டே இருக்கும் வலி.

பெலாரஸ் : நாடும் மக்களும்

பெலாரஸ் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நிலை அப்படித்தான் இருக்கின்றது,

மக்கள் கவுரமான வேலைகளை நாடாமல் வியர்வை சிந்தும் வேலைகளையும் செய்யவேண்டும் என பொருள்படும் வகையில், அதாவது கோர்ட் சூட்டுகளை களைந்து கடும் உழைப்பு கோரும் விவசாயம் போன்ற‌ வேலைகளுக்கும் செல்லவேண்டும் என்ற வகையில் கோரிக்கை வைத்தார் அதிபர்.

FB_IMG_1467284714432

வியர்வையால் நனையட்டும் உங்கள் ஆடை, அதனை கழற்றி வைக்கும் அழவிற்கு வியர்வை சிந்த நீங்கள் உழைக்க வேண்டும் என ஏதோ சொல்லிவிட்டார்

அவ்வளவுதான், உத்தரவு எஜமான் என சொல்லிவிட்டு ஆடைகளை துறந்துவிட்டு அலுவகங்களில் வேலை பார்த்து அதிபர் முகத்தில் கரி பூசுகின்றார்கள் பெலாரஸ் மக்கள். அதிபரை கேவலபடுத்துகின்றார்களாம், அதிபர் வெளியில் தலை காட்டமுடியாமல் தவிக்கின்றார்.

அவர்கள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை, தங்கள் போராட்டத்தை இலை மறை கோலமாக இணையமெங்கும் பரவவிட்டிருக்கின்றராம், சில நாடுகளில் பெலாரஸ் நாட்டு தூதரகம் சாத்தபடும் நிலையாம், விவரம் தெரிந்தவர்கள் உங்கள் நாட்டு பணியாளர்கள் எல்லாம் ஆடையின்றி பணி செய்கின்றார்களாம், நீங்கள் அந்த நாடு இல்லையா என கேட்டால் என்ன செய்ய?

பெலாரஸ் நாடு அப்பாடு படுகின்றது

இந்திய திரு நாட்டில் இதெல்லாம் அறவே சாத்தியமில்லை (நாம் வாங்கிய வரம் அப்படி :), இதற்குத்தான் ஐரோப்பா செல்ல்வேண்டும் என்பது )எனினும், ஒருவேளை அந்த மாநிலத்தில் அவர்கள் தலைவர் இப்படி ஒரு அறிக்கை விட்டிருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

கட்சியினர் உடனே என்ன செய்வார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை, அது கர்ணன் போல உடலோடு ஒட்டிய கவசமானாலும் கிழித்து எடுத்துவிடுவார்கள்

ஆனால் தலமை சொல்லுக்கு கட்டுபட்டு செய்த மகிழ்ச்சியில் திளைப்பார்கள், கூடவே சன்னி லியோனையும் கட்சியில் சேர்த்தால் ஏக விளம்பரம்.

மாட்டு மூத்திரத்தில் தங்கம் உள்ளது

மாட்டு மூத்திரத்தில் தங்கம் உள்ளது - குஜராத் விஞ்ஞானிகள் ஆராய்சி முடிவு

அவனவன் பசிபிக் கடல் அடியில் என்ன இருக்கின்றது, செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கின்றது என ஆராய்ந்து அதற்கும் மேல் பால்வெளி, அண்டவெளிக்கு அப்பால் என்ன இருக்கின்றது என மிக கடுமையாக ஆராய்ச்சி செய்கிறான்

கடும் நோய்களுக்கு என்ன மருந்து என மருத்துவ உலகம் கடும் ஆராய்சியில் இறங்கி இருக்கின்றது, மின்சாரத்தை சேர்த்துவைத்து நெடுநாள் பயன்படுத்தமுடியுமா என ஒரு குழு அலையாய் அலைகின்றது.

அணுவுலை வெடித்தால் கட்டுபடுத்துவது, அணுகுண்டு வெடித்தால் கட்டுபடுத்துவது, அணு கழிவுகளை நீர்க்கசெய்வது என உலகம் செய்யும் ஆராய்சி கணக்கற்றது

உலகம் இப்படி எல்லாம் ஆராய, குஜராத் விஞ்ஞானிகள் மோடியின் பொற்கால ஆட்சியில் என்ன ஆராய்ந்திருக்கின்றார்கள் பார்த்தீர்களா? இனி விரைவில் யானை சிறுநீரில் வைரமும், சிங்கத்தின் சிறுநீரில் மாணிக்கமும் எடுப்பார்கள், பாம்புக்கு சிறுநீர் உண்டா இல்லையா தெரியாது, இருந்தால் நாகரத்தினம் எடுப்பார்கள்

இந்த ஆராய்சியினை மிருகங்களோடு நிறுத்திகொள்ளுங்கள், இன்னும் என்னென்ன ஆராய்சி செய்யபோகின்றார்களோ??

(இனி ஒருவன் சொல்வான் பாருங்கள், இவ்வளவு நாளும் காங்கிரஸ் ஆட்சியில் கோடிகணக்கான தங்கம் வீணாடிக்கபட்டிருக்கின்றது, நேருதான் காரணம். இந்திய தங்கத்தை மீட்ட மோடி வாழ்க..)

மிஸ்டர் மகேந்திரன்

காஞ்சிகோயிலில் கொல்லபட்ட சங்கராமனும் பிராமணன் தான், திருச்செந்தூர் கோயில் வைரவேல் சர்ச்சையில் மர்மமாக உயிரழிந்த‌ சுப்பிரமணிய பிள்ளையும் உயர்சாதிதான்

அட அவ்வளவு ஏன்? காந்தி கொலையாளி என்ன தாழ்த்தபட்டவானா? அல்லது இஸ்லாமியனா? திராவிடனா?

இப்படி உயர்சாதியினர் கொல்லட்டபோது , பிராமணர்களால் கொல்லபட்டபோதும் கூட அமைதியாக இருப்பீர்கள்,

சங்கராச்சாரியிடம் சென்று ஆசியெல்லாம் வேறு வாங்குவீர்கள்? ஏன் அவர் சாமி அல்லவா? யாரையும் கொல்லலாம்.

தேசபிதா கொலைவழக்கில் சிக்கியவருக்கு நாடாளுமன்றத்தில் படம் திறந்தாலும் அமைதியாக இருப்பீர்கள், காரணம் மதம் மற்றும் சாதி.

ஆனால் இன்னும் விடை தெரியாத வழக்கினில் முந்திகொண்டு திராவிட பொறுக்கி, தலித் இயக்கம், காம்ரேட்டு கயவர் என பொங்குவீர்களா?

செத்தவனில் சாதி பார்ப்பது யார் மிஸ்டர் மகேந்திரன்?

FB_IMG_1467269888722

குற்றவாளிகளை தேடிக் கொண்டே இருக்கிறது...

ஸ்வாதி கொலவழக்கில் குற்றவாளிகளை காவல் துறை தேடுகின்றது

# ராமஜெயம் வழக்கு குற்றவாளிகளை சில ஆண்டுகளாக தேடுகின்றது, அதில் மாநில காவல்துறையின் சுயகவுரமே அடங்கி இருப்பதால் வழக்கு இன்னும் வேறுதுறைக்கு மாற்றபடவில்லை.

# இந்த நூற்றாண்டில் தமிழக காவல்துறைக்கு விடபட்ட பெரும் சவால் அது, ராமஜெயம் தன்னைதானே கைகளை கட்டி, வாயினை கட்டி செத்துகொண்டாரா எனும் அளவிற்கு செட் செய்யபட்ட கொலை அது,

# தா.கிருட்டினனின் கொலை வழக்கு என்ன ஆனது? அருவாளோடு வாக்கிங் சென்ற அவர், தடுக்கி விழுந்து அரிவாளில் விழுந்து செத்தார் எனும் அளவிற்கு ஆனது நிலை.

# ஆனால் கொலையாளிகளை விசாரிப்பவர்கள் மனிதர்கள், மறைத்துவிடலாம், தெய்வம் நின்று சொல்லும் அல்லவா? தப்பவே முடியாது, இந்த வழக்குகளில் தப்பித்தாலும் இன்னொரு வழக்கில் சிக்கும் பொழுது எல்லா உண்மைகளும் வெளிவரும்

# ஏராளமான மர்ம வழக்கு மர்மங்கள் இப்படித்தான் விளங்கின, தமிழகத்தில் கொல்லபட்ட பத்மநாபா கொலையின் முடிச்சு, ராஜிவின் கொலைக்கு பின் தானாக அவிழ்ந்தது, அது திமுக அரசு போட்டு வைத்த முடிச்சு என்பது மர்மம் அல்ல‌

# நியாயங்கள் சாகாது, உண்மைகள் தோற்காது. எந்த கொலையாளியும் தப்ப முடியாது, இது இயற்கையின் நீதி

எப்படிபட்ட மனித நேயம் இது?

கூலிப்படைகளால் மக்களின் மனஉறுதி குலைவு:
திருமாவளவன் வேதனை

# அதே போன்றதொரு கும்பலால் பக்கத்து நாட்டில் எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கபட்டார்கள்? பணம் முதல் உயிர்வரை இழந்து நிர்கதியானோர் எத்தனைபேர். எத்தனை ஆயிரம் மக்கள் கதறி அழுதார்கள், அந்த வடுக்கள் ஆறுமா?

# அந்த கூலிபடையினை ஆதரிப்பீர்கள், அவர்களை கடல்கடந்து சென்று சந்தித்து விருந்து சாப்பிட்டு உற்சாகபடுத்துவீர்கள்
ஏதும் அவர்களுக்கு பிரச்சினை என்றால், இங்கே இந்திய அரசினை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பீர்கள்,

#ஆனால் உள்நாட்டில் நடந்தால் வேதனைபடுவீர்கள், மக்கள் மனஉறுதி குறையும் என கவலைபடுவீர்கள்

# எப்படிபட்ட மனித நேயம் இது?

ரஜினி தனித்து நிற்பது இதில்தான்

FB_IMG_1467270728160நினைத்தாலே இனிக்கும் படம் அக்கால சிங்கப்பூர் மலேசியாவில் படமாக்கபட்டபொழுது ரஜினி எதிர்காலம் தெரியாத தமிழக புதுமுக நடிகர்.

அன்று கமலஹாசன் தான் டாப், ரஜினியிடம் ஆட்டோகிராப் வாஙக கூட யாரும் வரவில்லை என்பார்கள்.

இன்று கபாலிக்காக கிழக்காசியா காத்துகொண்டிருக்கின்றது, மலாய் மொழியில் மொழிமாற்றபடும் முதல் படமாம், பொதுவாக மலாய், சீன மக்களுக்கும் அவரை பிடிக்கின்றது, குறிப்பாக குழந்தைகளுக்கு

மலேசியாவில் படமாக்கபட்ட படம் அது, என்பதால் கூடுதல் சந்தோஷமாம், ஏர் ஏசியா நிறுவணம் ரஜினி படத்தை விமானத்திலே பொறித்திருக்கின்றது.

ஐரோப்பாவின் மிகபெரும் திரையரங்கில் படம் வெளியிடபடுகின்றதாம், உலகின் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யபடுகின்றதாம்.

மூலவர் வரும்ப்பொழுது சிறு சாமிகளின் ஆட்டம் அடங்கும் என்பார்கள், அப்படி என்னதான் தலை, தளபதி, தறுதலை, இம்சை, என பலர் இருந்தாலும் ரஜினியின் இடம் மகத்தானது.

மனிதரிடம் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும், ஏற்றுகொள்ள கூடியது ஒன்றுதான், அது அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, நிம்மதியினை இழக்கவேண்டும் என்றோ அவர் நினைப்பதில்லை, தனக்குரிய எல்லை எது என்பதை அறிந்திருக்கின்றார், அதில் நம்பர் 1 ஆக நின்றுகொண்டே இருக்கின்றார்.

உண்ண ஒன்றும் இல்லாமல் இருப்பதன் பெயர் விரதம் அல்ல பட்டிணி, பெண்களே இல்லா தீவில் கடைபிடிப்பது பிரம்மசரியம் அல்ல, ஆனால் அறுசுவை உணவு முன்னால் இருந்தும் தொடாமல் இருப்பதுதான் விரதம், உலக அழகிகள் எல்லாம் வரிசை கட்டும் இடத்தில் கண்களை திருப்புவதுதான் பிரம்மசரியம்.

அப்படி தன் முன்னால் பெரும் அரசியல் வாய்பிருந்தும், அதனை தொடாமல் ஒதுக்கி வைப்பதுதான் கட்டுப்பாட்டின் உச்ச கட்டம், அது தான் ரஜினி.

இன்னொன்று மேக் அப் இல்லாமல், டை அடிக்காமல் எந்த நடிகனும் எளிதில் வெளிவரமாட்டான், அதில் மகா முதன்மையானவர் எம்ஜிஆர். சாகும் பொழுது கூட அவரின் உண்மை முகம் தெரியாமல் மேக் அப் அவரை காத்தது.

ஆனால் விருது வாங்கும் விழாவிற்கும் மொட்டை தலையுடனும், கலைந்த தாடியுடனும், இஸ்த்ரி செய்யபடாத உடையுடன் அவர் செல்வதுதான் அவரின் இயல்பினை வெளிகாட்டுகின்றது,

இதுதான் நான், இப்படித்தான் நான் என தைரியமாக உலகிற்கு சொல்ல முடிகின்றது, ஆனாலும் அவருக்கான மார்கெட்டில் ஒரு சதம் குறையவில்லை.

ஒரு தமிழ்நடிகருக்கு இவ்வளவு பெரும் வரவேற்பு உலகெல்லாம் இருப்பது பெரும் விஷயம். எப்படி சாத்தியம் என்றால்? அவர் கைகாட்டும் இடமான வானத்தை பார்த்துகொள்ளவேண்டியதுதான்.

மனிதரிடம் ரசிப்பது ஒரே விஷயம்தான், அது முதல்வர், பிரதமர் , உலக தலைவர் என யாரை பார்த்தாலும் இருக்கும் அதே சிரிப்புதான், சின்ன குழந்தையினை , ரசிகனை பார்த்தாலும் அவர் முகத்தில் காணமுடியும், எல்லோரையும் என் ரசிகர்கள் என ஒரே தரத்தில் வைக்கும் அந்த சந்தோஷம் தான் அவர் கண்களில் மின்னும்

ரஜினி தனித்து நிற்பது இதில்தான்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து காணாமல் போய்கொண்டிருக்கும் நடிகர்களும் , இயக்குநர்களும் இப்போது அதே வானத்தினைத்தான் பார்த்துகொண்டிருப்பார்கள்.

படம் விரைவில் வரலாம் என்கின்றார்கள் , ஏதோ டான் கதை என்கின்றார்கள், உரிமை போராட்டம் என்கிறார்கள், எப்படியோ பல நாடுகளில் அது வெளியிடபடுகின்றது.

# ஆனால் அது ஒருவேளை வன்முறை படமாகவும், வெளிநாடுகளில் தமிழர் அடக்கி வைக்கபடுகின்றனர் , உரிமை மறுக்கபடுகின்றனர் என்பதை போன்ற சித்திரம் இருக்குமானால் படத்தினை தூக்கி கடலில் போடவும் அந்நாடுகள் தயங்காது.

நாட்டின் நற்பெயர் அவர்களுக்கு முக்கியம்.

# அது ரஜினி படமாக இருந்தாலும் சரி, ஜாக்கிசான் படமாக இருந்தாலும் சரி.

(நான் மிக ரசித்தது அவரின் ஒரு பேச்சுதான், 2007களில் தமிழ் திரையுலகம் இறுதிபோரில் கலைஞரை கிழித்துகொண்டிருந்த போராட்டத்தில் பேச வந்தார் ரஜினி

"30 வருஷமா சண்டை போட்டு போராடுறீங்க, இன்னும் ஜெயிக்க முடியலண்ணா தோல்விய ஒத்துகிட்டு சமாதானமாக போக வேண்டியதான, இதுல ஏன் இவ்வளவு பேர் சாகணும்"

அவர் சொன்னது புலிகளையா? அல்லது சிங்கள ராணுவத்தையா? என இறுதிவரை தலையினை பிச்சிகொண்டிருந்தேன், ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் புரியவே இல்லை.

ஹா..ஹா..ஹா என சிரித்துகொண்டேன், அது தான் ரஜினி பன்ஞ்)

"இனபடுகொலை" என்ற பதத்திற்குள் எப்படி கொண்டு வருவீர்கள்?

"இறுதி யுத்தத்தில் யாழ்பாண தமிழர், மலையக தமிழர், கிழக்கு மாகாண தமிழர், கொழும்பு தமிழர், கண்டி தமிழர் என யார் மீதும் சிறு கீறல் கூட விழவில்லை,

புலிகளின் கட்டுபாட்டு பகுதியிலிருந்த மக்கள்தான் பாதிக்கபட்டார்கள், அதுவும் அவர்களை புலிகள் செல்ல அனுமதித்திருந்தால் சாவுகள் நடந்திருக்காது, எனவே இதனை "இனபடுகொலை" என்ற பதத்திற்குள் எப்படி கொண்டு வருவீர்கள்?

இனபடுகொலை என்றால் மொத்த தமிழினத்தையும் அல்லவா நாங்கள் தாக்கியிருக்கவேண்டும்?, மாறாக புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தில் தமிழர்களும் பங்கெடுத்ததை சுட்டி காட்டுகின்றோம்

போர்குற்ற விசாரணை குறித்து விசாரணை நடத்த நாங்கள் தயார்.

எத்தனையோ தீர்வுகளுக்கு இறங்கி வந்தபின்னும் யுத்தம் நின்றபாடில்லை.

புலிகள் இல்லாவிட்டால் சிங்கள் தமிழர்களை எல்லாம் அழித்துவிடுவான் என்ற பிம்பம் எங்கே?

இன்றும் எத்தனை லட்சம் தமிழர்கள் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள், பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவரே தமிழர் என்பதை குறித்துகொள்ளுங்கள், அந்த அளவிற்கு ஜனநாயகத்தை நாம் காப்பாற்றுகின்றோம்

வடக்கு கிழக்கில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கபட்ட தமிழர்களே முதல்வராக உள்ளனர், வலுகட்டயாமாக அமர்த்த பட்ட சிங்களர்கள் அல்ல.

1983க்கு பின் கொழும்பில் தமிழருகு எதிராக எங்கே கலவரம் நடந்தது? 1995 முதல் அரசகட்டுபாட்டில் இருக்கும் யாழ்பாணத்தில் என்ன நடந்தது? 2009க்கு பின் வன்னியில் என்ன தாக்குதல் நடந்தது ,

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் மறுநொடி இலங்கையில் தமிழர் வாழமுடியாது எனும் பிரச்சாரம் எப்படி பொய்யானது என்பதை உலகம் கண்டுகொண்டிருக்கின்றது" :

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் சிங்கள அமைச்சர் முழக்கம்

# இதற்கு எந்த நாடு பதில் சொல்லமுடியும? ஆழ்ந்த அமைதியில் இருக்கின்றன சர்வதேச நாடுகள் , இதற்கு பதில் திருமுருகன் காந்தி கும்பலிடமும் இருக்காது, ஆனாலும் சம்பந்தமில்லாமல் சீறிகொண்டே இருப்பார்கள் அர்த்தமே இல்லாமல்.

ஈழ தமிழர் நலன் பற்றி பேச வடக்கு மாகாணா முதல்வர் விக்னேஸ்வன் யார்? என்ன உரிமை : சீமான்

ஈழ தமிழர் நலன் பற்றி பேச வடக்கு மாகாணா முதல்வர் விக்னேஸ்வன் யார்? என்ன உரிமை : சீமான்

வடக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற பிரதிநிதிகளை மக்களின் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது : திருமுருகன் காந்தி

# இது ஒருவகை வியாதி, அவர்கள் மாகாண முதல்வர் அந்த மக்களால்தான் தேர்ந்தெடுக்கபட்டிருக்கின்றார், அந்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்ததும் அம்மக்களே, அவர்கள் எல்லாம் பிரதிநிதிகள் அல்ல என சொல்ல இவர்கள் யார்?

# ஒரு அந்நியநாட்டின் உள்புகுந்து அவனுக்கென்ன உரிமை? இவனுக்கென்ன உரிமை? என பேசமுடியுமா?, இவர்கள்தான் ஐ.நாவில் முழங்க போகின்றார்களாம், சர்வதேசம் சிரிக்காதா?

# இதே யாழ்பாணத்தில் அதிக வோட்டு வாங்கியவன் ராஜபக்சே, அன்று நடந்த யாழ்பாண விளையாட்டரங்க விழாவில் மைத்திரிபாலாவிற்கு கொடுக்கபட்ட வரவேற்பு கொஞ்சமல்ல, அதாவது அவர்களே ஒரு இணக்கபாட்டில் இருக்கும் போது இங்கிருந்து இவர்கள் கத்துவது ஒரு வகை கயவாளித்தனம்

# இவர்கள் சொல்லவருவது என்ன? டேய் தயவு செய்து சண்டை போட்டு சாவுங்கள், செத்துகொண்டே இருங்கள், அதனை வைத்துதான் நாங்கள் இந்திய எதிர்ப்பினை தமிழகத்தில் விதைத்துகொண்டே இருக்கமுடியும், அது செழித்து வளர்ந்தால்தான் தமிழகத்தை ஈழம் போல தலைவன் வழியில் சுடுகாடாகா மாற்றமுடியும், பிளீஸ் சண்டை போடுங்கள், சாவுங்கள்................

# இன்னும் கொஞ்சநாளில் பைத்தியம் முற்றிபோய் கொழும்பு இலங்கை தலைநகராக இருப்பதை ஏற்க முடியாது, கதிர்காமத்தில் முருகன் கோயில் இருப்பதை ஏற்க முடியாது, இலங்கை சுற்றி இருக்கும் கடலை ஏற்க முடியாது என இவர்கள் நிச்சயம் உளறுவார்கள்

Wednesday, June 29, 2016

நானே ராஜதந்திரி - வைகோ

"எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

FB_IMG_1467267747616

என்னை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள்" : வைகோ பேச்சு

# தொடர் தோல்வி ஒருவன் மனநிலையினை புரட்டிவிடும் என்பதற்கு இவரே பெரும் சாட்சி, இல்லாவிட்டால் இப்படி உளரமுடியாது, இவர் இன்னும் சுயநினைவில் பேசிகொண்டிருக்கின்றார் என்றால் இப்படியான முடிவிற்குதான் வரவேண்டி இருக்கும்

1) கரைந்துகொண்டிருக்கும் கட்சியோ, இவரை நம்பி இருப்பவர்களோ இவருக்கு முக்கியமல்ல, இவர் ஸ்டெர்லைட் முதல் அணுவுலை போராடிய எல்லாமும் நாடகமே, கூட்டணி அமைத்ததும் கலைஞர் எதிர்ப்பே அன்றி வேறு அல்ல‌

2) இந்த தேர்தலில் அழிநிலையில் இருப்பது நிச்சயமாய் விஜயகாந்த் அன்றி கலைஞர் அல்ல, மிக சொற்பமான எண்ணிக்கை வித்தியாசத்தில் எந்நேரமும் ஆட்சியினை கைபற்றும் வலு அவருக்கு இருக்கின்றது.

3) "எம்மை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள்.." எனும் இடத்தில்தான் இருபொருள் வருகின்றது, அது கட்சி தொடங்கி வைகோவினை பாதித்த விஜயகாந்தா? அல்லது இறுதிவரை நம்பிக்கை கொடுத்து தவறான வழிகாட்டலில் அழிந்துபோன புலிகளின் எச்சரிக்கையா? என தெரியவில்லை, அழிந்து போனது புலிகளும், விஜயகாந்துமே, ஆக இவர் குறிப்பிடுவது யாரை என்றுதான் தெரியவில்லை.

4) சொந்த கட்சியினரை விட, இவரை இறுதிவரை நம்பி அழிந்த புலிகளை விட, புலிகளுக்காக இவரை உள்ளே தள்ளி பெண்ட் எடுத்த ஜெயலலிதாவினை விட, தன்னை வளர்த்து ஆளாக்கி அடையாளமிட்ட கலைஞர் மீதுதான் இவருக்கு இன்னும் வன்மம் என்றால், வள்ளுவன் வாக்கு பொய்க்குமா?

"எந்நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்க்கு"

இது வைகோ, பிரபாகரன் என இருவருக்கும் பொருந்தும், செய்நன்றி அழித்தார்கள், தானாய் அழிந்தார்கள்.

வாழ்த்துக்கு நன்றி.....

இத்தனை நூற்றுகணக்கான நண்பர்கள் வந்து பிறந்தநாளில் வாழ்த்தும்போது உண்மையிலே மனம் கலங்கத்தான் செய்கிறது.

இந்த வாழ்த்துளை பெற‌ தகுதி இருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் இருப்பதாக நிச்சயம் தெரியவில்லை.

ஈழவிவாகாரம் தொடர்பாக நான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை, எத்தனையோ பேர் பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்ததை சுட்டி காட்டினேன், மற்றபடி ஒன்றுமே இல்லை, எத்தனையோ பேர் எத்தனை ஆயிரம் விவரங்களுடன் பதிவு செய்த விஷயங்கள் அவை, இணையமெல்லாம் குவிந்து கிடக்கின்றன.

அது கிடக்கட்டும், கடல் கடந்து வாழும் ஒருவகையான அகதிக்கு இத்தனை எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பதுதான் விஞ்ஞான விந்தை.

அப்படி ஒன்றும் நான் எழுதிவிடவில்லை, நினைவுகளை கொட்டினேன், வேறொன்றுமில்லை.

இது ஒரு சமூகதளம், கிராமத்து டீக்கடை பெஞ்சின் நவீன வெர்சன் தான் இது, வரலாம் பேசலாம், சண்டையிடலாம், விளக்கம் சொல்லலாம், பிடிக்காவிட்டால் கிளம்பலாம்.

ஆனால் இந்தியாவில் இன்னும் தேசாபிமானிகளும், சமூக அக்கறை உள்ளவர்களும் கொஞ்சமேனும் இருக்கின்றார்கள் என கண்டுகொண்ட தளம் இதுதான்.

உங்களின் மேலான அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிகுந்த நன்றி. உங்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் என்றும் ஏற்புடைவனாக இருக்கும் வரத்தினை இறைவன் நமக்கு அருளட்டும்

ஒரு கட்டத்தில் 2004ம் வாக்கில் நெடுமாறன் போன்றோர் சொன்னார்கள், இறுதிகட்ட ஈழபோரில் தமிழக இளைஞர்களும் பங்கெடுக்கவேண்டுன்று

அப்பாதகம் நடந்துவிடுமோ என்ற அச்சம் இருந்தது, ஆனால் இந்த குழுவினை போன்ற தேசபற்றாளர்களை கண்டபின் அதெல்லாம் தூளாய் மறைந்து உற்சாகம் கூடிற்று

அதுதான் மகிழ்ச்சி.

உங்களின் மேலான அன்பிற்கும், நம்பிக்கைக்கும் மிகுந்த நன்றி. உங்களின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் என்றும் ஏற்புடைவனாக இருக்கும் வரத்தினை இறைவன் நமக்கு அருளட்டும்.

கொலை கலாச்சாரம் - என்னதான் நடக்குகுது?

இந்த கொலை கலாச்சாரத்திற்கு அது காரணம், இது காரணம் என ஆயிரம் சொன்னாலும், கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் விளங்கும், அது கொலையாளிகள் பெரும்பாலும் இளம் வயதினர், அதுவும் பதின்ம வயதினர்.

ஓசூரில் கைது செய்த காவலரையே கொல்லும் அளவிற்கு நிலமை மோசமாக சென்றிருக்கின்றது, எப்படி இவ்வளவு வன்மம், இவ்வளவு வன்முறை?, அவர்கள் மனம் இப்படி வன்முறையினை கொண்டாடும் அளவு மாறிபோனதேன் என சிந்தித்தால் அதற்கு காரணம் இந்த சமூக அவலங்கள், அவர்கள் காணும் காட்சிகளுமே அன்றி வேறல்ல.

FB_IMG_1467187004102

FB_IMG_1467187010413

சமூக அவலங்கள் என்றால் ஒன்றுமில்லை, சுயநலனுக்காக‌ கொலைகள் செய்துவிட்டு சாதி போர்வையில் ஒளிந்துகொண்டு மாவீரகள் என சமூகத்தால் கொண்டாடபடும் சமூக விரோதிகளை பார்த்து வளரும் தலைமுறை இது, இதனை முதலிலே கிள்ளி இருக்கவேண்டும், ஆனால் வளரவிட்டது நிச்சயம் அரசியல்வாதிகள்

சரி அப்படித்தான் விட்டார்கள் என்றால், வருடத்திற்கொருமுறை அவனுக்கொரு நினைவாஞ்சலி என்ற கொடுமைக்கு அனுமதி வேறு, இல்லை என்றால் வாக்கு வங்கி பாதிக்கும் எனும் பயம். விடலைகளின் மனம் இங்குதான் பாதிக்கபடுகின்றது, கொலை தவறே அல்ல.

சாதிக்கு 4 ரவுடி இருக்கின்றான், அவன் செய்த கொலைகள் எல்லாம் அந்நாளில் பெரும் சாவகாசமாக பேசபடும், கவனிக்கும் குழந்தைகள் எப்படி வளரும்? அவனை தன் ஆதர்ச நாயகனாகவே கொண்டாடும்.

இன்னொரு விஷயம் சினிமாவும் ஊடகங்களும்

அந்நாளில் சினிமாவில் கதாநாயாகன் சாகசங்கள் செய்வான், ஆனால் கொலை செய்யமாட்டான், நம்பியார், எம் ஆர் ராதா, அசோகன், மனோகர் போன்ற வில்லன்கள் கடைசியில் கைது செய்யபட்டு காவல் நிலையத்தில்தான்
ஒப்ப்படைக்கபடுவார்களே தவிர கொல்லபட மாட்டார்கள்,

அதுவும் தாங்கள் திருந்திவிட்டதாவே சொல்லும்பொழுதுதான் படம் முடியும். ரத்தம் தெறிக்கும் படங்களில் எம்ஜிஆர் நடித்ததே இல்லை, அவரின் வெற்றிக்கு அதுதான் காரணம்.

இன்றோ அப்படி அல்ல, ஆரம்பத்தில் தெறிக்கும் ரத்தம் இறுதி வரை தெறிக்கின்றது, இதனை பார்த்து வளரும் குழந்தைகளின் கை தானாக அரிவாளினை தேடுகின்றன, அதிலும் சில படங்கள் மனபிறழ்வின் உச்சம்.

சில தமிழர்வாழ் வெளி நாடுகளில் குற்ற செயல்கள் அதிகரித்தபொழுது தமிழ்சினிமா ஒரு விவாதபொருளாயிற்று, பதின்மவயது குற்றவாளிகளை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் சொன்னார்கள்

"தமிழ் படங்களால் நம் நாட்டில் வன்முறை அதிகரிக்கின்றது, அவற்றை தடை செய்யும் எண்ணத்தில் இருக்கின்றோம்", எப்படி பட்ட அங்கீகாரம் இது? வெட்கத்தால் தமிழர் நாணி குனிய வேண்டிய நேரமிது.

முதற்கட்டமாக வன்முறை காட்சிகளை தடை செய்துகொண்டிருக்கின்றார்கள், பாடல்களில் கூட போதை யான " கஞ்சா, பிராண்டி" போன்ற வார்த்தைகள் ஒலிக்காது, அவ்வளவு கவனம்.

காரணம் சிறுவயதினரின் மனதினை அது பாதித்தால் அது ஒரு தலைமுறையினை பாதிக்குமாம், முந்தி கொள்கின்றார்கள். குஞ்சுகளை கோழி அரவணைப்பது போல சிறகுகளுக்குள் வைத்து பாதுகாக்கின்றார்கள்.

இது போன்ற சில சட்டங்கள் நமது நாட்டிலும் உண்டு, சென்சார் போன்றவை அவை, ஆனாலும் சிலபடங்களை அடல்ஸ் ஒன்லி என வெளியிட அனுமதிக்கின்றன, பின் அப்படங்கள் குடும்பமாய் பார்க்கபடுகின்றன.

குழந்தைகள் தானாக எதனையும் சிந்திப்பதில்லை, மாறாக பார்த்து, கேட்டு மனதில் பதியடும் விஷயங்களே விஸ்வரூபமெடுக்கின்றன‌.

அரசியல் கட்சிகள் உரமிட்டு வளர்க்கும் சாதிய தியாகிகளின் பிம்பமும், சினிமாவில் காட்டபடும் அதி தீவிர வன்முறைகளும் முதல் காரணம்.

தற்போதைய இன்னொரு அபாயம், வீரப்பன் போன்ற கொடூர கொள்ளையர்களை ஹீரோ போல கொண்டாட அனுமதிக்கட்டது, நிச்சயம் விட்டிருக்ககூடாது, அவனால் கொல்லபட்ட 120 போலிசார் பற்றிய நினைப்பு மறக்க கூடியதா?

அவனுக்கு மணிமண்டபம் கட்டுவோம் என சிலர் சொன்னால் விட்டுவிடுவதா? அரசு தூக்கி போட்டு மிதித்திருந்தால் யார் தடுப்பார்கள்? இவ்வளவிற்கும் வீரப்பன் அரசால் சுட்டுகொல்லபட்டவன்.

கொன்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய அரசுதான், அவன் மணிமண்டப கொடுமையினையும் கண்டும் காணாமல் உள்ளதா? எல்லாம் அரசியல், வாக்கு வங்கி.

உள்நாட்டு கொள்ளையர்களே ஆபத்து என்றால், அந்நிய நாட்டு தீவிரவாதிகளை இன அடிப்படையில் ஆதரிப்பது மகா ஆபத்தானது, இந்த தொப்பி வைத்த அங்கிள் யார் என குழந்தை கேட்டால், அவரின் வீர தீர கொலைகளை எல்லம் போராட்டம் என சொல்லிகொடுத்தால் குழந்தை என்ன சிந்திக்கும்? அது எப்படி வளரும்? அனுதினமும் அவன் படத்தினை காணும்பொழுதெல்லாம் அதனை அறியாமல் ஒரு மனபாதிப்பு வருமல்லவா?

அக்கால பள்ளிகளில் சுவரில் தேசாபிமானிகள் படம் வைக்கபட்டதெல்லாம் எதற்காக? குழந்தைகள் நாளை இந்த தலைவர்களை போல வரவேண்டும் என்பதற்காக, அக்குழந்தைகள் மத்தியில் தறுதலைகளை ஹீரோக்களாக காட்டினால் என்ன ஆகும்?

அதுவும் அந்நிய நாட்டிலிருந்து வந்து இங்கு பல கொலைகளையும், ஒரு பிரதமரையும் கொன்ற கும்பலை வெளியில் விடு என பகிரங்கமாக போராட்டமே நடந்தால், சாதாரண குடிமகனின் சிந்தனை என்ன ஆகும்? இதனை காணும் பள்ளிமாணவர் எப்படி சிந்திப்பர்

பிரதமரை கொன்றாலே வெளிவந்துவிடகூடிய நாட்டில், பிரின்சிபல் எல்லாம் மேட்டரா? போட்டு தள்ளு, கல்வியினை சிறையில் படித்துகொள்ளலாம், பேரரிவாளன் வாங்காத பட்ட்மா? என்றால் என்ன் ஆகும்?

சிறைச்சாலை எல்லாம் பல்கலை கழகங்களாக மாறிகொண்டிருக்கும், நாடு விளங்குமா?

கங்கை பிரவாகமாக உருவெடுத்தோடும் டாஸ்மாக் போதையில் அவர்கள் விழுவது இன்னமும் கேடு, அந்த இளம் இந்தியர்களை கவுண்சிலிங்கொடுத்து நல்ல குடிமக்களாக மாற்றவேண்டிய அரசே சாராயகடை நடத்தினால் கொடுமையினை என்ன சொல்ல?

இப்படி சிந்தித்து அவசரமாக களையவேண்டிய விஷயம் ஏராளம் உண்டு.

சாதி ரவுடிகள், சினிமா பிம்பம், கொடூர தீவிரவாதிகள் எல்லாம் பெரும் ஹீரோக்களாக சித்தரிக்கபடும் முறை ஒழிக்கபடவேண்டும், அவற்றை தடை செய்து தூர எறியவேண்டும்.

தண்டனைகள் இன்னும் கூட்டபடவேண்டும், கடும் தண்டனைகளே குற்றங்களை குறைக்கும், கட்டுபடுத்தும்.

கல்விமுறை முற்றிலும் மனித இயந்திரங்களை உருவாக்கும் முறையாக மாறிவிட்டது, மதிப்பெண் வேலைவாய்ப்பு என்ற நோக்கத்திற்காகவே நடத்தபடும் அவைகள் மனித இயந்திரத்தினைத்தான் உருவாக்கும்

பக்தியும், சமூக உணர்வும், நாட்டுபற்றும் கொண்ட கல்விமுறை போதிக்கபட்டாலொழிய நல்ல தலைமுறையினை உருவாக்க முடியாது.

வெளிநாட்டு குழந்தைகள் சமூக பொறுப்புடன் வளர்க்கபடுகின்றன, அவர்களின் கடமை அவர்களுக்கு புரியவைக்கபடுகின்றது, அதனால்தான் வீடுதோறும் துப்பாக்கிகள் இருந்தாலும் அவர்கள் தினமும் யாரையாவது சுட்டுகொல்வதில்லை

இதே இந்திய நிலை என்றால் என்ன ஆகியிருக்கும்? காதல் கடிதம் வாங்கவில்லை என்பதற்காக எத்தனை பெண்களை மறைந்திருந்த்து சுட்டிருப்பார்கள்???

இன்னொரு மகா முக்கியமான விஷயம் மாறிவிட்ட வாழ்க்கை சூழல், பதின்மவயதினரை கடுமையாக பாதிக்கின்றது, குழம்புகின்றார்கள். நுகர்வு கலாச்சாரம் கடும் அழுத்தத்தை கொடுக்கின்றது

"உங்க எல்லோர்கிட்டேயும் இருக்குல்ல, என்கிட்ட மட்டும் இல்லல்ல" என்ற விஷம் போன் முதல் கேள்பிரண்ட் வரை அவர்களை பாதிக்கின்றது.

நாறிபோன ஊடகங்களும், பிம்பங்களும் காதலித்தே தீரவேண்டும் என்ற வெறியினையே ஊட்டுகின்றன, அந்த வயதில் அவர்கள் குழம்பி தவிக்கின்றார்கள்.

நிச்சயமாக இம்மாதிரி குழப்பங்களிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் மனநல கவுன்சிலர் நியமிக்கபடவேண்டும், அவர்கள் மன அழுத்தம் போக்கபடவேண்டும், அழுத்தம் நீங்கிய மனம் சிந்திக்க தொடங்கும்.

அடுத்த தலைமுறையினை காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது, கோடிகணக்கான சொத்துக்களை அவர்களுக்கு சேர்த்துவைத்துவிட்டு மனிதன் வாழமுடியா வருங்கால சமூகத்தில் அவர்களை விட்டு செல்வதை விட பைத்தியக்காரதனம் என்ன இருக்க முடியும்?

அந்த சொத்துக்களால் பலன் என்ன? அல்லது அந்த மனிதநேயமில்லா கல்வியால் விளையபோவதுதான் என்ன?

ஒவ்வொரு நாடும் குழந்தைகளை தேசிய சொத்துக்களாகவே கருதுகின்றன, அவை என்ன படிக்கின்றார்கள், பார்க்கின்றார்கள் என கண்காணிக்கின்றன, மக்களும் விழிப்புணர்வுள்ளவாகவே இருக்கின்றனர்.

அதனால் குறிப்பிட்ட காலத்தில் நல்ல தலைவர்கள் வந்து நாட்டை வழிநடத்துகின்றனர், ஜெர்மனி, ஜப்பான், சைனா மகா முக்கியமாக இஸ்ரேல் என அவை தூள் பறத்துகின்றன.

நமக்கும் அன்றொரு காலம் இருந்தது, காந்தியினை கண்டு காமாரஜர் உருவானார், பன்னீர் செல்வத்தின் பாதிப்பு அண்ணாவிடம் இருந்தது, சுபாஷ் சந்திர போஸின் நாட்டுபற்று பசும்பொன் தேவரிடம் இருந்தது, இந்திரா காந்தியின கனவினை நிறைவேற்றி காட்டினார் அப்துல் கலாம்.

நல்ல வழிகாட்டிகளை காட்டினோம் நல்ல தலைவர்கள் வந்தார்கள்.

இன்று சாதி வெறி கொலையாளிகளையும், வீரப்பனையும், பிரபாகரனையும் தூக்கி பிடித்து காட்டினால் யார் வருவார்கள்?

நிச்சயம் சீமான் போன்ற கோயேபெல்ஸ்தான் வருவார்கள், அட இவர்களையும் பேசவிட்டால் இன்னொருவன் வருவான் அல்லவா? அவன் எவ்வளவு ஆபத்தானவன்?

கர்ணல் நாசரை கண்டு வளர்ந்தவன் சதாம் உசேன், வரலாற்றில் நின்றான். ஆனால் பின்லேடனை கண்டு வளர்ந்த பத்தாதி சிரியாவினை சுடுகாடாக்கி கொண்டிருக்கின்றான்.

சீனாவில் மாவோ, டெங் படிக்காமல் ஒரு மாணவன் வெளிவரமுடியாது, போரின் காயங்கள் மனதால் பாதித்துவிடும் என்பதற்காக ஜெர்மனி, ஜப்பானிய பாட திட்டங்கள் புதிய உலகை படைப்பதாக இருக்கின்றன.

அரசின் ரவுடிகள் மீதான கட்டுப்பாடும், கொஞ்சம் இறுக்கமான சட்டதிட்டங்களும், பொது ஊடகங்களின் மீதான கண்காணிப்பும், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை காட்டும் விஷயங்களிலும் அக்கறை இருக்கவேண்டும்.

இவை எல்லாம் நடக்கும் பட்சத்தில் ஸ்வேதாவின் சாவு ஒரு பெரும் மாற்றத்திற்கான முதல் பலியாக அமையும்.

காவல்துறை குற்றவாளியினை தேடிகொண்டிருக்கின்றது, உண்மை இன்னும் விளங்கவில்லை, அதுவரை அமைதி காப்பதே சால சிறந்தது

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் செய்திகளை அள்ளி எறிகின்றார்கள், நொந்து கிடக்கும் பெற்றோரின் மனம் என்ன பாடு படும் என்பதினை கூட சிந்திப்பதில்லை

யாரோ ஒருத்தி என்பதால் தானே இஷ்டத்திற்கு எழுத முடிகிறது, சகோதரிகளில் ஒருத்தி என்றால் எழுத மனம் வருமா?

இந்த பெரும் நாட்டையும் அப்படி சொந்த குடும்பமாக கருதி பாருங்கள், மாற்றம் நம்மிடமிருந்தே வரும்.

(120 தமிழக போலிசாரை கொன்ற வீரப்பனும், ராஜிவோடு 5 போலிசாரை கொன்ற புலிதலைவர் பிரபாகரனும் ஹீரோவாக்க பட்ட தமிழகத்தில், சமீபத்தில் சமூகவிரோதிகளால் கொல்லபட்ட் காவலர் படம் )

யார் மனிதன்?

கலைஞரின் பேரன் மனிதன் என்றொரு படம் எடுத்திருக்கின்றார், ராம் ஜெத்மலானி போன்ற பிரபல வழக்கறிஞர்களின் பாத்திரமாக பிரகாஷ் ராஜ் பாத்திரம் அமைக்கபட்டிருகின்றது, படம் வெற்றியாம், இனி இப்படிபட்ட சமூக கதைகளைத்தான் உதயநிதி படமாக எடுப்பாராம்.

FB_IMG_1467187827926

நீதிபதிகளை வழக்கறிஞர்கள் மட்டும்தான் தவிக்க விடுவார்களா? , நீதிபதி சர்காரியாவினை தாடியினை பிய்த்துகொண்டு ஓடவைத்ததாகட்டும், இன்று டெல்லி நீதிபதி (ஸ்பெக்ட்ரம் விசாரணை) ஷைணியினை தெறிக்க விட்டுகொண்டிருப்பதாகட்டும் "அவரை போல்" முடியுமா? அவர் என்ன வழக்கறிஞரா?

ஒரு சாதாரண சாமான்யன்

தயாளு அம்மாளை விசாரிக்க வந்த மருத்துவகுழு அறிக்கை, தா.கிருட்டினன் கொலை வழக்கில் 100 பேருக்கு மேல் பல்டி என எத்தனை நீதிபதிகளை தலை தெறிக்கவிட்டவர், அல்லது தெறிக்கவிட்ட "தலைவர்" அவர்.

# நீதிபதிகளையும், பெரும் ஐஏஎஸ் அதிகாரிகளையும், வெளிநாட்டில் பதக்கம் பெற்ற அறிவு மூளைகளையும், 7ம் வகுப்பு தாண்டாத ஒரு கிராமத்தான் ஓட ஓட விரட்டினார் என்றால் அதுதான் வரலாறு, அது தான் திறமை, அது சுவாரஸ்யம்.

# அவர் கதையினை, இந்த தெறிப்புகளை "தலைவன்" என ஒரு படமெடுத்தால் எப்படி இருக்கும், நிச்சயம் 1 படத்தில் முடியாது, பாகுபலி போல பல பாகங்கள் எடுக்கவேண்டி இருக்கும், எதற்கும் இப்பொழுதே உதயநிதி காப்புரிமை பெற்றுகொள்வது நல்லது

# ஒவ்வொரு பாகமும் 1000 நாள் எளிதாக ஓடும், அவ்வளவு சுவாரஸ்யமான வரலாறு அது. அப்படி மட்டும் நடந்தால் பாகுபலி எல்லாம் பறந்தோடிவிடும்.

# அடக்குனா அடங்குற ஆளா நீ

தொடரும் கொலை, தற்கொலை.....

தொடரும் கொலை, வெட்டு குத்துக்களால் சென்னையில் சட்டம் ஒழுங்கு என்ன ஆனது , மார்பிங் பட விவகாரத்தில் காவல்துறை வினுபிரியாவினை சாக விட்டது ஏன்? என வழக்கம் போல கலைஞர் முந்திகொள்ள, தூக்கத்திலிருந்த ஒவ்வொருவரும் நெட்டிமுறித்து எழுகின்றார்கள், தமிழிசை கடும் அறிக்கை விட்டிருக்கின்றார். குஷ்பூவினை பேச வைத்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்திருக்கின்றது

FB_IMG_1467190505811

ஆனால் தமிழனை எந்த மூலையில் அடித்தாலும் உடனே அண்ணன் பிரபாகரன் படத்தினை வணங்கிவிட்டு ஓடிபோய் அடித்து காப்பாற்றுவேன் என சீறும் சீமானை காணவில்லை, அவர் கருத்துபடி தமிழகத்தை தவிர தமிழன் எங்கு அடிபட்டாலும் ஓடுவார், சென்னை நுங்கம்பாக்கம் தமிழகம் இல்லை என்பதால் அன்னார் அமைதி

இல்லாவிட்டால் அவ்வளவுதான் அண்ணன் பாணியில் தற்கொலை தாக்குதல் நடத்துவார், இல்லை இவர் கத்தல் தாங்க முடியாமல் கொலையாளியே தற்கொலை செய்வான்.

50 ஆயிரம் போலிசாரை அனுப்பி கச்சதீவினை மீட்பேன் என சவுடால் விட்டவருக்கு, கூட 100 போலிசை போட்டு சென்னையினை காப்பீர் தாயே என சொல்ல தோன்றவில்லை என்பது மகா விசித்திரமே.

இவரை போலவே ஈழ தமிழர்களின் இனபடுகொலைக்காக போராடும் திருமுருகன் காந்தி என்பவரையும் காணவில்லை, அவருக்கு சென்னையிலும் தமிழகத்திலும் சாவதெல்லாம் தமிழர்கள் என கண்ணுக்கு தெரியாது, வங்க கடலுக்கு அப்பால் செத்தால்தான் அவன் தமிழன்.

தமிழக கட்சிகள் எல்லாம் தைரியமாக போராடும் அளவிற்கு வந்துள்ளன, அதாவது ஜனநாயக முறையில் அரசை வற்புறுத்த கிளம்பிவிட்டன, ஆயிரம் அரசியல் இருந்து தொலையட்டும்,

ஆனால் கோரிக்கை நிச்சயம் அர்த்தமுள்ளது

இப்படியாக தமிழக மக்களுக்கு இவர்கள் போராடும் போது, ஈழ குத்தகையாளர்கள், ஒப்பந்தக்காரர்களை காணாவில்லை, வை,கோ எனும் கோயபல்ஸ் மட்டும் ஸ்வாதி கொலைக்கு மது ஒரு காரணம் என்றார்.

கொலையாளி இன்னும் தெரியாது, அப்படியானால் ஸ்வாதி குடித்துவிட்டு தன்னைதானே வெட்டிகொண்டாள் என்றா சொல்லவருகின்றார் இந்த கோயபல்ஸ்

மொத்தத்தில் இந்த ஈழ வியாபாரிகள் கூட்டமைப்பின் உண்மை முகம் கலைகின்றது, தமிழரின் நலம் இவர்களுக்கு முக்கியமே அல்ல, ஈழ மக்களை வைத்து அரசியல் செய்வதும் அதன் மூலம் காங்கிரசையும், கலைஞரையும் வசைபாடும் ஒரு கூலிப்படை மட்டுமே தவிர கொள்கையோ மக்கள் நலமோ இவர்களுக்கு இல்லை.

இதே ஸ்வாதியின் தந்தை முன்னாள் புலியாகவோ , பிரபாகரன் உடன்பிறப்பாகவோ அல்லது மேல்நாட்டில் புலி ஆதரவாளராகவோ இருந்திருந்தால் இந்நேரம் சென்னையில் என்ன நடக்கும் என்கின்றீர்கள்?

இவர்கள் தத்துவம் மிக எளிதானது, தமிழனை தமிழகத்தில் தமிழன் கொல்லாமல் யார் கொல்வார்கள்? இன்னொருவன் கொன்றால்தான் நாங்கள் கொதிப்போம்.

இதனைத்தான் இவர்கள் உயர்த்திபிடிக்கும் புலிகள் ஈழத்தில் செய்துகொண்டிருந்தனர், அதனால் இதெல்லாம் இவர்களுக்கு பிரச்சினையாகவே தெரியாது.

சிதறல்கள்

சென்னை சங்கிலி கொலைகளை தடுக்க, ஒரு தமிழன் முதல்வராக வரவேண்டும் என எவனாவது சொல்வான் என கண்களில் விளக்கெண்ணெய் இன்னும் பல எண்ணெய்கள் எல்லாம் விட்டு விழித்திருந்து பார்த்தாலும் ஒரு பயலும் சொல்லவில்லை
> "மாற்றுவோம் .....எல்லாவற்றையும் மாற்றுவோம்.." என முழங்கிவிட்டு, அவசரமாக வீட்டை மாற்றிகொண்டு எங்கோ சென்றுவிட்டார்கள் போல் தெரிகின்றது. மாற்றுவோம் என்ற அர்த்தம் இப்படித்தான் இருந்திருக்கின்றது, முகநூல் ஐடிக்களை கூட மாற்றிவிட்டார்கள்





சங்கராச்சாரி சாமி , சுப்பிரமணியன் சாமி , சந்திரா சாமி , கிரிக்கெட் சீனிவாச சாமி , கணக்கு மேதை குமார சாமி
இன்னும் பல பூசாரி சாமிகள் எல்லாம் கடும் புண்ணியங்களை "பெருக்கி" வைத்திருக்கும் நாட்டில், மனிதனை மனிதனாக மதியுங்கள் எனும் பாவ காரியத்தை சொன்ன திராவிடர்கள் "பொறுக்கிகள்" தான்

# எல்.ஜி பெருங்காயம் மணம், ஒய்.ஜி காயம் விஷம்.




குடிபோதையில் கைதான மாணவி காவல் நிலையத்தில் ரகளை : செய்தி

>> வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைநிமிர்ந்தார்




ஒருவேளை "யாருக்கும் துணிச்சல் இல்லையா??" என கேட்டது, சீமான் கும்பலுக்கான கேள்வியாக‌ இருக்கலாமோ?

ராஜிவ் கொலையில் அந்நியநாட்டு தீவிரவாதிகளை விடுதலை செய் என கத்தும் இவர்களுக்கு, உள்ளூர் தமிழச்சிக்கு குரல்கொடுக்க நேரமில்லையா? என்பதின் மறைமுக கேள்வியாக இருக்கலாம்




 

Tuesday, June 28, 2016

மிசா கொடுமை கால சாபம் காங்கிரசை விடாது என்றால் ....

மிசா கொடுமை கால சாபம் காங்கிரசை விடாது என்றால் பாபர் மசூதி சாபம் பாஜகவினை விடாமலா போய்விடும் என பதில் சொன்னால் சிலர் ஓடிவந்து மோதுகின்றார்கள்.

அதாவது பாபருக்கு இங்கு என்ன வேலை?, அவன் கட்டிய மசூதி இங்கு ஏன்? என ஆளாளுக்கு சாடுகின்றார்கள்.

அன்பர்களே, கோரி மசூதி கஜினி முகமது மசூதி என இருந்தால் அது கண்டிக்கதக்கது, அவர்கள் எல்லாம் இங்கு கொள்ளையர்களாக வந்தவர்கள், ஆனால் பாபர் அப்படி அல்ல,

அவனுக்கு ஆப்கன் பிடிக்கவில்லை, இங்கேயே வாழ வந்தவன் பாபர், இந்தியாவில் ஒரு மன்னனாகவேதான் வாழ்ந்தான், வெள்ளையன் வரும்போது அவன் சந்ததியான ஜஹாங்கீர் ஒரு இந்திய மன்னனாகவே அறியபட்டான், கடைசி மொகலாய மன்னன் பகதூர் ஷா, வெள்ளையனுடன் போராடிய விடுதலை வீரன்.

பாபர் வந்தேறி என்றால், ஆடுமாடுகளுடன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த‌ பிராமணர்கள் வந்தேறி இல்லையா? அவர்கள் மட்டும் என்ன மண்ணின் மைந்தர்களா?

[gallery ids="1079,1078" type="rectangular" orderby="rand"]

ஆப்கானிஸ்தானுக்கு பாபர் 1 பைசா கொண்டுசென்றவனா? இன்றும் அவன் சந்ததி கட்டிய தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளம், அவன் என்ன ஆப்கானில் கட்டினான்? ஒரு செங்கல் நட்டிருப்பான்?

கோஹினூர் வைரம் எங்கு உள்ளது? ஆனால் பாபர் அப்படி செய்தானா?

பாபர் பெரும் இஸ்லாமியவாதியாக இருந்திருந்தால் என்றோ விரட்டபட்டிருப்பான், மொகலாயர் ஆட்சியிலும் சகிப்புதன்மை இருந்தது, இல்லாவிட்டால் புத்த மதம் போல இந்து மதமும் வழக்கொழிந்து போயிருக்கலாம் ஆனால் இல்லை.

காசி ஆலயமும், பூரி ஜெகநாதர் ஆலயமும், காஷ்மீரிய இந்து ஆலயங்களும், கல்கத்தா ஆலயமும் அவர்கள் ஆட்சிக்கு முன்பும் இருந்தன, பின்பும் இருந்தன இன்றும் இருக்கின்றன.

இந்து இஸ்லாமிய வெறுப்பு வெள்ளையனால் தூவபட்டது, அது அவனால் ஏற்படுத்தபட்ட தேசபிரிவினையில் முடிந்தது, ஜின்னா கேட்காமலே பாகிஸ்தானை ரத்த களறியில் வெட்டி எடுத்து அவன் கையில் கொடுத்தான் வெள்ளையன், இங்கு அவனால் பரப்பபட்ட மதவெறியில் அது சாத்தியமாயிற்று

ஆனால் அந்த மதவெறிக்கு தன் உயிரை கொடுத்து முற்றுபுள்ளி வைத்தார் காந்தி, அதன் பின் கொஞ்சநாள் சத்தமில்லை

பின்பு பாபர் மசூதி வடிவில் அது கிளம்பிற்று, இங்குதான் ராமர் பிறந்தார் என அடித்து சொன்னார்கள், ஆதாரம் ஏதுமில்லை

அது பெரும் களபேரமாகி எண்ணற்ற மக்களை கொன்றுகுவித்தது, பிரிவினைக்கு பின் இத்தேசம் ரத்தகளறியில் மிதந்தது என்றால் அதற்கு காரணம் இந்த மசூதி பிரச்சினை.

இன்றைய இஸ்ரேலில் இயேசு வாழ்ந்தார் மறைந்தார், ஆனால் அவருக்கு பின் 400 ஆண்டுகாலம் கழித்துதான் ரோமானிய கிறிஸ்தவர்கள் அவர் வாழ்ந்த இடங்களை அடையாளம் இட தொடங்கினார்கள்,

இன்று அவர் சம்பந்தப்ட்ட இடங்கள் என சொல்லபடுவது குத்துமதிப்பான இடமே தவிர துல்லியம் அல்ல.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவத்திற்கே தடுமாறும்பொழுது, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராமர் , இங்குதான் தவழ்ந்தார் என சண்டயிடுவது அரசியலன்றி என்ன?

நாட்டின் நலனுக்காக தன் அரசுரிமையினை விட்டுகொடுத்து கானகம் சென்றவர் ராமபிரான், இப்படி ரத்த களறியில் நாட்டின் அமைதிகெடுத்து அமைக்கபடுவது அவருக்கு விருப்பம் என்றா நினைக்கின்றீர்கள்?

அப்படியே எமது இந்து அடையாளம் என கிளம்பினால், ஏகபட்ட புத்தமத விகாரைகள் அழிக்கபட்டு பின் இந்துமத ஆலயங்களாக மாற்றபட்ட இடங்கள் உண்டு, அவற்றை எல்லாம் புத்தர் கோயிலாக மாற்றுவீர்களா?

500 ஆண்டுகால முன்பிருந்த மசூதி தரைமட்டமாக்கபட்டது, ஒரு வரலாற்று அடையாளம் என்ற அளவிலாவது விட்டிருக்கலாம் அல்லவா? இனி அந்த பழமை திரும்புமா?

புதிதாக செய்யவேண்டுமே தவிர இருக்கும் பழம் அடையாளங்களை அழித்தொழிப்பது அறிவுடமை ஆகாது

இன்று ஆப்கனில் பழமையான புத்தர் சிலைகளை உடைத்த தாலிபன்களையும், சிரியாவில் 4 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கலை வடிவங்களையும் உடைக்கும் ஐ.எஸ் இயக்கத்தை உலகம் மூடர்கள் பட்டியலில் வைத்துள்ளது, காரணம் பழமையின் மதிப்பு அது, கிடைக்கவே முடியாதது.

அப்படி பாபர் மசூதியினை இடித்தவர்களையும் உலகம் எந்த வரிசையில் வைக்கும்? அதே ஐஎஸ் இடம்தான்.

இன்று சர்வசக்தி படைத்த இஸ்ரேல், அல் அக்சா மசூதியினை தகர்த்து 3ம் ஆலயம் அமைக்க துடிக்கும் இஸ்ரேல் அமைதிகாக்கும் ரகசியம் என்ன? அந்த மசூதியின் பழமை, தொட்டால் உலகம் இஸ்ரேலை விட்டு வைக்காது.

பழம் அடையாளங்களை மத, இன வேறுபாடு இல்லாமல் தொன்மையின் அடையாளமாகவே காணவேண்டுமே தவிர அதில் மத வெறுப்பு அடையாளம் பூசுவது மகா ஆபத்தானது.

முழுக்க முழுக்க அரசியலுக்காக நடத்தபட்ட இந்த நாடகத்தால் நடந்தது என்ன? அப்படி சொன்னவர்கள் ஆட்சிக்கு வரமுடிந்ததே தவிர, கட்டுவார்களா?

அப்படி மசூதியினை இடித்து கோயில் கட்டிய மாவீரன் மோடி எனும் அடையாளத்துடன் அரபு நாடுகளுடனோ, முன்னாள் சோவியத் இஸ்லாமிய நாடுகளுக்கோ மோடி செல்லமுடியுமா? விடுவார்களா?

மதம் என்பது மனிதனை செம்மபடுத்துமே ஒழிய, அது அரசியலானால் நாடு நாசமாய் போகும், உலகம் அதனைத்தான் பார்த்துகொண்டிருக்கின்றது.

இது ராமர் செருப்பு புதைத்த இடம், இது கிருஷ்ணன் கோபிகையரின் துணியினை ஒளித்து வைத்த இடம் என கிளம்பினால் இந்நாடு வளர்ச்சி பாதையில் செல்லாது,

மதவெறியால் பாதிக்கபட்ட சிரியர்களுக்காவது அந்தபக்கம் துருக்கி வழியாக ஐரோப்பா செல்லும் வசதி உண்டு, நாம் எங்கு செல்லமுடியும்?

பாகிஸ்தான், சீனா, ஆப்கன், பர்மா, வங்கதேசம் மற்றும் இலங்கை இந்நாடுகளுக்குதான் செல்லமுடியும்?

நினைத்துபாருங்கள், நினைக்கவே பயமாக இருக்கின்றது அல்லவா?

பல மதங்கள் கலந்து வாழும் இந்தியாவில் உறங்கிகொண்டிருக்கும் பல விஷயங்களை அப்படியே உறங்கவிட்டு விடலாம், அப்படியே சாகட்டும்.

பாபர் வந்தேறி என்றால், ஆடுமாடுகளுடன் மத்திய ஆசியாவிலிருந்து வந்த‌ பிராமணர்கள் வந்தேறி இல்லையா? அவர்கள் மட்டும் என்ன மண்ணின் மைந்தர்களா?

( இந்திய ஐஎஸ் இயக்க போராட்டமும், அரேபிய சங் பரிவாரின் திருப்பணியும்)

Monday, June 27, 2016

நாடு துண்டாகும்: வைகோ ஆவேசம்

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறியது போல, இந்தியாவிலிருதும் மாகாணங்கள் வெளியேறவேண்டும் : வைகோ

FB_IMG_1467286405714

# இவருக்கு தேர்தல் தோல்வி ஜன்னியா? அல்லது விஜயகாந்தும் திருமாவளவனும் தனியாக பிடித்து நொறுக்கி எடுத்தார்களா? வாசன் தென்னை மரத்தில் கட்டி வைத்து அடித்தாரா? அல்லது திமுக பெரும் எண்ணிக்கையில் வென்றதால் அம்மா ரகசிய அடி ஏதும் பின் மண்டையில் கொடுத்தாரா? ஒன்றும் புரியவில்லை.

# காரணம் ஐரோப்பிய யூனியன் தனிநாடு அல்ல, சார்க், ஆசியான் போல, பிரிக்ஸ் போல ஒரு கூட்டமைப்பு, அந்த ஒப்பந்தம் பிடிக்காமல் பிரிட்டன் வெளியேறியதற்கும், இந்திய மாநிலங்கள் பிரிவதற்கும் என்ன சம்பந்தம்?

# இவர் மனைவி விவாகரத்து கேட்பதற்கும் (ஒரு வேளை கேட்டால்?), நாஞ்சில் சம்பத் பிரிந்து சென்றதற்கும் என்ன சம்பந்தம்?

# இந்த ஐரோப்பிய விவகாரத்தையே இப்படி குழப்பி தமிழக மக்களை ஏமாற்றபார்ப்பவர் எப்படி எல்லாம் கிரேக்க வரலாறை மாற்றியிருப்பார், எப்படி எல்லாம் புலிகளின் கோரமுகத்தை மறைத்திருப்பார்.

# அதெல்லாம் சரி வைகோ அங்கிள், அமெரிக்காவில் அடிக்கடி இனவெறி தெறிகின்றது, கருப்பர்கள் கேட்பாரற்று சுடபடுகின்றார்கள், என்றாவது ஆப்ரகாம் லிங்கன் வரலாற்றை சொல்லி, அமெரிக்கா விரைவில் உடையும், சிதறும் என சொல்கின்றீரா?

# அமெரிக்கா என்றால் பெரும் மவுனம் ஏன்? சந்ததி அங்கு வாழ்வாங்கு வாழ்கிறது என்றா? அல்லது ஈழபோராட்டத்தில் அமெரிக்க அரசு உளவாளியாக புலிகளுக்குள் ஊடுருவிய நன்றி கடனா?

சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும், இலங்கை உடையும் : வை.கோ எச்சரிக்கை

# இப்படி உடையும், சிதறும் என சொல்லி சொல்லி இறுதியாக சிதறி சின்னாபின்னமானது இவர் கட்சியும், இவர் கொண்ட கூட்டணியும்தான்.

கலைஞர் வேதனை

அமைதி பூங்காவான தமிழகம் இப்படி ஆகவேண்டுமா : கலைஞர் வேதனை

# எது தலைவரே? உங்கள் ஆட்சியில் பகிரங்கமாக அந்நிய நாட்டு தீவிரவாதிகள் பகிரங்கமாக வந்து இங்கு அடைக்கலமான அகதிகள் பத்மநாபா உட்பட 14 பேரை கொன்று அமைதி பூங்காவின் அமைதியினை கெடுக்கும்போது என்ன செய்தீர்கள்? அந்த புலிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

# அதுவும் சிவராசன் பிடிபட்டும் தப்ப செய்தது யார்? அவனால் காயபட்ட போலிசாரின் குரலை அமுக்கியது யார்? கொலை வழக்குத்தான் வேண்டாம்? பாஸ்போர்ட் விசா எல்லாம் சிவராசன் வைத்திருந்தானா?

# பெட்ரோல் பங்க், வெடிமருந்து தொழிற்சாலை, மருந்து கம்பெனி என புலிகளுக்கு தமிழகத்தை திறந்துவிட்டு அமைதி பூங்காவினை உருவாக்கியது யார்? கிட்டதட்ட காயம்பட்ட புலிகள் 700 பேர் தமிழகத்தில் இருந்திருக்கின்றார்கள். மேலும் ரகசியமாக இயங்கிய புலிகள் 500ஐ தாண்டுகின்றது,

ராஜிவ் கொலை விசாரணைக்கு பயந்து செத்த புலிகள் மட்டும் 24, பிடிபட்டது 100க்கும் மேல்.

இவை எல்லாம் உங்கள் ஆட்சியில் தமிழகம் அமைதிபூங்காவாக விளங்கிய அடையாளமா? காஷ்மீரில் கூட இப்படிபட்ட அமைதிபூங்கா உருவாகவில்லையே?

ராஜிவ் கொலை நடக்காவிட்டால், அறிவாலயம் அல்லவா புலிகளின் ஆயுத களஞ்சியமாக மாறி இருக்கும்? அதுவும் உங்கள் பாஷையில் அமைதி ஆலயமா?

# 1990ல் மாய்ந்து மாய்ந்து புலிகளை வளர்த்து, அமைதி பூங்காவான தமிழகத்தில் எனக்கு ஆபத்து இல்லை என கழுத்தை நீட்டி மாலைவாங்கிய ராஜிவ் சிதற காரணம் யார்?

# அந்நிய நாட்டு தீவிரவாதிகளை வளர்த்தகாலம் அமைதி பூங்கா காலமா? சொந்த தகறாறில் கொலைகள் விழுவது அமைதி பூங்கா கலையும் சோகமா?

# சீமானிடம் புலிகள் பற்றி பேசுவதை நிறுத்துங்கள் என கண்டிக்கவேண்டியுள்ளது, உங்களிடமோ 1990ல் உங்கள் புலி ஆதரவினை பற்றி பேசுங்கள் என கெஞ்சவேண்டி உள்ளது. அவன் பேசியே கொல்கிறான், நீங்களோ பேசாமலே ஆத்திரபட வைக்கின்றீர்கள்

சென்னையில 3 வாரத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன, எண்ணிக்கை 10க்கு மேல் செல்கிறது, கொல்லபட்ட எல்லோருமே தமிழர்கள், கொல்ல சொன்னவர்கள் அல்லது கொன்றவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர் என்கிறது முதல்கட்ட ஆய்வு

# கொன்றவன் மட்டும் சிங்களனாக, தெலுங்கனாக இருந்தால் இந்நேரம் "நாதியற்ற இனமா என் மானதமிழினம்????, இப்படி இலங்கையில் நடந்தபொழுதுதான் என் குலசாமி பிரபாகரன் எழும்பினான், ஏய் இந்திய ஏகாதிபத்தியமே..ஏ வந்தேறி கலைஞரே.. இதற்குதான் தமிழனை தமிழன் ஆளவேண்டும்" என கிளம்பி இருப்பார்கள்

# ஆனால் தமிழனை தமிழன் கொல்லலாம், தமிழகத்தை தமிழன் சுரண்டலாம் எனும் தமிழ் தேசிய கொள்கைபடி, செத்தவனும் கொன்றவனும் தமிழன் என்றால் அது பிரச்சினை இல்லை, அதனை போல கலைஞர் முதல்வராக இல்லை என்றாலும் அறவே பிரச்சினை இல்லை.

# இதுதான் தமிழ்தேசியம் என்ற தறுதலை தேசியம்.

ஒருவேளை டெல்லி பாஜக வேறு, தமிழக பாஜக வேறோ

சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்:தமிழிசை அறிவிப்பு

# அடடா, எவ்வளவு பெரும் அறிவிப்பு இது, கொஞ்சமேனும் சிந்தித்துதான் அறிக்கை விடுகின்றாரா அம்மணி? அல்லது ஏதும் ஜன்னி காய்ச்சலா?

# இவர்கள் கட்சிதான் மத்தியில் ஆட்சி செய்கிறது, சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் மத்தியில் ஆளும் இவர்கள் கட்சிக்கு தெரிவிக்கலாம், இந்த மாநில அரசினை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியினை கொண்டுவாருங்கள் என சொல்லலாம், 7 தமிழர் என தேசதுரோகிகளுக்கு எல்லாம் குரல் எழுப்புபவர்களை இம்முதல்வர் விட்டு வைத்திருக்கின்றார் என புகார் கொடுக்கலாம்.

# அந்த தைரியம் இருக்கின்றதா? மாநில அரசை கலையுங்கள் என சொல்லும் தைரியமுண்டா என்றால் இல்லை, அதனை விட்டுவிட்டு ஆர்ப்பார்ட்டம் என்றால் யாரை ஏமாற்ற? சரி ஆர்ப்பாட்டம் என்றால் எப்படி? தனி நபர் எப்படி ஆர்பாட்டம் செய்யமுடியும்? ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவைத்து கையில் தட்டுகொடுத்துவிடுவார்கள்.

# மத்தியில் ஆள்வது பாஜக, தமிழகம் ஒரு மாநிலம். இதில் மாநில பாஜக தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்டதென்று தனியே ஒப்பாரி வைத்தால் என்ன அர்த்தம்?

# ஒருவேளை டெல்லி பாஜக வேறு, தமிழக பாஜக வேறோ?

அவசரநிலை சாபம் காங்கிரசை விடாது; பா.ஜ., தலைவர் ஜோஷி பாய்ச்சல்

# பாபர் மசூதி இடிப்பு பாவமும், அதனை தொடர்ந்த மும்பை குஜராத் கலவரங்களின் சாபமெல்லாம் உங்களை வாழ்த்துமா? அந்த சாபம் உங்களை சும்மாவா விடும்?

முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 8 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இதற்கு பொறுப்பேற்று பதவி விலகினார் இளங்கோவன்

# அம்மணி தமிழிசைக்கு இந்த செய்தி எட்டியிருக்கலாம், பொன்னாருக்கும் தெரிந்திருக்கலாம்.

# இப்படி தானாக வந்து பொறுப்பேற்று ராஜினாமா செய்பவர்கள் இருக்கும் தமிழகத்தில்தான், பகிரங்க சவால் விட்டுவிட்டு வெட்கமே இல்லாமல் இன்னும் பேசிகொண்டிருக்கும் சீமானும் இருக்கின்றார்

# அவரை தூக்கி கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் வைத்து, கதிர் அரிவாள் சின்னத்தை அவர் நெற்றியிலே கதற கதற பச்சை குத்திவிட வேண்டும்.

To End A Civil War : A Book

இறுதியாக புலிகளுடன் பேசிபார்த்துவிட்டு தலை தேறிக்க ஓடியவர் எரிக் சோல்கிம், சும்மா ஓடவில்லை ஆண்டன் பாலசிங்கத்தையும் இழுத்துவிட்டு ஓடினார்.

பாலசிங்கம் ஓடும்போதே கருணா இந்த பக்கமும், பிள்ளையான் குழு அந்த பக்கமும் தெரித்து ஓடியது.

FB_IMG_1467288096266

ஈழபிரச்சினையில் 1980களில் தலையிட்ட இந்தியா 1990லே தள்ளி நின்றது, அதுவும் 1991க்கு பின் தலைமுழுகிவிட்டது, 1999களில் ஆனையிறவில் சிங்கள ராணுவம் தத்தளித்தபோது கூட வாஜ்பாய் அரசின் நிலைப்பாடு ஒதுங்கியேதான் இருந்தது.

ஆனையிறவில் சிங்கள வீரர்களுக்கான குடிநீரை தடுத்து புலிகள் சிங்கள ராணுவத்தை பணிய வைத்தபொழுது, இந்திய உதவியினைத்தான் சிங்களம் நாடிற்று, ஆனால் இந்தியா ராணுவத்தை அனுப்பவில்லை,

ஆனால் புலிகள் அலறி அடித்து பின் வாங்கினர், அது யாழ்பாணத்தை கைபற்றும் ஒரே வாய்ப்பு, புலிகளின் பெரும் கனவு.

ஆனால் ஏன் புலிகள் பின்வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம், காங்கிரஸ் அரசு என்றால் சோனியா விடவில்லை என்றாவது சொல்லலாம்,

ஆனால் அது வாஜ்பாய் அரசுதான், வைகோ கூட பங்குபெற்ற அரசு, ஆனாலும் புலிகள் ஏன் யாழ்பாணம் செல்லவில்லை? தடுத்த சக்தி எது என்று இன்றுவரை தெரியாது. ஆனால் ஏதோ நடந்து புலிகள் பின்னால் வந்தது மட்டும் நிஜம்.

அதாவது இனி தனிநாடு சாத்தியமில்லை என பிரபாகரனுக்கு மண்டையில் உரைத்தநாள் அது.

அன்று இல்லையேல் என்றுமே ஈழம் கிடைக்காது எனும் நிலை அது, துப்பாக்கி முனையில் நாடு அடைய அதுதான் ஒரே தருணம், ஆனால் முடியவில்லை. ஏன் என்றால் அதுதான் உலக அரசியல்.

துப்பாக்கி சண்டையின் எல்லை என்ன? என புலிகள் உணர்ந்திருந்த சமயம் அது.

இதனை அடுத்துதான் நார்வே தலையிட்டது.

2002ல் பேச வந்தார்கள், 2005 வரை எத்தனையோ முறை சொல்லிபார்த்தார்கள், அதன்பின் ஏதோ இலங்கை அரசுக்கு சிக்னல் எங்கிருந்தோ கிடைத்தபின்புதான் 2006ல் யுத்தம் தொடங்கிற்று.

நார்வே தூதுகுழு என்பது அமெரிக்காவின் முகமூடி, உலகில் அமெரிக்கர்கள் பல முகமூடிகளில் அலைவார்கள். அந்த முகத்தின் பிண்ணணியில் இருந்தது முழுக்க அமெரிக்கா மட்டுமே.

இந்தியா புலிகளை ஒழித்தது என கண்ணை மூடிகொண்டு, காதினை பொத்திகொண்டு சொல்பவர்களை விடுங்கள், அவர்கள் அப்படித்தான், மெதுவாக காதில் சென்று சில்க் ஸ்மிதா தற்கொலைக்கு கூட இந்தியாதான் காரணம் என சொன்னாலும் நம்புவார்கள்,

இந்தியா பழகிபார்த்துவிட்டு சூடுபட்டு ஒதுங்கிய பின், உலக நாடுகள் எல்லாம் எப்படி பேசிபார்த்திருக்கின்றன, எப்படிபட்ட வாய்புகளை எல்லாம் பிரபாகரன் உதாசீனபடுத்தியிருக்கின்றார் , எப்படி எல்லாம் அதிகார தோரணை காட்டி இருக்கின்றார் என்பது விளங்கும்.

இப்படி இந்தியா,நார்வே முதல் ஜப்பான் வரை புலிகள் விரட்டியபடியினால்தான் 2009 முள்ளிவாய்க்காலில் ஒரு நாடும் தலையிடவில்லை, என்னதான் தமிழர்கள் கொல்லபடுகின்றார்கள் என புலிகள் ஓலமிட்டாலும், அது பிரபாகரன் உயிரை காப்பாற்றும் முயற்சி என்பது அவர்களுக்கு புரிந்தது

நிச்சயமாக சர்வதேச நாடுகளை அமைதியாக்கி வைத்தது புலிகளே அன்றி யாருமல்ல என்பதனை இப்புத்தகம் அழகாக சொல்கிறது, எரிக் சோல்கிம் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட புத்தகம்.

அந்த புத்தகம் "To End a Civil War"

முடிந்தால் வாசித்து பாருங்கள், பல புரட்டுகளுக்கு விடைகிடைக்கும், அதில் விளங்குவது ஒன்றே இன்றுதான்

ஆண்டன் பாலசிங்கத்தின் வாய் இல்லை என்றால் புலிகளை நாய் கூட சீண்டியிருக்காது, பாலசிங்கத்தின் வாய்தான் புலிகளின் பலம். அவர்தான் மேதகு, சங்கைகுரிய, துதிகுரிய எல்லாம்.

அவர் வெளியேறியதும் வேரற்ற மரம்போல சரிந்தனர் புலிகள், பிரபாகரன் வெறும் முகமூடி.

தமிழர் மறுவாழ்வுக்காக பாடுபட்டேன், மீண்டும் வந்து தமிழரை வாழவைப்பேன் : மகிந்த ராஜபக்சே

# புலிகள் எனும் கொடூர அமைப்பிடமிருந்து வன்னி மக்களுக்கு விடுதலை கொடுத்த வகையில் ராஜபக்சே சொன்னது சரியாக இருக்கலாம்,

ஆனால் சீமான், திருட்டு முருகனுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்காகவாவது அவர் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்தாகவேண்டும்.

பிதாவே அவரை மன்னிக்காதேயும்.

3 வருடத்திற்கு முன்பு வரை பிரபாகரன் என்னிடம் பாலசிங்கம் போல ஐரோப்பிய விவகாரங்களை கவனிக்க சொன்னார், நான் மானமுள்ள தமிழன், போப் முன்னால் கூட முழந்தாளிடமாட்டேன், (ஆனால் இயேசு கிறிஸ்து சீடர்களின் பாதத்தை கழுவினார் :)

FB_IMG_1467289313335

புலிகள் அப்படி, வன்னி சொர்க்கம், புலி விருந்து பரலோலகம் , புலிகள் திருந்தி விட்டார்கள் பழைய மன்னிப்பிற்கு பாவமன்னிப்பு கொடுத்துவிட்டு புதிய புலிகளாக காணுங்கள், செஞ்சோலை குழந்தைகள் என் காலை பிடித்து அழுதன, இந்தியாவினை எங்களை புரிய சொல்லுங்கள் பாதர் என ரைம்ஸ் படித்தன‌

இப்படி எல்லாம் பாடிய கப்ஸா பாதிரியார் கஸ்பர் என்பவரை எங்காவது பார்த்தீர்களா? காணிக்கை இல்லாவிட்டால் பாதர் கூட சர்ச் மெழுகு ஸ்டாண்டாக‌ மாறிவிடுவார்கள் போல, காணிக்கையே பிரதானம்

அன்னார் அங்கிள் சைமன் , திருட்டு முருகன் வகையறாதான், என்ன காரணமோ, காணிக்கை பை தகறாரோ சங்கைக்குரிய சாமியாரை காணவில்லை

அன்னார் சத்தமே இல்லை, ஒருவேளை பாதிரியார் அல்லவா? சொன்ன பொய்களுக்காக பாவசங்கீர்த்தனம் பெற்று கொண்டிருக்கலாம்,

பிதாவே அவரை மன்னிக்காதேயும்.

Sunday, June 26, 2016

ஹாவர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை





ஹாவர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக பெரும் முயற்சிகள் எடுக்கபட்டு கொண்டிருக்கின்றது, நிதி உதவி கோரபட்டு ஆர்வமுள்ள சிலர் உதவிகொண்டிருக்கின்றனர்.

இதற்கெல்லாம் உதவிகொண்டிருப்பவர்கள் மிக சிலர்தான், ஆனால் தெளிந்த சிந்தனையாளர்கள், எது சாத்தியம் என அறிந்தவர்கள், தமிழின் எதிர்கால நிலைகொண்டு செய்யபடும் மிக நல்ல முயற்சி இது, தமிழரின் கடமை இது.

Stanley Rajan's photo.

ஆனால் இதெற்கெல்லாம் பெரும் வரவேற்பு இருக்குமா என்றால் இருக்காது, அங்கிள் சைமன் போன்றோர் அறவே சாத்தியமில்லா விஷயத்திற்கு நன்கொகொடை கேட்டால் நிறைய வருகின்றது, அவர் செவ்வாய் கிரகத்தில் தமிழீழ் செவ்வாய் திட்டம் என்றாலும் யோசிக்காமல் கொடுக்கின்றார்கள்.


உண்மையில் தமிழுணவாளர்கள் செய்யவேண்டியது இந்த ஹாவர்டு பல்கலைகழக தமிழிருக்கைக்கு உதவ வேண்டியதே தவிர, சீமானை அழைத்து மேடை போட்டு, பிரபாகரன் படம்போட்டு அட்டகாசம் செய்வது அல்ல‌

# தமிழுணர்வு என்றாலே பிரபாகரனை ஆதரிப்பது, சீமானை கத்தவிடுவது, முன் இருந்து விசிலடிப்பது என்ற நிலைக்கு தமிழன் சென்றிருப்பது பெரும் பரிதாபம், இந்த போதையிலிருந்து தமிழனை மீட்டல் வேண்டும்.






சிதறல்கள்...

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்ற எதிர்பார்ப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமும் பரவியிருந்த நிலையில், '

“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை. என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். : தமிழினி புத்தகதிலிருந்து

# அவர் கையில் ஒன்றுமில்லை என இந்தியா 1985லே சொன்னது, இவருக்கு புரிய 24 வருடம் ஆகியிருக்கின்றது




முத்துன கத்தரிக்காய் என யாரை சுந்தர்.சி சொல்கிறார் என தெரியவில்லை, பூனம் பஜ்வாவா? அல்லது கிரணா? முகநூலில் பெரும் பட்டியலே நடக்கின்றது

# ஒருவேளை குஷ்பூவினை அப்படி சொல்லியிருக்கலாம் என ஒருவர் சொல்லிகொண்டிருக்கின்றார்.




ஏவுகனை எதிர்ப்பு தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமத்தை எட்டியது இஸ்ரேல்

# நெருப்புடா.....நெருங்குடா பார்ப்போம்

Saturday, June 25, 2016

கலைஞரின் "வாழ முடியாதவர்கள்" என்ற கதை...




கலைஞரின் ரோமாபுரி பாண்டியன் புத்தகம் சீரியலாக்கபட்டு நிறைவடைந்தது, விழா கொண்டாடபட்டது, அடுத்து தென்பாண்டி சிங்கம் நாவல் சீரியல் தொடங்குகின்றது

தன் எல்லா புத்தகங்களையும் சீரியல் சினிமாவாக்கும் கலைஞரின் முயற்சி பாராட்டதக்கது,

ஆனால் கண்ணதாசனின் நினைவுகளில் மூழ்கி இருக்கும்போது ஒரு வேளை அந்த கதையினையும் கலைஞர் சீரியலாக எடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் குபீர் என்கிறது.


அதாகபட்டது அந்நாளைய திமுக, ரஷ்யாவின் லெனின் இயக்கம்போல தன்னை காட்டிகொண்டது, டால்ஸ்டாயின் பாதிப்பில் பல கதைகள் உருவாயின, ஏழைகளின் கண்ணீரை உருகி சொல்லும் கதைகள் கழகத்தால் வந்தது, கலைஞரும் அப்படி ஒரு கதை எழுதினார்

"வாழ முடியாதவர்கள்" என்ற கதை அது.

கதை என்னவென்றால் வரதட்சனை கொடுக்க வழி இல்லா வறுமையான தந்தை, தன் மகளை தானே மணமுடித்துகொள்வார்

13466271_10206624851915104_6777731222498414331_n

கண்ணதாசன் இந்த கதையினை தனது வனவாசத்தில்(பகுதி 24) பதிந்தே இருக்கின்றார், காலத்திற்குள் எல்லா கதைகளையும் சீரியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கலைஞருக்கு இந்த கதை நிச்சயம் விலக்கு,

காரணம் இக்கதையில் நடிப்பதற்கு சன்னி லியோன் கூட வரமாட்டார்.

இப்படிபட்ட அதிபயங்கர கற்பனைகளுக்கு சொந்தகாரர் என அவருக்கும் சில பக்கங்கள் இருக்கின்றது, இருக்கட்டும்

இந்த போலி திராவிட அரசியல் முகங்களை கிழிகிழி என கிழித்த ஒரே தமிழன் கண்ணதாசன் தான்.

# தலைவன்டா................













Friday, June 24, 2016

நளினியினை விடுவிக்க முடியாது : தமிழக அரசு அறிவிப்பு

நளினியினை விடுவிக்க முடியாது : தமிழக அரசு அறிவிப்பு

# இந்த வைகோ, அங்கிள் சைமன், திருட்டு முருகன் காந்தி, வேல் முருகன் இன்னபிற ஈழ அல்ட்ராசிட்டிகள் எல்லாம் எங்கே சென்று தொலைந்தீர்கள்

# அங்கிள் சைமன் உங்கள் திணவெடுத்த தோள் எங்கே, கொட்டும் மழையிலும் முழங்கும் தொண்டை எங்கே? வேலூர் சிறை உடைக்க கிளம்பிய உங்கள் இன விடுதலை படை எங்கே? எங்கே? அட சொல்லி தொலையுங்கள் எங்கே?

# இதே கலைஞர் சொன்னால் அது தமிழர் துரோகம், ஆனால் ஜெயா அரசு சொன்னால் கடும் நிசப்தம், சாப்பிடவாவது வாயினை திறப்பீர்களா இல்லையா? ஏதும் குரலெழுப்பி பாருங்கள், ஏற்கனவே தொடர் படுகொலைகளால் காவல்துறை கடும் கடுப்பில் இருக்கின்றது

# எலேய் இருக்கியளா இல்லியா? கச்சத்தீவுக்கு அப்புறம் சென்று ஒளிந்து கொண்டிருக்கின்றீர்களா? அல்லது கச்சதீவு அந்தோணியார் ஆலயத்தில் கலைஞர் முதல்வராக வேண்டி ரகசிய பிரார்தனை ஏதும் நடக்கின்றதா?

தினம் ஒரு திருக்குறள் எழுதி விளக்கம் எழுதுங்கள்-சீமான்

தம்பிகள் பேஸ்புக்கில் தினம் ஒரு திருக்குறள் எழுதி விளக்கம் எழுதுங்கள்-சீமான்

# அவனுகளுக்கு அறமும் தெரியாது, பொருளும் தெரியாது, கலைஞரின் விளக்கத்தை பதிவு செய்வார்கள், உடன்பிறப்புக்கள் பொங்கி எழுந்து ஆதாரம் காட்டினால் அது பெரும் அவமானம் அங்கிள்.

# ஆனால் காமத்துபாலுக்கு அர்த்தம் மட்டும் வண்டி வண்டியாய் எழுதுவார்கள் உங்கள் தம்பிகள், அதுவும் வள்ளுவனே வந்து வாசுகி என்னை குத்திகொன்றுவிடு எனும் அளவிற்கு "அர்த்தம்" பொங்கி வரும்,


# வள்ளுவன் வேறு சில வார்த்தைகளை அப்படியே சொல்லியிருப்பாரா? உங்கள் தம்பிகள் நிச்சயம் எழுச்சி ஸ்டேட்டஸ் போட்டு தாக்குவார்கள்.

# அவனுகளுக்கு அது மட்டும்தான் தெரிகின்றது அங்கிள், எழுதுவான் பாருங்கள் ..த்தா, கொம்மாள, அக்காள, என உங்கள் "கட்சிபிராண்ட்" வார்த்தைகள் மகா உத்திரவாதம்

நண்பர் யாரென தெரியவில்லை, நான் போடும் பதிவு பின்னால் வந்து ஆபாச படங்கள் பற்றி லிங்க் கொடுத்துகொண்டே இருக்கின்றார்.

அவர் உதட்டோரம் தெரியும் புன்னகை ஒன்றே அவரின் உள்ள கிடக்கையினை பகிரங்கமாக தெரிவிக்கின்றது, அது பெரிய மோனலிசா புன்னகை எல்லாம் அல்ல, மோசமான புன்னகை.

அன்னார் யாரென சென்று பார்த்தால் அவர் ஒரு சீமானிய அடிப்பொடி என்பது மட்டும் தெரிகின்றது

அவர் கண்களில் ஒரு வெறியும் முகத்தில் ஒரு லட்சியமும் தெரிகின்றது, நிச்சயமாக அது இன விடுதலை வெறி அல்ல, வேறு எதுவோ ஒன்று, அது மாத்ருபூதமோ சேலம் சிவராஜ் வைத்தியரோ விளக்கவேண்டியது.

அவனவன் பத்திரிகை உலகில் எவ்வளவோ படிக்கின்றான், அன்னார் கடந்த 10 வருட ஆராய்ச்சி என்ன தெரியுமா? இந்திய பத்திரிகைகளில் வந்த ஆபாச பட செய்திகள்.

இதற்கு எதற்கு இவர் பத்திரிகை படிக்கவேண்டும், சன்னி லியோன் சிடி 4 போதாதா?

மனநல மருத்துவர் சிக்மண்ட் பிராய்டு அன்றே சொன்னார், இயலாயமையின் உச்சத்தில் இருப்பவர்கள், பாலியல் சம்பந்தமாகவே பேசுவார்கள், எழுதுவார்கள் என்று

இவருக்கு என்ன வகை இயலாமையோ தெரியவில்ல, ஆனால் ஈழம் அமையவில்லை எனும் இயலாமை மட்டும் இல்லை.

டாக்டர் மாத்ருபூதம் இப்பொழுது இல்லை, நண்பர்கள் நல்ல செக்ஸாஜலிஸ்ட் மருத்துவரை இவருக்கு பரிந்துரையுங்கள்

மூளையில் சிந்தனையே வராதா?

டேய் புளி தலையனுகளா

இந்தியா ஈழம் அமைத்து தரவில்லை என ஒப்பாரி வைக்கும் முன் உங்கள் புழுத்துபோன மூளையில் சிந்தனையே வராதா?

ஒரு வேளை ஈழம் அமைந்தால் ஆள்வது யார்? மாகாண தேர்தலில் நிறபவர்களையே கொல்வோம் எனும் புலிகள் யாரை ஆளவிடுவர்?

அரசியல் வித்தகர் அமிர்தலிங்கம் போன்றோரையும் புலிகள் கொன்றாயிற்று, யாரை ஆளவிடவேண்டும்?

ஈழம் அமைத்து புலிகளிடம் கொடுத்துவிடவேண்டும் அப்படித்தானே?

இந்திய ராணுவத்தையே எதிர்த்த புலிகளா நல்ல அண்டைநடாக இருப்பார்கள்? சிங்களனுடன் கைகோர்த்தது போல பாகிஸ்தானுடன் கைகோர்க்க எவ்வளவு நேரமாகும்?

இந்தியா என்ன இவை எல்லாம் சிந்திக்காத நாடா மடையர்களே? வன்னிகாட்டில் பதுங்குகுழியில் கிடந்த ஒருவனே இப்படி சிந்தித்தால் இந்தியா எவ்வளவு சிந்திக்கும்?

சொந்த மக்களையே கொன்றுகுவித்த புலிகளிடமா ஈழம் உருவாக்கி மக்களை பாதுக்காத்துகொள் என கொடுக்கமுடியும்?

அப்படி எந்த தமிழனை புலி பாதுகாத்தான்? ஒன்று அவனாக கொல்வான் அல்லது சிங்களினிடம் இதோ கொன்றுகொள் என கொடுப்பான், முள்ளிவாய்க்காலில் மொத்தமாக கொடுத்தான் பாரு அப்படி.

இவனுகளுக்கு நாடு கொடுக்கலியாம், அழுகையும் மிரட்டலும் வேறு.

மக்கள் தீர்ப்பிற்கு கட்டுபட்டது பிரிட்டன்





ஐரோப்பிய யூனியலிருந்து நடையினை கட்டியது பிரிட்டன், அதன் பணமதிப்பு சரிகிறது, பங்கு சந்தைகளில் கடும் குழப்பம்.

கொஞ்சநாளைக்கு இனி அங்கு நடைபெறபோகும் குழப்பங்கள் கொஞ்சமல்ல.


முதன் முதலாக ஹிட்லர் காலத்திற்கு பின் பெரும் சோதனை காலத்தினை எதிர்கொள்கிறது பிரிட்டன்.

லண்டன் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது என சொன்ன சர்ச்சிலும், ஒரு காலத்தில் தூக்கி நிறுத்திய தாட்சரும் இன்று இல்லை.

ஆனால் யாராவது நிச்சயம் வருவார்கள், வந்து தூக்கி நிறுத்துவார்கள், அவர்கள் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது

ஒரே காரணம் நாட்டுபற்றும், பொறுப்பும், கட்டுபாடும் மிகுந்த மக்கள் அவர்கள், அதுதான் அவர்களின் ஒரே பலம்.

எப்படி சமாளிக்கபோகின்றார்கள் என உலகமே கவனித்துகொண்டிருக்கின்றது.

எனினும் இதனை தொடர்ந்து இன்னும் பல நாடுகள் நடையினை கட்டலாம், பெரும் குழப்பங்கள் ஐரோப்பாவில் ஏற்படலாம்.

இனி ஐரோப்பாவின் தனிக்காட்டு ராஜா ஜெர்மனி,

ஐரோப்பிய ராணி ஏஞ்சலா மெர்கோல்.







இரு சிகரங்கள்.




வெங்கடேஷ் ஆறுமுகம்'s photo.









நட்புக்கு இலக்கணம் என்ற பட்டியலில் கட்டாயம் இடம் பிடித்து இருக்கும் இரு பெயர்கள் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் தமிழ்த்திரையுலகின் இசை வரலாற்று ஜாம்பவான்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த இசை பெரும் ஆறாக இன்னும் வற்றாது காலம் கடந்து ஓடிக் கொண்டு...
இருக்கிறது..! இவர்கள் இருவரும் பல பாடல்களுக்கு இசையமைத்தது, பாடல் எழுதியது எல்லாம் மிகுந்த சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டது.



போனால் போகட்டும் போடா என்று கவிஞர் எழுதிய போது மெல்லிசை மன்னர் அது மரியாதையாக இல்லையே என்று சொல்ல அப்ப அதை நீ மரியாதையா பாடு என்று கவிஞர் சொன்னவுடன் போங்க வாங்கன்னு பாடிப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்களாம்..ஆனால் அந்தப் பாட்டு பாமரனையும் எளிதில் முணுமுணுக்க வைத்தது..! காரணம் அந்த போடா என்ற வார்த்தை..! அதன் பிறகு போடா பாடல்கள் பல எழுதி அவையும் வெற்றி பெற்றன.

அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் கவிஞர் சகோதரனிடம் உதவி கேட்டு அவர் தராத போது உதித்த பாடல்.. அதே போல் புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே என்ற வரிகள் MSV அவர்கள் பள்ளிக்கு செல்லாது நாடக கொட்டகைக்கு வெளியே நின்று பாடல் கேட்ட பள்ளிப் பருவத்தை வைத்து எழுதப்பட்டது.! கண்ணதாசன் இக்கட்டான அரசியல் சூழலில் இருந்த போது எழுதப்பட்டது தான் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க பாடல்..!

இயக்குனர் ஶ்ரீதர் காதலிக்க நேரமில்லை படத்துக்கு ட்யூன் தாமதமானதால் மெல்லிசை மன்னரைப் பார்த்து "விஸ்வநாதன் வேலை சீக்கிரம் வேணும்ப்பா" என்று சொல்ல அங்கிருந்த கவிஞர் சட்டென்று அந்த வார்த்தையையே முதல் வரியாக்கி "விஸ்வநாதன் வேலை வேணும்" பாடலை எழுதினாராம்..! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது..!

மலர்ந்தும் மலராத பாடலில் கவிஞரின் வரியா? மெல்லிசை மன்னரின் இசையா? எது அழகு? என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை..! அவை இரட்டை கிளவி போல் சேர்ந்தே இருந்தன.! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல் இன்னொரு ரசனையான உதாரணம்.! இந்தப் பாடலுக்கான காட்சியமைப்பு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் யோசனை..!

கம்போஸிங் செய்யும் போது கவிஞரும் மெல்லிசை மன்னரும் சேர்ந்து ட்யூன் போடுவதை பல முறை பார்த்த கே.பி. படத்திலும் நாயகன் நாயகிக்கு அது போல சிச்சுவேஷன் வைத்துவிட கவிஞர் அதை மிகவும் ரசித்துப் பாராட்டி பாடல் எழுதினாராம்..! இந்த இரு சிகரங்களைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது.. இது சிறுதுளி தான்..!

இந்த இருவருக்கும் இன்று பிறந்தநாள்.. இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வதற்கு நாம் ஏதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.!ஆயிரக்கணக்கான பாடல்களில் இசையாக எம்.எஸ்.வியும் வரியாக கண்ணதாசனும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.! இருப்பார்கள்..!

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும் போது எங்கோ வானொலியில் இருந்து மிதந்து வந்து செவிகளுக்குள் நுழைகிறது அப்பாடல் வரிகள் "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்"

‪#‎ உண்மைதானே‬..!




தமிழக அரசியலும் வேட்டி சர்ச்சையும் பிரிக்கமுடியாதவை.





அதில் சத்யமூர்த்திபவனுக்கு முதலிடம், அங்கு ஒருகாலத்தில் கிழிந்த வேட்டிகள் கணக்கில்லாதவை, அந்த அலுவலகம் முன் ஒரு வேட்டிகடை திறக்கும் திட்டம் இருந்த அளவிற்கு அவர்கள் வேஷ்டி கிழித்து விளையாடுவார்கள்,

டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு வேட்டி கட்ட தெரியாததால் அவர்களும் கண்டுகொள்மாட்டார்கள்.


திராவிட வேஷ்டி பாரம்பரியம் வித்தியாசமானது, அது திராவிடரின் ஆடை என சொல்லிகொள்வார்கள், அதுவும் திமுகவின் அந்நாளைய கூட்டங்களில் அதாவது சம்பத் தாக்கபட்ட கூட்டங்களில் முதல் குறி வேஷ்டிதான்.

ஒரு வகையான தாக்குதல் உத்தி அது.

எம்ஜிஆர் கணக்கு கேட்டபின் அன்பழகனின் பதில் "என்ன கணக்கு இன்னமும்? இனி வேட்டியினை அவிழ்த்துதான் காட்டவேண்டும்? "

அன்பழகன் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடதக்கது.

கலைஞர் ஜெயலலிதா அரசால் கைது செய்யபட்ட பொழுது கூட, என்னை உடைமாற்ற விடாமல் கொடுமை செய்தார்கள், என் குடும்பத்தார் ஒரு வேஷ்டியினை திரையாக பிடித்துகொள்ள அதன் மறைவில்தான் உடைமாற்றினேன் என உருகி இருந்தார்.

அப்படி திராவிட கட்சிகளின் பெரும் ஆயுதம்தான் வேஷ்டி.

இன்றும் பாருங்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற திராவிட கட்சிக்காரர்கள் எல்லா கட்சி கரையிலும் வேட்டி வைத்திருப்பார்கள், கலாச்சாரம் அப்படி.

Stanley Rajan's photo.

இன்று அந்த திராவிட பாரம்பரியத்துடன் பெரும் தியாகியான நிர்மலா பெரியசாமி "கலைஞர் வேஷ்டியினை உருவியா விடுவோம்" என கேட்டுவிட்டாராம். சர்ச்சை வெடிக்கின்றது

இவர் சட்டமன்ற உறுப்பினரும் இல்லை, அவை பாதுகாவலர் போலிசும் இல்லை, ஒரு அதிகாரமும் இல்லாமல் எப்படி இவரால் பேசமுடிகின்றது?

முன்னாள் திமுககாரரான நிர்மலாவிற்கு அங்கு சீட் கொடுக்கபடவில்லை என அவர் கிளம்பியதும், இன்று இங்கு இவர் தாளமிட்டுகொண்டிருப்பதும் ஒரு சீட்டுக்காகத்தான்

அந்த சீட் பெறுவதற்கும் கலைஞரின் வேட்டிதான் இவருக்கு கிடைத்தது போலும்

துண்டு போட்டு இடம்பிடிக்கும் உலகில் முதல்முறையாக வேட்டிபோட்டு இடம் பிடிக்கின்றார் இவர்,

இது அடுத்த தலைமுறை திராவிட கட்சிகளின் வேஷ்டி கலாச்சாரம், ஒரு பரிணாம வளர்ச்சி அவ்வளவுதான்.

ஆனால் அக்கா மறந்துவிட்ட விஷயம் உண்டு, வேட்டி அல்ல சேலையும் கிழிந்த விஷயமெல்லாம் சட்டசபையில் உண்டு, அதனையும் தெரிந்துவிட்டு பேசுவது நலம்.

எமக்கு அச்சமெல்லாம் அக்கட்சியில் இன்னும் பல முன்னாள் செய்திவாசிப்பாளர்கள் உண்டு, அதில் பெண்களும் உண்டு, அவர்கள் எல்லாம் இனி என்னவெல்லாம் கலைஞரிடம் இருந்து உருவபோகின்றார்களோ தெரியவில்லை

இவர்களுக்கு அரசியல் தெரியவில்லை, இப்படி வேஷ்டி உருவாமல் நைசாக இன்னொவோ கார் உருவிக்கொண்டு ஹாயாக அலையும் நாஞ்சில் சம்பத்தான் உண்மையான அரசியல்வாதி,

சும்மாவா அவர்?, என்ன இருந்தாலும் வைகோவிடம் வித்தை கற்றவர் அல்லவா?















எம்ஜிஆரை இவர் கேட்ட கேள்வி கொஞ்சமா?




1956ல் ,மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது எல்லை சர்ச்சை தொடர்பாக , தமிழக முதல்வர் காமராஜர் சும்மா இருக்கலாம்.

1964ல் , சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தப்படி 5 லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்த போது , தமிழக முதல்வர் பக்தவச்சலம் சும்மா இருக்கலாம்.

1987ல் , ராஜீவ் - ஜெயவர்த்த ஒப்பந்தப்படி இலங்கைக்கு IPKF அனுப்பப்பட்டபோது , தமிழக முதல்வர் எம்ஜிஆர் சும்மா இருக்கலாம் .


ஆனால் , 1974 ல் இந்திரா - சிரிமாவோ ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தந்தபோது மட்டும், தமிழக முதல்வர் கலைஞர் தீக்குளிச்சாவது தடுக்கணுமோ, எங்கள் கலைஞர் என்றால் இளக்காரமா? ஏய் விடமாட்டோம் என ஒரு உடன்பிறப்பு கர்ஜிக்கின்றது

Stanley Rajan's photo.

அன்பரே,

கலைஞரின் அரசியல் தொடக்கம் எதன் அடிப்படையானது, இப்படி காமராஜரும் பக்தவக்சலமும் தமிழக எதிரிகள், நான் இருந்திருந்தால் நடப்பதே வேறு என தோள்தட்டி அரசியல் செய்தது தான் கலைஞரின் தொடக்கம், மறுக்க முடியுமா?

காமராஜர் செய்ததது எல்லாம் தவறு, தமிழர் விரோதம் என ஒப்பாரி வைத்து ஆட்சியினை பிடித்தவர்தான் கலைஞர்.

அப்படி காமராஜர் செய்தது சரி என்றால் இவர் அவரையே ஆளவிட்டிருக்கலாம் அல்லவா? அவர் செய்தது தவறு என சொல்லிதானே இவர் ஆட்சிக்கே வந்தார்?

எம்ஜிஆரை இவர் கேட்ட கேள்வி கொஞ்சமா?

சரி அவர்கள் செய்தது சரி என்றால் இவர் ஏன் குறை சொன்னார்?

அவர்கள் செய்தது தவறு என்றால், இவரும் அதே தவறை செய்தால் என்ன அர்த்தம்? இதற்கு காமராஜைரையே ஆளவிட்டிருக்கலாமே, இவர் என்ன முல்லை பெரியாரை மீட்டாரா? அல்லது 5 லட்சம் மலையக மக்களை ஈழத்திற்கு அனுப்பி காமராஜர் செய்த தவறை சரியாக்கினாரா? இல்லை அல்லவா?

அப்படியானால் இவர் பொய் சொல்லி ஆட்சியினை பிடித்தாரா? அதாவது நல்லாட்சி நடத்திய காமராஜைரையும், பக்த வக்சலத்தையும் கலைஞர் பொய் சொல்லி பழி சுமர்த்தி இருக்கின்றார் இல்லையா?

அதனால்தானே அவர்கள் வழியில் அமைதியாக இருந்திருக்கின்றார், அதனைத்தானே சொல்ல வருகின்றீர்கள்?













கண்ணதாசன் பேசுவதே கவிதை போலத்தான் இருக்கும்





கண்ணதாசன் பேசுவதே கவிதை போலத்தான் இருக்கும், மிக சில படங்களில் நடித்திருப்பார், பராசக்தி கிளைமேக்ஸ் காட்சி நீதிபதி அவர்தான், ஒரு கோப்பையிலே , பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, போல சில பாடல்கள், சில படங்களில் நாகேசுடன் சில காட்சிகள் என வந்துபோவார்.

ஆனால் அவர் முழுவதுமாக நடித்தபடம் "கறுப்பு பணம்".

Stanley Rajan's photo.

கதையில் அவர் கல்விதந்தை, ஆனால் கறுப்புபணம் வைத்திருப்பவர்களின் பணத்தை திருடி கல்வி கொடுக்கும் நாயகன் அவர், கோர்ட்டில் நிறுத்தி இருப்பார்கள், அவர் பேசும் காட்சி, பராசக்தி சிவாஜி போல இல்லாவிட்டாலும் ஒரு கவிதையாய் அப்படி கொட்டும்


இந்த படத்தைதான் ஜெண்டில்மேன், சிவாஜி என இட்லியும், தோசையாக சுட்டார் ஷங்கர் எனும் சினிமாக்காரர்

நிச்சயம் கண்ணதாசனின் குடும்பத்தார் யாராவது கோர்ட் படி மிதித்திருந்தால் சிக்கல்தான், அப்பட்டமான காப்பி

ஆனால் அவர் குடும்பத்தார் அவரைபோலவே பெருந்தன்மைகாரர்களாக இருந்திருக்கின்றார்கள்

தன் சுயசரிதையில் சொல்வார், சென்னை அய்யனாவரம் கிராமத்தில் எங்களுக்கு சொத்து உண்டு, யார் யாரோ கொண்டு சென்றார்கள்

அப்படியே அவரின் கதைகளையும் யார் யாரோ திருடியிருக்கின்றார்கள், ஒரு நாடகத்தை "கலை" நண்பர் அன்றே திருடினாராம், அதன் பின் ஷங்கரும் திருடியிருக்கின்றார், சரி டைட்டிலில் நன்றி என்றொரு வார்த்தையாவது போட்டாரா? இல்லை

பல கவிஞர்கள் அவரின் பாடல்களை திருடினார்கள், இப்படி

"பாதி மனதில் தெய்வம் இருந்து
பார்த்துகொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டி வைத்ததடா" : கண்ணதாசன்

"கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்" : வைரமுத்து

இன்னும் யார் யார் என்னவெல்லாம் திருடினார்களோ?

அப்படியே அவரின் மதுபாட்டில்களை அன்றே திருடி சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்















பிரிட்டனில் வாக்கெடுப்பு



கொஞ்சநாளாகவே பிரிட்டன் இந்த விஷயத்தில் தடுமாறிற்று, என்ன குழப்பம், அந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கவேண்டுமா, இல்லை நடையினை கட்டலாமா என குழம்பி தவித்தது, 2008ல் உலக பொருளாதார மந்தத்தில் இருந்தே இந்த குரல் கேட்கின்றது

அதாகபட்டது 28 ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்த அமைப்பு ஐரோப்பிய யூனியன், 58 ஆண்டுகளாக நடந்துவரும் ஒற்றுமையான சங்கம் இது, இதில் பல ஒப்பந்தம் உண்டு அதாவது எந்த ஐரோப்பிய‌ நாட்டு குடிமகனும் இந்த 28 நாடுகளுக்குள் எங்கும் செல்லலாம், வேலை செய்யலாம் என ஏகபட்ட சலுகைகள்.

இந்த 28 நாடுகளின் பொது கரன்சிதான் யூரோ நாணயம், இந்த ஐரோப்பிய யூனியனின் பெரும் நாட்டாமை ஜெர்மன்.

இப்பொழுது பிரிட்டனில் சிக்கல் எங்கு தொடங்கிற்று என்றால், இந்த அடுத்தநாட்டுகாரர்கள் வரலாம் வேலை செய்யலாம் என ஒரு பாயிண்ட் வருகிறது அல்லவா?, அதில் தான் சிக்கல்

கிரீஸ் முதல் போர்சுக்கல் வரை சகலரும் பிரிட்டனில் புகுந்தார்கள், சில நாட்டு அகதிகள் புகுந்தார்கள் விளைவு பிரிட்டன் மக்களின் நலன் பாதிக்கபட்டதுStanley Rajan's photo.

அது பெரும் பிரச்சினையாக வெடித்தது, ஆனால் ஐரோப்பிய நாடுகளோ இது ஒப்பந்தம் அடிப்படையிலானது என மிரட்டின.

ஓஹோ சங்கத்தில் இருந்தால்தானே பிரச்சினை விலகுவோம் என குரல்கள் ஒலித்தன‌

ஆனால் பிரிட்டனின் பொருளாதாரம் பெரும் வலுவாக இல்லாத காரணத்தால் அரசால் விலக முடியவில்லை, அப்படி விலகினால் நாடு பாழாகும், பெரும் மதிப்பில் இருக்கும் பிரிட்டன் பவுண்டு, டாலருக்கு நிகராகும் என அவர்கள் அஞ்சுகின்றார்கள்

ஆனால் மக்கள் கேட்பதாக இல்லை, அது மக்களாட்சி நாடு அல்லவா? ஒரு வாக்கெடுப்பிற்கு ஏற்பாடாயிற்று

இதோ வாக்களித்து முடித்துவிட்டார்கள், இனி முடிவு தெரியும்

விலகுகிறோம் என முடிவு வந்தால் மக்களுக்கு வெற்றி, தொடர்வோம் என முடிவு வந்தால் அரசாங்கத்தின் வெற்றி.

ஆனால் பாருங்கள், வாக்களிப்பு வேண்டாம், போராடுபவர்களை தூக்கி உள்ளே போடு, நாலு வழக்கினை போடு என்றால் முடிந்தது விஷயம், ஆனால் செய்யவில்லை காரணம் அது உண்மையான மக்களாட்சி

மக்களும் டாஸ்மாக் தகறாறு, 7 பேரை விடுதலை செய், தொப்புள் கொடி உறவு தென்னாபிரிக்க கருப்பர்களிடம் அடி வாங்குகின்றது, என்றெல்லாம் கொடிபிடிக்கவில்லை மாறாக மிக அத்தியாவசியமான பிரச்சினையில் வாக்கெடுப்பு கோரினார்கள்.

நமது நாட்டில் இதெல்லாம் சாத்தியமில்லை, நமது மக்களும் கேட்கமாட்டார்கள், அரசும் செய்யாது

அணுவுலை போன்ற மகா முக்கிய பிரச்சினைகளில் செயல்படுத்தி பார்க்கவேண்டிய வாக்கெடுப்புதான், ஆனால் நமது மக்களின், அரசின் மனநிலை வேறு, அவர்கள் மனநிலை வேறு.

இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்தபட்டாலும், நம் மக்கள் என்ன "எதிர் பார்ப்பார்கள்" என்பது உலகறிந்தது.

எப்படி ஆயினும் பிரிட்டன் மகா முக்கியமான ஐரோப்பிய யூனியன் நாடு, அது வெளியேறினால் அது பல விஷயங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது உண்மை

யூரோ பலம்பெற்று வருவதால், பிரிட்டனை வெளியேற்றினால் அது சரியும், அமெரிக்க டாலர் மதிப்பு கூடும் எனவே அமெரிக்க விளையாட்டும் இருக்கலாம் என்பது ஒரு தியரி,

உலகம் இந்த தேர்தலை உற்று கவனித்து கொண்டிருக்கின்றது, சில நொடிகளில் விடை தெரியலாம்.

இந்நொடியில் பெரும் பரபரப்பு இதுதான்

மக்கள் வென்றுவிட்டால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என கருதுகின்றீர்கள்?

வந்தேறிகளை விரட்டுவோம் என்பதை நாகரீகமாக செய்வார்கள், அதாவது நாட்டை சீரமைக்கின்றோம், கள்ள குடியேறிகளை தடுக்கின்றோம் என மறைமுகமாக விரட்டுவார்கள்.

உலகையே ஆண்டதாம் பிரிட்டன், வெறும் 4 கோடி கூட தேறாத மக்கள் தொகை, மிஞ்சிபோனால் 50 லட்சம் பேர் வெளிநாட்டுக்காரர்கள் இருக்கலாம், இதற்குதான் இத்தனை ஆர்ப்பாட்டம்.

120 கோடி மக்கள் இருந்தும் திபெத், வங்கதேச, பர்மா, ஈழ அகதிகள் என சோறுபோட்டு பாதுகாத்துகொண்டிருக்கின்றது நமது இந்தியா

ஒரு முணுமுணுப்பு வந்திருக்கும்? ஒரு இந்தியன் கத்தியிருப்பான்?

இதுதான் இந்திய பொதுநல ஞான மரபு, அயலானை தன்னில் ஒருவனாக காணும் மரபு, அழுபவனை காணும்பொழுதெல்லாம் அழும் குணம், அடுத்தவன் பசித்திருக்க காண சகிக்காத பெரும் குணம். வள்ளலார் மரபு

லண்டனில் தெரிந்துகொண்டிருப்பது அவர்களின் கொடும் சுயநல ஐரோப்பிய மரபு. தான்மட்டும் வசதியாக வாழவேண்டும் எனும் சுயநல குணம்

இந்தியா ஆல்வேய்ஸ் கிரேட்










மரணமில்லா கவிஞனின் பிறந்தநாள்




சரியாக 89 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் அந்த செட்டிநாட்டு கிராமத்தில் அக்குழந்தை பிறந்திருக்கும், அன்னையார் என்ன சொல்லி தாலாட்டினார் என தெரியாது,

ஆனால் அக்குழந்தை பின்னாளில் கண்ணனுக்கே தாலாட்டு எழுதிற்று, "ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்.." என அழியா பாடல்களை கொடுத்தது, "

குருவாயூருக்கு வாருங்கள் என அழைத்தது, கோகுலத்து பசுக்களோடு கண்ணை கொண்டாடியது,

மொத்த தமிழகத்தை 30 ஆண்டுகாலம் கவி அரசனாய் தன் தமிழ் செங்கோலினால் ஆட்டி வைத்தது.

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின்
தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.

Stanley Rajan's photo.

குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். தமிழை நேசிக்கும் எல்லோருக்கும் அவரையும் பிடிக்கும்

கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக அழகுபட புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம்,

அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.
வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம் கம்பனும் கண்ணதாசனும் அதில் முதன்மையானவர்கள்

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் நம்மை அழைத்து சென்றவன் கம்பன் என்றால், உலக நாடுகளுக்குள்ளும, அழகான சோலைகளுக்குள்ளும், பண்டைய செய்யுள்களுக்குள்ளும், இந்துமத ஞானத்திற்குள்ளும் நம்மை அழைத்து சென்று காட்டியவர் கண்ணதாசன்.

இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் "அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே.." பாடல் தானாக ஒலிக்கும்.

அரசியலநிலைய பாருங்கள் "ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல" எனும் வரிகள் காதில் மோதும். தேர்தலை எடுத்துகொள்ளுங்கள் "காசை எடுத்து வீசு, கழுதை பாடும் பாட்டு, உனக்கும் கூட வோட்டு" எனும் பாடல் தானாய் காதில் ஒலிக்கும்.

குழந்தையினை காணுங்கள் "முத்தான முத்தல்லவோ " என காதில் தாலாட்டு ஒலிக்கும், காதலித்து பாருங்கள், அவர் பாடல்தான் துணைக்கு வரும்.

மதுகோப்பையினை ஏந்திபாருங்கள் உற்சாகமாக அவர் பாடல்தான் மனதில் எழும், ஆனால் மதுவால் அவர்பட்ட பாடுகளை, அவர் சொன்னதை சிந்திந்தால் மது இறங்காது

மலைச்சாரலில் பயணியுங்கள் "செந்தாழம் பூவில்.." தானாக ஒலிக்கும், அழகான மானை, மயிலை அல்லது பெண்களை பாருங்கள் அவரின் பல பாடல்கள் வந்து மோதும்.

இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.

பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.

எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.

மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.

அவரே சொன்னது போல "ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்"
வனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்

( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார்
என்பவர்கள் உண்டு, ஆனால் "நெஞ்சு... ..தி" மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம் :) )

தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே. பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.

திராவிட அரசியலை பக்கம் பக்கமாக கிழித்து தள்ளிய, முதன் முதலிலே அது புரட்சி இயக்கம் அல்ல, அது ஒரு மாயமான் அது அரசியல் நோக்கம் மட்டும் கொண்டது, ஒரு பிழைப்புவாத இயக்கம் என பகிரங்கமாக சொன்னது அவர்தான்.

இந்திய நாட்டுபற்றில் அவரை மிஞ்ச முடியாது, சீன போரின் போதும், பாகிஸ்தான் போரின்போதும் அவர் எழுதிய கவிதைகள் அந்நாளைய பாரதியின் தொடர்ச்சிகள், அவரை தவிர எவன் எழுதினான்? எந்த கவினுக்கு இருந்தது நாட்டுபற்று

யாழ்பாண பல்கலைகழக எரிப்பினை தொடர்ந்து அவன் எழுத்தொடங்கிய நூல் "ஈழமகள் கண்ணீர்" ஆனால் அது முற்றுபெறவில்லை, ஈழமக்களின் கண்ணீர் போலவே.

கலைஞர் மதுகடைகளை திறந்தபொழுது "காமராஜர் படிக்க சொன்னார், கலைஞர் குடிக்க சொன்னார்" என கவிநயத்தோடு முழங்கிய குடிமகன் அவர்.

இன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.

ஏதோ நவீனத்துவமாம், நமக்கெல்லாம் புரியாதாம். அவனைபோன்றவர்களுக்கு புரியுமாம், கேட்டால் கவிதானுபவமாம், பிரக்ஞையாம், இவனிடம் கவிதா உடனான அனுபவத்தை எவன் கேட்டான்?

உரைநடையினை பிரித்து எழுதினால் அது கவிதையாகி விடுமாம், சொல்லி கொள்கின்றார்கள், , உவமை இல்லை, இலக்கணமில்லை, வர்ணனை இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அர்த்தமும் இல்லை.
கேட்டால் முடியை சிலுப்பிகொண்டோ அல்லது பெண்கவிஞர்கள் தலையை கோதிகொண்டோ சொல்வார்கள்,

இது உங்களுக்கு என்ன அர்த்தமோ அதனை எடுத்து கொள்ளுங்கள், 10 அர்த்ததிற்கு மேல் வருமாம்.

அடேய். அடடி அடடே என கவுண்டமணி கரகாட்டகாரனில் செந்தில் சரளா ஜோடியினை கலாய்ப்பார், இன்று அதுவும் கவிதை என ஒருவன் எழுதிகொண்டிருக்கின்றான், அதற்கு அர்த்தமும் சொல்கிறான், பல அர்த்தம் வருமாம்

அடே
அட‌
அடடா.... இது கவிதையாம்,

ஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை, அதுவும் ஒரு மாலைநேர இளம்சிகப்புக்கு ஒரு பெண்கவிஞர்(அப்படி சொல்லிகொள்பவர்) கொடுத்த வர்ணனையை கேட்டால் ஒரு மாமாங்கம் சோறு உள்ளே செல்லாது, அவ்வளவு அருவெறுப்பான உவமை அது.

தமிழை காப்பாற்றவேண்டுமானால், தமிழை வளர்க்கவேண்டுமானால் முதலில் இவ்வகை கொடூர கவிஞர்களிடமிருந்து தமிழை காப்பாற்றியாக வேண்டும், அதற்கு சட்டமியற்றினாலும் பரவாயில்லை.

டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான். தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.
தமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.

இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.

"இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே"
என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.

இன்று கண்ணதாசனின் பிறந்தநாள்.

தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.

தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.

அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை
"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்"
எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.

ஆனாலும் அவர் வரிகளில் சொல்வதென்றால் "நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" , அவருக்கு அழிவே இல்லை.

சந்தேகமின்றி சொல்லலாம், அவர் காவிய தாயின் இளைய மகன், இளையமகன் என்ன? அவர்தான் கடைசிமகன்

முத்தமிழ் அறிஞன் என ஒருவன் தமிழகத்தில் இருந்தான் என்றால் அது கண்ணதாசன் ஒருவனே, தமிழ் அவன் கரங்களில் வீணையாக ஒலித்தது,

கல்லூரி பருவம் மறக்கமுடியாதது, அதன் கடைசிநாள் பிரிவு கலங்க வைக்க கூடியது, ஆனால் கல்லூரி வாசலில் கால்வைக்காத கண்ணதாசன் அந்த சூழ்நிலையினை மிக அழகாக பாடலில் கொண்டுவந்தார் அல்லவா?, அவன் தான் கவிஞர், எப்படி தொடங்கினார்

"பசுமை நிறைந்த நினைவுகளே..."

இன்றும் கல்லூரி பிரிவுக்கு அதனைவிட அருமையான பாடல் அமையும் என கருதுகின்றீர்கள்?

பகவான் கண்ணன் என்னமொழி பேசினார் , அந்த அவதார காலத்தில் கண்ணால் பெற்ற நன்றிகடனுக்குரியர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது தெரியாது.

ஆனால் ஏதோ ஒரு தொடர்ச்சியாக அவர்களில் ஒருவன் தமிழகத்தின் கண்ணதாசனாக அவதரித்து தமிழால் அந்த கண்ணனை உருகி உருகி பாடியிருக்கின்றார்கள் என்பது மட்டும் தெரிகின்றது

நெல்லுக்கு பாய்ந்த நீர் புல்லுக்கும் பாய்ந்தது போல, சில பாடல்கள் மற்ற துறைக்கும் கிடைத்திருக்கலாம்.

காலம் தமிழனுக்கு கொடுத்த கொடை அவர்.

ஆனந்தமானவன் ,அற்புதமானவன், நிச்சயம் கொண்டாடபட வேண்டியவன்

இன்று முழுக்க அவரில் நீந்தபோகின்றேன், அவரின் தமிழில் அவரின் வார்த்தைகளில் மூழ்கி திளைப்பது ஒரு வகை சுகம், தமிழனாய் பிறந்து, தமிழ்படித்ததின் பலனை அனுபவிக்கும் சுகந்தம்.












Thursday, June 23, 2016

சீமான் பிரபாகரன் சந்திப்பு.....

"சுற்றி குண்டுமழை .எந்நிமிடமும் குண்டுவிழுந்துகொண்டிருந்தது, எப்பொழுதும் மரணம் வரலாம், நானும் அண்ணன் பிரபாகரனும் ஓடி ஓடி பேசிகொண்டிருந்தோம் (? :) ), அந்த 3 மணிநேரத்திலும் எம்.ஜி.ஆரை பற்றித்தான் பிரபாகரன் பேசினார்" - சீமான்

‪#‎ ராசா‬..பிரபாகரனை நேரடியாக ராணுவம் தாக்க தொடங்கியது 2009 தொடக்கத்தில், நீங்கள் அமைதிகாலத்தில், அப்பொழுது எங்கு குண்டு விழுந்தது நீங்களும் அவரும் ஓடி ஓடிபேசினீர்கள்?

#‎ பாதுகாபான‬ நிலத்தடி மாளிகையில் வசித்தவர் அவர், அப்படி ஒரு வீடு இருப்பது புலிகளின் இரண்டாம் நிலை தளபதிகளுக்கே தெரியாது, அப்படி இருக்கையில் எந்த காட்டில் இருவரும் ஓடினீர்கள்?

# அப்படியே ரகசிய ஆப்ரேசனை சிங்களராணுவம் நடத்தியது என வைத்துகொண்டாலும், புலிகளுக்கு கட்டளைபிறப்பிக்காமல் உங்ளுடன் ஓடி ஓடி "எம்.ஜி.ஆர் வாழ்க" என சொல்லிகொண்டிருந்தாரா? அவர் என்ன மாவட்ட செயலாளாரா?

# ராணுவம் சுற்றி தாக்கியது அல்லவா? நீர் எப்படி 3 மணிநேரத்தில் தப்பிவந்தீர்கள், ஒருவேளை பாக் நீரிணைப்பை நீந்திவிட்டீர்களா?

# எனினும் இதைகேட்டும் ஒரு கூட்டம் சிந்திக்காமல் கைதட்டுகிறது அல்லவா? அவ்வளவுதன் அவர்கள் புலிகளின் போர்முறையை புரிந்துகொண்ட லட்சணம்.

பத்மநாபா... கலைஞர் நிலைப்பாடு

கலைஞரை பத்மநாபா படுகொலை சம்பவத்திற்கு விமர்சித்தால் சில திமுக சொம்புகள் பொங்குகின்றன.

அமைதிபடையினை இலங்கையிலிருந்து திரும்பசொல்லி விபிசிங் அரசுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? சென்னை வந்த அந்த அமைதிபடையினை, ராணுவத்திற்கு சொந்தமான கோட்டையின் முதல்வராக இருந்து வரவேற்காதது யார்?

பத்மநாபா சென்னைக்கு அகதியாக வந்தபொழுது ஒரிசாவிற்கு ஓடிப்போ என சொன்னது யார்? சரி அவருக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமையினை ஏன் கலைஞர் பறித்தார்.


புலிகள் ஆயுதமோடு தமிழகத்தில் நடமாடியபொழுது பத்மநாபா ஆயுதம் மட்டும் களையபட்டது ஏன்?

தமிழரை காப்பாற்ற அனுப்படபடை தமிழரை கொல்கிறது என சொல்லி திரும்ப சொன்ன கலைஞர், சட்டமன்றத்தில் மகாபாரத கதை சொல்லி நாடு அமையும் என சொன்னது ஏன்? யார் அமைத்து கொடுப்பார்கள் இந்தியா வந்த பின்பு? புலிகள் அமைத்துகொள்வார்கள் என்ற அர்த்தமன்றி வேறென்ன?

புலிகளை கலைஞர் தாங்கி பிடித்தது கொஞ்சமல்ல, அதற்காக பத்மநாபா உயிர்வரை அவருக்கு பொருட்டே அல்ல, ஆனால் ராஜிவ் கொலையும் அதன் பின் சிபிஐ விசாரணையில் பொறி கலங்கிய பின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

பிறந்ததல்லவா? அதனை வாய்விட்டு சொன்னால் என்ன? அதனைத்தான் கேட்டோமே தவிர வேறு ஒன்றுமில்லை.

வீரம் என்பது என்ன? ஆயுதம் தூக்குவது அல்ல, ஒரு கட்டத்தில் அதனை கீழே வைக்கவும் பெரும் தைரியம் வேண்டும் என்றார் சே, அவன் தான் மாவீரன்.

எப்பொழுது ஆயுதம் தூக்கவேண்டும் என தெரிந்த பத்மநாபாவிற்கு எப்போது கீழே வைக்கவேண்டும் என்பதும் சரியாக தெரிந்தது, அவன் வைக்க தயாரானான், அது தைரியம், அது வீரம்.

பத்மநாபா அன்று புலிகளின் மிரட்டலையும் மீறி தேர்தலில்  தைரியமாக நின்று வெற்றியும் பெற்றவர், அந்த இந்திய ஆதரவு பெற்றவரை சென்னையில் காப்பாற்றியிருக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமையா இல்லையா?

ஆனால் அம்முதல்வர் செய்ததென்ன? பத்மநாபாவினை ஒரிசாவிற்கு நிராயுதபாணியாய் விரட்டிவிட்டு, புலிகளை அடக்கிகொண்டிருந்த இந்தியபடையினை வா என அழைத்தால் அத அர்த்தம் என்ன?

எவ்வளவு சொன்னார்கள் டெல்லி அதிகாரிகள்?. அங்கே தமிழருக்கு ஒரு உரிமையும் இல்லை, செயல்படுத்தவேண்டிய திட்டம் எவ்வளவோ உண்டு, நாமோ புலிகளுடன் சண்டையிட்டே 1.5 வருடம் வீணாகிவிட்டது, வரமுடியாது என சொன்னால் என்ன வரத்து வந்தார் கலைஞர்? அவரல் மறுக்கமுடியுமா?

இன்னும் அதிகமாக சொல்லவேண்டுமென்றால் அந்நாளில் கலைஞர் செய்தது புலிகளை ஆதரித்து இந்தியாவிற்கு எதிரான ................

1960ல் காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன் என பகிரங்க மன்னிப்பு கேட்ட கலைஞர், இந்த விஷயத்தில் மட்டும் கனத்த மவுனம் ஏன்?

ஈழபிரச்சினையில் கலைஞர் அமிர்தலிங்கம், டெசோ என சுற்றிகொண்டிருந்த பொழுது ஜெயலலிதா என்ன செய்துகொண்டிருந்தார் என தெரியாது, ஆனால் பின்னாளில் மிக தைரியமாக இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை இழுத்து வந்து தூக்கில் போடவேண்டும் என பகிரங்கமாக சொன்னவர் அவர்.

அந்த ஒன்றிற்காகவே அவரை பாராட்டலாம்.

அவர் என்ன அரசியலிருந்து விரட்டபட்டாரா? அல்லது தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ளவில்லையா? இன்றும் அவர்தானே முதல்வர்,

அவருக்குள்ள அந்த தைரியம் இவருக்கு இல்லாதது ஏன்?

அன்று புலிகளை ஆதரித்தற்காக மிகவும் வருதுகிறேன் என ஒரு வார்த்தை சொன்னால்தான் என்ன? டெல்லியிடம் சொல்லமலா இருப்பார்?

அங்கு மெல்லிய குரலில் ரகசியமாய் சொன்னதை இங்கு கரகரத்த குரலில் சொன்னால்தான் என்ன?

(பாருங்கள் இப்பொழுது வந்து கலைஞரே வாயடைத்து நிற்கும் அளவிற்கு சமாதானம் சொல்வார்கள் உடன் பிறப்புக்கள் )

கட்சத்தீவு ... சில உரிமைகள்.....

கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டாலும் அந்த ஒப்பந்தபடி இந்திய மீணவர்கள் அதனருகே மீன் பிடிக்கவும், அங்கு இளைப்பாறவும், வலை உலர்த்தவும் உரிமை உண்டு.

கச்சதீவு மீட்கபட்டாலும் நமது மீணவர்கள் செய்யபோவது இதுதானே தவிர, அங்கு குடியேறபோவது அல்ல, அங்கு குடிநீர் கூட கிடைக்காது.

ஒப்பந்தபபடி கச்சதீவு அவர்களிடமே இருந்தாலும், இந்த உரிமைகளை மீட்டுதாருங்கள் என மத்திய அரசினை வலியுறுத்தினாலே தீர்ந்தது விஷயம்.


இந்த உரிமைகளை மீட்டாலே பிரச்சினை தீர்ந்ததாகத்தான் பொருள், அங்கிருக்கும் அந்தோணியார் ஆலய சீரமைப்பினை மீணவர்களே பார்த்துகொள்வார்கள்

செய்யவேண்டிய காரியம் இதுதானே தவிர, அதனை விட்டுவிட்டு மீட்டே தீரவேண்டும் என்றால் எப்படி யாழ்பாண கரையோர தமிழ் மீணவன் விட்டுகொடுப்பான்? அவர்களும் அப்பக்கம் வரவேண்டுமா இல்லையா? அவர்கள் எங்கு செல்வார்கள்?

மீட்டு என்ன செய்யபோகின்றீர்கள் என்றால் மேற்சொன்ன காரியங்களை மட்டும்தான் செய்வார்கள், இதற்கு வலுகட்டாயமாக மீட்பது எளிதா? அல்லது ஒப்பந்தபடி உரிமைகளை பாதுகாப்பது எளிதா?

எளிதான காரியம்தான் ஆனால் செய்யமாட்டார்கள், அல்லது செய்யவிட மாட்டார்கள், காரணம் எல்லாம் அரசியல்

திண்ணையில் படுத்தாவது திராவிட நாடுகாண்போம் என்ற கழகத்தின் வம்சம் இது, இப்பொழுது திராவிடநாடு எங்கே? என கேளுங்கள், இப்போது வீடுகளில் திண்ணை இல்லை அதனால் கைவிட்டுவிட்டோம் என்பார்கள்

கச்சதீவு ஒப்பந்தபடி நமக்கு சில உரிமை உண்டு, அதனைத்தான் வலியுறுத்திபெறவேண்டுமே தவிர, மொத்தமாக எங்களுக்கு கிடைத்தால்தான் சரியாகும் என்பது பிரச்சினை வளர்க்கும் அரசியலே அன்றி வேறல்ல.

என் முகநூல் அனுபவத்திலே நான் மிகவும் ரசித்த காமெடி இதுதான்





என் முகநூல் அனுபவத்திலே நான் மிகவும் ரசித்த காமெடி இதுதான்

அதாகபட்டது நணபர் Sanjay Athreya என்பவர் 1990ல் பத்மநாபா கொல்லபட்டதும், ஜெயகாந்தன் பேசிய வீடியோவினை பகிர்ந்திருக்கின்றார், அதில் மபொசி, வாழப்பாடி ராமமூர்த்தி என பலரும் பேசியிருப்பர், அதர பழசான வீடியோ அது, ராஜிவ் கொலைக்கும் முந்தையது.

இதனை பார்த்துவிட்ட சில புலி அடிமைகளோ, சீமானியர்களோ இப்படி வழக்கமான ஆதிதமிழ் வாழ்த்துடன் வாழ்த்தியிருக்கின்றார்கள்


"டேய் ஜெயகாந்தா, வந்தேறி பயலே, விரைவில் இருக்குடா உனக்கு, ஏய் மபோசி உனக்கு தமிழன்னா யார்னு தெரியுமா? ... முவனே, உங்க அம்மா தமிழச்சியாடா? போராட்டம்ணா உனக்கு என்னெண்ணு தெரியுமா?,

டேய் ஜெயகாந்தா, தமிழன் நாடு அடைந்தவுடன் உனக்கு இருக்குடா. உன்னை விடவே மாட்டோம்....."

என மிரட்டல் வேறு

"தமிழக உறவுகளே இந்த இரு கிழவன்களின் முகவரியினை கொடுங்கள், விட கூடாது

நண்பர்களே இவர்கள் இருவரின் வீட்டுமுன்னால் மனிதவெடிகுண்டாக வெடிக்க நான் தயார்

முதலில் இவர்கள் முகநூலை முடக்குங்கள், இவர்கள் போராட்டத்திற்கு ஆபத்தானவர்கள்

முதலில் பத்மநாபாவினை புலிகள் கொன்றதற்கு இந்த கிழவர்களிடம் ஆதாரம் கேளுங்கள், விடாதீர்கள், உறவுகளே அவன் வீட்டிற்கு படையெடுங்கள்"

என கோரிக்கை வேறு, இதில் எவனோ ஜெயகாந்தனை முகநூலில் கண்டிருக்கின்றானாம். இவர்களுக்கு ஏதடா முகநூல் கணக்கு???

# ஜெயகாந்தன் மறைந்து ரொம்பநாள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடதக்கது, தமிழரின் தனிபெரும் அடையாளமான, சோவியத் யூனியன் தமிழரின் சொத்து என அறிவித்து தடையற்ற விசா வழங்கி கவுரத்திருந்த ஜெயகாந்தனை அறியாத் இவர்கள், அட அவர் மறைந்ததை கூட அறியாத இவர்கள்தான் "தமிழ் போராளிகள்"

# சரி, மபொசி யார்? தனிதமிழ் இயக்கம் நடத்தியவர், திருத்தணி தமிழகத்தோடு இணைய போராடியவர், சென்னை இன்று தமிழகத்தோடு இருக்க அவர்தான் காரணம், அவரின் தமிழ்பற்று போற்றதக்கது, சிலப்பதிகாரத்திற்கு அவர் ஒரு நடமாடும் விளக்கம், பெரும் தமிழறிஞர், குமரி மீட்பிலும் அவர் பங்கு உண்டு,





Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.







 

அவர் மறைந்ததை கூட அறியாத இவர்கள்தான் "தமிழ் போராளிகள்"

# இப்படி ஜெயகாந்தனையும், மபொசியினையும் அறியாத இந்த பதர்கள்தான் இன்று "தமிழ் உணர்வாளர்களாம்"

மறக்க நினைத்தாலும் காதோரம் இந்த வரிகள் ஒலித்துகொண்டே இருக்கின்றன‌,

"டேய் ஜெயகாந்தா, வந்தேறி பயலே, விரைவில் இருக்குடா உனக்கு, ஏய் மபோசி உனக்கு தமிழன்னா யார்னு தெரியுமா? ...

தமிழன் இல்லாத நீங்கள் எப்படி தமிழின போராட்டம் பற்றி பேசலாம்..டேய் த்தா.. போராட்டம்னா என்ன தெரியுமாடா... சிந்தனைனா என்ன தெரியுமாடா..டேய் மபொசி தமிழன்னா யார் தெரியுமாடா, தமிழ்நாடுன்னா என்ன தெரியுமாடா?

மேதகு பற்றி தெரியுமா? வீரம் தெரியுமா? மானம் தெரியுமா? ஏய் கிழட்டு வந்தேறிகளா, தமிழ்நாடு தமிழருக்கே. தமிழ்பேச தெரியுமா உங்களுக்கு? தமிழருக்கு நீ கிழித்தது என்ன கிழவா? என்ன தெரியும் உனக்கு?

உங்க அம்மா.....அக்கா...அடுத்த வீட்டுக்காரி, சமையல்காரி, பால்காரி...வேலைக்காரி...................."

மறக்கமுடியாமல் சிரித்துகொண்டே இருக்கின்றேன் , அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் நம்ப கூட இவர்கள் தயாராக இல்லை.
















சுப்பிரமணியன் சாமி என்பவரால் இந்த நாடு ஒரு நன்மையினையும் ஒரு காலமும் அடையாது





இந்த சுப்பிரமணியன் சாமி என்பவரால் இந்த நாடு ஒரு நன்மையினையும் ஒரு காலமும் அடையாது

ஏதோ ஒரு அந்நிய சக்தி இவரை நடத்திகொண்டிருக்கின்றது என்பது மட்டும் உண்மை

உச்சமாக இந்த தேசத்தின் பெரும் அச்சாணியான ரிசர்வ் வங்கி கவர்ணர் மீதே இவர் பாய அனுமதித்தது யார் என்பது மட்டும் தெரியவில்லை, இதன் தாக்கம் பெரிய பொருளாதார வீழ்ச்சியாக அமையலாம்.


எல்லா நாடுகளும் பெரும் வீழ்ச்சியினை சந்திக்கும் நேரத்தில், பிரிட்டனே என்ன செய்யலாம்? பவுண்டின் எதிர்காலம் என்ன? என தவிக்கும் வேளையில்வேளை, ஆனானபட்ட சவுதி அரேபியாவே அரோம்கோ எனும் உலகின் நம்பர் 1 பணக்கார கம்பெனியில் தனது பங்குகளை விற்று நாட்டை வழிநடத்தும் நிலைக்கு தள்ளபடும் இந்நேரத்தில், சீனா தன் பணமதிப்பை குறைத்துகொண்டுள்ள இந்த காலகட்டத்தில்

முக்கியமான‌ ரிசர்வ் வங்கி பொறுப்புடன் சு.சாமியினை மோதவிடுவது நல்லதல்ல, இதன் பின்னால் ஏதும் பெரும் சதி இருக்கலாம்.

# இந்திய பணம் இன்னும் வீழ்ச்சி கண்டால் அதாவது டாலருக்கு எதிராக 70ஐ தாண்டினால் இந்தியா திவாலானதாக அறிவிக்கபடும், தற்போதைய மதிப்பு 67.4

# தக்காளி என்ன? விரைவில் உப்பே கிலோ ரூ.500க்கு விற்கபடலாம், பண மதிப்பு குறைந்தால் அதுதான் நடக்கும்..அரிசி கிலோ 5 ஆயிரம், முட்டை 1000 ரூபாய்

# மிகைபடுத்துதலில்லை இந்தோனேசிய, ஜிம்பாப்வே நாடுகளில் இதுதான் நடந்தது.

# மதிப்பிழந்துவிட்ட இந்திய ரூபாய்களை வைத்து என்ன செய்ய? ஒன்று அதனை எரிக்கலாம் அல்லது பிச்சைக்காரனுக்கு 2 லட்சம் பிச்சை போட்டேன், கோயிலுக்கு காணிக்கை 10 லட்சம் போட்டேன் என பெருமையாக சொல்லிகொள்ளலாம்

# அன்றும் சொல்வார்கள் பார்த்தீர்களா? மோடி ஆட்சியில் பிச்சைகாரனுக்கு கூட லட்சக்களில் பிச்சை கிடைக்கின்றது, எல்லா மக்கள் கையிலும் கோடி கோடியாக பணமிருக்கின்றது, எல்லா மக்களையும் கோடீஸ்வரர்களாக மாற்றியது மோடி அரசு, மோடி மேஜிக்







ரமலான் நோன்பு...

தேர்தலை அண்மித்த ரமலான் மாதம் என்றால் தமிழக அரசியல்வாதிகளுக்கு இஸ்லாமிய நண்பர்கள் மீது பாசம் பொங்கி பாலாய் வழியும்.

முக்காடு போட்டோ அல்லது குல்லா போட்டுகொண்டோ நோன்பு துறப்பு நிகழ்வில் அசத்துவார்கள், கையில் நோன்பு கஞ்சி கோப்பையும் கரண்டியுமாக போஸ் கொடுப்பார்கள், இஸ்லாமிற்காக முகமது நபிக்கு பின் அதிகமாக உழைத்தது எங்கள் கட்சிதான் என்பார்கள், இன்னும் ஏராளமான அக்கப்போர் காட்சிகள் அரங்கேறும்

தேர்தல் சமீபத்தில் நடந்து தொலைந்தபடியால் வெற்றி மயக்கத்தில் சிலரும், தோல்வி கலக்கத்தில் பலரும் இருப்பதால் இந்த நோன்பு துறப்பு நிகழ்வில் அவர்களை காண முடியவில்லை.


கடந்த ஆண்டு இந்தியாவில் இஸ்லாமியரே இல்லாததால் உஸ்பெக்கிஸ்தான் சென்று இஸ்லாமிய மக்களோடு ரமலான் நோன்பு துறந்து வரலாற்று சிறப்பு பெற்றார் மோடி, இந்த வருடம் எந்தநாட்டிற்கு செல்வாரோ தெரியாது, சத்தமில்லாமல் "திருப்புடா வண்டிய.." என நவாஸ் ஷெரிப் வீட்டிற்குகு சென்றாலும் செல்லலாம்.

சரி அவரை விடுங்கள், தமிழக அரசியல்வாதிகளுக்கு என்ன ஆயிற்று?

# மொத்தமாக துறந்தே விட்டார்களா?

குறு குறு செய்திகள்




என்ன செய்வதாக உத்தேசம் மிஸ்டர் வைகோ?, நடிகர் கார்த்திக்கை ஏதாவது ஒரு மாநகராட்சிக்கு மேயராக்கினால் எப்படி இருக்கும்?




# தெறிக்க விடலாமா?

ரொம்ப நாளைக்கு பின் "தெறி" படம் சிக்கல் இல்லாமல் ரிலிசானது பற்றி அண்ணனே கொஞ்சம் நிம்மதியானார், அது தேர்தல் நேரம் என்பதால் தப்பித்தனர் தந்தையும் மகனும்

>> இதோ கிளம்பியாயிற்று, இனி அடுத்த 5 வருடம் விஜய்படம் சிக்கலில்லாமல் வருமானால் அதுதான் பெரும் அதிசயம்

# தலைவா படசிக்கலின் போது அண்ணன் விஜய் அழுது அழுது "அம்மாஆஆஆஆஆ.." என கெஞ்சிய வீடியோ மறக்ககூடியதா?, அது நினைவு வந்தால் அண்ணன் இப்படித்தான் சொல்வார்,


>> சங்கத்த‌ உடனே கலைங்கடா........................








Stanley Rajan's photo.





--------------------





"மரிய சூசையின் காதல்’னு ஒரு கதை எழுதி வெச்சிருக்கேன். இயேசு கிறிஸ்து காதலிச்சார்னா எப்படிக் காதலிப்பார்ங்கிறதை பற்றிய கதை அது " : - இயக்குநர் மிஷ்கின்

# மிஷ்கின் ஒரு மாதிரியான இருட்டுமனிதர் என்பது அவர் படங்களையும், கண்ணாடியும் பார்த்தாலே புரியும், ஆனால் இயேசு கிறிஸ்துவினை காதலிக்க வைப்பார் என யாரும் நினைக்கவில்லை, இன்னும் இயேசுவை சண்டை காட்சி, டூயட், பஞ்ச் டயலாக்,காமெடி எல்லாம் செய்யவைப்பார் போலிருக்கின்றது.

# கொஞ்சநாளாக அடங்கி கிடந்த கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வேலை வரும் நேரமிது, இப்பொழுதும் பாருங்கள் மிஷ்கின் பின்னால் இருப்பது ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகள், எல்லாம் பாஜக மத அரசியல் என ஒரு கூட்டம் ஒப்பாரி வைக்கும்


# அவர்கள் அப்படித்தான் யோசிப்பார்களே தவிர இயேசுவினை கேவலபடுத்தியே தீரவேண்டும் என வெறியோடு ஹாலிவுட்டில் அலையும் யூதனுடைய வேலையாக இருக்கலாமோ என யோசிக்கமாட்டார்கள், டாவின்சி கோட் முதல் பல வழிகளில் இயேசுவினை முடிந்தவரை இழிவுபடுத்துவது அவர்கள்தான்.

# எப்படியோ மிஷ்கின் ஒரு பரிவார கும்பல் என கிறிஸ்தவர்கள் கிளம்பினால், இல்லை இவர் யூத இலுமினாட்டி என சொல்ல நமக்கும் ஒரு பாயிண்ட் ரெடி.



Wednesday, June 22, 2016

ஆப்கனுடன் உறுதியான உறவு

ஆப்கனுடன் உறுதியான உறவு: சுஷ்மா சுவராஜ் திட்டவட்டம்

# 1989க்கு முன்பு வரை இந்திய ஆப்கன் உறவு நன்றாகத்தான் இருந்தது, அதன் பின் குழப்பமான ஆப்கன் அரசியலும் ஆளாளுக்கு ஆண்ட தீவிரவாதிகளும் அந்த உறவினை குழப்பினர், உச்சகட்டமாக பின்லேடனின் மறைமுக ஆட்சியில் ஏர் இந்தியா விமானம் கடத்தபட்டு படுபயங்கரவாதி ஒருவனை "கைவீசய்யா கை வீசு, காந்தகார் போகலாம் கைவீசு.." என விடுவித்ததும் இந்திய‌ கருப்பு பக்கங்கள# ஆனால் அமெரிக்க கட்டங்களை பின்லேடன் இடித்துவிளையாட கிளம்பியபின்பு காட்சிகள் மாறின, ஆப்கன் நிலை மாறிற்று, இந்தியா அங்கே மறுபடி காலபதித்து சாலை பணிமுதல் அணை வரை கட்டிகொடுக்கின்றது


# இந்தியாவின் பொதுநலத்திலும் சுயநலம் இருக்கலாம், அங்கிருந்து பாகிஸ்தானை கண்காணிக்கலாம், பாகிஸ்தான் காஷ்மீருக்குள் எட்டிபார்ப்பது போல நாம் பலுசிஸ்தானில் உற்று பார்க்கலாம், தீவிரவாதம் கட்டுபடும் ஏர் இந்தியா கடத்தல் போன்றவை தடுக்கபடலாம், ஏராளமான விஷயம் உண்டு

# இதனை போலவே 1989வரை இலங்கையினை மிரட்டிய இந்தியா, அங்கு பயங்கரவாதம் ஒழிக்கபட்டவுடன் யாழ்பாண விளையாட்டரங்கு சீரமைப்பு, பலாலி விமான நிலைய சீரமைப்பு என புகுந்து அங்கும் தன்னை பலபடுத்திகொள்கின்றது

# இப்படியாக பயங்கரவாதத்தினை அண்டை நாடுகளில் முறியடித்து, நல்ல நட்புறவினை உருவாக்கி தீவிரவாத அச்சுறுத்தல் இல்ல்லாத இந்தியாவாக மாறிகொண்டிருக்கின்றது இந்தியா.

# ஒருகாலத்தில் இந்தியாவில் அடித்த கொள்ளையினை கொண்டுதான் ஆப்கனில் காஸ்னி அல்லது கஜினி நகர அணைகட்டினை கட்டினான் கஜினியின் முகமது என்பது வரலாறு, அவனது அரசுகுறிப்பு அதனைத்தான் சொல்கிறது, இலங்கை 1955 வரைக்கும் கிட்டதட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான பொருளாதார பலத்தினை கொண்டிருந்த பணக்கார நாடு.

# இன்றோ இந்தியா இவர்களுக்கு உதவிகொண்டிருக்கின்றது , ஒரே காரணம் அவர்கள் தீவிரவாதத்தால் கடுமையாக சீரழிந்தார்கள், நாமோ ஒற்றுமையிலும், சகோதரத்துவத்திலும் மிக அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.