Thursday, June 22, 2017

பார்த்தாலே நமக்கு "மெர்சலாகின்றது" ... இன்னும் பிற....



Image may contain: 1 person, smiling


இதனை பார்த்தாலே நமக்கு "மெர்சலாகின்றது"


முன்பு பைரவா எனும் இம்சையினை ஜல்லிகட்டு போராட்டம் வந்து காப்பாற்றியது, அந்த பெரும் ஆர்ப்பாட்டத்தில் பைரவா படத்தின் தோல்வி மறக்கபட்டது,


விஜயும் சத்தமில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர் நடுவில் அமர்ந்து ஜல்லிகட்டு வேண்டும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார், எல்லாம் சுபம்





இந்த மெர்சலுக்கும் ஒரு போராட்டம் வந்து மானம் காக்கமலா போய்விடும்?

ஏற்கனவே தமிழகம் ஒரு மாதிரி மெரசலில் தான் இருக்கின்றது, அதிமுக அதனை விட மெரசலில் இருக்கின்றது,

அரசியல் அழுத்தில் மெர்சல், சசிகலா தினகரனுக்கு மெர்சல், பழ்னிச்சாமிக்கு மெர்சல், திருமுருகனை தூக்கியதில் சீமானுக்கு மெர்சல், அடித்த அடியில் வைகோவிற்கு மெர்சல், கோலிக்கு மெர்சல்

இப்படி ஏகபட்ட மெர்சல்கள்...

இதில் இவரின் மெர்சல் வேறா?













பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தரமாட்டேன் : தமிம் அன்சாரி

இந்த நாமக‌ கார்த்திக், சமக சரத்குமார், லதிமுக டி.ஆர் போன்றவர்கள் கூட பாஜக வேட்பாளரை ஆதரிக்கவில்லை அதனால் என்ன நடந்துவிட போகின்றது??

அன்சாரிக்கு என்ன பிரச்சினை? தமிழக முதலமைச்சர் தேர்வுக்கு கிடைத்ததை, பாரத குடியரசு தலைவர் தேர்தலுக்கும் எதிர்பார்ப்பாரோ?




கர்நாடகா, பஞ்சாபில் விவசாய கடன் ரத்து

தமிழக அரசு ராமசந்திரனுக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடுவதிலும், ஜெயா சிலை அமைப்பிலும், இரட்டை இலை மீட்பிலும் பிசி

இந்த அரசு விவசாய கடனை ரத்து செய்யாது, அதனால் இந்த அரசை ரத்து செய்வது நலம்




நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி

தலைமறைவான நேரத்தில் வராத நெஞ்சுவலி இப்பொழுது வருகின்றதாம்

ஆக ஒரு நீதிபதி அரசியல்வாதியாகின்றார்.






Image may contain: 2 people, people sittingகன்னியாகுமரி தொகுதி மக்களின் தேவைகளுக்காக பொன்னார் போராடிய காட்சி


தமிழிசை எப்படி யோகா செய்தார் என்றபடத்தினை தமிழ்நாடு ஆவலாக எதிர்பார்க்கின்றது..


இந்த இம்சைகளுக்கு பதிலாக மக்களுக்கு கட்டாய ராணுவபயிற்சியாவது கொடுக்கலாம், ஆபத்து காலத்தில் நாட்டிற்கு கைகொடுக்கும்



















 







No comments:

Post a Comment