Saturday, June 11, 2016

கிட்டு எனப்படும் கிருஷ்ணகுமார்



ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர்.

மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம்.

கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை கிளர‌ வேண்டாம்.

போராளி சபாரத்தினத்தை சுட்டுகொன்றவரும் கிட்டு தான்.

Stanley Rajan's photo.

சக போராளி மாத்தையாவுடன் போட்டி, ஏன் பிரபாகரன் பெயரையும் மிஞ்சி சில இடங்களில் அவர் பிரபலமானார், கொஞ்சநாளில் குண்டுவீச்சில் கால் இழந்தார், எப்படி? மகா ரகசியமாக காதலியினை சந்திக்க செல்லும்போது தாக்கபட்டார், பழி மாத்தையா மீது சுமத்தபட்டாலும் பிரபாகரன் அமைதியாகத்தான் இருந்தார், ஏன் என்றால் தெரியவில்லை.

ஆனால் அவர் அனுமதி இன்றி இது சாத்தியமில்லை. காரணம் எந்த நடவடிக்கையும் சம்பந்தபட்டவர் மேல் பிரபாகரன் எடுக்கவில்லை.

இதன் காரணமாக சம்பந்தமே இல்லாமல் நடந்த‌ புலிகளின் "கந்தன் கருணை" படுகொலையினை இன்னொருநாள் பார்க்கலாம்.

அமைதிபடை காலத்தில் காதலி சிந்தியாவுடன் கொழும்பில் திருமணம், தலமை தாங்க யாரை அழைத்தார்கள் தெரியுமா? இலங்கை அதிபர் பிரேமதாசா, ஆனால் அவர் வரவில்லை, பின்னாளில் விருந்துகொடுத்ததாக செய்தி, அதாவது சிங்கள ராணுவத்தை எதிர்த்து பல புலிகள் செத்த இயக்கத்தின் பிராதன நாயகன் கிட்டு விருந்து உண்டது சிங்கள அதிபருடன்.

அதன் பின் ஊனமுற்றவராக பேச்சு வார்த்தை, அரசியல் துறை என இருந்தார்.

அதன்பின் நடந்ததுதான் விசித்தரம், இந்திய உளவுதுறையுடன் தொடர்பில் வந்தார் கிட்டு, டெல்லி வந்தார் ராஜிவ் கொலைக்கு முன்பான கொஞ்ச காலம் முன்பாக அவரை சந்தித்தார், அமைதிபடை மோதல்களை மறந்து சமாதானமாவோம் என உருகினார், ராஜிவும் அவரை வாசல் வரை வந்து அனுப்பினார், அதாவது புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என நம்பவைக்கபட்டார். பரிதாபம்!

ஒரே நேரத்தில் சிங்களனுடம், இந்திய உளவுதுறையிடமும் தொடர்பில் இருந்த வீரம் இது, இவர்கள் செய்தால் தந்திரம், இன்னொருவர் செய்தால் துரோகம், ஈனம்.

ராஜிவ் கொலை நடந்தபின் முதலில் இந்திய உளவுதுறை கிட்டுவினை தொடர்புகொண்டது, "நாங்களே அதிர்ச்சியில் இருக்கின்றோம், பிரபாகரன் சாப்பிடாமல் கிடக்கின்றார், பொட்டு அழுது அழுது கண்கள் வீங்கி கிடக்கின்றார்..." என ஒப்பாரி வைத்தார் கிட்டு, இந்திய உளவுதுறை முதலில் நம்பியது.

ஆனால் விசாரணையும், புலிகளின் வயர்லஸ் தகவலும் சரியாக புலிகளை வளைக்க, கிட்டுவிடம் இந்திய உளவுதுறை திகைப்பில் கேட்டது "நம்ப வைத்தா கழுத்தினை அறுத்தீர்கள்?"

கிட்டு சொன்னார் "இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்".

அதன் பின் என்ன செய்தார்? எந்த பிரேமதசா திருமணத்திற்கு விருந்தளித்தாரோ, அவருக்கே வெடிகுண்டு அனுப்பினார், செத்தார் பிரேமதாசா.

பின் ஒரு கட்டத்தில் மாத்தையா இந்திய உளவுதுறையிடன் தொடர்பில் இருக்கின்றார் என இவர் புகார் சொல்லி பிரபாகரனால் 1000 போராளிகளுடன் கொல்லபட்டார் மாத்தையா. எப்படியோ கால் போனதற்கு மாத்தையாவினை பழிவாங்கினார் கிட்டு.

இந்திய உளவுதுறை தன்னிடம் சம்பளம் வாங்கி ,தனது நாட்டில் பயிற்சி பெற்று, ஆயுதமும் பெற்று, உணவும், உறைவிடமும் பாதுகாப்பும் பெற்று, தன் நாட்டு தலைவரையே கொன்ற கிட்டுமீது கடும் கோபத்தில் இருந்தது, கப்பல் நிறைய ஆயுதங்களுடன் அந்தமான அருகே வந்த கிட்டுவினை கப்பலோடு போட்டு தள்ளியது இந்தியா.

இப்படி நம்பவைத்து கழுதறுக்கும் துரோகத்திற்கு, உண்ட வீட்டிற்கே குண்டு வைக்கும் நன்றிகெட்ட தனத்திற்கு பெயர்தான் மாவீரம், இப்படி செய்தால் அவர் காவிய நாயகர்.

எத்தனை பச்சை துரோகங்கள், எத்தனை மனித தன்மையே இல்லா நன்றிகெட்ட தனங்கள் இவற்றின் உருவமெல்லாம் காவியம், ஆவியம் என சொல்வதை சீமானோடு நிறுத்தி கொள்ளுங்கள், அல்லது திருமுருகன் காந்தி என்பவனிடம் சொல்லுங்கள்.

இன்னும் இங்கு வந்து அவன் வீரம் தெரியுமா? இவன் சாரம் தெரியுமா? என சொன்னால் இன்னும் அதிக தகவலுடன் புலி முகத்திற்கு பின்னால் இருக்கும் துரோக, கோழை முகம் ஒவ்வொன்றாக உரிக்கபடும்.

இவை எல்லாம் ஏராளமான இடங்களில் இணையத்தில் பதியபட்டவை,இன்றும் இருப்பவை, ஏராளமானோர் எழுதிகொண்டிருக்கும் விஷயம்.

சந்தேகமிருந்தால் உங்கள் புலனாய்வு துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்










No comments:

Post a Comment