Wednesday, June 21, 2017

இன்று சர்வதேச யோகா தினம் !




Image may contain: one or more peopleஇன்று சர்வதேச யோகா தினம் , லக்னோவில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கெடுக்கின்றார் மோடி


யோகாவினை பிரபலபடுத்திய பிரதமர் மோடி அதில் பங்கெடுக்கின்றார், நல்லது.


மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக‌ டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார்.





ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை

ஒருவேளை விரைவில பரதநாட்டியத்தை இத்தேசம் பிரபலபடுத்தி, பாபா ராம்தேவ் போல இன்னொருவர் பரத குரு என வந்து, பரதநாட்டியம் , குச்சுபிடி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை பிரபலபடுவது நடக்கலாம்

Image may contain: 1 person, standing and outdoorஇது இந்திய பாரம்பரியம் என சொல்லி அவர் மோடியினை அழைத்து விட்டால், மோடியும் மிக சந்தோஷமாகிவிட்டால் என்ன ஆகும்??

ஆர்வமாக யோகாவில் பங்கேற்கும் மோடி, பரதநாட்டியம் என்றால் மட்டும் சலங்கை கட்டி போகமாட்டாரா?

அப்படி சென்றுவிட்டால் ஐஸ்வர்யா தனுஷுக்கும், பவர் ஸ்டாருக்கும் ஒரு போட்டியாளர் உருவாகிவிடும் ஆபத்து உண்டு














 


 

No comments:

Post a Comment