Wednesday, June 15, 2016

ஆனந்தவிகடன் தடுமாறுகிறது...




கொஞ்ச நாளாகவே ஆனந்த விகடன் தடுமாறுவது தெரிந்தது. ஆனால் இப்படி படுபயங்கரமாக குப்புறபடுத்துகொள்வார்கள் என்பது எதிர்பாராதது

அதாவது ஊடகங்கள் எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைப்பவை, எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள், ஒரு வழக்கு அல்லது ஒருவனின் ஜாதகத்தையே விரல் நுனியில் சொல்வார்கள், பெரும் பாரம்பரிய பெயர் கொண்ட பத்திரிகை அது.

ஆனால் இதோ ஒரு தகவலில் குப்புற விழுந்திருக்கின்றார்கள், ராஜிவ் கொலைவழக்கில் ஜெபமணி சொன்ன முகநூல் தகவலால், யாரோ முகநூலில் ஆர்வகோளாறில் பொங்கி இருக்க, பத்திரிகை செய்தியாக்கி தன் பெயரினை கெடுத்திருக்கின்றது ஆனந்த விகடன்.


ராஜிவ் கொலையாளிகளில் நிறைய சாந்தன்கள் உண்டு. ஒருவன் பத்மநாபா கொலையில் தப்பி, பின் திருப்பெருபுதூரில் ராஜிவ்கொலை சம்பவ போட்டோவில் சிக்கிய சின்ன சாந்தன், பெரும் குற்றவாளி

இன்னொருவன் குண்டு சாந்தன் எனும் பெரியசாந்தன், அவன் பிரபாகரனுக்கு  தகவல் அனுப்புபவன். ஒரு கட்டத்தில் எல்லா புலிகளும் சயனைடு கடிக்க, இவன் சுட்டுகொல்லபட்டான்.

அவனை ஆள்மாற்றி கொன்றதாக அன்றே ஒரு சர்ச்சை உண்டு, ஆனால் அந்த காலகட்டத்தில் ஏராளமான புலிகள் தமிழகத்தில் சயனைடு கடித்து செத்துகொண்டிருந்தனர்.

இப்போது எந்த புண்ணியவானோ தேடபட்ட சின்ன சாந்தன் தான் சுட்டுகொல்லபட்டதாகவும் சிறையில் 25 வருடமாக இருக்கும் சின்ன சாந்தன் அப்பாவி என்றும் கிளப்பிவிட்டுவிட்டான், இதனையே திருச்சி வேலுச்சாமி, சீமான் ஆகியோரும் சொன்னார்கள்

அவர்கள் ஆயிரம் சொல்வார்கள். ஆனால் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் சிந்தித்து செய்திவெளியிட வேண்டாமா? பத்திரிகை தர்மம் இவ்வளவுதானா? இதோ சின்ன சாந்தன் அப்பாவி 25 வருடமாக அப்பாவி சிறையிலா என ஏதோ கிளப்பிவிடுகின்றது

அவர் சொன்ன சாந்தன் வேறு, இவர்கள் இட்டுகட்டும் சிறையில் இருக்கும் சாந்தன் வேறு

என்னமோ ஆகிவிட்டது விகடனுக்கு என்பது மட்டும் உண்மை, தடுமாறுகின்றது.





















ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தேடப்பட்ட வந்த குற்றவாளி குண்டு சாந்தன்தான். (சின்ன) சாந்தன்…



VIKATAN.COM











No comments:

Post a Comment