Wednesday, June 14, 2017

குமுதம் ரிப்போர்ட்டர் : விஷம் கக்கும் பத்திரிகை



Image may contain: 2 people, textஅது அடிக்கடி விஷம் கக்கும் பத்திரிகைதான், குஷ்பூவினை சீண்டியபொழுதே மொத்த தமிழகமும் ஓங்கி அடித்திருந்தால் அது மீண்டும் இப்படி தீபாவினை கொச்சைபடுத்த துணியாது


தீபா யாராகவும் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு பெண். எப்படியோ அரசியலுக்கு வந்திருக்கும் பெண்


பெண் என்ற ஒரே காரணத்தால் இப்படி எல்லாம் கொச்சைபடுத்துவது ஏற்றுகொள்ள முடியாது, இது சமூக சீர்கேடு, பத்திரிகை அதர்மம்


இன்று தீபாவினை சீண்டும் அந்த பத்திரிகை அவ்வளவு தைரியமானது என்றால் தீபாவின் அத்தையினை எப்படி எல்லாம் சீண்டியிருக்கலாம்


கதைகளுக்கும், சில உண்மை சம்பங்களுக்கும் அவர் வாழ்விலா குறைவு?


தனிபட்ட வாழ்வு வேண்டாம் என்றாலும், கொடநாட்டு மாளிகை எந்த வசந்தனுக்காக கட்டபட்டது, சிறுதாவூர் பங்களா எனும் சின்னவீடு எதற்காக என எழுதியதா? இல்லை.


எதனை எழுத வேண்டுமோ அதனை விட்டுவிட்டு, ஒரு பெண்ணை கொச்சைபடுத்துவது எப்படி பத்திரிகை தர்மமாகும் இது அதர்மம்.


குமுதம் தன் பத்திரிகை செய்தியினை பிரபலபடுத்தவேண்டுமென்றால் அதிமுக அரசின் ஊழலை எழுதலாம், நாடெல்லாம் இருக்கும் பிரச்சினைகளை எழுதலாம்


சிரியா, வடகொரியா என ஊடுருவி சென்று சாவுக்கு அஞ்சாமல் உண்மை செய்தியினை அல் ஜசீரா போல வெளியிடலாம், உலகில் செய்திக்கா பஞ்சம்? எவ்வளவோ இருக்கின்றது


ஆனால் தமிழக பிரபல பெண்களின் கைபைக்குள் தலையினை நுழைத்துத்தான் செய்தி சேகரிப்பேன் என்பது பத்திர்கைதனம் அல்ல பொறுக்கிதனம்..


சிம்புவிற்கு கற்பு நெறி சொல்ல‌ கிளம்பிய மாதரசிகளை, இன்னும் பல இடங்களில் கலாச்சாரம் காக்க கிளம்பிய மணிமேகலைகளை, குஷ்பூவிடம் இருந்து தமிழக கலாச்சாரத்தை காப்போம் என கிளம்பிய கலாச்சார காவலர்களை இப்போது காணவில்லை, காணமுடியாது


ஒரு பெண் பிரபல பத்திரிகையால் கொச்சைபடுத்தபடுகின்றாள், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவள் படத்தை வைத்து அப்பத்திரிகை அவமானபடுத்துகின்றது, ஆனால் எங்கிருந்தும் ஒரு சத்தமில்லை


தீபாவினை கொச்சைபடுத்தியதை விட கண்டிக்க வேண்டிய விஷயம், இந்த சமூகத்தின் அமைதி, சமூக ஆர்வலர்களின் அமைதி


அதுதான் வன்மையாக கண்டிக்கதக்கது.


உண்மையில் இது பெரும் பிரச்சினை, குமுதம் எனும் பத்திரிகையின் உரிமத்தை முடக்கும் அளவு செல்லும் சீரியஸான பிரச்சினை


மதம் பிடித்த குமுதத்தை அடக்குவது யார்? இங்கு அரசு செத்துவிட்டது, தமிழகத்தில் கன்னட பெண்ணை அசிங்கபடுத்துகின்றார்கள் என கன்னட அரசு இனி தலையிட்டால்தான் உண்டு, அதுதான் வழி


அரசியலுக்கு வந்ததற்காக ஒரு பெண் பகிரங்கமாக மதம் பிடித்த பத்திரிகையின் செய்தி வெறிக்காக கொச்சைபடுத்தபடுகின்றாள், இச்சமூகம் அதனை வேடிக்கை பார்க்கின்றது


இதில் என்ன பெண்விடுதலை?, என்ன உரிமை? என்ன சமத்துவம்?, பத்திரிகைகள் எதுவும் எழுதலாம் என உரிமை கொடுத்தது யார்? நாளை குமுதம் பத்திரிகை குடும்ப பெண்கள் அரசியலுக்கு வந்தாலும் இப்படி எழுதலாமா?


எழுதினால் சும்மா விடுவார்களா?


குஷ்பூவினை அவர்கள் கொச்சைபடுத்திய விதம் 
அன்றே கடும் கண்டனத்திற்குரியது மட்டும் அல்ல மாறாக தண்டனைக்குரியது, மறுபடி மறுபடி அதே காரியத்தினை குமுதம் செய்கின்றது என்றால் அது ஒரு வகையான திமிரே அன்றி வேறல்ல‌


பத்திரிகை தர்மம், அதர்மமாகி, இப்பொழுது பத்திரிகை திமிராக திசைமாறி செல்கின்றது


இது தமிழக பெண்ணுரிமைக்கு சவால் விடுகின்றது, இது பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு சவால் விடுகின்றது, ஒரு பெண் தமிழகத்தில் மானமுடன் வாழ்வதற்கு சவால் விடுகின்றது


இதனை கண்டித்தல் தடுத்தல் வேண்டும், இதற்கான தண்டனைகளை குமுதம் பெற்றே தீரவேண்டும்


தீபா மீது யாருக்கும் பெரும் அபிமானம் இருக்க முடியாது, அபத்தத்தின் உச்சம் அந்த பெண்.


ஆயினும் தமிழகத்தில் இம்மாதிரி எப்பெண் அவமானபடுத்தபட்டாலும் வரும் நியாயமான கோபம், தீபா கொச்சைபடுத்த பட்டபோதும் வருகின்றது, தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்த எல்லோருக்கும் வரும் கோபம் அது.


ஒருவகை வெறி பிடித்த மதம் பிடித்த குமுதம் இப்பொழுது "சரோஜா தேவி" போன்ற மஞ்சள் புத்தகங்கள் அளவிற்கு சென்றுவிட்டது, அன்று லட்சுமி காந்தன் நடத்திய "இந்து நேசன்" அளவிற்கு சென்றுவிட்டது.


லட்சுமிகாந்தனின் வாரிசுகளாக இன்று குமுதத்தை நடத்துவோர் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிட்டால் நல்லது, இல்லையேல் பின்னொரு நாளில் பெரும் விளைவுகளை அது சந்திக்க நேரிடும்


பலமுறை நீதிதவறிய பாண்டிய மன்னனின் சாம்ராஜ்யத்தை, கண்ணகி கேள்வி கேட்டவுடன் மொத்த மதுரையும் சேர்ந்து அழித்தது என்பது வரலாறு


பெண்களின் சாபம் அவ்வளவு பொல்லாதது, பெரும் பலத்தோடு இருந்த ஈழபுலிகளிடம் பிள்ளைகளை இழந்த தாய்மாரின், சகோதரிகளின் சாபமே அவர்களை அழித்தது


குமுதமும் அப்படியாக பெண்களின் சாபங்களை வாங்கி குவிக்கின்றது, விரைவில் அந்த சாபம் ஒருநாள் மொத்தமாக பலிக்கும்.


அந்த பெண்ணிற்கு ஆறுதலை சொல்லும் அதே வேளையில், குமுதம் எனும் கள்ளிசெடிக்கு பெரும் கண்டனங்கள்..













 


 

No comments:

Post a Comment