Wednesday, June 29, 2016

யார் மனிதன்?

கலைஞரின் பேரன் மனிதன் என்றொரு படம் எடுத்திருக்கின்றார், ராம் ஜெத்மலானி போன்ற பிரபல வழக்கறிஞர்களின் பாத்திரமாக பிரகாஷ் ராஜ் பாத்திரம் அமைக்கபட்டிருகின்றது, படம் வெற்றியாம், இனி இப்படிபட்ட சமூக கதைகளைத்தான் உதயநிதி படமாக எடுப்பாராம்.

FB_IMG_1467187827926

நீதிபதிகளை வழக்கறிஞர்கள் மட்டும்தான் தவிக்க விடுவார்களா? , நீதிபதி சர்காரியாவினை தாடியினை பிய்த்துகொண்டு ஓடவைத்ததாகட்டும், இன்று டெல்லி நீதிபதி (ஸ்பெக்ட்ரம் விசாரணை) ஷைணியினை தெறிக்க விட்டுகொண்டிருப்பதாகட்டும் "அவரை போல்" முடியுமா? அவர் என்ன வழக்கறிஞரா?

ஒரு சாதாரண சாமான்யன்

தயாளு அம்மாளை விசாரிக்க வந்த மருத்துவகுழு அறிக்கை, தா.கிருட்டினன் கொலை வழக்கில் 100 பேருக்கு மேல் பல்டி என எத்தனை நீதிபதிகளை தலை தெறிக்கவிட்டவர், அல்லது தெறிக்கவிட்ட "தலைவர்" அவர்.

# நீதிபதிகளையும், பெரும் ஐஏஎஸ் அதிகாரிகளையும், வெளிநாட்டில் பதக்கம் பெற்ற அறிவு மூளைகளையும், 7ம் வகுப்பு தாண்டாத ஒரு கிராமத்தான் ஓட ஓட விரட்டினார் என்றால் அதுதான் வரலாறு, அது தான் திறமை, அது சுவாரஸ்யம்.

# அவர் கதையினை, இந்த தெறிப்புகளை "தலைவன்" என ஒரு படமெடுத்தால் எப்படி இருக்கும், நிச்சயம் 1 படத்தில் முடியாது, பாகுபலி போல பல பாகங்கள் எடுக்கவேண்டி இருக்கும், எதற்கும் இப்பொழுதே உதயநிதி காப்புரிமை பெற்றுகொள்வது நல்லது

# ஒவ்வொரு பாகமும் 1000 நாள் எளிதாக ஓடும், அவ்வளவு சுவாரஸ்யமான வரலாறு அது. அப்படி மட்டும் நடந்தால் பாகுபலி எல்லாம் பறந்தோடிவிடும்.

# அடக்குனா அடங்குற ஆளா நீ

No comments:

Post a Comment