Monday, June 13, 2016

வரும் 19ம் தேதி பத்மநாபா நினைவுநாள்...






  • திமுக ஏன் தன் மீதான இனபடுகொலை விமர்சனத்திற்கு பதிலளிக்கவில்லை, ஏன் வைகோவினை கண்டிக்கவில்லை, ஏன் ஒருவார்த்தை பேசவில்லை என பலர் சலசலக்கின்றனர்

    அள்ளி வீச ஏராளமான பாயிண்டுகள் திமுகவிடமும் உண்டு, ஒரு நிமிடத்தில் வீசலாம், ஆனால் சிக்கிகொள்வார்கள் எப்படி?

    1990ல் பத்மநாபா அடைக்கலம் கேட்டு கெஞ்சியபோது, எங்காவது போய் தொலையுங்கள் என விரட்டியது கலைஞர்தான், உரிய பாதுகாப்பு இல்லாமல் அவர் அபலையாய் சென்னையில் அலைந்தபோதுதான் சகல ஆயுதங்களுடன் வந்த புலிகள் பத்மநாபாவினை கொன்றனர். அந்நேரம் ஏதோ மகுடிக்கு உட்பட்ட மயங்கிய நிலையில் திமுக இருந்தது.

    ஏதோ ஒரு சக்தி திமுகவினை இயக்கியது, அதனை சொல்ல திமுகவினால் முடியாது, அது பல சிக்கல்களை கொண்டுவரும் விஷயம்.

    வெற்றிமுகத்தில் இருந்த அமைதிபடையினை அழைக்க கலைஞர் கொடுத்த அழுத்தமும் குறிப்பிடதக்கது.

    மறைமுகமாக பத்மநாபா படுகொலைக்கு திமுக தான் காரணம், புலிகள் பலம்பெற திமுகதான் காரணம் என இன்னும் பல சர்ச்சைகள் வரும்.

    பழி துடைக்கின்றேன் என முகத்தை துடைத்து புண்ணாக்க திமுக விரும்பவில்லை, அது அமைதி காக்கின்றது, அரசியல், அவர்கள் பிரச்சினை.

    நமக்கென்ன சொல்லுங்கள் புட்டு புட்டு வைக்கலாம், வரும் 19ம் தேதி பத்மநாபா நினைவுநாள், அன்றைக்கு தெரியும் கலைஞர் புலிகளுக்கு உருகி உருகி உழைத்த விதம்.





1 comment:

  1. உண்மை சொல்ல, நியாயத்தை யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யம் இல்லாமல் பேசினால் தான் நம் கூற்று மக்களை சென்றடையும். வைகோ factor இருக்கிறதே.

    ReplyDelete