Friday, June 24, 2016

தமிழக அரசியலும் வேட்டி சர்ச்சையும் பிரிக்கமுடியாதவை.





அதில் சத்யமூர்த்திபவனுக்கு முதலிடம், அங்கு ஒருகாலத்தில் கிழிந்த வேட்டிகள் கணக்கில்லாதவை, அந்த அலுவலகம் முன் ஒரு வேட்டிகடை திறக்கும் திட்டம் இருந்த அளவிற்கு அவர்கள் வேஷ்டி கிழித்து விளையாடுவார்கள்,

டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு வேட்டி கட்ட தெரியாததால் அவர்களும் கண்டுகொள்மாட்டார்கள்.


திராவிட வேஷ்டி பாரம்பரியம் வித்தியாசமானது, அது திராவிடரின் ஆடை என சொல்லிகொள்வார்கள், அதுவும் திமுகவின் அந்நாளைய கூட்டங்களில் அதாவது சம்பத் தாக்கபட்ட கூட்டங்களில் முதல் குறி வேஷ்டிதான்.

ஒரு வகையான தாக்குதல் உத்தி அது.

எம்ஜிஆர் கணக்கு கேட்டபின் அன்பழகனின் பதில் "என்ன கணக்கு இன்னமும்? இனி வேட்டியினை அவிழ்த்துதான் காட்டவேண்டும்? "

அன்பழகன் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடதக்கது.

கலைஞர் ஜெயலலிதா அரசால் கைது செய்யபட்ட பொழுது கூட, என்னை உடைமாற்ற விடாமல் கொடுமை செய்தார்கள், என் குடும்பத்தார் ஒரு வேஷ்டியினை திரையாக பிடித்துகொள்ள அதன் மறைவில்தான் உடைமாற்றினேன் என உருகி இருந்தார்.

அப்படி திராவிட கட்சிகளின் பெரும் ஆயுதம்தான் வேஷ்டி.

இன்றும் பாருங்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற திராவிட கட்சிக்காரர்கள் எல்லா கட்சி கரையிலும் வேட்டி வைத்திருப்பார்கள், கலாச்சாரம் அப்படி.

Stanley Rajan's photo.

இன்று அந்த திராவிட பாரம்பரியத்துடன் பெரும் தியாகியான நிர்மலா பெரியசாமி "கலைஞர் வேஷ்டியினை உருவியா விடுவோம்" என கேட்டுவிட்டாராம். சர்ச்சை வெடிக்கின்றது

இவர் சட்டமன்ற உறுப்பினரும் இல்லை, அவை பாதுகாவலர் போலிசும் இல்லை, ஒரு அதிகாரமும் இல்லாமல் எப்படி இவரால் பேசமுடிகின்றது?

முன்னாள் திமுககாரரான நிர்மலாவிற்கு அங்கு சீட் கொடுக்கபடவில்லை என அவர் கிளம்பியதும், இன்று இங்கு இவர் தாளமிட்டுகொண்டிருப்பதும் ஒரு சீட்டுக்காகத்தான்

அந்த சீட் பெறுவதற்கும் கலைஞரின் வேட்டிதான் இவருக்கு கிடைத்தது போலும்

துண்டு போட்டு இடம்பிடிக்கும் உலகில் முதல்முறையாக வேட்டிபோட்டு இடம் பிடிக்கின்றார் இவர்,

இது அடுத்த தலைமுறை திராவிட கட்சிகளின் வேஷ்டி கலாச்சாரம், ஒரு பரிணாம வளர்ச்சி அவ்வளவுதான்.

ஆனால் அக்கா மறந்துவிட்ட விஷயம் உண்டு, வேட்டி அல்ல சேலையும் கிழிந்த விஷயமெல்லாம் சட்டசபையில் உண்டு, அதனையும் தெரிந்துவிட்டு பேசுவது நலம்.

எமக்கு அச்சமெல்லாம் அக்கட்சியில் இன்னும் பல முன்னாள் செய்திவாசிப்பாளர்கள் உண்டு, அதில் பெண்களும் உண்டு, அவர்கள் எல்லாம் இனி என்னவெல்லாம் கலைஞரிடம் இருந்து உருவபோகின்றார்களோ தெரியவில்லை

இவர்களுக்கு அரசியல் தெரியவில்லை, இப்படி வேஷ்டி உருவாமல் நைசாக இன்னொவோ கார் உருவிக்கொண்டு ஹாயாக அலையும் நாஞ்சில் சம்பத்தான் உண்மையான அரசியல்வாதி,

சும்மாவா அவர்?, என்ன இருந்தாலும் வைகோவிடம் வித்தை கற்றவர் அல்லவா?















No comments:

Post a Comment