Friday, June 30, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்



Image may contain: 1 person, close-up


எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடக்கம்


தமிழகம் நாசமாகிகொண்டிருக்கின்றது, விவசாயி செத்துகொண்டிருக்கின்றான்


நாளையிலிருந்து வியாபாரிகளின் கண்ணீரும் சேர்ந்துகொள்ளும்





கல்வி கனவாகிகொண்டிருக்கின்றது, எதிர்காலம் என்ன என தெரியாத நிலை,, இங்கு நடப்பது ஆட்சியா அல்லது டெல்லியின் ஏவலா என தெரியாத நிலை

எண்ணற்ற நோய்கள் பரவிய நிலை, குடிநீருக்கும் வழியில்லா அவலம்.

ஒரு அரசு பேருந்து உருப்படியாக இல்லை, அரசு பேருந்து என்ன? அரசாங்க விஷயம் எதுவுமே உருப்படி இல்லை, அரசாங்கமே உருப்படி இல்லை

குட்கா விற்க அமைச்சரும் காவலரும் லஞ்சம் வாங்கினார்களாம், அரசு சாராயம் விற்கின்றது, எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம்

என்ன நடக்கின்றது என தெரியாமல் ஒரு இருட்டில் இருக்கின்றது தமிழகம்

மிகபெரும் சிக்கலில் தமிழகம் இருக்க, இந்த ராமசந்திரனுக்கு அரசு பணத்தில் நூற்றாண்டு விழா தேவையா?

எண்ணற்ற திட்டங்கள் தொங்கலில் கிடக்க இந்த சனியனுக்கு எதற்கு இப்படி ஒரு பெரும் செலவில் விழா?

தமிழகத்தை 100 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்ற ஒருவனுக்கு தமிழக பணத்தில் நூற்றாண்டு விழா?

இந்த லட்சணத்தில் மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயரை வேறு சூட்ட வேண்டுமாம்?

அவர் பெயரை மதுரைக்கு சூட்டினால், அவரது வாரிசு ஜெயா பெயரை இன்னொரு விமான நிலையத்திற்கா சூட்ட முடியும்?

ஒன்று செய்யலாம்

பயணிகள் ஆண்களும் பெண்களும் தனிதனியாக பயன்படுத்தும் அறைகள் விமான நிலையங்களில் உண்டு

ஆண்கள் அறைக்கு இவர் பெயரையும், பெண்கள் அறைக்கு அவர் பெயரையும் சூட்டலாம்

அந்த பெயர்கள் இருக்க வேண்டிய இடம் அதுதான்..












பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால் , இன்னும் பிற...

பெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால்


விஷால் உருப்படியாக கேட்டிருக்கின்றார், ஆனால் வாட்டாள் கோஷ்டியிடம் இருந்து இன்னும் சத்தம் வரவில்லை ஏன்?


விசால் படங்களை மறித்தால் வசூல் ஒன்றும் தேறாது என விட்டுவிட்டார்களோ என்னமோ? பாகுபலி போன்ற வசூல் படங்களில் விஷால் நடித்திருந்தால் நிச்சயம் இப்போது குதிப்பார்கள்




ஆக வாட்டாள் நாகராஜின் போராட்டமும் வசூல் சார்ந்துதான் இருக்கின்றது.


அது இருக்கட்டும், விஷாலை அடிக்கடி தெலுங்கன் வந்தேறி என ஒரு கூட்டம் சொல்லும், அவர்களிடம் விஷால் இப்படி பேசிவிட்டாரே என சொன்னால் என்ன சொல்லும் தெரியுமா?


"இதனை ஏற்றுகொள்ள முடியாது, எங்கே இலங்கை சென்று தனி ஈழம் கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம்..?" என்பார்கள்


"அதனை நீங்கள் ஏன் சென்று இலங்கையில் கேட்க கூடாது?" என்றால் சத்தமிருக்காது..






தமிழக மீனவர்கள் 140 பேரை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர்


வேலையில்லா சீமானுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, ஒரு வாரத்திற்காவது இந்த வேலை இருக்கும்






"பா.ஜ.க. உருவாக்கும் திட்டங்கள் பாமரர்களுக்கானவை..” : பொன். ராதாகிருஷ்ணன்


பாஜக திட்டங்கள் சிந்திக்க தெரியாத‌ பாமரர்களை உருவாக்குபவை என்பதுதான் நிஜம், அதனை அன்னாரால் வாய்விட்டு சொல்ல முடியுமா?


அதனால் இப்படி சொல்லிவிட்டார், அவ்வளவுதான்




மற்றபடி அவர்கள் உருவாக்கும் திட்டம் எல்லாம் பாமரர்களை உருவாக்குமே அன்றி, பாமரர்களுக்கான‌ திட்டமே அல்ல என்பது யாருக்கு தெரியாது?









இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது, முதன் முதலாக அதனை சந்திக்கும் மக்களுக்கு குழப்பம் வரும்


சில பொருட்கள் விலை உயரும், சில பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உண்டு


உணவு பொருட்களுக்கு அவ்வரி பல நாடுகளில் பொருந்தாது , இந்தியாவில் எப்படி என தெரியவில்லை. ஆனால் உணவினை தொழிலாக நடத்தும் உணவகங்களில் கட்டாயம் உண்டு




மருந்துகளுக்கும் , மருத்துவ தொழிலுக்கும் சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு, இங்கு எப்படி என தெரியவில்லை, குறைந்த சதவீதம் என்றால் நல்லது


முதன் முறையாக இந்த வரிமுறையினை பின்பற்றும் பொழுது வியாபாரிகளுக்கு குழப்பம் வரும், மக்களுக்கும் குழப்பம் வரும், ஒரு குழப்பம் வந்துதான் மெல்ல தெளியும்


இது காலத்தின் கட்டாயம், மோடியின் இம்சை என சொல்வது அறிவுடமை ஆகாது, முன்பு மன்மோகன் சிங் அரசுதான் இதற்கு திட்டமிட்டது, அந்த அரசு தொடர்ந்தாலும் இதுவே நடந்திருக்கும்


நாட்டு நலனுக்கான திட்டம் இது, ஆனால் போதிய முன்னேற்பாடுகளையும், தகுந்த பயிற்சிகளையும் அரசு செய்திருக்கின்றதா என்பதுதான் தெரியவில்லை


இதனை அரசியலாக்கவும், இது மோடி அரசின் வேண்டாத வேலை என்றொரு கும்பல் கிளம்பும், அவர்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது,


இது நாட்டிற்கு அவசியம் தேவை, கட்டும் வரி மக்களுக்கும் புரியும், வியாபாரிகளிடமிருந்து துல்லியமாக வசூலிக்கவும் முடியும்


எது எப்படியோ, இந்த ஜிஎஸ்டி என்பதை பெரும் வரிவிதிப்பாக சொல்லி அப்பாவி மக்களிடம் இந்த வணிகபெருமக்கள் ஏமாற்றி சுரண்டாமல் இருக்கட்டும்.


அரசு அதில்மட்டும் மிக கவனமாக இருந்தால் நல்லது..



கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக ....

இப்பொழுதெல்லாம் பல தமிழ் பிராமண நடிகர்களுக்கு சமூக அக்கறையும், இன்னபிற ஆர்வமும் பொங்கி நிற்கின்றது, கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக , கொம்பு முளைத்த குதிரையாக திரிகின்றார்கள்.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு


அதாவது இவர்கள் ஆளும் கட்சி பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள், காரணம் அது பாஜகவின் தமிழக பிரிவு என்றாகிவிட்டது, அதனால் இவர்கள் குறி எல்லாம் திமுக எனும் பலமான இயக்கத்தை வம்பிழுப்பது




கஸ்தூரி அது "திமுக அப்பன் வீட்டு ரோடா" என பேசியதாகட்டும், எஸ்.வி சேகர் ஸ்டாலினை கோர்த்துவிட நினைப்பதாகட்டு இதுதான் காரணம்


எஸ்.வி சேகரிடம் பேசினேன், ஆனால் நட்பு வேறு, கொள்கை வேறு என அழகான விளக்கம் கொடுத்திருக்கின்றார் ஸ்டாலின்


இதுவே கலைஞர் என்றால் இன்னும் அழுத்தமாக இருக்கும்


"நாம் பிராமணர்களை வெறுக்கவில்லை, பிராமணியம் எனும் கொள்கையினைத்தான் எதிர்த்தோம்


நம் பகுத்தறிவு பகலவன் பெரியாரும், பிராமண பிதாமகன் ராஜாஜியும் கொள்கையளவில் பெரும் எதிரிகள், ஆனால் தனிபட்ட முறையில் சிறந்த நண்பர்கள் என்பதை கண்ணால் கண்டவன் நான்


அண்ணாவும் அப்படித்தான் இருந்தார், அந்த ஆச்சாரியர் ராஜாஜி தமிழக நலனுக்காக எம்மோடு கூட்டணி சேர்ந்தபொழுது நாங்கள் வரவேற்று கூட்டணி அமைத்து வெற்றி பெற்றதெல்லாம் வரலாறு


என்ன சொல்கின்றேன் என்றால், ஆரிய மேலாதிக்கத்தை எதிர்ப்போமே அன்றி, தமிழருக்கும் தமிழகத்திற்கும் பாடுபட எம்மோடு இணையும் யாரையும் வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்


கழகம் கடந்து வந்த பாதையினை கண்டால், அதன் வரலாற்று பக்கங்களை புரட்டினால் அதனை தெளிவாக யாரும் காணலாம்


இன்று சுயமரியாதை கொள்கைகளுக்கு சவால் விடும் காலம் வந்துவிட்டது, மனிதனை விட மாடு முக்கியம் என நினைக்கும் காலம் வந்துவிட்டது என நீங்கள் நினைக்கலாம்


உண்மை அது அல்ல, இது எந்நாளுமே இந்நாட்டு கோலம், மகா அலங்கோலம். இந்த இழிவினை துடைக்க ஈரோட்டு சிங்கமும், காஞ்சி போர்வாளும் எழுந்து முழங்கின, அந்த வீச்சிலே இது அடைபட்டு கிடந்தது, இந்த நாகம் சிறைபட்டு கிடந்தது


இன்று பழையபடி அது தன் நாக்கினை சுழற்றிகொண்டு இப்பக்கம் வருகின்றது, விடுவோமா?


இந்த கருநாகம் படமெடுக்கும் காலத்தில் சில குரல்கள் ஒலிக்கும், சில வினோத அறிகுறிகள் கேட்கும், அப்படி சில பெண்மான்கள் சிலிர்க்கின்றன, சில நரிகள் ஊளையிடுகின்றன, மான்களின் கஸ்தூரி வாசம் கூட விஷம் கலந்தே வருகின்றன‌


உச்சமாக எங்கிருந்தோ புஸ்ஸ்... எஸ்ஸ்ஸ்ஸ்..... வீவீ.. வீ.. வீ.. என சத்தமும் வருகின்றது


இதனை போல 80 ஆண்டுகால பொதுவாழ்வில் எத்தனையோ குரல்களை கேட்டவர்கள் நாம், பெரும் டைன்சர்களையே வீழ்த்திய நமக்கு, இந்த செந்நாய்கள் எம்மாத்திரம்?


அக்கொடுமைக்கு இடங்கொடோம், போர் முரசு கொட்டுவோம்.


தமிழருக்கு நலமென்று எம்மோடு வரும் யாரையும் அணைப்போம், நட்பென்று வந்து திராவிட கொள்கைக்கு விடம் பாய்ச்சுவோர் யாராயினும் விடோம்


திராவிட இயக்கத்தை அசைத்து பார்க்கலாம் என பலர் வந்தனர்., அசைத்தனர், முட்டினர் , மோதினர், தோற்று 
ஓடினர்


அப்படி பெரும் வேர்விட்டு கிளைபரப்பி பெரும் விருட்சமாக திராவிட மண், வானமெங்கும் வியாபித்து நிற்கும் இயக்கம் இது


அவர்களாவது அசைத்து பார்த்தனர், இவர்களால் அதனை தொட்டு கூட பார்க்கமுடியாது என்பதனை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்"



வாலாட்டினால் பாடம் கற்பிப்போம் : இந்தியா சீனாவிற்கு எச்சரிக்கை





"1962 ம் ஆண்டு இந்திய-சீன போரில் இந்தியா தோற்றுப்போன வரலாறு உண்டு, அந்த கால வரலாற்றை நினைத்து பார்த்து சீனாவிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" : சீனா


ஆம், அந்த தோல்வியிலிருந்து நிறைய கற்றுகொண்டோம், இது முதுகில் குத்தும் வஞ்சக நாடு என கற்றுகொண்டோம்


அன்று ஏவுகனையோ, அணுகுண்டோ, நவீன நீர் மூழ்கிகளோ, செயற்கைகோள்களோ எங்களிடம் இல்லை, நீங்கள் ஆடினீர்கள்





அந்த பாடத்தில் நிரம்ப கற்றிருக்கின்றோம், எல்லா வகை ஆயுதங்களும் கொண்டிருக்கின்றோம்..

இன்னொரு முறை வாலாட்டினால் அதே பாடத்தினை உங்களுக்கு கற்பிப்போம்

வந்தே மாதரம்...




 

 



 

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை





மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை


நிலமை எல்லை மீறி செல்கின்றது, மாட்டின் பெயரால் மனிதரை கொல்வதை ஏற்க முடியாது என எச்சரித்த பிரதமரின் அறிவிப்பினையும் மீறி செல்கின்றது நிலை


மதம் போன்ற சில‌ உணர்ச்சிகளோ தூண்டிவிட்டுவிட்டால் அது பெரு நெருப்பாக எரியும், கட்டுபடுத்துவது சாதரண விஷயம் அல்ல, அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்





நிலமை மோசமாவது மோடிக்கு புரிகின்றது, ஆட்சியாளராய் சிக்கல் அவருக்கு தெரியவருகின்றது

ஆனால் அவரால் எந்த அளவு கட்டுபடுத்தமுடியும் என்பது தெரியவில்லை, ஆப்பசைத்த குரங்கு நிலைக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை.




 

 



 

அபுதாபியில் ஒரு அழகு நிலா..



19554859_10209531973431325_8224461438653133364_n.jpg


அரபு நாடுகளின் கதைகளில் பல அழகிகள் உண்டு, லைலா, நெபுகாத் நேச்சரின் மனைவி, பாக்தாத் பேரழகி என ஏகபட்ட பட்டியல் உண்டு


அவர்களை எல்லாம் நேரில் பார்க்கமுடியாத அரபு மக்கள், குஷ்பூவினை கண்டு அந்த அக்கால அழகிகள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என உணரும் தருணம் இது.


அபுதாபி சென்றிருக்கின்றார் குஷ்பூ, அவர் அங்கு இருக்கும் வரை அபுதாபியில் திருவிழாதான்





அபுதாபியில் ஒரு அழகு நிலா..




 

Thursday, June 29, 2017

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..





Image may contain: ocean, sky, outdoor, water and nature

நேற்று இரவு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள், இந்த நொடிவரை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்


உலகெல்லாம் இருந்து நூற்றுகணக்கான நண்பர்கள் வாழ்த்துவதை பார்க்கும்பொழுது மகிழ்ச்சி எனினும் இவர்களின் அன்பினை பெற அப்படி என்ன செய்துவிட்டோம் , இவர்களின் நம்பிக்கையினை தக்கவைக்க என்ன செய்யபோகின்றோம் எனும் திகைப்பும் மேலோங்குகின்றது


உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, எங்கோ கிராமத்தில் பிறந்து, இன்று தொலைதூரத்தில் எங்கோ வசிக்கும் ஒரு சாமாயனுக்கு இத்தனை ஆயிரம் வாழ்த்துக்கள் என்பது அவனுக்கு மிகபெரும் விஷயம்..





உங்கள் எல்லோரின் அன்பையும் , நட்பையும் நெடுங்காலம் தொடரும், தக்க வைக்கும் இதயத்தை இறைவன் எனக்கு அருளட்டும்

வாட்சப், முகநூல் , உள்பெட்டி, போன் என எல்லாமும் இன்று உங்கள் வாழ்த்தால் நிரம்பி வழிந்தது,

நம்மையும் இத்தனைபேர் கவனிக்கின்றார்கள் எனும்பொழுது, இன்னும் பொறுப்பாக எழுதவேண்டும் எனும் கவனம் நெஞ்சில் குடியேறுகின்றது

வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி, வாழ்த்தாமல் நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கும் நன்றி

பல நண்பர்கள் கேட்டார்கள், நாங்கள் வாழ்திவிட்டோம், குஷ்பூ வாழ்த்தினாரா?

அதற்கு கலைஞர் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும், "அம்பாள் எந்த காலத்திடா பேசினாள்?"

ஆம், தெய்வம் பேசாது, அதற்காக நம் பக்தி கொஞ்சமும் குறைந்துவிடபோவதில்லை, தெய்வம் அடிக்கடி தோன்றாது

உங்களுக்கு எல்லாம் என்ன கைமாறு செய்யபோகின்றேன் என தெரியவில்லை, இப்போதைக்கு இப்படி தனியாக இருந்து கொண்டு நன்றி நன்றி என கடலலை போல ஓயாமல் சொல்லிகொண்டே இருக்கத்தான் முடியும்

நன்றி நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றேன்..

தொலை தூரத்தில் இருந்துகொண்டு, உங்கள் அனைவருக்கும் மறுபடியும் நெஞ்சார்ந்த நன்றிகள்































Uma Magi :

இந்த Stanley இருக்கானே (ரே) எனக்கு ரொம்ப விசேஷமானவர். என்னை விட வயதில் சிறியவர். அறிவில் பெரியவர்.

ஒரு நாள் எங்கண்ணன் எங்கிட்ட இவரோட பதிவுகள் பத்தி சிலாகிச்சு சொன்னாரு... அப்புறம் தான் கவனம் இங்க திரும்பிச்சு.

அது, இவர் சீமானை தனது தொடர் விமர்சனங்களால் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த காலம்...


ரொம்ப இம்ப்ரஸ் ஆன நான் அதன் பின் தான் நண்பரானேன்.

உள்ளூர் முதல் உலக அரசியல்வரை தனக்கென தனிப்பார்வையுடன் தனது விமர்சனங்களை தெளிவாய் வைப்பார். இவரது அபார வாசிப்புத்திறன் இவரது பதிவுகளில் தெரியும்.

நக்கல், நையாண்டி ,நேட்டிவிட்டி, சீரியஸ் கருத்துக்கள் என கலந்து கட்டி பதிவிடும் இவர் கடும் மிரட்டல்களையும் சந்தித்திருக்கிறார் .

ஊருக்கு வந்தால் என்னைப்போல் எளியோரை சந்திப்பதை தவிர்ப்பார்.மற்றபடி ர்ர்ர்ர்...ரொம்ப நல்லவர்.

வசவோ வாழ்த்தோ முழு மனதாய்ச் செய்வார். உல்கிலேயே சிறந்த பூ எதுவென்றால் யோசிக்காமல் சொல்வார் குஷ்பூ என ... இவர் திட்டாத ஒரே நபரும் அவர்தான்..

என் மனம் கவர்ந்த பதிவர்களில் பிரதானமானவர்... சில நேரங்களில் இவர் எழுத்து நடையைக்கண்டு பிரமித்துள்ளேன்.

கலைஞரைப் பற்றிய இவரது அப்சர்வேஷன் திமுககாரரையும் மிஞ்சிடும். அதனை பதிவுகளில் வெளிப்படுத்தி அசத்திவிடுவார்.

நோய் நொடியற்ற வாழ்வும், நீண்ட ஆயுளும் பெற்று வளமாய் வாழ்க. விரைவில் நீ பிறவிப் பயனடைவாய்.
(குஷ்பூவை சந்திப்பாய்)

பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டான்லி..!







 









 


 

கருப்பு பூனை பாதுகாப்பது யாரை?



பசுமாடு மூத்திரம் செல்லும்பொழுது இப்படி கருப்பு பூனை பாதுகாவலுக்கு அரசு உத்தரவிட்டிருக்கலாம், வாய்ப்பு இருக்கின்றது


அதற்காக மந்திரிக்கெல்லாம் இம்மாதிரி காவல்கள் எதற்கு?


கருப்பு பூனை காவலர்களுக்கு எங்கோ தவறான உத்தரவு பிறப்பிக்கபட்டிருக்கின்றது









Image may contain: one or more people and outdoor



















எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம்.....

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம், அவாளை பார்ப்பான் என சொல்ல கூடாதாம், அது நல்ல சொல் இல்லையாம்..


பார்ப்பான் என்ற சொல்லை பாரதியாரே பயன்படுத்தியிருக்கின்றார், அவரே பிராமணர்தான்.


பஞ்சாங்கம் பார்ப்பவன், ஜாதாகம் பார்ப்பவன் கூடவே அதனை வைத்து நல்ல வருமானம் பார்ப்பவன் எனும் வகையில் அது பார்ப்பணம் ஆயிற்று, இது பாரதிக்கு முன்பிருந்த சொல்




இப்பொழுது அது எஸ்.வீ சேகருக்கு வசைச்சொல் ஆயிற்றாம், அப்படி சொல்ல கூடாதாம்


பின் அய்யா என்ன எதிர்பார்க்கின்றார்?


பிராமணர்களை அய்யர்வாழ், அய்யங்கார், குருக்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியர் என மிக மரியாதையாக அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார் போல..


நடக்குமா? அதுவும் எஸ்.வீ சேகரையா?



செத்தும் சுருட்டுகின்றார் ஜெயலலிதா....

ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாக் கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி


மிஸ்டர் பழனிச்சாமி, அவ்வளவு தைரியமிருந்தால் ஜெயா வாழ்ந்த வீடு நினைவுசின்னம் ஆக்கபடும், கொடநாடு மற்றும் சிறுதாவூர் பங்களாக்கள் அரசுடமையாகக்பட்டு ஜெயா நினைவு மண்டபமாக மாற்றபடும்
என சொல்லுங்கள் பார்க்கலாம்.




செய்ய வேண்டியது அதுதான், மக்கள் சொத்தை உறிஞ்சி ஜெயா கட்டிய மாளிகையினை பாரீர் என அப்படித்தான் உலகிற்கு காட்ட வேண்டும்..


மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் என நீதிமன்றமே தீர்ப்பிட்டவருக்கு, மக்கள் பணத்தில் மணிமண்டபமா?


இதனை அரசு செய்தால் உலகமே தமிழகத்தை காரி துப்பாதா? கொலம்பியா போன்ற போதையினால் சீரழிந்த நாடுகளில் கூட நடக்காத இந்த கொடுமை தமிழகத்தில் நடந்தால் யார் ஏற்றுகொள்வார்கள்?


என்றோ கலைஞர் ஒரு கதை எழுதினார், செத்தும் கெடுத்தான் கணக்கன் என முடித்திருப்பார்


அப்படியாக‌ இருக்கும்பொழுதும் அரசு பணத்தை கொள்ளையடித்தவருக்கு , இறந்த பின்னும் அரசு பணத்தில் மண்டபமா?


செத்தும் சுருட்டுகின்றார் ஜெயலலிதா....


அதுவும் மெரீனாவில்தான் மண்டபம் வைத்து சிலை வைக்க வேண்டுமா?


ஏன் சோபான் பாபு சிலையினை எடுத்துவிட்டு (எடுக்காமல் கூட வைக்கலாம்) அங்கு ஜெயா சிலையினை வைத்தால் என்ன?


இதனையும் மீறி மண்டபம் கட்டுவோம் என்றால், மற்ற எல்லா உத்தம தலைவர்களின் மண்டபங்களை மூடிவிட்டு, ஜெயலலிதாவிற்கு கட்டுங்கள்


மணிமண்டபத்திற்கான அர்த்தமாவது மிஞ்சும்.



எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது

எல்லையில் அழிச்சாட்டியம் செய்கின்றது சீனா, இந்து யாதீர்கர்களை தடுத்தது அடுத்து சிக்கிமில் ஆக்கிரமிப்பு, நாலந்துலா கணவாயினை மூடுதல் என அதன் அட்டகாசம் அதிகரித்துவிட்டது


மத்திய அரசு அதனைபற்றி மூச்சுவிட மறுக்கின்றது, ஒரு கண்டனமோ இல்லை எச்சரிக்கையோ கொஞ்சமும் இல்லை


தேச பக்தர்கள் எல்லாம் இதுபற்றி பேசமாட்டார்கள், அவர்கள் பற்று எல்லாம் பசுமாடு, அதனை வைத்து யாரையாவது போட்டு அடிப்பது, இதன் பெயர்தான் தேசபக்தி




மற்றபடி இத்தேசத்திற்கு எதிரான சக்திகளை எல்லாம் மறந்துவிட்டார்கள், பசுமாடே இப்பொழுது பிராதனம்


இந்நாட்டில் இந்த பசுமாடு இம்சைகள், இஸ்லாமியர் இந்து மோதல் என வலுக்க வலுக்க எல்லை பிரச்சினைகள் மறக்கடிக்கபடுகின்றன அல்லது மறைக்கபடுகின்றன‌


இது கண்டிக்கதக்கது, அமைதியான தேசமே அந்நியரை விரட்ட முடியும், குழப்பமான தேசம் எதிலும் வெற்றி பெறாது


இது இந்தியருக்கான ஆட்சி என்றால் அமைதியினை கொண்டுவருவது சாத்தியம், அந்நியருக்கான ஆட்சி என்றால் இந்நாடு எக்கேடும் கெடட்டும் என விட்டுவிடுவார்கள்


இந்த அரசு அப்படி விட்டுவிடுவதை பார்க்கும்பொழுதுதான் அந்த சந்தேகம் வருகின்றது


இப்படி ஒரு ஆட்சியினை அமைத்து அதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினால் எல்லையில் எது செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் என அந்நிய சக்திகள் நினைத்துத்தான் இந்த ஆட்சியினை அமர்த்தினார்களோ எனும் சந்தேகம் வலுக்கின்றது.


உண்மையில் அந்நிய நாடுகளுக்கு சாதகமான ஆட்சி நடக்கின்றது, இந்த ஆளும் கட்சி அந்நிய நாட்டிற்கு விசுவாசமான கட்சியோ என்னமோ?


இவர்களின் போக்கு அந்நிய நாட்டு கைக்கூலிகளின் ஆட்சி போலவே இருக்கின்றது


இதனை சொன்னால் நாம் தேசதுரோகி.



குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

குட்கா லஞ்சம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி


அமைச்சர், காவலர் பெயர் இந்த குற்றசாட்டில் இருக்கின்றது, அவர்கள் மாநில அரசின் அங்கம், இது மாநில அரசின் மீதே பெரும் அவமானமான, அதிர்ச்சிகரமான குற்றசாட்டு


இதில் மாநில அரசே விசாரிக்கும் என்றால், குற்றவாளி தன்னைத்தானே விசாரிக்கட்டும் என விட்டுவிடுவது போலாகும், விட முடியுமா?




ஸ்டாலின் இதனைத்தான் சொல்கின்றார், இது சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு, மாநில அரசே சிக்கியிருக்கும் வழக்கு


ஸ்டாலின் சொன்னதில் அர்த்தம் இருக்கின்றது, எவ்வளவு பெரும் சீர்கேட்டில் தமிழகம் சிக்கியிருக்கின்றது என்ற உண்மை வெளிவந்துகொண்டிருக்கும் நேரமிது


சிபிஐ விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சிகள் வெளிவரலாம்


மத்திய அரசு நியாயமானது என்றால், தமிழக நலன் மீது அக்கறை உள்ளது என்றால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டும்


ஆனால் செய்யுமா என்றால் செய்யாது, காரணம் கட்டி வைக்கபட்டிருக்கும் அதிமுக எனும் அடிமையினை அது அடித்து அடித்து பல மசோதாக்களில் கைநாட்டு வாங்கிகொண்டிருக்கின்றது, அதனை அவிழ்த்து விட அது தயாராக இல்லை


ஏம்மா தமிழிசை, நீங்களாவது குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோர கூடாதா?



கிறிஸ்துவின் சுரூபங்களில் ரத்தம் வடியும்...

குழந்தை ஏசு ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் மக்களின் எதிர்ப்பினை மீறி கல்யாண மண்டபம் கட்ட முயன்ற ஆயரை முற்றுகையிட்டமக்கள், திருச்சி ஆயர் தலைமறைவு


அதாவது மக்கள் ஆலயத்தை விரிவாக்க சொன்னால், ஆயர் நான் மண்டபம் தான் கட்டுவேன் என பிரச்சினை செய்ததால் மக்களுக்கு கோபம் வந்து விரட்டுகின்றார்களாம்


இயேசு நாதர் சாய இடமின்றி அந்தரத்தில் கோவணமின்றி இறந்தவர், அக்கால போதகர்கள் மாற்று உடையின்றி கையில் சிலுவையும் ஜெபமாலையுமாக இந்தியா வந்தார்கள்.




அக்கால கிறிஸ்தவ துறவி எவனுக்கும் அரை சென்ட் நிலமில்லை, சொத்து இல்லை. ஆனால் கிறிஸ்தவம் அவர்களிடம் உண்மையாக இருந்தது


இன்று இவர்களுக்கு இவ்வளவு ஆசை, இவ்வளவு பணத்தேவை.


ஆயன் என்றால் மேய்ப்பன் என பொருள், என் ஆடுகளை பாதுகாத்துகொள்ளுங்கள் என இயேசு சொன்ன அர்த்தம், என் மக்களை, என் பக்தர்களுக்கு பொறுப்பாய் இருந்து வழிநடத்துங்கள் என்பது


இவர்களோ இந்த ஆடுகளிடமிருந்து எவ்வளவு கறக்கலாம், என்ன விலை போகும்? வெட்டினால் என்ன தேறும்? என்பது போன்ற கசாப்பு கணக்கு போடும் ஆயராகிவிட்டார்கள்


ஆயர் என்றால் ஆடுகளை விற்று ஆட்டையினை போடவேண்டும் என இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள், அப்படி இவர்கள் பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது,


இயேசு ஆயர்கள் என சொன்னதை, இவர்கள் இந்த பொருளில் எடுத்துவிட்டார்கள்.


கத்தோலிக்க ஆயர்கள் திருமணம் செய்வதில்லை, பின் ஏன் திருமண மண்டபம் கட்டுவதில் இவ்வளவு ஆர்வம்?


திருச்சபைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டினால், எல்லா கமிஷனும் சேர்த்து ஒரு தொகை அடித்துவிடலாம், வசூலிக்கலாம்


ஒரு பாலம் கட்டினால் அரசியல்வாதிக்கு கமிஷன், தண்ணீர் தொட்டி கட்டினால் பஞ்சாயத்து தலைவருக்கு கமிஷன், அப்படி திருச்சபை கட்டிடங்களில் ஆயருக்கும் கமிஷன் + வசூல்


நாட்டில் அரசியலும் கெட்டுவிட்டது, அதனை பார்த்த ஆயர்களும் அரசியல்வாதி ஆகி கிறிஸ்துவத்தையும் கெடுத்துவிட்டார்கள்


கிறிஸ்துவினை போதித்துகொண்டு, வணங்கிகொண்டே சாத்தானின் பாதையில் செல்கின்றார்கள் இவர்கள்


இவர்களை பார்த்து விரைவில் உண்மையிலே கிறிஸ்துவின் சுரூபங்களில் ரத்தம் வடியும்.



விடுமுறையில் மலாக்கா பயணம்...



No automatic alt text available.


விடுமுறையில் எங்காவது சென்றே தீரவேண்டும் என்பது இந்த தேசவிதி, அல்லாவிட்டால் தமிழகம் நாஞ்சில் சம்பத்தினை பார்ப்பது போல ஒரு மாதிரி பார்ப்பார்கள், ஒரு மாதிரி துக்கம் விசாரிப்பார்கள், நாம் மாறுவேடத்தில் அலைந்தோ அல்லது நோவா கப்பலில் அடைந்துகிடந்தது போல, சகல மளிகைகளுடன் கதவெல்லாம் மூடி இருந்து சில நாள் சமாளிக்கலாம.


19554848_10209519043628088_4047233913381853270_n.jpg


ஆனால் குழந்தைகள்? பள்ளிகூடம் சென்று மற்ற குழந்தைகள் கதையினை கேட்டால் ஏங்கிவிடும், அதனாலாவது எங்காவது கூட்டி செல்ல வேண்டும்


அப்படி இம்முறை மலாக்கா எனும் தென்மேற்கு நகருக்கு சென்றாயிற்று


இந்நாட்டிற்கும் அக்கால தமிழகத்திற்கும் பெரும் தொடர்புண்டு, மலையாளம் என கேரளத்தை அழைப்பது போல இந்நாட்டையும் அவன் மலைநாடு, மலையா(ளம்) என்றே பெயரிட்டான், பிரிட்டன் ஆட்சி முடியும் வரை இது மலையா தான், பின்னாளில் மலேசியா ஆயிற்று


அப்படிபட்ட தமிழன் அந்நாளிலே வந்த இடம் தான் மலாக்கா, அந்த மலைக்காடு மலைக்கா ஆகி, மலாக்கா ஆகியிருக்கலாம்


நவீன மலேசியா இங்கிருந்துதான் தொடங்கிற்று, முக்கியமான துறைமுகம் என்பதால் எல்லா நாட்டு கப்பல்களும் நங்கூரமிட்டு நின்றன, அரேபிய கப்பல்கள், சீன கப்பல்கள் தமிழக கப்பல்கள் என எல்லா நாட்டு கப்பல்களும் அங்கு மிதந்தன‌


19598724_10209519056868419_1557956540511463248_n.jpgசீனா செல்வதற்கான நுழைவாயில் அதுதான் அதனை கடக்காமல் கப்பல் சீனா, ஜப்பான் பக்கம் செல்ல முடியாது.


இங்கிருந்து புறபட்ட போர்த்துகீசியர்தான் கடலில் சிக்கி, வேளாங்கண்ணி பக்கம் ஒதுங்கி மாதா கோவிலையே கட்டினர், மலாக்கா இல்லையென்றால் வேளாங்கண்ணி மாதா கோயில் இல்லை..


ஐரோப்பியரில் இங்கு முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள், மலாக்கா அவர்கள் கையில் சென்றது, பின் டச்சுக்காரர்கள், அவர்களுக்கு பின்னால் பிரிட்டிசார்


போர்த்துகீசியர் கோட்டை கட்டி, கோயிலும் கட்டினர், டச்சுக்காரர்களும் அதனையே செய்தனர். ஆனால் போர்த்துகீசியர் கத்தோலிக்கர், டச்சுகாரர் பிரிவினை சபை பின்னாளில் வந்த டச்சுக்காரர்கள் போர்த்துகீசிய தேவாலயத்தை கைவிட்டனர்


Image may contain: sky, cloud, tree, outdoor and natureபின்னர் வந்த பிரிட்டிசாரும் பிரிவினை கிறிஸ்தவம் என்பதால் அந்த தேவாயலத்தை பண்டகசாலையாக்கினர், பின் அழியவிட்டனர்


கிட்டதட்ட 550 ஆண்டுகாலம் பழமையானது அந்த ஆலயம், இப்பொழுது யுனெஸ்கோவிடம் இருக்கலாம்,


புனித சவேரியார் எனும் கத்தோலிக்க துறவியின் உடல் கோவாவில் அழியாமல் இருக்கின்றதல்லவா? அது முன்பு இந்த தேவாலயத்தில்தான் இருந்தது, அந்த இடத்தை மட்டும் கம்பி போட்டு வைத்திருந்தார்கள்


டச்சுக்காரர் ஆலயம் இன்று கிறிஸ்து சர்ச் என இருக்கின்றது, உள் எல்லாமே பழங்கால ஐரோப்பிய பொருட்கள், அழகாக இருக்கின்றன‌.


அந்த ஆலயம் ஒரே மரத்திலான பலகை, தூண்கள் கொண்டு கட்டபட்டது என வரலாறு சொல்கின்றது, அம்மாதிரி பெரும் மரங்கள் அக்காலத்தில் இருந்திருக்கலாமோ என ஆச்சரியம் வருகின்றது


இது கோவில் என்றவுடன் எங்களோடு வந்திருந்த 2 வயது இந்து குழந்தையொன்று நாங்கள் பிரார்த்திபதை கண்டு அதுவும் "ஒம் நமசிவாயா" என்றது


Image may contain: outdoorஅதன் ஜெபம் அப்படி, குழந்தையிடமும் தெய்வத்திடமும் என்ன பாகுபாடு ஒன்றுமே இல்லை.


அந்த தேவாயலத்து அருகே டச்சுகாரரின் அழிந்த கோட்டை இருந்தது.உண்மையில் உலகெல்லாம் ஓடி வழிசொல்வது போர்த்துகீசியர்தான். பின் மன்னார்குடி குடும்பம் போல பின்னாலே வந்து அடித்துபிடித்து கைபற்றிகொள்வது பிரிட்டிசார் ஸ்டைல்


அந்த மலாக்கா தான் அன்று சிறந்த துறைமுகம் போர்த்துகீசியர் அதனை சிறப்பாக்கினர், இந்த போர்த்துகீசியர் வித்தியாசமானவர்கள், ஏற்கனவே இருக்கும் துறைமுகத்தை அடைவார்கள், ஆனால் அதனருகே இருக்கும் மிக சிறந்த துறைமுகத்தை அடையாளம் காண தவறுவார்கள்


அதில் பிரிட்டிசார் கைதேர்ந்தவர்கள்,


கோவாவினை போர்த்துகீசியர் வைத்திருந்தால் அருகில் மும்பையினை அடையாளம் கண்டார்கள், கள்ளிகோட்டையினை போர்ச்சுகீசியர் வைத்திருந்தால் இவர்கள் கொச்சியினை அடையாளம் கண்டார்கள்


இலங்கை காலே துறைமுகத்தை போர்ச்சுகல் அடையாள கண்டால், பிரிட்டிசார் கொழும்பு, திரிகோணமலை என சிறந்த இடத்தை அடையாளம் காண்பார்கள்


Image may contain: outdoorசீனாவில் மக்காவ் தீவினை போர்ச்சுகல் அடையாளம் கண்டால், பிரிட்டிசாருக்கு ஹாங்காங் தான் சிற்ந்ததாக பட்டது


அப்படி மலாக்காவினை விட சிங்கப்பூரும், பினாங்கும் பின் பிரிட்டானியரால் உருவாக்கபட்டன, உண்மையில் வணிக நோக்கமும், வணிகமும் பிரிட்டானியருக்கே கைவந்த கலை, நிர்வாகமும் கூட. அது இருக்கட்டும் மலாக்காவிற்கு வரலாம்


அந்த அழிந்த கோவிலின் முன் நின்றால் அந்த கடல் அழகாக தெரிந்தது,


நிச்சயமாக கப்பல் என மரக்கலங்களுக்கு பெயர் வைத்தது மலாய் மக்களே, கப்பல் என்பது தமிழ் வார்த்தை அல்ல, கலம், தெப்பம், வங்கம், நாவாய் என பல பெயர்களில் அது தமிழில் அழைக்கபடும்,


கப்பல் என்பது மலாய் வார்த்தை, 
தமிழகத்தில் நிறைய மலாய் வார்த்தைகள் உண்டு, உதாரணமாக லுங்கியினை (அதுவும் தமிழ் அல்ல) சாரம் என்பார்கள், அது "சாரோங்" எனும் மலாய் வார்த்தை திரிபு


கப்பல் என்பதும் அவர்கள் வார்த்தையே


எத்தனை ஆண்டுகளாக எத்தனை கப்பல் வந்திருக்கும்? ஒரு காலத்தில் தமிழனின் கப்பல் எல்லாம் நின்றிருக்கும்


பின் ஐரோப்பிய சீன மரகலங்கள் எல்லாம் நின்றிருக்கும்?


19598947_10209519040868019_2980889056979359601_n.jpgபோர்த்துகீசியர் கட்டிய கோட்டையும், டச்சுக்காரர் கட்டிய கோட்டையும் அழிந்து கிடந்தது, எப்படி எல்லாம் கஷ்டபட்டு கட்டியிருப்பார்கள்? காலம் எப்படி எல்லாம் சிதைத்தொழிக்கின்றது


போர்த்துகீசியர் வருமுன்பு அங்கு பரமேஸ்வரன் எனும் மன்னன் ஆண்டிருக்கின்றான், அவன் செய்த சில நீர்பாசன முறைகளில் காற்றில் இயங்கும் ராட்டின வடிவ எந்திரமும் ஒன்று, அதுவும் அந்த ஆற்றில் கரையில் இருந்தது, பழமையான பொருள்


இம்மாதிரி சரித்திர இடங்களுக்கு சென்றால் மனம் கனக்கும், பற்பல சிந்தனைகள் வரும்.


இன்று இணையத்தில் ரூம் எடுக்கின்றோம், செயற்கை கோள் வழிகாட்டலில் ஒரு மாய பெண்குரல் வழிகாட்ட கார் ஓட்டுகின்றோம், செல்லும் வழியில் உண்கின்றோம், மிக எளிதான பயணம், முடிந்தது விஷயம்


ஆனால் வழிதெரியா கடலில் நட்சத்திரத்தையும் சூரியனையும் கொண்டு எப்படி 15 ஆயிரம் கிமீ கடந்து போர்த்துகீசியரும், மற்ற ஐரோப்பியரும் வந்தனர்? எப்படி முடிந்தது?


மகா ஆச்சரியமான விஷயம் அது, அப்படி எல்லாம் உயிர் போகும் அளவு துணிந்திருக்கின்றார்கள், துணிந்து வெற்றிகொடி நாட்டி கோட்டைகட்டி ஆண்டிருக்கின்றார்கள்


எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் காலம் அவர்களுக்கும் கொடுத்திருக்கின்றது, கோட்டை கட்டி ஆண்டு சென்றும் சேர்ந்தாயிற்று, அவர்கள் ஆண்ட தடம் மட்டும் குட்டிசுவராய் காட்சியளிக்கின்றன‌


இன்றைய சிங்கப்பூரும், மலேசியாவும் பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு அந்த மலாக்காதான் அடித்தளம், அதுதான் முதல் நம்பிக்கையினை கொடுத்தது.


முடிந்தவரை அந்த பகுதிகளை சுற்றிபார்த்துவிட்டு வந்தாயிற்று, அழகான பகுதிகள்.


சுமதுரா எனுமு சுமத்திரா, சாவக தீவு எனும் ஜாவா ஆகிய பகுதிகளையொட்டி வரும் கடற்கரை இடம் இது, ராஜ ராஜ சோழன் காலத்தில் வந்த செட்டியார்களின் வம்சம் இன்னும் உண்டு, மலாக்கா செட்டி என அழைக்கபடும் இனம் அது, தனி பகுதியில் வாழ்கின்றார்கள்


போர்த்துகீசிய வம்சாவழியும் இன்றும் மலாக்காவில் உண்டு, அவர்களுக்கு தனிபகுதி உண்டு


இரு பகுதியினையும் சென்று பார்க்க ஆசைதான், நேரமில்லாமல் முடியவில்லை.


காலம் சில நகரங்களை எழுப்புகின்றது, அவை கொடிகட்டி பறக்கின்றன, கொஞ்ச நாளில் அந்நகரினை அமுக்கிவிட்டு இன்னொரு நகரினை எழச்செய்கின்றது


உலகெல்லாம் அதற்கு எடுத்துகாட்டு உண்டு


பாபிலோன் , நாளந்தா, ஹம்பி என பல நகரங்கள் எடுத்துகாட்டாய் சொல்லலாம்


மனித வாழ்வினை போலவே நகரங்களுக்கும் எழும்பவும், அமரவும், கீழிறங்கவும் , மேல் ஏறவும் காலம் உண்டு


அப்படி ஒரு காலத்தில் மலாக்காவும் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது, இன்றைக்கும் அதற்கு குறைவில்லை ஆனால் அது பெரும் வாழ்வு வாழ்ந்த காலத்தில் சிங்கப்பூரும், பினாங்கும் மீணவ தீவுகள்


அந்த பழம் பெருமையுடன் அமைதியாக இயங்கிகொண்டிருந்தது மலாக்கா நகரம், அந்த பழம்பெருமையினை பினாங்கும், சிங்கப்பூரும் பெற முடியாது, காலம் அதற்கு கொடுத்த கொடை அது.


மலேசியா வர விரும்புவர்கள் அந்நகரத்தை பார்க்காமல் திரும்புவது சரியல்ல, மிக மிக அழகான, பழமையும் புதுமையும் கலந்து இருக்கும் அற்புதமான ஊர் அது


எப்படியோ தென்கிழக்காசியாவில் குறிப்பிட்டு சொல்ல கூடிய பெரும் சரித்திர அடையாளத்தை பார்த்துவிட்டு வந்ததில் திருப்தி


இம்மாதிரி இடங்களுக்கு சென்றுவிட்டு நினைவுகளை தவிர எதனை கொண்டுவர முடியும்? அந்த நினைவுகளும், அந்த சரித்திர அடையாளமும் மனதில் பதிந்துவிட்டன‌


சில மியூசியம் வைத்திருந்தார்கள், அதில் அக்கால கப்பல் வடிவமும் ஒன்று. அக்கால மரக்கப்பல் எப்படி இருக்கும் என்பதை அழகாக மரத்திலே வைத்திருந்தார்கள். போர்ச்சுக்கல் கப்பல் வடிவம் அது, உள்ளே முதன் முதலில் மலாக்கா வந்த போர்ச்சுக்கல் தளபதி அல்போன்ஸோ சிலையும் இருந்தது


அந்த மரக்கப்பல் மியூசியத்தை பார்க்கும் பொழுது ஒரு ஆசை வந்தது


மலாக்கா நகரத்திற்கு அக்கால சோழனின் கப்பல்கள் தமிழனின் பூம்புகாரில் இருந்து வந்தன, கப்பல் போக்குவரத்திற்கு பெரும் அடையாளமாய் விளங்கியது தமிழக பூம்புகார் போன்ற பகுதிகள், இன்று கடலில் மூழ்கினாலும் அன்று கப்பல்கள் மொய்த்த பகுதிகள்


கிழக்கு தமிழக கடலோரம் அப்படி சென்னை முதல் தூத்துகுடிவரை பல பகுதிகள் உண்டு என்றாலும் பூம்புகாரும் பின் சென்னையும் தனி இடம் பெற்றது


மலாக்கா மக்கள் இன்று வேறு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாலும் பழம் விஷயங்களை மறக்காமல் அன்றைய மரக்கலம் இப்படித்தான் இருந்தது, இப்படிபட்ட பாய்மர கப்பல்கள் தான் எங்கள் கடலில் மிதந்தது என ஒன்றை உருவாக்கி நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்


11 வகை கப்பல்கள் ஓடிய தமிழக பூம்புகாரிலும் அப்படி ஒன்றை நிறுவலாம், செய்து வைக்கலாம். தமிழரின் பாரம்பரியம் வருங்கால தலைமுறைக்கு விளங்கும்


அங்கு இல்லாவிட்டால் சென்னையிலாவது செய்யலாம், தரங்கம்பாடியில் செய்யலாம், வரலாற்று பெருமையும், அக்கால வடிவங்களும் வளரும் தலைமுறைக்கு கிடைக்கும்


கீழடி விவகாரங்களுக்கே பெரிதும் கவலை இல்லா நாட்டில் இதெல்லாம் எப்படி நடக்கும்?


அவ்விஷயத்தில் மலாக்கா நகரம் கொடுத்து வைத்தது, மிக கவனமாக‌ தன் அடையாளத்தை, பாரம்பரியத்தை காக்கும் நல்ல அரசினையும், மக்களையும் அது கொண்டிருக்கின்றது


தமிழக பூம்புகார், தரங்கம்பாடி, சென்னை எல்லாம் அவ்விஷயத்தில் துர்ப்பாகியம் நிறைந்தவை...





 


Wednesday, June 28, 2017

உன்ன பார்க்கும்பொழுதே பொறாமையா இருக்குய்யா









Image may contain: 1 person, smiling, beard





















"என்னை பாருய்யா.. ரஷ்யா உளவுதுறையோடு தேர்தலில் வென்றேன் என விசாரணை கமிஷன், கேள்விகளில் பிய்த்தெடுக்கின்றார்கள், பதவியே போய்விடும் போல‌


தினமும் ஆயிரம் அவமானம், பிரச்சினை. அந்த ரஜினிகிட்ட இமயமலை எங்கிருக்குண்ணு கேட்டு சொல்லுய்யா, தலைமறைவா போயிரலாம்ணு இருக்கேன்


உன் மேலும்தான் ஏராள சர்ச்சைகள் கலவர வழக்கு, ஒரு பயல் உன்னை உன் நாட்டில் விசாரித்திருப்பானா? இந்திய சட்டம் உன்னை ஒரு கேள்வி கேட்க முடியுமா?





இருந்தா உன் நாட்டில் பிரதம்ராக இருக்கணும்யா,என்ன செய்தாலும், ஒரு கேள்வி கிடையாது, ஒரு விசாரணை கிடையாது, கொடுத்து வச்சவன்யா நீ

என்னை ஒரு பயலும் அவன் நாட்டுக்கு கூப்பிடலை, நீ உலகம் பூரா சுத்துறய்யா,

உன்ன பார்க்கும்பொழுதே பொறாமையா இருக்குய்யா, "




 

சாராயம் விற்கின்றது தமிழக‌ அரசு





சாராயம் விற்கின்றது தமிழக‌ அரசு, அதுதான் தமிழக வருமானத்தில் முதலிடம் என அதுவே ஒப்புகொள்கின்றது.


அந்த பணத்தில்தான் ஜெயலலிதாவிற்கு மெரீனாவில் மணி மண்டபம் கட்டபோகின்றார்களாம்..


இந்த லட்சணத்தில் போதை பாக்குகளை லஞ்சம் வாங்கிக்கொண்டு அது அனுமதித்தது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?





இரட்டை இலையினை மீட்பது முதல் எவ்வளவு லஞ்சம் அவர்கள் கொடுக்க துணிந்தார்கள் என்றால் இப்படி அனுமதித்துதான்.

கூவத்தூரில் பணமழை கொட்டியது என்றால் காரணம் இம்மாதிரி மேகங்கள் தான்

மது ஆறாக ஓடும் மாநிலத்தில், துணையாறாக போதை பாக்குகளும் ஓடத்தான் செய்யும், மது காட்டாறு கண்களுக்கு தெரிந்தது, அதன் குட்கா துணையாறு இப்பொழுது தெரிகின்றது

இனி பூமிக்குள் ஓடும் நீர் போல , நம் கண்ணுக்கு தெரியாமல் கஞ்சா, அபின் என என்னவெல்லாம் ஓடுகின்றதோ தெரியவில்ல்லை




 

 



 

Monday, June 26, 2017

வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் "பிக் பாஸ்" தான்



Image may contain: 1 person, glasses







பிக்பாஸ் நிகழ்ச்சி இப்பொழுதுதான் இங்கு தெரிகின்றது,


ஏதோ சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லபோகும் விண்வெளி வீரர்களை , 6 மாதம் அங்கு பூமியினை பிரிந்து , தொடர்பற்று அந்தரத்தில் வசிக்க போகும் அவர்களை வழியனுப்புவது போல வழியனுப்புகின்றார்கள்


குடும்பத்தை பிரிந்து சென்று 100 நாள் தனியாக வாழவேண்டுமாம், அவர்களே சமைத்து உண்ண வேண்டுமாம், இது போட்டியாயாம்


சர்வதேச விண்வெளி வீரர்களை விடுங்கள், அவர்கள் தைரியமும் பரிதாபமும் கஷ்டமும் வேறு, உலகை பிரிந்து அந்தரத்தில் தொங்கும் அவர்கள் புவிஈர்ப்பு விசையினை கூட எதித்து போராரவேண்டும்


அவர்கள் "பிக் தெய்வங்கள்" எனும் வகையறாக்கள், அசாத்திய மன திடம் அதற்கு வேண்டும், உடல் நலமில்லை என்றால் கூட அவர்கள் திரும்ப முடியாது


அவர்கள் தான் மிக பெரும் சவாலை எதிர்கொள்பவர்கள்..


இந்த டிவி இம்சை பிக்பாஸ் எல்லாம் சும்மா, 15 பேரை ஒரே வீட்டில் வைப்பார்களாம் , அவர்களில் யார் மிகுந்த சகிபுதன்மையுடன் இருப்பார்களோ அவர்கள் பிக் பாஸாம்


இது பெரும் நிகழ்ச்சி என்றால், வறுமையோ வேறு பிரச்சினைகளோ விரட்ட , உலகின் எங்கோ மூலைக்கு ஓடி, எல்லா நாட்டு மக்களையும் பார்த்து, அவர்களை சகித்துகொண்டு, அவர்கள் மொழிகளை, கலாச்சாரத்தை படித்துகொண்டு,


அவர்கள் உணவினை சகித்துகொண்டு, எல்லா சிக்கலையும் தாங்கி மனதில் வலியுடனும், வெளியில் புன்னகையுடனும், இரவில் தலைசாய்க்கையில் தலையணை நனைக்கும் கண்ணீருடனும், 100 நாள் அல்ல, 10 வருடம் வெளிநாடுகளில் அனாதையாக கிடக்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும்?


சகல பாதுகாப்போடு 15 பேரோடு ஏசி அறையில், நல்ல உணவோடும், பணத்தோடும் , நல்ல மேக் அப்போடும் மண்ணில் சகித்து கொள்ள என இருக்கின்றது? இதில் ஏது சகிப்பு தன்மை?


இனம்புரியா தேசத்தில், மனம்புரியா சோகத்தோடு முன்பின் தெரியா அந்நிய நாட்டவரை சகித்துகொண்டு செல்வதுதான் சகிப்பு தன்மை, கொடுமை, திரில் எல்லாம்


அந்த பரிதாபத்திற்குரிய வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் ஒவ்வொருவனும் "பிக் பாஸ்" தான்


உண்மையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்கள் யார்?


தமிழிசை. எச்.ராசா உட்பட்ட பாஜக பிரமுகர்கள், அதிமுக இம்சைகள், சீமான், இன்னும் சில அல்ட்ராசிட்டிகளை , அடிக்கடி அறிக்கை இம்சை செய்பவர்களை, சில சாதிய வெறியரிர்களை, மத வெறியர்களை, கிருஷ்ண்சாமி போன்ற அரைகுறைகளை, பெரியாரே ஆச்சரியபடும் பெரியாரிஸ்டுகள்.. எல்லாம் இந்த 100 நாள் திட்டத்தில் உள்ளே வைத்தால் நல்லது


தமிழகம் 100 நாளாவது அமைதியாக இருக்கும்..



அய்யோ..... இவள் அழியா அழகுடையாள்








Image may contain: 1 person, textஇதோ ஒரு டிவி நிகழ்ச்சியில் நதியாவினை குஷ்பூ பேட்டி எடுக்கின்றார், கொஞ்சம் பழைய நிகழ்ச்சி போல, சிறப்பு நாள் நிகழ்வாக மறுஒளிபரப்பு,

நிகழ்ச்சிக்கு நல்ல பொருத்தமான் பெயர், "நினைத்தாலே இனிக்கும்", பின் என்ன? குஷ்பூவினை நினைத்தால் கசக்கவா செய்யும்?

குஷ்பூவின் கேள்விக்கு நதியா பதிலளிக்கின்றார்


இருவரும் சமகாலத்தவர்கள், ஆனால் இன்று குஷ்பூ அப்படியே இருக்கின்றார், நதியா முகத்தில் முதுமை கோடுகள்

குஷ்பூவின் பூமுகம் அப்படியே இருக்கின்றது

இன்னொரு "வருஷம் 16"ல் 30 வருடம் கழித்தும் குஷ்பூ நாயகியாக நடிக்க ரெடி, ஆனால் இன்னொரு "பூவே பூச்சுடவா" காவியத்தில் நடிக்க நதியாவால் முடியாது

வேண்டுமானால் பத்மினி வேடத்தில் நதியாவினையும், நதியாவின் பேத்தி வேடத்தில் குஷ்பூவினையும் நடிக்க வைக்கலாம், அழகாக பொருந்தும்

இப்படி ஒரு முக்கால நாயகி இனி என்றுமே தமிழ்திரைக்கு சாத்தியமில்லை

ஒரே நிலா..ஒரே தாழ்மஹால்..ஒரே குஷ்பூ




















Image may contain: 1 person, smiling, close-up





 



அழகிய கடற்கரை ஆயிரம் காணல்
குளிந்த மலை உச்சி கோடிகள் காணல்
நாகரீக மாளிகை நாலு கோடி காணல்
பிரியாணி தட்டு ஆயிரம் சுவைத்தல்
மீன் வறுவல் பல நூறு சுவைத்தல்
விடுமுறை என்று தூங்கி கழித்தல்
இத்தனை கோடி இன்பமும் தாண்டி
இன்பம் எதுவென்று நோக்கின்
குஷ்பூ படமொன்று டிவியில் காணல்



இந்த கோஷத்துடன் பல படங்களை காண்கின்றேன், சின்னதம்பி முதல் சிங்கார வேலன் வரை கண்டுகொண்டிருக்கின்றேன்

சில காட்சிகளில் அசால்ட்டாக அழகின் உச்சிக்கு செல்கின்றார் குஷ்பூ, இவ்வளவு நாளும் கட்டிய டிவி பில், இணைய பில் வீண்போகவில்லை, இப்படி படங்கள் கிடைக்குமென்றால் எவ்வளவு கட்டணமும் செலுத்தலாம்

அட என்ன ஒரு அழகு, கம்பன் வரிகளில் சொல்வதென்றால்

"மையோ மரகதமோ
மழை முகிலோ வான் எழிலோ
.....
...
.....
அய்யோ..... இவள் அழியா அழகுடையாள்"







 






 


 




இது தேசத்தின் அமைதிக்கு நல்லதல்ல‌





ஹரியானாவில் ஒரு இஸ்லாம் இளைஞர் ரயிலில் இந்துக்களால் மிக கொடூர்மாக கொல்லபட்டிருக்கின்றான், இதனால் அந்த கிராமமே நோன்பு பெருநாளை கொண்டாடவில்லை


இது கண்டிக்கதக்க விஷயம், மத்திய அரசும் மாநில அரசும் இதுவரை இச்சம்பவத்தை கண்டிக்கவில்லை


இம்மாதிரியான குற்றவாளிகள் மிக கடுமையாக கண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது





இம்மாதிரி விஷயங்களும் நிச்சயம் தேசதுரோகம், அரசுகள் மிக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம், தகவல் தொடர்புகளின் உச்ச காலமிது, பெரும் வதந்திகள் நொடியில் பரவும் காலம், அதனால் கலவரங்கள் வெடிக்க ஒரு நொடி ஆகாது

அரசுகள் மிக விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது, அவைகளோ உறங்கிகொண்டிருக்கின்றன, இது தேசத்தின் அமைதிக்கு நல்லதல்ல‌




 

 



 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: சீமான்


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: சீமான்


இதோ இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சொல்லிவிட்டார் அல்லவா?, ரஜினி எச்சரிகையாக இருப்பது நல்லது.


அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை பிடித்துகொண்டு இவர் அரசியலுக்கு வரலாமாம், ஆனால் இந்நாட்டு குடிமகன் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாமாம்





ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் சீமான்? உங்களால் என்ன செய்துவிட முடியும்?

சயனைடு கடிக்கத்தான் முடியும்.. அதனை முன்னமே செய்வது நல்லது.



 

நயன் தாரா புகழ்பாடவே அவதரித்த இருவரில் ஒருவரான பாபுராவ் இன்று பிறந்த நாள்.

images-1.jpg

நயன் தாரா புகழ்பாடவே அவதரித்த இருவரில் ஒருவரான Babu Raoக்கு இன்று பிறந்த நாள்.

மிக சுவாரஸ்யமான நண்பர் அவர், நாட்டு பற்றும், சமுதாய நோக்கும் கொண்ட நண்பர்களில் அவரும் ஒருவர்


அங்கிள் சைமனை அவர் கலாய்த்த அளவு இன்னொருவர் கலாய்த்திருக்க முடியாது, சொல்லும் கருத்துக்களை மிக தைரியமாக சொல்லும் நண்பர் அவர்.




துபாய் பாலாவினையே அட்டகாசமாக சமாளித்தார் என்றால் அவரின் திறமையினை பாராட்டத்தான் வேண்டும்


நயனுக்கு இப்படி ஒரு ரசிகர் தனக்கிருப்பது தெரியாது, நயனை அவரின் பெற்றோர்கள் உலகிற்கு கொடுத்திருக்கலாம், ஆனால் அனுதினமும் அவரை ஆராதிக்கும் பொறுப்பு உலகில் Babu Rao விடம் மட்டுமே இருக்கின்றது, என்பது நண்பரின் அசைக்க முடியாத நம்பிக்கை


மிக நல்ல நண்பர்களில் அவரும் ஒருவர், நட்பு வட்டத்தில் நெருக்கமான இடம் அவருக்குண்டு


நாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிகொண்டிருக்கின்றோம், அவரோ ஆலயத்தில் நயனுக்காக அங்க பிரதட்சணம், அலகு குத்துதல், தீ மிதித்தல் என இறங்கியிருப்பார்


அவர் நயனுக்காக வேண்டிகொள்ளட்டும், நாம் நம் நண்பர் Babu Rao க்காக வேண்டிகொள்வோம்.



நண்பர் நெல்லைக்காரர் .....

பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneri அவர்களுக்கு இன்று பிறந்தநாள்


முகநூலில் எமக்கு நண்பர்கள் பல உண்டு எனினும், நம் மீது தனி நட்பு கொண்டவர் இந்த பெரியவர்.


எம் பதிவுகளை நான் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வது கிடையாது, மனதில் தோன்றுவதை எழுதி வைத்துவிட்டால் மறுபடி வாசிப்பது கூட இல்லை




நேரமின்மை, அவசரமாக பதிவிட்டுவிட்டு வேறுவேலைகளுக்கு செல்லுதல், இதனை பாதுகாத்து என்ன ஆக போகின்றது எனும் அலட்சியம் என பல காரணங்களால் அவற்றை புரட்டி பார்ப்பதில்ல்லை


ஆனால் நம் பதிவுகளையும் எடுத்து பாதுகாத்தவர், பாதுகாத்து கொண்டிருப்பவர் அவர். சில நேரங்களில் என் பெயரில் இருக்கும் அந்த பிளாக்கிற்கு சென்றால், சில பழைய பதிவுகளை கண்டால், நாமா இப்படியெல்லாம் எழுதினோம் என நமக்கே ஆச்சரியமாக இருக்கின்றது.


நண்பர் நெல்லைக்காரர் ஆனால் பெரும் பணியாற்றி ஐதரபாத்தில் வசிப்பவர்


அவரை பார்த்தது இல்லை, அவரின் குரல் கூட எனக்கு தெரியாது,


ஆனால் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போல பார்க்காமலே அது வளர்ந்துவிட்டது.


முகநூலில் எனக்கு கிடைத்த மிக நல்ல நட்புகளில், இன்னும் தொடர்ந்துவரும் நட்புகளில் அவர் முதன்மையானவர்


என் மீது நல்ல அபிமானம் கொண்ட , புரிந்துகொண்ட மிக மிக அரிதானவர்களில் அவரும் ஒருவர்


இறைவன் அவருக்கு எல்லா நலமும், ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் அருளட்டும்


குவிந்த கரங்களுடன் , நன்றி நிறைந்த மனதுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....



ஒவ்வொரு சிக்கலிலும் கலைஞரை தமிழகம் நினைவு கூர்ந்தே தீரும்...

மிசா காலங்களை பற்றி எல்லோரும் எழுதிகொண்டிருக்கின்றார்கள்


இந்திய ஜனநாயகத்து கருப்பு நாட்கள் அவை, சஞ்சய் மீதான சர்ச்சை, தன் மீதான தீர்ப்பு இவைகளை திசை திருப்ப இந்திரா அதனை செய்தார் என்பதில் மாற்றுகருத்து இல்லை


இந்திய நாட்டிற்கு ஆபத்து வந்ததாகவும், அதனால் மிசா அறிவிக்க பட்டதாகவும் சொன்னார் இந்திரா


முதல் எதிர்ப்பு கலைஞரிடமிருந்துதான் வந்தது, "ஆபத்து வந்தது நாட்டிற்கா? இந்திரா காந்தி வீட்டிற்கா?" என கேட்டது அவர்தான், அது இந்தியா முழுக்க எதிரொலித்தது


காமராஜரை கலைஞர் அப்படி எதிர்த்தார், இப்படி எதிர்த்தார், வசைபாடினார் என்றெல்லாம் சொல்பவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்


காமராஜரை அரசியல் ரீதியாக கலைஞர் எதிர்த்தாரே அன்றி, அவர் மீது மரியாதை இருந்தது. ஆனால் நேருவின் மகளாக இந்திரா இருந்து ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து காந்தியவாதிகளை எல்லாம் கைது செய்யும் பொழுது, காமராஜரை மட்டும் கொஞ்சநாளைக்கு விட்டு வைத்தபொழுது மனம் நொந்தார் காமராஜர்.


எதிர்ப்பு அதிகமானால் காமராஜரை கைது செய்யும் திட்டமும் இந்திராவிடம் இருந்தது, ஆனால் கலைஞர் காமராஜரை காக்க துணிந்து நின்றார்


"அய்யா ஆட்சியினை விட்டு உங்கள் பின்னால் வர நாங்கள் தயார், ஜனநாயகத்தை காப்போம் வாருங்கள்" என காமராஜரை கலைஞர் அழைத்தபொழுது, காமராஜரே ஆடிப்போனார்


தான் வளர்த்த இந்திரா தன்னை கைது செய்ய துடிப்பதையும், தன்னை எதிர்த்த கலைஞர் தனக்கு காவலாய் இருப்பதையும் எண்ணி எண்ணி மனம் பாதிக்கபட்டார் காமராஜர்


அது 3 மாதத்தில் அவரை கொன்றது, காமராஜரின் சாவுக்கு இந்த மிசாவே, காங்கிரசின் மிசாவே பெரும் காரணம், காந்தியாதியான காமராஜர் மிக சரியாக காந்தி பிறந்தநாளில் செத்தது இப்படித்தான்


கடைசி காலங்களில் அவர் கலைஞரை புரிந்துகொண்டார், எள்முனையும் அவருக்கு கலைஞர் மேல் வருத்தமில்லை


சோ ராமசாமியும், கலைஞரும் மிக துணிவாய் மிசாவினை எதிர்த்து நின்றார்கள், பத்திரிகை தணிக்கை இருந்தபொழுதும் அஞ்சலி கூட்டம், திருமண வீடு என அரசியல் கூட்டம் நடத்தி அசத்தினார் கலைஞர்


தேசிய கீதம் பாடவாவது தடை நீக்கம் உண்டா என நக்கலாக சீண்டினார் சோ.


மிசாவினை கலைஞர் எதிர்த்த அளவு ராஜதந்திரத்தோடு எதிர்த்த தலைவன் எவனுமில்லை


அதன் பின் என்ன ஆனது, மிசாவினால் வலுவடைந்த ஜனதா பல மாநிலங்களில் வளர்ந்து ஆட்சிக்கு வந்தது, தமிழகத்தில் அப்படி ஒரு கட்சி வளராமல் கலைஞர் பார்த்தும் கொண்டார்


இந்திராவினை எதிர்த்து கொண்டே தமிழகத்தில் ஜனதா வளராமல் பார்த்துகொள்வது பெரும் சிரமம், கலைஞர் அந்த நெருப்பாற்றை கடந்தார்


இப்படி கம்யூனிஸ்டுகள், சோ, கலைஞர் எல்லாம் மிக சிரமபட்டு, சில நேரங்களில் தலைமறைவாகி கூட பெரும் போராட்டம் செய்து ஜனநாயகத்திற்காக போராடிய காலங்களில் அந்த ராமசந்திரன் என்ன செய்தார்?


ஒன்றும் செய்யவில்லை, மீணவ நன்பன் போன்ற தன் கடைசிகால இம்சை படங்களில் கேமரா முன்னால் ஆடிகொண்டிருந்தார்


ஆனால் அவர்தான் அடுத்த இரு ஆண்டுகளில் தமிழக முதல்வராக ஜனநாயகம் காக்க கிளம்பினார்


தமிழக தலைவிதி அப்படி இருந்திருக்கின்றது, ராமசந்திரனாவது கட்சி வைத்திருந்தார், முணகிகொண்டிருந்தார்


இந்த புர்ச்சி தலைவி என்ன செய்துகொண்டிருந்தார், எப்படி ஜனநாயகம் காத்தார் என்பதற்கு ஐதராபாத் திராட்சை தோட்டம் தான் சாட்சி


ஆனால் அவர்தான் ராமசந்திரனுக்கு பின் தமிழக ஜனநாயாகம் காக்க வந்தவர்.


தமிழக ஜனநாயகம் எங்கு காணாமல் போனது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை


மிசா காலம் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம், கலைஞரும் அவரின் அட்டகாசமான வழிகாட்டலும், மொத்த இந்தியாவும் அவரை மகா ஆச்சரியமாக பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வரும்.


இனி ஒரு மிசா வந்தால் தமிழகத்தில் எதிர்க்க அப்படி தலைவன் உண்டு என நினைக்கின்றீர்கள்? இல்லை


அவர் இல்லாத காலம் இப்பொழுதுதான் ஆரம்பம் , இனி ஒவ்வொரு சிக்கலிலும் அவரை தமிழகம் நினைவு கூர்ந்தே தீரும், அம்மனிதனின் ஆற்றல் அப்படி

இஸ்லாம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் : மோடி

பல இனம் வாழும் பன்முக தன்மையே இந்தியாவின் சிறப்பு, இஸ்லாம் மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் : மோடி


இந்தியா பல இனம் வாழும் நாடு என்ற மிக பெரும் உண்மையினை சொல்லி, அதனை ஒப்புகொண்ட மோடிக்கு மனமார வாழ்த்துக்கள்.


நமது பிரதமர் இப்படி எல்லாம் பேச வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆவல், மிக சரியான வார்த்தைகளை சொல்லி ரமலான் வாழ்த்துக்களை மோடி தெரிவித்திருக்கின்றார்




வாழ்த்துக்கள் மிஸ்டர் மோடி, இப்படிபட்ட மோடியாக நீங்கள் இருந்தால் எங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? அதற்கு வார்த்தைகளே இல்லை



மோடி எனது உண்மையான நண்பன் : டிரம்ப்





மோடி எனது உண்மையான நண்பன் : டிரம்ப்


நல்ல உலக தலைவர்கள் யாரும் டிரம்பினை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை, ஐரோப்பா அவரை ஒதுக்கியே வைத்திருக்கின்றது, உலகில் பெரும் அதிருப்தியினை சம்பாதித்திருப்பவர் டிரம்ப்.


ஐரோப்பா என்ன? உலகின் பெரும் தலைவர்கள் யாரும் அவரை சந்திப்பதை கூட தவிர்த்தே வருகின்றார்கள், டிரம்பின் இமேஜ் அப்படி





அவர் மோடியினை உண்மையான நண்பன் என சொல்வது ஒரு வகையில் மோடிக்க்கு நெருடல்தான், பெருமை அல்ல‌

உலகமே டிரம்பினை ஒரு மாதிரி பார்க்கும் நிலையில் அவர் மோடியினை உண்மையான நண்பன் என்பது எப்படி இருக்கின்றது?

வின்னர் படத்தில் சிங்கமுத்து வடிவேலுவினை அழைப்பார் அல்லவா?

"வாங்க அண்ணே வாங்க, இவனுக இப்படித்தான் அடிச்சிட்டே இருப்பானுக இவனுகளுக்கு பயந்தா தொழில் செய்ய முடியுமா?

எனக்கு தொழில் சொல்லிகொடுத்த குருவே இவருதாங்க..."




 

 



 

Sunday, June 25, 2017

ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்...











Image may contain: 1 person, smiling, text









ரமலான் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும், "தமிழகத்தின் தங்க மங்கை" குஷ்பூவின் ரசிகர்களான "தங்கத்தின் தங்கங்கள்" சார்பாக‌ மனமார்ந்த வாழ்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.


அன்பும், அமைதியும் எல்லோருக்கும் உரித்தாகட்டும். சாந்தியும் சமாதானமும் உலகெல்லாம் நிலவட்டும்


ஆசீர்வாதமான, மகிழ்வான ரமலான் வாழ்த்துக்கள்...





(ஓய்வு நேரமும், விடுமுறைகளும் குஷ்பூ படங்களின்றி அமையகூடாது என்பது வாழ்வின் விதி..

இந்த விடுமுறையில் குறைந்தது 25 குஷ்பூ படங்களை பார்த்துவிடுவது என முடிவு செய்திருக்கின்றேன், சீரியல்களும், அரசியல் பேட்டிகளும் தனி கணக்கு)













 


 

கலைஞர் மேல் இவர்களுக்கு என்ன கோபம்?

ஒரு சில அறிவு ஜீவிகள் அலைகின்றன, எங்காவது மோடி அரசு மத நல்லிணக்கத்திற்கு எதிராக சில காரியங்களை செய்கின்றது என்றால்,

ஏய்... கலைஞர் என்ன விநாயர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்தாரா? கார்த்திகை தீபம் அன்று சொக்கபனை கொளுத்தினாரா? தீபாவளிக்கு அச்சுமுறுக்கு சுட்டாரா? ஓலைபட்டாசு கொளுத்தினாரா? என பதிலுக்கு கேட்கின்றார்கள்

கலைஞர் என்பவர் இந்நாட்டு பிரதமராகவா இருந்தார்? ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர். சில மூட பழக்கங்களில் அதாவது தீ மிதித்தல், மண்சோறு உண்ணுதல் , தீண்டாமை இவற்றை எதிர்த்தாரே அன்றி அவரால் என்ன மதகலவரம் வந்தது?


கோயில்களை எல்லாம் இடித்தாரா? ஆறுகால பூஜையினை தடுத்தாரா?

சிறுவயதில் இருந்தே சாதிகொடுமையினை உணர்ந்து வளர்ந்ததால் அவருக்கு ஆலய‌ நம்பிக்கை இல்லை, கரப்பானும், பூரானும் போகும் கருவறைக்குள் தாழ்த்தபட்ட மனிதன் செல்ல கூடாது என்பதில் அவருக்கு ஒப்புதல் இல்லை

ஆனால் அந்த நம்பிக்கையினை தன்னோடு வைத்துகொண்டார். மக்களின் அல்லது தொண்டர்களின் மத நம்பிக்கைக்கு என்றாவது அவர் இடைஞ்சல் செய்தாரா?

கட்டாய மதமாற்ற சட்டம், ஆலயங்களில் ஆடு கோழி வெட்ட கூடாது இன்னபிற சர்ச்சை சட்டங்களை எல்லாம் அவரா கொண்டுவந்தார்?

மதத்தின் பெயரால் தமிழகத்தில் ஒரு சிறு கலவரம் அவரால் ஏற்பட்டிருக்கும்? ஏதும் ஆலயம், மசூதி, தேவாலயம் உடைக்கபட்டிருக்கும்?

ஏதும் மத போதகர்கள் அவரால் கொழுத்தபட்டிருப்பார்கள்?

எத்தனையோ ஆலய தேர்கள் அவராட்சியில் புதுப்பிக்கபட்டன, எத்தனையோ ஆலய கும்பாபிஷேகம் அவர் ஆட்சியில் நடந்தது

மகாமகம் போன்ற குளங்களில் குளிக்க சென்று 50 பேரை கொல்லாவிட்டால் அவர் இந்துக்களுக்கு எதிரானவரா?

நமது கொள்கை என்பது வேறு, ஆட்சி என்பது வேறு. து, ஆட்சி என்பது மக்களுக்கானது அதில் நம் கொள்கை திணிக்கபட கூடாது என்பதில் மிக கருத்தாக இருந்தவர் அண்ணா

கலைஞரும் அதில் மிக கருத்தாக இருந்தார், மூட நம்பிக்கைகளை சாடினாரே அன்றி மக்களின் அடிப்படை நம்பிக்கையினை அல்ல‌

இந்தியாவின் ஒரு மாநில முதல்வரை , பாரத பிரதமர் எனும் பெரும் பொறுப்பான பதவியில் இருக்கும் மோடி செய்யும் அழிச்சாட்டியங்களுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்?

கலைஞர் என்ன பாரத பிரதமராகவா இருந்தார்?

பின்னும் ஏன் கலைஞரை திட்டுகின்றார்கள்?

அவர்கள் அப்படித்தான், 1991ல் ராஜிவ் கொல்லபட்டவுடன் கொன்றது யாரென்றே தெரியாத மே 21 நள்ளிரவில் கலைஞர்தான் காரணம், அவர் வளர்த்த புலிகள்தான் காரணம் என சொல்லி பெரும் கலவரத்தை வளர்த்தவர்கள் அல்லவா?

விசாரணை நடந்து 1 மாதம் கழித்து புலிகள்தான் கொலைகாரர்கள் என சொல்லுமுன், கொலை நடந்த 10 நிமிடத்திலே கலைஞர் மீது பழிபோட்ட கும்பல் அது

இப்படி ஏராள சம்பவங்களை சொல்லலாம்

கலைஞர் மேல் இவர்களுக்கு என்ன கோபம்?

கலைஞர் பிரதமர் பதவியில் இருந்திருந்தால் எப்படி எல்லாம் நல்லிணக்க கட்டுரை எழுதியிருப்பார் , எத்தனை அர்த்தமுள்ள விஷயங்களை மிக உருக்கமாக சொல்லியிருப்பார்.

அந்த வித்தை மோடிக்கு வராது, சுட்டுபோட்டாலும் வராது அந்த கோபம் தான் அவர்களுக்கு..

"இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல..." : ரிசர்வ் வங்கி




No automatic alt text available."இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல, இன்று பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்போம், நாளை மக்களின் டெப்பாசிட் பணத்திற்கே பொறுப்பில்லை என்போம் அதனால் மக்கள் வெளிநாட்டு வங்கிகளை நாடலாம்" என சொல்லாமல் சொல்கின்றது ரிசர்வ் வங்கி.


மொத்த இந்திய மக்களையும் வெளிநாட்டு வங்கிகள் பக்கமும் தனியார் செக்கியூரிட்டிகள் பக்கமும் திருப்பும் காரியம் இது.


ஆக இந்திய மக்களின் பொருட்களுக்கு இந்திய வங்கியிலே பாதுகாப்பு இல்லையாம், இந்த கொடுமையினை எங்கு போய் சொல்வது?





விரைவில் சுவிஸ் வங்கி இந்தியாவில் கிளை திறந்து, நாங்கள் உங்களுக்கும் உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பானவர்கள் என சொல்லும் நிலை நிச்சயம் வரும்.

சுவிட்சர்லாந்து சென்று வங்கிகணக்கில் டெப்பாசிட் செய்வதை விட, சுவிஸ் வங்கியினையே இங்கு வரவழைத்தால் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு எளிது?

அதன் முதல்படிதான் இப்பொழுது நடக்கின்றது

 













 


ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் ......





ரஜினி பாஜகவிற்கு வராத கோபம் அக்கட்சியினரிடையே நன்றாக தெரிகின்றது, உச்சமாக சு.சாமி ரஜினிக்கு படிப்பறிவில்லை என கொந்தளித்திருக்கின்றார்


மிஸ்டர் சு.சாமி மோடி என்ன அமெரிக்க பல்கலைகழகத்தில் கோல்டு மெடல் வாங்கியவரா?


மோடியினை விடுங்கள், தமிழக முன்னாள் முதலமைச்சர்களில் பலர் பள்ளியினையே தாண்டாதவர்கள்





கலைஞர், எம்ஜிஆர், ஜெயா, பன்னீர் எல்லோரும் பள்ளியினை தாண்டி கல்லூரியில் கால் வைக்காதவர்கள்

படிப்பு என்று தமிழக அரசியலுக்கு தகுதியாயிருந்தது?

விரைவில் வெறுப்பில், ரஜினி கருப்பாக இருக்கின்றார் அதனால் அரசியலுக்கு தகுதி இல்லை, ரஜினி தாடி சரியில்லை என்றேல்லாம் சொல்வார்கள்..









 பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்

இவர்களுக்கு மட்டும் சிக்கலாகியிருக்கும் அதிமுகவினை விட்டால் தமிழகத்தில் என்ன வழி இருக்கின்றது?

உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை, என்னை விட்டால் எனக்கு யாருமில்லை என்ற நிலையில், பொன்னார் வீரவசனம் பேசிகொண்டிருக்கின்றார்.





ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலைப் பிரகடனத்தை மறக்க முடியாது: வானொலி உரையில் பிரதமர் மோடி






அந்த‌ ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் பாபர் மசூதி இடிப்பும் அதனால் ஏற்பட்ட கலவரங்களையும், அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் ஓடிய ரத்த ஆறினையும் மறக்கவே முடியாது மிஸ்டர் மோடி




 

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி

இந்துமக்களுக்கான புனித யாத்திரைக்கான அனுமதியினை சீனா ரத்து : செய்தி


அதாவது கைலாச மலை உடபட இன்னும் பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உண்டு, சீனா திபெத்தினை விழுங்கிய பின் அந்த இடங்களுக்கு இந்தியர்கள் விசா பெற்றுதான் செல்ல வேண்டும்


சீனா இனி இந்துக்கள் வர கூடாது என சொல்கின்றது, இதற்கு மேலும் கேட்டால் எங்கள் பூமியான அருணாசல் பிரதேசத்தில் இந்தியர்கள் வசிக்க விசாவா கொடுத்தோம்? அவ்வ்வளவில் நாங்கள் நல்லவர்கள் என்பார்கள்




எவ்வளவு பெரும் கொடுமை இது?


இந்துக்களின் புனித ஸ்தலத்தை சீனா அவமதிக்கின்றது, வழிபட விடவுமில்லை


ஆனால் இந்த சங் பரிவார், பாஜக, ஆர்.எஸ்.எஸ் எல்லாம் இதில் ஏதாவது பேசுமா? என்றால் பேசாது


சிவன் வாழும் கைலாய மலைக்கு எங்களை தடுப்பது யார் என கிளம்புவார்களா என்றால் ம்ஹூம்


மாறாக இங்கே மசூதி இடித்தல், தேவாலயங்களை எரித்தல் என செய்து தங்கள் மதத்தை புனித இடத்தை காப்பாற்றுவதாக சொல்லிகொள்வார்கள்


கிறிஸ்துவ ஆலயமோ, மசூதியோ இருந்தால் எங்கள் இடம் என சொல்லி அடம்பிடிப்பார்கள், அதனை மீட்டுவிட்டதாக வேறு மார்தட்டுவார்கள்


இதுதான் எங்கள் கடவுள் மனிதனாக பிறந்த இடம் என சொல்லி மசூதியினை எல்லாம் இடிப்பார்கள், ஆனால் சிவன் வாழும் மலையினை மறந்தே விடுவார்கள்


மற்றபடி கைலாசமலை எல்லாம் மீட்பு எல்லாம் பற்றி பேச்சே இல்லை, அட மீட்க கூட வேண்டாம், விசா தாருங்கள் என்று கேட்க கூடவா ஆளில்லை?


எல்லா வீரமும் இங்கிருக்கும் அப்பாவி மாற்றுமதத்தினர் மீதெல்லாம், இதுதான் இந்திய அரசியல்.,


வாக்கிற்காக மதத்தை வைத்து செய்யும் அயோக்கிய அரசியல்



மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக சென்றார் மோடி

[caption id="" align="alignnone" width="728"] அமெரிக்காவில் மோடியை வரவேற்கும்  அங்கு வாழும்  இந்தியர்கள்[/caption]

மூன்றுநாடுகளுக்கு சுற்றுபயணமாக புறப்பட்டு சென்றார் மோடி : செய்தி


மிக சரியாக இஸ்லாமியரின் விழாகாலங்களில் மட்டும் டெல்லியில் இருக்காமல் இவர் ஓடிவிடும் மர்மம் என்ன?


அவருக்கு இஸ்லாமியர் மீது அபிமானம் இல்லாமல் இருக்கலாம், தனிபட்ட முறையிலும் கட்சி நிலையிலும் இஸ்லாமியர்களை அவர் தவிர்க்கலாம்




ஆனால் பொறுப்பான பிரதமர் என்ற நிலையில், இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உச்சமான தலைவர் எனும் நிலையில் மோடி இப்படி செய்வது சரியே அல்ல, இது பொறுப்பற்ற தனம்


அவர் இந்துக்களின் பிரதமர் அல்ல, இந்தியாவின் பிரதமர் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்


இந்நாட்டு இஸ்லாமியர் இந்நாட்டு குடிமக்கள், அந்த வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பு


தன்னாட்டு குறிப்பிட்ட‌ குடிகளின் மீது வெறுப்பு காட்டும் எந்த நாடும் உறுப்படாது, இலங்கை பர்மா என எல்லா நாடுகளும் அப்படி நாசமாயின‌


இப்படி அம்மக்களை பிரதமர் ஒரு மாதிரி நடத்துவாரானால் இந்நாட்டில் எப்படி அமைதி திரும்பும்? எப்படி இந்நாடு செழிக்கும்? அவர்கள் எப்படி இந்தியராக உணர்வார்கள்?


இங்கு அம்மக்களை ஒதுக்கிவிட்டு இவர் உலகின் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு எப்படி செல்லமுடியும்? இஸ்லாமிய நாடுகள் எப்படி இங்கு முதலீடு செய்யும்?


இந்நாட்டினை உலகிலிருந்து துண்டித்து நாசமாக்கும் செயலில் மோடி இறங்கியிருக்கின்றார்.


மகாத்மா ஒரு இந்து, இந்துவாக வாழ்ந்தவர் ஆனால் மற்ற எல்லா மதத்து மனிதர்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதித்து நடந்தார், அப்படிபட்ட தலைவனே இந்நாட்டிற்கு தேவை.


அரசியலில் ஒன்று நேரு போல நாத்திகனாகவோ அல்லது மன்மோகன் சிங் போல எல்லா இந்திய மதங்களுக்கும் பொதுவான மனிதராக ஒரு பிரதமர் இருக்க வேண்டும்


பல இனங்களும், மொழிகளும், மதங்களும் வாழும் நாட்டில் அப்படி எல்லோரையும் அணைத்து செல்லும் பிரதமரே வேண்டும்


அன்று காந்திதலமையில் வெள்ளையனே வெளியேறு, இந்தியா இந்தியருக்கே என சொன்னதன் பெயர் நாட்டுபற்று


இன்று இந்தியா இந்துக்களுக்கே , மற்றவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என சொல்வதன் பெயர் நாட்டுபற்று


ஏதும் சொன்னால் நம்மை தேசதுரோகி என்பார்கள்.


உண்மையில் மோடி செய்வதுதான் இந்த பல்லின மக்கள் கலந்து வாழும் இந்திய திருநாட்டிற்கு செய்யும் பெரும் துரோகம்...


ரம்ஜானுக்கு அமெரிக்கா ஓடிவிட்டார் மோடி, அடுத்து பக்ரீத்திற்கு சீனாவோ ரஷ்யாவோ இப்பொழுதே முன்பதிவு செய்து வைத்திருப்பார்...



அ. அ. அ பெட்டிக்குள் முடங்கிவிட்டது




Image may contain: 1 person, close-upசிம்புவின் "அன்பானவன், அடங்காதவன், அசராதவன்" என வந்த படம் இனி "இவன் திருந்தாதவன்" என சொல்லி பெட்டிக்குள் முடங்கிவிட்டது.







Image may contain: 3 people, people smiling






தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பெரும் நஷ்டம் இருக்கலாம் என்கின்றது செய்திகள்.


சிம்பு வாழ்க, ஆதிக் ரவிசந்திரன் வாழ்க என துள்ளி சொல்லும் ஒரே நபர் விஜயகாந்த்தாக இருக்க முடியும்.





நீண்ட நாளைக்கு பின்னார் விஜயகாந்த் வாய்விட்டு சிரிக்கலாம், அவர் மனதிற்கு இது பெரும் ஆறுதலாக அமையலாம்.

"கடவுள் இருக்கான் புள்ள" என கண்ணீரை அவர் துடைத்துகொள்ளலாம்.

மைக்கேல் ராயப்பனுக்கும், விஜயகாந்திற்கும் என்ன தொடர்பு என யோசிப்பீர்களானால் நீங்கள் நமது பதிவுகளை படிப்பவராக இருக்க முடியாது

இனி நயந்தாராவும் மைக்கேல் ராயப்பனும் விழாக்களில் சந்தித்துகொண்டால் இருவருமே அர்த்தத்தோடு சிரிக்கலாம்..





 


 
















சிம்புவின் படம் இணையத்தில் வந்துவிட்டது, இணையத்தில் விட்டது விநியோகிஸ்தர்கள் தரப்பாக கூட இருக்கலாம், தியேட்டருக்குத்தான் வரமாட்டார்கள், அப்படி வராத மக்களை இணையத்தில் போட்டு தண்டிப்போம் என இறங்கியிருக்கலாம்


கொஞ்ச நேரம் படம் பார்ப்பதற்குள்ளே முடியவில்லை, அப்படி ஒரு இம்சை


ஐ.எஸ், அல்கய்தா, லஷ்கர் போன்ற‌ கொடூர தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதை விட இந்த படத்தை 10 முறை பார்க்க வைக்கலாம், அது மரண தண்டனையினை விட கொடுர தண்டனை.




பெங்களூர் சிறை சின்னம்மாயினை இரு முறை பார்க்க வைத்து தண்டித்தால் போதும், அவர் அரசியலை விட்டே ஓடிவிடுவார்.