Friday, June 23, 2017

குடியரசுத் தலைவர் தேர்தல் : மீரா குமார் நல்ல தேர்வு

ஒரு வழியாக மீரா குமாரை எதிர்வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன, முக ஸ்டாலினும் ஆதரிப்பதாக சொல்லியிருக்கின்றார்


குடியரசு தலைவர் தேர்தல் முறை கொஞ்சம் குழப்பமான விஷயம், பாஜக பக்கம் காற்று சுழன்றடிக்கின்றது ஆயினும் எதிர்கட்சிகளும் மல்லுகட்டுகின்றன‌


மீரா குமார் நல்ல தேர்வு, கலைஞருக்கு அவர் மீது நல்ல அபிமானம் இருந்ததும் நினைவுக்கு வருகின்றது.




குடியரசு தேர்தல் விவகாரம் அதிமுகவின் முகதிரையினை கிழித்திருப்பதுதான் காமெடி. மொத்தமாக எல்லா அணியும் பாஜக் காலில் விழுந்து கிடக்கின்றது, அடித்து கொண்டவர்கள் எல்லாம் ஒன்றாக ஆதரிக்கின்றார்கள்


பாஜகவால் உள்ளே வைக்கபட்ட சசிகலா தினகரன் கும்பலும் அவர்களையே ஆதரிப்பதுதான் பெரும் ஆச்சரியம். அந்த அளவிற்கு அச்சம் அல்லது ஆட்சி மீதான ஆசை இவர்களை ஆட்டி வைக்கின்றது


சசிகலா கும்பலின் குடுமி மோடி கையில் இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது


ஒரு பொறுப்பிலும் இல்லாத பன்னீர் டெல்லிக்கு செல்கின்றாராம்? எதற்கு என நாம் கேட்க கூடாது. விமான டிக்கெட் கிடைத்த்விட்டதால் கிளம்பினார் அவ்வளவுதான்


அவர்களுக்கென்ன இன்னும் 4 வருடம் எப்படியாவது எம்.எல்.ஏ பதவியில் இருக்க வேண்டும், அதற்கு ராம்நாத் கோவிந்த் என்ன?


முஷாரப், நவாஸ் ஷெரீப் , அட ராஜபக்சே என்றாலும் பாஜக கைகாட்டினால் இவர்கள் ஆதரிக்க தயார்..



No comments:

Post a Comment