Friday, March 31, 2017

ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர்


https://youtu.be/f_5Y4Exl2zs





ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர்

'அந்த ரஞ்சித் பய பேச்ச கேட்டு இனி மலேசிய கதைகளில் நடிக்காதீங்க, அவனுக்கு ஒண்ணுமே சரியா தெரியல‌

எங்க நாட்டினை பற்றி உண்மையினை நல்லவிதமாக சொல்லும் கதைகளில் நடியுங்கள்" என மலேசிய பிரதமர் சொல்லியிருப்பாரோ?


ஆனாலும் ரஜினிக்கு மச்சம், பல‌ நாட்டு அதிபர்களும் தேடி வருகின்றார்கள்

இலங்கை அதிபரை சந்திக்க முடியாமல் திருமா தடுத்தாலும், மலேசிய பிரதமரை தன் வீட்டிலே சந்தித்து "ஹா ஹா ஹா" என சிரித்துகொள்கின்றார் ரஜினி

அவர் விதி அப்படி....

கபாலியால் எழுந்த சர்ச்சைகளை மிக அழகாக சமாளிக்கின்றார், அந்த கசப்பு மறைந்து, இனி ரஜினிக்கு "டத்தோ" பட்டம் கிடைக்கலாம்..




 

 



 

ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால்...

பல விவசாயிகள் வாழவில்லையா? விவசாயத்தில் அப்படி என்ன நஷ்டம்? எல்லா மார்க்கெட்டிலும் காய்கறிகள் குவிந்துதானே கிடக்கின்றது?


இப்படி எல்லாம் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள்


அந்த விவசாயம் எப்படி நடக்கின்றது என கவனியுங்கள், அந்த தொழில் யாரையாவது அந்த குடும்பத்தில் ஓட அடித்திருக்கும், கதற கதற விரட்டியிருக்கும்




அவனும் எங்கெல்லாமோ ஓடி கையில் கொஞ்சம் பணம் சேர்ப்பான், சேர்த்தவுடன் புத்தி எங்கே போகும்?


கிணற்றில் நீர் இருக்கின்றதா? ஏதாவது நிலத்தில் செய்யலாமா? நாம் இல்லாவிட்டாலும் வீட்டில் யாராவது பார்த்துகொள்வார்கள்.


கினற்று நீர் வற்றிவிட்டால் 4 போர்வெல் அமைத்தாவது பார்த்துகொள்ள முடியாதா?


பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மண்ணுக்கும் மனிதனுக்குமான ரத்தபாசம் இது, விவசாய குடும்பத்தில் பிறந்த யாரும் இதற்கு தப்ப முடியாது


அப்படி எங்கோ இருந்து கொண்டு சொந்த மண்ணில் விவசாயத்தை தாங்கி பிடிப்பவர்கள் உண்டு


தாயினை, தந்தையினை விவசாயத்தில் தோற்க விடாமல் அவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல‌.


விவசாயம் இல்லை என்றால் மறுநொடி ஊரை காலிசெய்ய வேண்டியதுதான், மண்ணை விட்டு போவது சாதரண விஷயமா? நாம் தான் சென்றுவிட்டோம், அவர்களாவது அங்கேயே இருக்கட்டும் என்ற எண்ணத்தில் நடக்கும் போராட்டம் அது


இன்று தமிழகத்தின் வளமான விவசாயிக்கு இப்படி அண்ணனோ, தம்பியோ, மகனோ இருக்க கூடும். எங்கோ தொலைநாட்டிலோ, தொலைதூரத்தில் எந்த அலுவலகத்தில் இருந்தாலும் தமிழகத்தில் விளையும் விவசாய பொருட்களில் அவனின் உழைப்பும் இருக்கின்றது.


அவன் சிங்கப்பூரில் இருக்கலாம், அமெரிக்காவில் இருக்கலாம், அரேபிய எண்ணெய் வயல்களில் இருக்கலாம், சென்னையில் மும்பையில் எங்காவது கணிணி முன் இருக்கலாம்


இல்லை எங்காவது கண்காணா தேசத்தில் பாடுபட்டுகொண்டிருக்கலாம்.. ஆனால் அவன் விவசாயத்திற்கும் பாடுபடுகின்றான், அவன் பணத்தில்தான் ஊரில் விவசாயம் நடக்கின்றது..


ஒரு விவசாயி வாழ்கின்றான் என்றால், அதற்காக எவனோ எங்கோ உழைத்துகொண்டிருக்கின்றான் என பொருள்


ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால், அவன் படும் பாடுகளை எல்லாம் உள்வாங்கி அவன் வீட்டில் வைராக்கியமாக ஒரு வாரிசு வளர்கின்றது என அர்த்தம்


அந்த தொழில் வித்தியாசமானது, லாபம் என நடத்தவும் முடியாது, நஷ்டம் என்றால் விட்டுவிட்டு ஓடவும் மனம் வராது


எங்கோ இருந்து தன் குடும்பத்த்தின் விவசாயத்திற்கு உதவும் எல்லோரும் விவசாயியே, அதில்தான் இந்த அளவாவது விவசாயம் வாழ்கின்றது


மண்ணை பிரிந்து, குடும்பத்தை பிரிந்து அவர்கள் விவசாயத்தில் தோற்றுவிட கூடாது என்பதற்காக தன்னை வருத்தும் ஒவ்வொருவனும் இன்று பாதிக்கபட்ட விவசாயிதான்,


அவனது பாதிப்பு வேறுமாதிரியானது, அவன் இழப்பது ஏராளம்


விவசாயத்தை மன நிறைவாக செய்துவிட்டு, சாப்பாட்டிற்காக‌ மகனின், அண்ணனின் தம்பியின் சில இடங்களில் மகளின் பணத்திற்காக காத்து நிற்கும் எத்தனையோ குடும்பங்கள் உண்டு,


குடும்பத்திற்கொருவர் செய்யும் தியாகத்தினால்தான் விவசாயம் ஓரளவு வாழ்கின்றது,


எல்லா விவசாய குடும்பங்களுக்கு பின்னாலும் அப்படி ஒரு தியாக வாழ்வு இருக்கின்றது, தனிமையில் அழுதும், அவர்களின் நிம்மதியினை நினைத்து மகிழ்ந்தும் வாழும் ஒரு விதமான வலி


அது வார்த்தையால் விளங்காத வலி.



சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்

தக்காளி விலை சரிந்தால், கிலோ 10 பைசா என சந்தோஷபடுவனும், காய்கறிகடையில் 50 பைசா கூட கொடுக்க ராம்ஜெத்மலானி போல வாதம் புரிபவனும்தான் இன்று விவசாயிக்கு ஆதரவாக பேசிகொண்டிருக்கின்றான்


வெங்காய விலை ஏறினால் சீறுபவன் தான் இன்று விவசாயிக்கு ஆதரவாம்


உணவகத்தில் வாழை இலை போட்டால் செலவு என பாலித்தீன் பேப்பர் போடுபவன் எல்லாம் இன்று விவசாயிக்கு கத்திகொண்டிருக்கின்றான்.




மோட்டார் முதல் பைப் வரை பாமர விவசாயிடம் கொள்ளை விலைக்கு விற்கும், விவசாயிக்கு செல்லவேண்டிய நீரினை கேன்வாட்டர், கோக் என விற்றுகொண்டிருக்கும் வியாபார சமூகமும் விவசாயிக்கு கண்ணீர் விடுகின்றதாம்


எல்லா வகையிலும் விவசாயினை வஞ்சிப்பது இந்த சமூகம், அரசு மட்டுமல்ல‌


இந்த சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்


காய்கறி கடையில் ஒவ்வொரு நகரத்துவாசியும் 50 பைசா உயர்த்தி கொடுத்தாலே, அது மிக சரியாக விவசாயி கையில் கிடைத்தாலே போதும்,,வாழை இலை, இளநீர் முதலான விவசாய பொருளுக்கு வரவேற்பு இருந்தாலே போதும்


மோட்டார் கடைகளில் விவசாயியினை வஞ்சிக்காமல் இருந்தால் போதும்.


உரக்கடைகளில் அவனுக்கு நியாயமான விலையில் பொருள் கிடைத்தால் போதும்


வியாபார இடைதரகர்கள் கொஞ்சம் நியாயமாக நடந்தால் போதும், லாரி போக்குவரத்துக்காரகள் கொஞ்சம் இரக்கபட்டால் போதும்


மொத்தத்தில் இந்த சமூகத்தின் எல்லா பிரிவும் கருணை காட்டினாலே போதும் விவசாயி வாழ்வாங்கு வாழ்வான்


அவனிடமிருந்து எல்லாவற்றையும் வாங்கும் சமூகம், அவன் தடுமாறும்பொழுது தாங்கிபிடிக்கவும் கடமைபட்டிருக்கின்றது


தன்னை காக்க இந்த சமூகம் உண்டு என்ற நம்பிக்கை வருமானால் அவன் ஏன் சாக போகின்றான்?


அவன் தடுமாறும்பொழுது தாங்கிபிடித்தால் போதும், அவன் தன்னை நிலை நிறுத்திகொள்வான்..


மாறவேண்டியது அரசு மட்டுமல்ல, மக்களும் தான்..



அம்மணமாய் ஆர்பரிப்போம் ....


17629607_10208790310490215_2746004724359133667_n.jpg


டெல்லியில் நடக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குழு போராட கிளம்பிற்று


அது ஒரு விவகாரமான குழு என்பதால் வித்தியாசமாக சிந்தித்துவிட்டது, அதாவது நாடே நம்மை திரும்பிபார்க்க வேண்டும் என யோசித்திருக்கின்றார்கள்


சும்மா கத்தினால் நாய் கூட திரும்பாது, அப்படியானால் கத்தி பியோஜனமில்லை, எதையாவது அதிரடி காட்டினால் தேசம் திரும்பும்,




காட்ட வேண்டும், எதனையாவது காட்ட வேண்டும்


இந்த வேகத்தில் சிந்தித்தபொழுது அவர்களுக்கு டெல்லி விவசாயிகளின் துன்பம் நினைவுக்கு வரவில்லை, மாறாக கோவணம் நினைவுக்கு வந்துவிட்டது, அதனை துறந்துவிட்டால்...


மனதிற்குள் உலகமே திரும்பிபார்க்கும் உணர்வு வந்துவிட்டது


உடனே அறிவித்துவிட்டார்கள் "அம்மண போராட்டம்", "அம்மணமாய் ஆர்பரிப்போம்"


சொன்னதோடு மட்டுமல்லாமல் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார்கள், அதவாது "அம்மணமாய் ஆர்பரிப்போம்" எனும் அறிவிப்பு போஸ்டர்


மற்றபடி ஆளவந்தான் கமலஹாசன் பாணியில் அல்ல‌


சொன்னால் போதாதல்லவா? சொன்னபடி செய்யவும் தெருவுக்கு வந்துவிட்டார்கள், காவல்துறைக்கு வியர்த்துவிட்டது


போட்டு சாத்தலாம்தான், ஆனால் அடிக்க அடிக்க அவிழ்த்துவிட்டால் கருமத்தை என்ன சொல்ல..


அதனால் பிடித்து வைத்து புத்திசொல்லிகொண்டிருக்கின்றார்கள், பொது இடத்தில் இது சட்டவிரோதம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


காவல்துறை சொற்படி கேட்டு கலைந்து சென்றாலோ இல்லை வேறு வழியில் போராட சிந்தித்தாலோ அவர்களுக்கு நல்லது


இல்லாவிட்டால் உங்கள் விருப்படி நில்லுங்கள், இங்கு அல்ல கம்பிகளுக்கு பின்னால் என இழுத்து செல்லபடுவார்கள்


விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதாக எண்ணிகொண்டு, சன்னி லியோனுக்கு ஆதரவாக கிளம்பியிருக்கின்றார்கள்,



வைகோ நிகழ்த்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

 


17626679_10208789871199233_5074877473536338642_n.jpg


மதிமுக எனும் கட்சி ஈழதமிழர்களுக்காக‌ நிரம்ப உழைத்தாகிவிட்டது, இப்பொழுது தமிழர்களுக்காக உழைக்க கிளம்பிவிட்டது


எம்ஜி ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா நடத்தி தன் பெரும் தார்மீக கடமையினை அது நிறைவேற்றிகொண்டிருக்கின்றது


தமிழர்களை மகிழ்வித்த எம்ஜிஆருக்கு அது நூற்றாண்டு விழா நடத்துகின்றது




வைகோ சரோஜாதேவியினை அழைத்தெல்லாம் எம்ஜிஆர் நிகழ்ச்சி நடத்துகின்றார், வெண்ணிற ஆடை நிர்மலா, லதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை என தெரியவில்லை


எம்ஜிஆர் இருக்கும் வரை அவரை தீவிரமாக எதிர்த்த கோப்பால் சாமி, இப்பொழுது எம்ஜிஆர் புகழ்பாட காரணம் என்ன?


செத்து 30 வருடன் ஆனபின்புதான் எம்ஜிஆர் பற்றி படித்தாரா? அவ்வளவு மெதுவான மூளை கொண்டவரா வைகோ, அட பரிதாபமே...


மிஸ்டர் வைகோ


எம்ஜிஆருடன் 1960களில் பணியாற்றிய சரோஜாதேவியினை அழைத்திருக்கின்றீர்கள், இன்னும் எம்ஜிஆரோடு பழகிய எத்தனையோ பேரினை மேடையேற்றியிருக்கின்றீர்கள்


ஆனால் 1940 முதல் எம்ஜியாரோடு பழகி, அவருக்கு வசனம் எழுதி, அவரை எம்.எல்.ஏ ஆக்கி பின்னாளில் முதல்வரே ஆக்கிய ஒருவர் கோபாலபுரத்தில் இருக்கின்றார்


ஒரு தேங்காய் மூடி வக்கீலாக வாழ்க்கையினை தொலைத்திருக்கவேண்டிய உங்களை பஞ்சாயத்து தலைவர், எம்.எல்.ஏ, எம்பி பின் கட்சி தலைவர் என உருவாக்கியதும் அவர்தான்


ஆக எம்ஜிஆரை உருவாக்கியவர், உங்களை உருவாக்கியவர் என இரு நன்றிகடன்கள் உங்களுக்கு இருக்கின்றன‌


இன்று எம்ஜிஆருக்கு நடக்கும் கூட்டத்தில் அமர முழு தகுதிபடைத்தவர் அவரே


அவரை ஏன் நீங்கள் அழைக்கவில்லை மிஸ்டர் வைகோ???


கலைஞருக்கு எம்ஜிஆரை பற்றி தெரியாததெல்லாமா சரோஜா தேவிக்கு தெரிந்துவிடும்???


எம்ஜிஆருக்கு விழா சரியாக ஆர்.கே நகர் இடைதேர்தலின்பொழுதுதான் நடத்தவேண்டுமா? கொஞ்ச நாள் கழித்து நடத்தினால் எம்ஜிஆர் கல்லறையோடு கடலுக்குள் விழுந்துவிடுவாரா?


அது இருக்கட்டும் ...


ரஜினியும் சினிமாவிற்கு வந்து 42 ஆண்டுகள் ஆகின்றன, இன்னும் 8 வருடத்தில் 50ம் வருடம் கொண்டாடபடும்


அன்று நீங்கள் இதே போல ஸீரிதேவி, லட்சுமி, மாதவி, அம்பிகா, ராதா, சரிதா என எல்லா ரிட்டையர்டு நடிகைகளையும் தேடிபிடித்து வந்து விழா நடத்தி ஆகவேண்டும்


இல்லாவிட்டால் தமிழர்கள் உங்களை சும்மா விட மாட்டார்கள்


எம்ஜிஆருக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா?


ஆக சரோஜாதேவியினை விமானம் ஏற்றிய கையோடு, இந்த ரஜினியின் முன்னாள் நடிகைகளை தேடிபிடித்து கொண்டுவர கிளம்புங்கள்


இன்னும் 8 வருடம்தான் இருக்கின்றது, யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்...


ஈழம்பிடிப்பேன் என தோணியேறி போனவர், இப்பொழுது சரோஜாதேவியினை பிடித்து வந்திருக்கின்றார்....



குஷ்பூ நடித்த 'வெற்றி விழா' , மறுவெளியீடு காண்கிறது...

https://youtu.be/2uO_GcHMIfY

 


குஷ்பூ நடித்த வெற்றி விழா படம், விரைவில் மறுவெளியீடு காண்கின்றது : செய்தி


சமீபகாலமாக வந்த செய்திகளில் மகிழ்ச்சியான செய்தி இதுதான், அதுவும் இன்று செய்யும் அலப்பரை ரணங்களுக்கு இந்த செய்திதான் இதமாகின்றது


விரைவில் வரட்டும் பட்டையினை கிளப்பிவிடலாம்





மிஸ்டர் Babu Rao , டேரா படம் வரும்பொழுது குஷ்பூ ரசிகர்களுக்கு இட்லி கொடுப்பீர்களா? அதுவும் மூத்தவர்களுக்குத்தான் கொடுப்பீர்களோ?

முடிந்தால் ரஜினி படம் வெளியிடும் நாளில் பல்செட்டும், விக்கும் கொடுத்து பாருங்கள் பார்க்கலாம்...

வெற்றிவிழா படம் ஒரு குஷ்பூ இருந்த ஒரே காரணத்திற்காக ஓடிய படம், அவர் ஒருவரே காரணம்..

ஜோடியாக போட்டிருந்தால் தான் தெரியமாட்டோம் குஷ்பூ தான் நிற்பார் என கமலஹாசனே அப்படத்தில் அஞ்சியிருந்தார்..

அதையும் மீறி படத்தில் குஷ்பூதான் நின்றிருந்தார்

படம் மறுபடி வரட்டும், இந்த நயனின் ரசிகர்களுக்கெல்லாம் அன்று பென்சிலும், சாக்லெட்டும் வழங்கபடும்

போங்கடா எல்.கே.ஜி பாய்ஸ்...

"கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.."




 

ஜெ. இறப்புக்குப்பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் உயிர் பெறுகிறது




17498750_10208789596312361_8309014779909013257_n.jpg


ஜெ. இறப்புக்குப்பின் அண்ணா நூற்றாண்டு நூலகம் உயிர் பெறுகிறது : செய்தி


இது என்ன ஆச்சரியம்?


அவர் இறந்தபின்புதான் அவர் கட்சியிலே பலருக்கு உயிரே வந்திருக்கின்றது, அதுவரை நடைபிணமாக இருந்தவர்கள் எல்லாம் உயிரோடு அலைகின்றனர்





பன்னீர், மதுசூதனன் வரை எத்தனையோ உயிர்பெற்று நலம் பெற்று உலவும் பிணங்கள் உண்டு...

பிஎச் பாண்டியன் முதல் தம்பிதுரை வரை நலம் பெற்ற முடவர், செவிடர், குருடர் உண்டு..

"இதோ குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றன, செவிடர் கேட்கின்றனர்" என்ற பைபிளின் வரிகள் ஜெயா இறப்புக்கு பின்புதான் அதிமுகவில் நிறைவேறிகொண்டிருக்கின்றது

இதில் அண்ணா நூலகம் புத்துயிர் பெறுகின்றதாம்.. என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

விரைவில் புதிய சட்டமன்ற கட்டமும் புத்துயிர் பெறத்தான் செய்யும், அதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை..













 


 

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்




17626505_10208789536990878_945410918179769276_n.jpg


ஆந்திர செம்மர கடத்தல் கும்பல்கள் பல உண்டு, அவற்றில் ஒரு கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்


பெரும் கடத்தல் தலைவன் இவனே, இவனை 2015ல் ஆந்திரபோலிஸ் கைதுசெய்துவிட்டது, ஆனாலும் கடத்தல் தொடர்ந்தது


எப்படி என போலிஸ் விசாரித்தபொழுதுதான் லட்சுமணனுக்கு கல்கத்தா காதலி இருப்பதும், அவள் கேங் லீடரான கதையும் தெரிந்தது





அவள் கல்கத்தா நடிகை சங்கீதா, செம்மர கடத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது,

கடத்தல் ராணியாக மாறினாள் சங்கீதா,போலிஸ் வலை விரித்தது

ஆனால் அவள் சிக்கவில்லை, போலிசுக்கு தண்ணி, மினரல்வாட்டர், ரோஸ் வாட்டர் என எல்லாமும் காட்டினாள், பிடிபடவில்லை

அழகு நிலையங்கள், சினிமா வாய்ப்புகள், பெரும் பணம் என எதற்கும் அவள் சிக்கவில்லை

ஆனால் அம்மணி ஒரு விஷயத்தில் வீக்காக இருந்திருக்கின்றாள், அது அவளின் பீசா பிரியம்

ஆந்திரா போலிஸ் அழகாக வலை விரித்தது

கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்து கட்டளை பிறப்பித்த அவளுக்கு தினமும் 3 பீசா பேண்டுமாம், தகவல் போலிசாருக்கு கிடைத்திருக்கின்றது

பீசா டெலிவரிக்காரனாக போலிசாரையே அனுப்பியிருக்கின்றார்கள், பலமுறை பல பீசாக்களோடு பல போலிசார் சென்றிருக்கின்றனர்

உறுதிபடுத்தியபின் தூக்கி வந்து ஆந்திர சிறையில் அடைத்துவிட்டார்கள், பீசாவிற்கு ஆசைபட்ட அம்மணி இப்பொழுது ஆந்திர கோங்குரா சட்ணிக்கு தள்ளபட்டிருக்கின்றார்

ஆந்திர போலிசுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன, விசாரணை தீவிரமாக நடக்கின்றது, எப்படியும் பீசாவிற்காவது அம்மணி உண்மையினை சொல்வார் என கடும் நம்பிக்கையில் ஆந்திர காவல்துறை இருக்கின்றது

"எவ்வளவு பெரிய உலகளாவிய நெட்வொர்க்கினை , பெரும் மில்லியன் வர்த்தகத்தை, பீசாவிற்கு ஆசைபட்டு காதலி காட்டிகொடுத்துவிட்டாளே, அல்பம் இவளையா காதலித்தோம்.. என பர்மா லட்சுமணன் சுவரில் முட்டிகொண்டிருக்கின்றான்

ஆக பீசா பெரும் கடத்தல் சாம்ராஜ்யத்தை காட்டிகொடுத்திருக்கின்றது

இயக்குநர் ஹரி போன்றோருக்கு, சூர்யா போன்றவர்களுக்கு அடுத்த கதை ரெடி....













 


 

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பங்கள் ..

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பஙகள் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம்.


பெரும் கட்சியில் சண்டைவந்தால் அது வியப்பல்ல, ஆனா கருணாசுக்கு ஒரு கட்சி இருப்பதே பெரும் விஷயம், அதில் 4 பேர் இருப்பது அடுத்த ஆச்சரியம், அதில் கருணாஸ் சிலரை நீக்குவதும், அவர்கள் இவரை நீக்குவதும் பெரும் ஆச்சரியம்


அப்படி என்ன நடந்தது?




ஒன்றுமில்லை கூவத்தூர் பொற்காலங்களில் சுமார் 5 கோடி வரை கருணாஸ் அடித்துவிட்டார் என்ற செய்தி வந்தது, அவர் கடனை எல்லாம் அவர் அடைத்தத செய்தி கசிந்தது


நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாயும் பொழுது, ஒட்டுபுல்லுக்கு 2 சொட்டாவது பாயவேண்டும் அல்லவா? அதுதானே கட்சி தர்மம்?


அதுவும் கிடைக்காவிட்டால் எப்படி?


முக்குலத்தோர் புலிப்படை இப்படித்தான் கருணாசை விரட்டியதாக சில செய்திகள் வருகின்றன, கருணாஸ் மறுத்திருக்கின்றார்


கருணாசுக்கே 5 கோடி என்றால்.....


"நான் ஆணையிட்டால்...இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்" என ராமசந்திரன் பாடியதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது



ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இவர்கள் ரெடி..

வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் அரசு 35 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை அனுப்பி வைத்தது.


இலங்கை மிக செழிப்பான நாடு, எல்லா பயிறும் செழித்து வளரும் வளமான பூமி, மகாவலி போன்ற ஆறுகள் ஏராளமான குளங்கள் எல்லாம் உண்டு


அதுவும் வன்னிபகுதி அக்கால‌ தமிழக தஞ்சைக்கு நிகரானது




கடும் யுத்தம் அவர்களின் பல விவசாய நிலங்களை பாழாக்கிற்று, இனி அவை பழைய உருபற்று வர நெடுங்காலம் ஆகும்


பற்றாக்குறைக்கு தமிழகத்தை போலவே அங்கும் கடும் வறட்சி தாக்கிற்று, இதனால் பெரும் உணவுதட்டுப்பாடு நிலவுகின்றது,


இந்நிலையில்தான் பாகிஸ்தான் அரிசியினை அள்ளி கொடுத்து உதவுகின்றது, இவ்வளவிற்கும் இஸ்லாமியர்களை அவ்வளவாக கண்டுகொள்ளாத நாடு இலங்கை, இருந்தும் ஏன்?


அது அரசியல், உலக அரசியல், அது அப்படித்தான்


பாகிஸ்தான் அரிசியில் யாருக்கும் பங்கு போகும்?


தொப்புள்கொடி உறவான ஈழதமிழர்களுக்கும் அந்த உதவி செல்லும்


ஆக ஈழதமிழருக்கும் உணவளிக்கின்றது பாகிஸ்தான், தமிழகத்தில் சத்தமில்லை


இதே அரிசியினை கப்பல் நிறைய‌ மூட்டைகளுடன் இந்தியா அனுப்பியிருந்தால், கூடவே ரஜினியினையும் அனுப்பியிருந்தால் இந்த திருமா முதலான‌ தமிழ் உணர்வாளர்கள் சும்மா இருப்பார்களா?


வீடு கொடுத்ததை தடுப்பது போல, அரிசி கொடுப்பதையும் தடுப்பார்கள்,


ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட மட்டும் இவர்கள் ரெடி..


ஈழவிவகாரங்களிலிருந்து இந்தியாவினை தனிமைபடுத்தும் ஒருவித செயலைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்


புலிகளும் அதனைத்தான் செய்து எல்லாம் நாசமாக்கி எல்லாவற்றையும் அழித்தார்கள்..


இந்தியா விலக விலக சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவுமே அங்கு கால்பதிக்கும் அது இந்தியாவிற்கு நல்லதல்ல‌


ஆக இந்த திருமா முதல உணர்வாளர்கள் செய்வது தேசதுரோகம் என்பதில் சந்தேகமே இல்லை..



ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமரா

பணப்பட்டுவாடாவை தடுக்க ஆர்.கே.நகரில் கண்காணிப்பு கேமரா


வைக்க வேண்டிய அப்பல்லோவில் இல்லாத கேமரா, போயஸ்கார்டனில் இல்லாத கேமரா, ஆர்கே நகர் எங்கும் வைக்கபடுமாம்


ஏதோ தெருவில் தள்ளுவண்டியில் வைத்து பணம் கொடுப்பது போலவும், கேமராவில் அதனை பார்த்துபிடிப்பது போலவும் செய்து கொண்டிருக்கின்றார்கள்




செய்திதாளுக்குள் கவர் வைத்து வீசுவது, போன் பில், கரண்ட் பில், மளிகை பில் கட்டுவது, காய்கறி கூடைக்குள் பணம், பூக்கட்டுக்குள் பணம் என‌ என 2000த்திலே செய்தார்கள்


2017ல் எவ்வளவு வளர்ந்திருப்பார்கள்?


இணையம் இவ்வளவு வந்தபின் இருந்த இடத்தில் இருந்தே கொடுக்கமுடியாதா?


மருத்துவமனை, பள்ளிகளில் பில் கட்டும் அளவிற்கு நிலமை சென்றாயிற்று, பணம் புழங்கும் எல்லா இடத்திலும் புகுந்தாகிவிட்டது


நிலமை இப்படி இருக்க , இவர்கள் நடுதெருவில் கேமரா வைக்கின்றார்களாம்


வைக்கட்டும், வேட்பாளர்கள் அந்த கேமரா அருகில் வந்து மர்மமான புன்சிரிப்போடு ஒரு வணக்கம் வைப்பார்கள் பாருங்கள்..


தேர்தல் கமிஷனுக்கு அதனை விட கடும் எரிச்சல் ஏதுமிருக்காது.


இது இருக்கட்டும்


தேர்தலில் வெல்லபோவது யார்? என பெட் கட்டும் சூதாட்டம் சூடு பிடித்திருக்கின்றதாம்


இங்கே கட்சிகளிடம் வாங்கி அதனை சூதாட்டத்தில் கட்டும் விளையாட்டும் தொடங்கியாயிற்று


உண்மையில் காவல்துறையின் நிலை பரிதாபம்


பணம் கொடுப்பதை தடுக்குமா? கொடுக்கும் பணத்தை வைத்து ஆடுவதை தடுக்குமா? அது தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது






சர்ச்சையில் சிக்கிய‌ தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி


ஊழல் அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பதவிக்கு வரும் மாநிலத்தில், ஊழல் அதிகாரிகள் மறுபடி பதவிக்கு வருவதில் என்ன ஆச்சரியம்?


இப்படித்தான் நடக்கும்..








ஆர் கே நகர் : சூடு பிடிக்கும் பிரச்சாரம்...

https://youtu.be/7ZTH8eKOfhw

தீபா, பன்னீர், தினகரன் என மூன்று பேரும் மாறி மாறி திட்டிகொள்வதன் பெயர் ஆர்.கே நகர் அதிமுக தேர்தல் பிரச்சாரம்


அக்கட்சியின் வோட்டினை அவர்களே கெடுத்துகொள்ளலாம், முதலில் அதிமுக கட்சியே இல்லை, பல பெயர்களோடு பலர் கையில் அது சுற்றிகொண்டிருக்கின்றது


திமுக முயல் ஆமை கதையினை போல கெத்தாக இருக்கின்றது


மற்ற கட்சிகள் நிலை சொல்லிகொள்வது போல் இல்லை, கங்கை அமரனுக்கு விழவேண்டிய வோட்டுக்களை தடுப்பதில் எச். ராசா, சு.சாமி போன்றோர் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்


அதனையும் மீறி ஓரிரு வோட்டுக்கள் விழுமோ என்ற அச்சத்தில் தமிழிசை தீயாய் வேலை செய்கின்றார்.


தமிழக
காங்கிரஸ்க்கு கட்சி என்பதே மறந்து போய் விட்டது, கட்சி வெல்லவேண்டும் என்பதை விட, கட்சிக்குள் யார் வெல்ல கூடாது என்பதில் அவர்களுக்கு அதீத அக்கறை..


கம்யூனிஸ்டுகள் வாழாவெட்டிகளாகி நெடுநாள் ஆயிற்று..


வைகோ எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடி தான் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவித்து விட்டார், ஏதோ கிடைத்திருக்கலாம், கண்டெய்னர்கள் எப்பவுமா கிடைக்கும்?


விஜயகாந்த் உடல்நிலை மோசமாகிவிட்டது, அவர் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்லலாம் என்கின்றார்கள்...


அனுதாப வோட்டுக்களை மட்டும் இனி அக்கட்சி கொஞ்சம் அள்ள வாய்ப்பிருக்கின்றது

நயனின் "டோரா" படம் இன்று வெளிவருகிறது




17457487_10208789120980478_5119524687767336017_n.jpg


நண்பர்கள் Babu Rao, Chandran Kannan மனதில் "டேரா" போட்டு தங்கியிருக்கும் நயனின் "டோரா" படம் இன்று வெளிவருகின்றதாம்


Babu Rao நேற்றே விரதம் எல்லாம் இருந்து, காலையிலே சாமி கும்பிட்டு தியேட்டருக்கு கிளம்பியிருப்பார், இனி தியேட்டர் வாசலில் அரைமணி நேரம் தியானம் இருப்பார்


முதல்காட்சி அவர் முன்னால்தான் திரையிடபடும்





இதுவரை நயனின் தற்கொலை படை, , முதல்காட்சி படை, முகநூல் படை என எல்லா படைகளையும் நடத்திகொண்டிருந்த அவருக்கு ஆதரவாக சிலர் அகில இந்திய நயன் ரசிகர் மன்றம் என ஒன்றை தொடங்கிவிட்டனர்

நண்பருக்கு உற்சாகம் தாளவில்ல்லை, சும்மாவே ஆடும் சாமிக்கு மேளம் அடித்த நிலையில் இருக்கின்றார்

படம் வரட்டும், எப்படி இருக்கின்றது என இவரை
தவிர எல்லோரிடமும் கேட்கலாம், இவர் நிச்சயம் நயனை தவிர எதனையும் பார்க்கபோவதில்லை, அதனால் இவரிடம் கேட்க கூடாது

எப்படியோ நண்பர் Babu Rao திருவிழா கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டார், அதனால் துபாய் பாலாவிற்கு ஒரு வாரத்திற்கு சிக்கல் இல்லை

இனி படம் வெற்றிபெற்றால் நண்பர் திருப்பதிக்கு நடந்துசென்று, நயன் உருவ தங்க டாலரை காணிக்கை போட்டுவிட்டு, மொட்டை அடித்து வேண்டுதல் நிறைவேற்றுவார்..

இருந்தாலும் ஒரு உறுத்தல்

இன்று பெய்த மழையில் சற்று முன்பு முளைவிட்ட காளான்களுக்கு எல்லாம் அகில இந்திய அளவில் ரசிகர் மன்றம் இருக்கும் பொழுது, ஒரு கோபுரமென‌ நிலைபெற்றுவிட்ட குஷ்பூவிற்கு ஒரு மன்றமும் இல்லையா?

என்ன சோதனை இது? நாமெல்லாம் இருக்கும்பொழுது இப்படி ஒரு நிலை எப்படி வரலாம்?

நமது கொள்கை, கோட்பாடு எல்லாம் கேள்விகுறியாகாதா?

உடனே "அகில உலக குஷ்பூ ரசிகர் & நற்பணி மன்றம்" தொடங்க ஆலோசனை மிக அவசரமாக நடக்க இருக்கின்றது..

Sadhu Sadhath, Venkatesh Mothilal போன்றோர் அவசரமாக கான்பெரன்ஸ் காலில் வருமாறு கேட்டுகொள்ளபடுகின்றனர்...













 


 

விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது



விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது


கோஹ்லி திறமையான ஆட்டக்காரர், ஆனால் ஏன் இவரை விட சிறந்த ஆட்டக்காரரான டோனிக்கு அந்த விருது ஏன் கிடைக்க்கவில்லை?


டோனிக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பது அவ்வப்போது தெரிகின்றது, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகல் என அந்த விஷயங்களில் நன்றாக தெரிகின்றது





டோனியின் காலங்கள் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ் காலத்திற்கு அடுத்த பொற்காலம் என்பதனை பின்பு வரலாறு சொல்லும்..

டோனிக்கும் ஒரு பத்மஷிரி கொடுத்திருக்கலாம், நிச்சயம் கொடுத்திருக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் போர்டு வீரர்கள் கிரிக்கெட் ஆடுகின்றார்களோ இல்லையோ, அந்த போர்டில் அரசியல் மிக நன்றாக ஆடுகின்றது என்பது மட்டும் தெரிகின்றது

ஆனானபட்ட கபில்தேவினையே கண்ணீர் சிந்த வைத்த அந்த அரசியல் அப்படித்தான் இருக்கும்

நாட்டில் எத்தனையோ சீர்திருத்தங்களை கொண்டுவரும் மோடி, இந்த பெரும் பணம் விளையாடும் தனியார் அமைப்பான‌ கிரிக்கெட் போர்டு பக்கம் மட்டும் செல்லவே மாட்டார்..

மோடி என்றல்ல, எந்த பிரதமரும் செல்லமாட்டார்..

அதன் சக்தி அப்படி..












Thursday, March 30, 2017

ஜெயா தொலைக்காட்சியில், குஷ்புவின் "இது நம்ம பூமி" படம்

https://youtu.be/C4--xlq3ZhQ


 


ஜெயா டிவியின் கொடுமையான செய்திகளுக்கு பின் ஆறுதலாக நல்ல படம் ஒளிபரப்புகின்றார்கள்


இன்று குஷ்பூவின் "இது நம்ம பூமி" படம் ஓடிகொண்டிருக்கின்றது


ஆலயமணியில் சிவாஜி நடந்த நடைக்குபின் மிக கம்பீரமான ஸ்டைலான நடையில் குஷ்பூ வருகின்றார்


17498477_10208785610292713_305013217133447127_n.jpg


முன்பு என்றோ நிலாவில் சிறிய துண்டு ஒன்றை உடைக்க அமெரிக்கா திட்டமிட்டதாம், அப்படி உடைத்திருந்தால் அது இந்த பட குஷ்பூ போலத்தான் கியூட்டாக இருந்திருக்கும்...


இந்த படத்திற்கு அல்லவா "இது நம்ம ஆளு" என தலைப்பு வைத்திருக்க வேண்டும்?


எப்படியோ மாறிவிட்டிருக்கின்றது..





 


 

ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதி கட்ஜூ

17553687_10208784885114584_5007627069024049130_n.jpg


ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜூ


ஓஓஓ மலரரும் நினைவுகள், மலரட்டும்


அவர்தான் என்ன செய்வார்? முதலில் காதலை சொன்னால் எம்ஜிஆரால் தொல்லை, கட்ஜூ சென்னை ரோட்டில் ஓடவிடபட்டிருப்பார்




அடுத்து சொல்ல நினைத்தால் மன்னார்குடி குடும்ப தொல்லை, "எங்கள் அட்சய பாத்திரம் மீதா ஆசைபடுகின்றாய்.." என ஆட்டோவினை கோர்ட்டுக்கே அனுப்பியிருப்பார்கள்


கடந்தவருடம் கூட சொல்லியிருக்கலாம், சொல்லியிருந்தால் இன்னொரு மர்ம மரணம் என செய்திகள் வந்திருக்கும்..


அதனால் மனிதர் இன்னும் சொல்லாவிட்டால் எப்படி?, அதனால் சொல்லிவிட்டார்


நல்லவேளையாக ஜெயா சொத்துகுவிப்பு வழக்கு இவரிடம் சிக்கவில்லை, சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?


வழக்கு தொடர்ந்தவரை உள்ளே வைத்துவிட்டு , ஆச்சாரியாவினை நாடு கடத்திவிட்டு, ஜெயாவிற்கு 100 கோடி நஷ்ட ஈடு வழங்கி வெளியே விட்டிருப்பார்


"எங்கிருந்தாலும் வாழ்க....." என கண்ணீரோடு அனுப்பியிருப்பார்...


சசிகலா முதல்வராகியிருபபர்


ஆக ஜெயாவிடம் சொல்லபடாத ஒரு காதல், தமிழகத்தை காப்பாற்றியிருக்கின்றது


ஜெயாவின் சீடன், மருமகள், தோழி, மருமகளின் கணவன் எல்லாம் கட்சி தொடங்கும் நிலையில், நான் ஜெயலலிதாவினை காதலித்தவன் என கட்சி ஏதும் தொடங்கிவிடுவாரோ?


ஜெயா கட்ஜூ பேரவை என ஒன்றை தொடங்கினால் என்னாகும்?


கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது..


(முன்பு இருவரும் சந்தித்த தருணத்தின் படம், "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கின்றாய்.." என்ற பாடல் காதுகளில் கேட்டால் நாம் பொறுப்பல்ல)



சொன்னார்கள் : வைகோ, வாசன், திருநாவுக்கரசு

ம.தி.மு.க. நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்


மதிமுகவிற்கு எதற்கு ராமசந்திரன் நூற்றாண்டு விழா? அவர் என்ன மதிமுக நிறுவணரா? புரவலாரா? தலைவரா?


தற்காலிக உறுப்பினராக கூட ராமசந்திரன் மதிமுகவில் இல்லையே பின்ன ஏன்?




விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்றதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இந்த மனிதரையா நம்பினோம் என நினைத்தால் நெஞ்சு வலி வராதா?


அதிமுகவிற்கு கொள்கையே இல்லை,


மதிமுகவின் ஒரே கொள்கை யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே இருப்பது, அப்படி இன்று ராமசந்திரனுக்கு


விரைவில் அதிமுகவிற்கு.....






சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன்


ஆமாம், அதில் ஆட்சியினை கைபற்றும் வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக உள்ளது. அதனால் தேர்தலை நடத்துவதில் இவருக்கு அவசரம்.


தேர்தல் எப்பொழுது நடந்தால் இவருக்கு என்ன?,




அதில் இவர் கிழித்தது கிழிக்க போவது என்ன?






"ஹெச்.ராஜாவை அடக்கி வையுங்கள்" பாஜகவினை எச்சரிக்கின்றார் திருநாவுக்கரசர்


ஆமாம், முன்பு பாஜகவில் இவரை எப்படி அடக்கி வைத்தீர்களோ, அப்படி அந்த ஹெச்.ராஜாவினையும் அடக்கி வையுங்கள்..


அன்று இவரை அடக்கிவைத்துவிட்டு இன்று எச்.ராசாவினை பேசவிடுவது என்ன நியாயம்?




அது சரி திருநாவுக்கரசர்? உங்கள் கட்சியில்தான் யாரும் எதற்கும் அடங்கமாட்டீர்களே, அவரைப்போல சீறிபார்த்தால்தான் என்ன?







 



மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன்


17629891_10208784512705274_2279163978110491933_n.jpg


மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன் அவர் ஸ்டைலில் நிறைய புலம்பியிருக்கின்றார், இப்படி முடிக்கின்றார்


"இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள்.


ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்."




மிஸ்டர் ஜெயமோகன் அதனை நாங்கள் திருப்பி கேட்கின்றோம்


"திப்பு சுல்தான் காலத்தில் வெள்ளையானால் வளர்க்கபட்ட வெறி, தேசம் பிரிந்து, காந்தி கொலையால் அடக்கபட்ட அந்த வெறி, இந்திரா காலத்திற்கு பின் வளர ஆரம்பித்து, பின் ,மசூதியினை இடித்து கடந்த 30 ஆண்டுகளில் பெரும் கலவராமாகி இன்று மாட்டுகறி முதல் கல்வி என‌ எல்லாமே பிரச்சினை என வளர்ந்து நிற்கின்றது


துரதிருஷ்டவசமாக அவர்களே இந்துக்களின் முகமாக அறியபடுகின்றனர், போகிற போக்கில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் , தேவதாசி போன்ற முறைகளை கொண்டுவந்து விடுவார்களோ எனும் அச்சம் ஏற்படுங்கின்றது


இத்தேசத்தின் ஒவ்வொரு முஸ்லீமும், கிறிஸ்தவனும், புத்தனும் அந்த பழைய இந்துக்களுக்காக ஏங்கி கொண்டிருக்கின்றான்"


உங்களுக்கு மட்டும்தான் சொல்ல தெரியுமா?
மற்றவர்களுக்கு சொல்ல தெரியாதா?



எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம்.... எதற்கு?



17522870_10208783891129735_5146503678341151241_n.jpg


மதவெறி உச்சத்திற்கு போனால் எப்படி நடப்பார்கள் என்பதற்கு ஐஎஸ் இயக்கம் எடுத்துகாட்டு


எப்படி பேசுவார்கள் என்பதற்கு எச்.ராசா என்பவர்தான் பெரும் உதாரணம்.


சோனியாகாந்தி பற்றி என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், அந்த பெண் ஏதாவது அரசு பதவியில் இருந்தவரா? நாட்டை ஆண்டவரா?





மத சம்பந்தமான எந்த கருத்தினையாவது அவர் சொல்லியிருக்கின்றாரா?

கடந்த ஆட்சியின்பொழுது விவசாயிகளுக்கான கடனை மன்மோகன்சிங் அரசு தள்ளுபடி செய்யும்பொழுது எந்த விவசாயி சோனியாவிடம் சென்று கத்தமுடியும்?

அப்படி அறிவுகெட்டு கத்த அவர் என்ன எச்.ராசாவா?

நொடிக்கொருமுறை சோனியா அந்நிய தேசத்தவர் என சொல்லிகொண்டே இருக்கின்றார் அய்யோ பாவம்.

மிஸ்டர் ராசா, ஆனானபட்ட சிவபெருமானே கையால மலை எனும் அந்நிய தேசத்தில் இருந்துதான் தேற்கே வந்திருக்கின்றார், முருகனும் அப்படித்தான் வந்திருக்கின்றார்

ராமனின் குருநாதர் விஸ்மாமித்திரரும் இந்தியர் அல்ல என்கின்றது புராணம்

அவ்வளவு ஏன்? ராமன் பெண்ணெடுத்த சீதையே பர்மா அல்லது தாய்லாந்து பக்கம் என்கின்றது புராணம், சீதை ஒரு அந்நியர் என சொல்லிவிடலாமா?

இந்தியபெண்ணை மணக்காமல் அந்நிய பெண்ணை மணந்த ராமனுக்கு ஏன் இங்கே கோவில் என சொல்லிவிடலாமா?

கனத்த சங்கிலியால் கட்டி, நல்ல சிகிச்சைக்கு இவரை அனுப்புவது நலம், மனிதருக்கு முற்றிகொண்டிருக்கின்றது

இவரை எல்லாம் வைத்து தமிழகத்தில் கலகம் செய்யலாமே ஒழிய கட்சி வளர்க்கமுடியாது

காங்கிரஸ்காரர்கள் கோபத்தில் இருக்க பாஜகவினர் இவரை நினைத்து தலையில் அடித்துகொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் நிலையும் பரிதாபம் தான், கட்சியில் இருப்பதே சிலர் அதில் இந்த எச்.ராசாவினையும் விரட்டிவிட்டால் இருப்பது யார்?

அதுவும் "என்னது?? எச்.ராசா இருந்த கட்சியில் நாங்கள் இருந்தால் எங்களை பற்றி என்ன நினைப்பார்கள்?.." என்ற பயத்தில் யார் அந்த கட்சிக்கு வருவார்???




 

ஒரு தேர்தல் நேரத்தில் தெறிக்கும் உண்மைகள்...





சசிகலா எழுதி கொடுத்த போலி அறிக்கையை படித்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்: ஜெ.தீபா


அட என்னய்யா இது?


சசிகலாவினை ஜெயா சாவிற்கு பொறுப்பு, எனும் அளவிற்கு பன்னீர் செல்வம் கிழித்துகொண்டிருக்க, பன்னீரை தீபா கிழிக்க தொடங்கிவிட்டார்





இன்னும் சுவாரஸ்ய உண்மைகள் வெளிவரலாம்

சசிகலா பற்றிய உண்மைகளை பன்னீர் சொல்ல, பன்னீர் பற்றிய உண்மைகளை தீபா சொல்ல தொடங்கிவிட்டார்

தீபா பற்றிய உண்மைகளை யார் சொல்வார்களோ?

அதற்கும் ஒருவர் வராமலா போய்விடுவார், தீபாவின் கணவர் பேசாமலா போய்விடுவார்??

ஒரு தேர்தல் நேரத்தில்தான் எத்தனை உண்மைகள் தெறிக்கின்றன..




 

 



 

திருமாவின் உண்மை முகம்...





https://youtu.be/h2DDPdNJhX4



"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரினால் தமிழ் மக்களுக்கு என்று எதுவித முன்னோடியான வேலைத்திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காத தொல் திருமாவளவன்..


தமிழின விடுதலை மீது பற்று வைத்துள்ளவர் என்று தமிழ் மக்களுக்கு காட்டிக்கொள்ளும் திரு தொல் திருமாவளவன், தமிழ் மக்களுக்கும் அன்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் எதுவித உதவிகளும் செய்ததில்லை.


17629773_10208783717365391_3503373847990276290_n.jpg


மேலும் திருமாவளவன் மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முடக்கும் வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அறிக்கைகள் விடுவதனையும், முற்றாக தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளுகின்றோம்




இத்தோடு திருமா தன் பேச்சுக்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்."


இப்படி எச்சரித்திருப்பது யார் தெரியுமா?


விடுதலை புலிகள்.


ஆம் இலங்கையில் இல்லாவிட்டாலும் ஈழத்தை நாடு கடத்திகொண்டு சென்ற புலிகள், சொத்துக்களை கடத்திய புலிகள் என ஏராளமான ஐரோப்பிய புலிகள் உண்டு


அவற்றில் பல பிரிவுகள் உண்டு, அதில் ஒன்று "புலிகளின் விசேட அணி"


இந்த விசேட அணிதான் இப்பொழுது திருமாவினை எச்சரித்திருக்கின்றது


இந்த அணியோடு நெருக்கமானவர்கள் வைகோ, சீமான் எல்லாம் இப்பிரச்சினையில் ஒதுங்கியிருப்பதை காணலாம்


திருமா கத்திகொண்டிருக்க, வைகோ முள்மரங்களையும் தொடர்ந்து மைல்கற்களையும் புடுங்க சென்றுவிட்டார்


சீமான் ஏதும் புடுங்கவில்லை மாறாக ஆபாச படத்திற்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்கின்றார்


எப்படி இந்த விசேட புலிகள் திருமாவினை மிரட்டும் அளவிற்கு வந்தார்கள்?


பிரபாகரன் இல்லாததால் திருமா தப்பித்தார், பிரபாகரன் இருந்திருந்தால் சிக்கல்தான்..


ஏன்?


அது அப்படித்தான் பெரும் ஈழபணக்காரர்களின் கப்பத்திற்கு ஆபத்து வரும்வகையில் புலிகள் என்றுமே நடந்துகொள்வதில்லை




வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம்!

வள்ளியூர் சாலைகளில் ஆக்கிரமிப்பினை அகற்றுகின்றார்களாம், நல்ல செய்தி


ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சாலை ஓரங்களில் மட்டுமல்ல, எல்லா தெருக்களிலும் இருக்கின்றது, கால்வாயில் இருக்கின்றது, பூங்கா அமைக்கவேண்டிய , மைதானம் வரவேண்டிய பொது இடங்களில் இருக்கின்றது, கோவில் நிலங்களிலும் இருக்கின்றது


ஆக அவற்றை எல்லாம் விட்டுவிட்டு சாலை ஓர ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றுவோம் என்றால் அது உள்நோக்கம் கொண்டதும், மற்ற ஆக்கிரமிப்புகளை அங்கீகரித்ததும் போலாகிவிடும்.




இத்தோடு விட்டுவிடாமல், தெருக்கள், உட்சாலைகள் என‌ எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றபட்டால் நலம், அது நல்லதொரு நடவடிக்கை.



ஆர்.கே நகரில் திமுக வேட்பாளர்

ஆர்.கே நகரில் திமுக வேட்பாளர் நிறுத்தபட்ட விதம் குறித்து பல விவாதங்கள், அவர் புதுமுகம், பிரபலமில்லாதவர் எப்படி இந்த முக்கியமான தேர்தலில் வெற்றிபெறுவார், திமுக தேர்வு சரியில்லை என பல விமர்சனங்கள்


திமுக என்றுமே வேட்பாளரின் தனிபலம் கொண்டு வெல்லும் கட்சி அல்ல‌


ஆனானபட்ட காமராஜரை வீழ்த்த, சீனிவாசன் எனும் மிக இளையவரைத்தான் நிறுத்தினார்கள். காமராஜரை வீழ்த்தியும் காட்டினார்கள்




அது அன்று பெரும் ஆச்சரியமான விஷயம், காமராஜரை வெல்வது என்பது அன்று கனவிலும் நடக்காத விஷயம், ஆனால் நடந்தது.


அந்த வெற்றியில் சீனிவாசன் கொஞ்சம் ஆட, அமைதியாக சொன்னார் கலைஞர்


"இலக்கை ஒரு அம்பு சரியாக தாக்கினால் அது அம்பின் வெற்றி அல்ல, மாறாக அதை எய்தவனின் வெற்றி


அம்பு குதித்தாட‌ ஒன்றுமே இல்லை, அதனை செலுத்தியவனே கொண்டாடபடவேண்டியவன்


வெற்றி என்பது அம்பினை செலுத்துவன் கையில் இருக்கின்றது"


அது ஆர்.கே நகருக்கும் பொருந்தும்


வெற்றி என்பது வேட்பாளரை பொறுத்து அல்ல, மாறாக தலைவன் வகுக்கும் வியூகத்தின் படியே அமையும்.


அதனால் உறுதியாக சொல்லலாம், வேட்பாளர் தேர்வு எல்லாம் பெரிய விஷயம் இல்லை...


அப்படி காமராஜரையே வீழ்த்திகாட்டினார் கலைஞர்,


அவர் மகனுக்கு பெரும் சவாலாக‌ காமராஜர் போன்றவர்கள் கூட இல்லை , மாறாக தினகரன் தான் கிடைத்திருக்கின்றார்


தேர்தல் முடிவில் தெரியபோவது ஸ்டாலினின் திறமை எப்படி என்பதுதான்...








முன்பொரு காலத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று காங்கிரசை பதவியில் அமர்த்தியதும் அவர்தான், 40 தொகுதியிலும் அவர் எய்த அம்பு அப்படி






கமலஹாசனும் , ரஜினியும் கோழைகள் : சு.சாமி





கமலஹாசனும் , ரஜினியும் கோழைகள் : சு.சாமி


ரஜினி பயந்தாங்கொள்ளி என இவர் சொல்வாரானால் மிக தாமதமாக உணர்ந்துகொண்டவர் என்றே பொருள்.


ஆனால் அந்த கோழை வீட்டுக்கு மாவீரன் மோடி , அதிரடி வீரன் அருண் ஜெட்லி, உட்பட எல்லா பாஜகவினரும் ஏன் செல்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை





கமலஹாசனை இவர் ஏன் கோழை என்கின்றார்? ஒரு பிராமணன் பெரியார் கருத்துக்களை பேசினால் "அக்ரஹார" அகராதியில் கோழை என பெயர்.

மன்சாட்சிக்கு அஞ்சுபவன் கோழையாம்..

சரி ரஜினியும், கமலஹாசனும் கோழை என்றால், ராஜிவ் கொலைவழக்கிலும் இன்னும் பல வழக்கிலும் மர்மமாக நழுவி ஓடிய இவர் யார்?

அவசரமாக ஸ்பெக்ட்ரம் வழக்கினை ஆரம்பித்துவிட்டு, இன்று வழக்கு தோற்கபோகின்றது என தெரிந்ததும், அந்த பேச்சினை அறவே விட்டுவிட்ட இவர் யார்?

சசிகலாவினை எதிர்த்துவிட்டு இன்று அவரின் முழுநேர பாடிகாட்டாக மாறியிருக்க்கும் இவர் யார்?

கமலஹாசன் மீது வழக்கு தொடுக்கும் தமிழகத்தில்தான், இம்மாதிரி பொறுக்கிகள், கோழைகள் என சொல்லிகொண்டு திரிபவர் மீது ஒரு வழக்குமில்லை..

ரஜினி கோழையாக இருக்கட்டும், ஆனால் டெல்லி மாவீரர்கள் அவரை சுற்றி சுற்றி வந்து காலில் விழுவது ஏன்?

ரஜினி கோழைதான், ஆனால் அந்த கோழையிடம் சென்று அடிக்கடி ஆதரவு கேட்கும் பாஜக எவ்வளவு கோழை கட்சியாக இருக்கவேண்டும்









"லைக்கா’ நிறுவனத்தால் 150 வீடுகள் கட்டப்படவில்லை, குறவான வீடுகள்தான் வீடுகள்தான் கட்டப்பட்டது"- திருமாவளவன்

சரி உங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை வீடு கட்டி கொடுத்தது??

ஒரு செங்கல் அல்லது ஒரு கரண்டி சிமெண்ட் கொடுத்திருப்பீர்கள்?




 

 



 

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்?

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்? அவர்களிடம் அவ்வளவு பணம் எப்படி என பலர் சாடுகின்றார்கள்


அதாவது அது ஊழல்பணமாம், கண்டுபிடித்துவிட்டார்களாம்


ஏவிஎம் செட்டியார் கொடிகட்டிபறந்த காலத்திலே மேகலா பிக்சர்ஸ், பூம்புகார் புரடக்சன் என சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தியவர் அவர்கள் தாத்தா கலைஞர்




அன்றே கார் வைத்திருந்த ஒரே எழுத்தாளர், வசனகர்த்த்தா அவர்தான்


சிவாஜியும், எம்ஜிஆரும் வாய்ப்புக்கு அலைந்த காலங்களிலேயே கலைஞர் நிலையான இடம்பிடித்து எங்கோ போயிருந்தார்..
அவர் சம்பாதித்தது ஏராளம்


அவரின் பேரன்கள் வந்து சினிமா எடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை


எஸ் எஸ் வாசன் உருவாக்கிய சாம்ராஜ்யம் பத்திரிகையில் தொடர்கின்றது, ஜெமினி சினிமா என அவர் தொடங்கிய கம்பெனி பின்னர் நிறுத்தபட்டது


ஆனால் மேகலா பிக்சர்ஸ் இன்று வேறு பெயரில் தொடர்ந்து இயங்குகின்றது.


வறுமையான எஸ் எஸ் வாசன், பத்திரிகையிலும் சினிமாவிலும் சாம்ராஜ்யம் உருவாக்கலாம், அவர் பிராமணன் அல்லவா பிரச்சினை இல்லை


ஆனால் தாழ்த்தபட்டவன் ஒன்றை உருவாக்கினால் அது முழுக்க ஊழல், திருட்டுபணம்


இது இந்திய தர்மம்


அதாவது செட்டியார், எஸ் எஸ் வாசன் போன்ற தாத்தாக்களுக்கு வந்த பேரன்கள் அதே தொழில் செய்யலாம் கேட்கமாட்டார்கள்.


ஆனால் அதே காலத்தில் அவர்களுக்கு சமமாக‌ சினிமா தொழில் செய்த கலைஞரின் பேரன்கள் படமெடுத்தால் இவர்களிடம் கணக்கு காட்டி சர்டிபிக்கேட் வாங்கவேண்டுமாம்...



நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம்





திரையுலக நடிகர்களை கூத்தாடிகள் என சொல்வதற்கு நடிகை ஸ்ரீரிபிரியா கண்டனம்


கூத்து கட்டுபவனை பின் எப்படி அழைப்பார்கள் அம்மணி? விஞ்ஞானி, மேதை, அறிஞன், சிந்தனையாளன் என்றா அழைக்க முடியும்?


கூத்தாடி என்றுதான் அழைக்கமுடியும்





கூத்து கட்டுபவன் தான் நடிகன், அதனால் அவன் கூத்தாடி என சொல்லியது எம்.ஆர் ராதா, அவர்தான் அப்படி அழைக்கவே சொன்னார்

அதாவது அம்மணி, நடிப்பவர்களை, வேஷ‌க்காரன் என சொல்லலாம், முகசாயம் பூசுபவன் என சொல்லலாம், நாங்கள் சொல்வது போல கூத்தாடி எனவும் சொல்லலாம்..

கூத்து என்பதுதான் தமிழ்பெயர், செம்மொழியில் அந்த தொழிலாளிகளை அப்படித்தான் அழைக்க முடியும்..

உண்மையினை சொல்லுங்கள் அம்மணி, நடிகர்கள் செய்யும் தொழில் கூத்தா?

இல்லை விண்வெளி, ராக்கெட் அணுகுண்டு ஆராய்ச்சியா? இல்லை புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ தொழிலா?

பூ கட்டுபவன் பூக்காரன், தச்சு வேலை செய்பவன் தச்சன், கூத்து கட்டுபவன் கூத்தாடி இதனை சொன்னால் அம்மணிக்கு கோபம் வருகின்றது.




 

 



 

Wednesday, March 29, 2017

மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம்...

17626114_10208778435033336_8159996164483827134_n.jpg


மனுஷ்ய புத்திரன் வீடு தேடுகின்றாராம், அவருக்கு வீடு கொடுக்க ஒப்புகொண்டவர்கள் எல்லாம் அவர் இஸ்லாம் என தெரிந்தபின் மறுத்துவிடுகின்றார்களாம்


இப்படி வழக்கமான தன் 1 கிலோ மீட்டர் ஸ்டைலில் அழுதிருக்கின்றார்,


நான் இஸ்லாமியன் என்பதால் வீடு கிடைக்கவில்லை என சொன்னால் விஷயம் முடிந்துவிடும், அதற்கு 10 பக்கம் இழுப்பு




விஷயம் என்னவென்றால், தன் சொந்த பெயரான சாகுல் ஹமீதினை மறைத்து, மனுஷ்யபுத்திரன் மானிட மகன் என உலகெல்லாம் சொன்னது இவர்தான்


அன்றே நான் சாகுல் ஹமீது என்றால் இவ்வளவு சிக்கல் வந்திருக்குமா?


பெயரையே மறைத்தவன் இன்னும் என்னவெல்லாம் மறைத்தானோ எனும் அச்சத்தில் வீடு கொடுக்கமாட்டேன் என்கின்றார்கள்.


பெயரை மறைத்து இங்கு சுற்றியிருக்கின்றான் என்றால் ஐஎஸ் இயக்கத்தவனாக இருக்கலாமோ எனும் அளவிற்கு அலறியிருக்கின்றார்கள்..


இது புரியாமல் இவர் ஏதோ சென்னையில் இஸ்லாமியருக்கு வீடே கிடைக்காது என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்?


என்னா வில்லத்தனம்


மனுஷ்ய புத்திரன் என்றால் மானிட மகன் என பொருள்


பறவைக்கு கூடு உண்டு, நரிக்கு வளையுண்டு, மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை என இயேசு அன்றே சொல்லிவிட்டார்


மானிட மகன் என்றால் அப்படித்தான், வீடே கிடைக்காது என இயேசுவே சொல்லிவிட்டார்.


இவரை பார்த்தவுடன் வீட்டு முதலாளிகள் மனதில் என்ன தோன்றும்? தீவிரவாதி என்றா தோன்றும்?


இவர் டிவியில் எல்லோருடனும் வம்பு இழுப்பவர் ஆயிற்றே, அப்துல் கலாமினையே விமர்சித்தவர் ஆயிற்றே, வீடு கொடுத்து சனியனை இழுக்கலாமா? கண்ணாடி கதவு உடைந்தால் யார் பொறுப்பு என சிலர் யோசிக்கலாம்


முக ஸ்டாலினின் நிழலாக அலைகின்றார், இனி திமுக ஆட்சி என்கின்றார்கள், அப்படி இவனுக்கு கொடுத்துவிட்டால் வீடு திரும்ப வருமா? காலி செய்வானா? என சிலர் யோசிக்கலாம்.


வீட்டுமுதலாளிகள் இப்படி யோசிக்க...


திமுக ஆட்சியில் அரசு ஒதுக்கும் வீட்டில் குடியேற இப்போதே எனக்கு வீடு இல்லை, கிடைக்கவும் இல்லை என இவரே முன்பதிவு செய்யலாம்


இப்படி ஏராளமான வாய்ப்புகள் இவரின் அலறல் பின்னால் இருக்கின்றது, நிச்சயமாக இஸ்லாமியன் என்பதற்காக அல்ல‌...


ஆக இவர் இப்படி சொல்லி தந்திரம் செய்கின்றாராம்...


சக்கர நாற்காலியில் அமர்ந்தவெல்லாம் கலைஞராக முடியுமா?



இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு


நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு, பகல் கனவு பலிக்காது என சாடல்


இவர்தான் ஆளுநர், மோடி, ஜெட்லி என பறந்து பறந்து சந்தித்தவர், ஆனால் அவர்களிடம் ஏதும் பேசாமல், எங்கு வந்து குட்டிகரணம் அடிக்கின்றார் பார்த்தீர்களா?


என்னது? பகல் கனவு பலிக்காதா?





பிரபாகரன் தமிழீழ அதிபராகவும், தான் தமிழக முதல்வராகவும் இருப்போம் என நண்பகல் 12 மணிக்கு எல்லாம் கனவுகண்டவர் அல்லவா?

அதனால் பகல் கனவு பற்றி அவருக்கு நன்றாக தெரியும்...



 

கந்தன் கருணை இல்லம் : புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு

17553576_10208778172866782_5885283834195165784_n.jpg


அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு


இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்


அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம்


இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது "கந்தன் கருணை" என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று


அதில் மாற்றியக்க போராளிகள் சுமார் 70 பேர்வரை விசாரணைக்காக அடைக்கபட்டனர், அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள், ஆனால் புலிகள்முன் துரோகிகள்


இவர்கள் போக புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.


இது சகோதர இயக்கங்கள் சிறைவைக்கபட்ட இடம்..


விசாரணை என்றால் ஒன்றுமல்ல, அந்த மாற்றுகுழுவின் தலைவன் எங்கிருக்கின்றான், ஆயுதம் எங்கிருக்கின்றது என போட்டு அடிப்பது, சித்திரவதை செய்து அடிப்பது, இதன் பொறுப்பாளர் பொட்டு அம்மான், அவருக்கு கீழே பல அடியாட்கள் உண்டு


இந்த வீட்டிற்கு காவலாக வந்தவன் அருணா எனும் புலி


இந்த அருணா முன்பு பிரபாகரனுடன் இருந்தார், பின் சண்டையில் சிங்களபடையிடம் பிடிபட்டான், பின் சந்திரிகாவின் கணவரின் முயற்சியில் யுத்த கைதிகள் பறிமாறியபொழுது மறுபடி புலிகளோடு வந்தார்


பிரபாகரன் தன் நிழலையும் சந்தேகிப்பவர், இந்த அருணாவிற்கு சிங்களன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாம் என அருகில் சேர்க்கவே இல்லை, ஒரு அல்லக்கை போல அலைந்தார் அருணா


தினமும் அந்த சிறைபட்ட போராளிகளை போட்டுசாத்துவது அவரின் அன்றாட பணி


அன்றைய காலகட்டத்தில் புலிகளுக்குள் அதிகாரபோட்டி நிலவியது, பிரபாகரன் தமிழகத்தில் இருக்கும்பொழுது புலிகள் கட்டுபாடு கிட்டுவிடம் இருந்தது, கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் ஆகாது


பிரபாரனுக்கோ கிட்டு மீது ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது, அவர் அப்படித்தான்


இந்நிலையில் தன் காதலியினை பார்க்க சென்ற கிட்டுவின் மீது குண்டு வீசபட்டு காலினை இழக்கின்றார்.


இதே கிட்டு முன்பு சிங்கள வீரனின் காலை குண்டுவீசி துண்டித்ததும், பின் அந்த காலை நல்லூர் கந்தசாமி கோவில் வாசலில் வீரசாட்சியாக ரத்தம் சொட்ட சொட்ட காட்சிக்கு வைத்த காலமும் உண்டு


கோவில் வாசலில் இப்படி செய்யாதீர்கள், இது ஆண்டவனுக்கே அடுக்காது என பலர் சொன்னபொழுது கிட்டு அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டிய காலமும் உண்டு


தெய்வம் நின்று குண்டு வீசியது..


குண்டை வீச திட்டமிட்டதும், வீசியதும் புலிகளின் உட்கட்சி விவகாரம், அதில் பல மர்மம் உண்டு, பிரபாகரனின் நண்பன் மீது கைவைக்க பிரபாகரனின் அனுமதி இன்றி எப்படி? என்ற சர்ச்சை அன்றே உண்டு


ஆனால் அது வேறு யாரோ வீசியது என கதை கட்டினார்கள் புலிகள், விஷயம் அருணா காதுக்கும் சென்றது


அவ்வளவுதான் ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா


அந்த கொடூரம் அரங்கேறிற்று


அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து அரற்றினார்கள், சிலருக்கு வாயிலே சுட்டான் சண்டாளன்


மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்


எண்ணி எண்ணி தேடினர், தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்


அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை


ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது


இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவன் மட்டும் தப்பினான்


அவன் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.


எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முணகி செத்தார்கள், என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை


இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்


விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் "அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி"


எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்,வீரம் இன்னபிற‌


இன்று சிங்களனிடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை, அதனால் ரஜினி போக கூடாது என திருமாவும் இன்னும் சிலரும் ஒப்பாரி வைக்கின்றனர்


அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள்


இந்த விவகாரம் அப்படியே அடக்கபட்டு பின் புலிகள் யாழ்பாணத்தை போட்டு ஓடிய பின்பே வெளிவந்தது,


தண்ணீர் லாரியில் வெடிகுண்டு நிரப்பி தாக்குவது அவர்கள் ஸ்டைல், ஒரு நாள் அது குடியிருப்பு அருகே வெடித்தது 50 தமிழர்கள் அங்கேயே செத்தர், புலிகள் ஜஸ்ட் டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு சென்றனர், இப்படி ஏராள சம்பவம் உண்டு


இந்த படுகொலை சம்பவம் பாருங்கள், போராட வந்ததும் தமிழர்கள், சிறைபிடித்தவனும் சிறைபிடிக்கபட்டவனும் தமிழன், கொன்றவனும் தமிழன், கால் போனவனும் தமிழன், அவன் காலை உடைத்தவனும் தமிழன்..


இப்படி நடந்ததன் பெயர்தான் ஈழமக்களுக்கான போராட்டம்


கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள்


இதனை எல்லாம் நாம் சொன்னால் துரோகி


இப்படி மக்களின் வீட்டை அபகரித்து புலிகள் செய்த அட்டகாசம் கொஞ்சமல்ல, பணம், வீடு, சொத்து , குழந்தைகள் என எதனை அவர்கள் விட்டார்கள்?


அப்படி மக்களின் வீட்டை அபகரித்துகொண்டு சிங்கள படையினை தாக்குவார்கள், அவன் திருப்பிதாக்குவான் வீடு இடியும் புலிகள் அவர்கள் போக்கிற்கு ஓடுவார்கள்


அந்த வீட்டை கட்டிகொடுக்கும் விழாவிற்குத்தான் ரஜினி செல்ல இருந்தார், அதற்குள் திருமா கும்பல் பொங்கிற்று


இந்த கந்தன் கருணை சம்பவம் எல்லாம் சொல்வார்களா என்றால் சொல்லமாட்டார்கள்.


"கந்தன் கருணை" படுகொலை ஒரு எடுத்துகாட்டு, அது வெளிவந்தது


அதனைபோல வெளிவராத கொடூரங்கள் ஏராளம் உண்டு


அந்த அருணா என்ன ஆனான்?


பின் இந்திய அமைதிபடை சென்று அவனை சுட்டு கொன்றது, இதுதான் இந்திய அமைதிபடை இலங்கையில் செய்த அட்டகாசம்..


கிட்டு என்ன ஆனான்?


மிக தந்திரசாலி என தன்னை எண்ணிய அவன் அமைதிபடை காலத்தில் இந்திய நண்பன் போல நடித்து, ராஜிவ் கொல்லபடுவதற்கு கொஞ்ச நாளைக்கு முன்பு டெல்லியில் சென்று பார்க்குளவு இந்தியாவின் மதிப்பினை பெற்றான்


1987பிரபாகரனுக்கு குண்டு துளைக்காத சட்டையினை பரிசாக கொடுத்த ராஜிவ், கொல்லபடுவதற்கு கொஞ்ச‌ நாட்களுக்கு முன்பாக அவனை டெல்லியில் கார் வரை வந்து வழியனுப்பினார்.


அந்த அப்பாவி தலைவன் அப்படி எல்லோரையும் நம்பி செத்திருக்கின்றான்


அந்த கிட்டு கொடுத்த நம்பிக்கையே புலிகளால் தனக்கு ஆபத்து இல்லை என அவரை நம்ப வைத்து, தைரியமாக சென்னைக்கு வரவழைத்தது


அப்படிபட்ட நயவஞ்சக கிட்டுவினை இந்திய கடற்படை கப்பலோடு கொன்றது


ஆக அப்பாவி தமிழர்கள் சாக காரணமான‌ கந்தன் கருணை சம்பவத்திற்கு காரணமான அருணாவினையும், கிட்டுவினையும் தண்டித்தது சிங்களனோ, பிரபாகரனோ அல்ல‌


மாறாக இந்தியா


இப்படி பெரும் துரோகம் செய்தது இந்தியா, நம்பிகொள்ளுங்கள்


இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது


நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு

சத்யமூர்த்தி ...


17629655_10208777179281943_3930794238174832582_n.jpg


அந்த காந்தி காலத்து காங்கிரஸ் சுதந்திரத்திற்கா உழைத்து கொண்டிருந்த காலங்களில் தமிழகத்தில் அதன் தூணாக நின்றவர் அந்த சத்யமூர்த்தி,


புதுகோட்டை திருமயத்தில் பிறந்தவர் நன்கு படித்தவர், ஆங்கிலத்தில் பின்னி எடுத்தவர் என்பதால் பெரும் இடம் பெற்றிருந்தார், பெரிய இடமென்றால் எப்படி?


ரவுலட் சட்டம், மாண்டேகு செம்ஸ்போர்டு போன்ற விவாதங்களில் இங்கிலாந்தில் வெள்ளையனோடு அமர்ந்து வாதிட்டவர், அந்த அளவிற்கு இந்திய அளவில் அவருக்கு மதிப்பு இருந்தது


வெள்ளையன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த தொடங்கியபொழுது தேர்தலிலும் வெற்றிபெற்றார், ஆனால் சுதந்திர போரட்டத்திலும் கலந்துகொண்டே இருந்தார்


பாரதியாரின் பாடல்களை பிரிட்டிசார் தடை செய்தபொழுது, பொங்கி எழுந்து கண்டித்தவர், அந்நேரம் அவருக்கு துணை நின்றவர் வல்லபாய் பட்டேல்


திலருடன் அவர் நாடெல்லாம் சென்று சுதந்திர உணர்வினை ஊட்டியது பெரும் உழைப்பு.


பெரும் தொண்டும், விடாபிடியான அவரின் சுதந்திர உணர்வும் அவருக்கு பெரும் பதவிகளை கொடுத்தன, அப்படி சென்னை நகராட்சியின் மேயரும் ஆனார்


அப்பொழுது அவர் செய்த பெரும் சாதனை தான் பூண்டி நீர்தேக்கம், அது அவரின் சாதனை, காங்கிரசின் சாதனை.


அன்றைய பெரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அவர் எடுத்த நடவடிக்கை அது, இன்றுவரை சென்னையின் தாகம் தீர்க்கின்றது
அது அன்று பெரும் சாதனை, அதனை சாதித்ததால் தீரர் சத்யமூர்த்தி ஆனார்.


தன் சொத்துக்கள், பணம் எல்லாவற்றையும் சுதேசி இயக்கத்திற்காக கொடுத்து , நாட்டிற்காக கொடுத்தார்


எல்லாவற்றிற்கும் மேல் தமிழகத்திற்கு ஒரு உண்மை தொண்டனை வளர்த்து கொடுத்தார், அவர்தான் காமராஜர்


சத்தியமூர்த்தி என் அரசியல் குரு என சொல்லும் அளவிற்கு சத்யமூர்த்தி மீது காமராஜருக்கு மதிப்பும், பக்தியும் இருந்தது.


தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பெருஇடம் பெற்றிருந்தார் சத்யமூர்த்தி, மறக்கமுடியாத மாமனிதர்


ராஜாஜி, சத்யமூர்த்தி என தமிழர்கள் பெரும் அகில இந்திய அளவில் கொண்டாடபட்ட காலங்கள் அவை, காமராஜர் அதற்கு அடுத்தால் வந்தார்.


பசும்பொன் தேவருக்கும் இந்திய அளவில் ஒரு அபிப்ராயம் இருந்தது.


அதன் பின் அகில இந்திய அளவில் தமிழர்கள் பெரிய தலைவர்களாக வரமுடியாத அளவு தங்களை சுருக்கிகொண்டனர்,


விளைவு பல பிரச்சினைகளில் தமிழகமும் சுருக்கிட்டு கொண்டது.


இனி அப்படிபட்ட பெரும் தலைவர்கள் தமிழகத்தில் சாத்தியமில்லை, ஆனால் வராமல் தமிழகத்தை முன்னேற்ற முடியாது.


சத்யமூர்த்தியின் உருவசிலை பாராளுமன்றத்தில் திறக்கபட்ட நிகழ்வில், அதனை திறந்து வைத்தவர் அப்துல் கலாம்


நாட்டிற்காய் வாழ்ந்த ஒரு தியாகியின் சிலையினை, இன்னொரு தியாகி அப்துல்கலாம் திறந்த காட்சி மனதை விட்டு நீங்காதது, இருவரும் வாழ்ந்த வாழ்க்கை நிச்சயம் நாட்டிற்கானது


இருவருமே தமிழர்கள்..


அப்படி இன்னும் பல தமிழர்கள் அகில இந்திய அளவில் உருவாக வேண்டும், அப்படி வந்தால் தமிழகம் இன்னும் செழிக்கும்..


என்ன ராசியோ தெரியவில்லை, ராஜாஜிக்கும் சத்யமூர்த்திக்கும் ஒத்துவரவில்லை, அது சத்யமூர்த்தி காலத்திற்கு பின்னும் தொடர்ந்தது, அந்த கோஷ்டி பூசல் தீரவே இல்லை


ராஜாஜியினை தொடர்ந்து காமராஜர் வந்ததை ராஜாஜியால் சகிக்க முடியவில்லை, அதாவது தீரர் சத்யமூர்த்தியின் இடம் காமராஜருக்கு வந்தது எனும் ஒரு வன்மம் ராஜாஜிக்கு இருந்தது


நிச்சயமாக ராஜாஜி பெரும் அறிவாளி, பெரும் தந்திரி, அபார மூளைக்காரர், ஆனால் இந்த இடத்தில் அவர் சறுக்கினார்


அதன் பின் காட்சிகள் மாறின, தமிழக காங்கிரஸ் தலமை செயலகம் அவர் பெயராலே அமைந்திருக்கின்றது, அதன் ஒரு பக்கத்தில் ராஜாஜி பெயரும் இருந்திருக்கவேண்டும், விதி அது அல்ல‌


மறக்க முடியாத சுதந்திரபோராட்ட தியாகி சத்யமூர்த்தி , பூண்டி நீர்தேக்கம் எந்நாளும் அவர் பெயரை சொல்லிகொண்டே இருக்கும்.


அந்த ராஜாஜி சத்யமூர்த்தி வழிவந்தவர்களாலோ என்னமோ இன்னும் கோஷ்டி சண்டை தீரவில்லை


நேற்று அவருக்கு நினைவுநாள் அனுசரித்திருக்கின்றார்கள், அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அனுசரித்திருக்கின்றார்கள்


பல கோஷ்டிகளை காணவே இல்லை, வெகு சிலர் மட்டும் வந்திருக்கின்றனர்,ஒவ்வொருவரும் ஒரு கோஷ்டி என்பதால் பல கோஷ்டிகள் வந்ததாகவே அர்த்தம்


ஏன் எல்லா கோஷ்டிகளும் வரவில்லை?


வந்திருந்தால் அஹிம்சை போதித்த சத்யமூர்த்தி படத்தின் முன்பு புரண்டு அடித்திருப்பார்கள், அவர்கள் அப்படியானவர்கள்


ராஜாஜி, சத்யமூர்த்தி, காமராஜர் என பெரும் தமிழர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தியா எங்கும் இருந்திருக்கின்றது


அப்படிபட்ட தலைவர்களை தொடர்ந்து உருவாக்காமல் ராமசந்திரன், அம்மா, சின்னம்மா என உருவாக்கி தமிழகம் நாசமாயிற்று


இனியாவது தமிழகம் தன் இழந்த பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்


அதற்கு அகில இந்திய அளவில் நல்ல தலைவர்கள் தமிழகத்திலிருந்து உருவாகட்டும்.


சத்திய மூர்த்திபோல நாட்டிற்கு உழைத்த ஏராளமான நல்லவர்கள் தமிழகத்திலும் உண்டு, திராவிட காட்சிகளில் அவர்கள் பின்னுக்கு தள்ளபட்டிருக்கலாம் , மறைக்கபட்டிருக்கலாம்


ஆனால் அவற்றை எல்லாம் மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு சொல்லி, அவர்களை போல சிலரையாவது இந்திய அளவில் உருவாக்கும் கடப்பாடு இந்தியர்களாகிய தமிழர்களாகிய நமக்கு உண்டு.


இல்லாவிட்டால் ரிப்பன் பில்டிங்கினை எம்ஜிஆர் தன் சொந்த செலவில் கட்டினார் சென்னைக்காக கொடுத்தார், பூண்டி நீர்தேக்கத்தை கலைஞர் கட்டினார் எனும் அளவிற்கு வரலாற்றை மாற்றிவிடுவார்கள்..


சத்யமூர்த்தியின் நினைவுநாளில் அப்படித்தான் சிந்திக்க தோன்றுகின்றது.










எங்கும் பணமழை பொழிகின்றது...




17553985_10208776827953160_7813911765887129631_n.jpg


"அன்பே வா" படத்தில் கையில் சூட்கேசும், ஒரு கம்பும் தலையில் தொப்பியுமாக ராமசந்திரன் பாடுவார்


காலங்கள் கடந்தாலும் எவ்வளவு ஆச்சரியமாக காட்சிகள் பொருந்துகின்றன?


இப்பொழுது அதே தொப்பி, ஆனால் மறைமுகமாக சூட்கேஸ், அவ்வப்போது சிலருக்கு கம்பு அடி என அந்த கோஷ்டி ஆர்.கே நகரில் சுற்றுகின்றது





4 வரிகளோடு பாடல் முடிந்தால் அதிமுகவினருக்கு நல்லது, தொப்பி சூட்கேஸ் சகிதம் "எங்கும் பணமழை பொழிகின்றது" என சுற்றி சுற்றி பாடலாம், தொப்பி சகிதம் பாடல் களை கட்டியிருக்கும்.

ஆனால் ராமசந்திரன் தெரியாமல் கூட இரு வரிகளை பாடியல்லவா தொலைத்திருக்கின்றார்,

"உதய சூரியனின் பாதையிலே
உலகம் விழித்துகொண்ட வேளையிலே,
நல்லவர் எல்லாம் நலம்பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது" என வரும் வரிகள் அவை

(அது ராமசந்திரன் திமுக காலம், உதய சூரியனின் வரி பின் புதிய சூரியன் என திருத்தபட்டது)

அதனால் அந்த பாடலை அதிமுகவினர் பாடவே மாட்டார்கள், அப்படி பாடினால் பாதிக்கு பின் திமுக தொடர்ந்து பாடும்

பிரச்சாரம் பாட்டுக்கு பாட்டு போட்டியாகும், அதனால் அதிமுகவினருக்கு அந்த பாடல் தந்திரமாக‌ மிஸ்ஸிங்..

எப்படியோ அதே தொப்பி, சூட்கேஸ் ஆங்காங்கே மிரட்டல் (கம்பு) என அதே பாடல்காட்சிகள் ஆர்.கே நகரில் களைகட்டுகின்றது.




 

எங்கும் பணமழை பொழிகின்றது...