Wednesday, November 30, 2016

மருத்துவமனையில் பிரபலங்கள்...

முதல்வர் அப்பல்லோவிலும், அவரின் குருநாதர் சோ ராமசாமியும் அப்பல்லோவில் அனுமதிக்கபட்டுள்ளார்


சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


கலைஞர் கருணாநிதி நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌




நாட்டினை ஆட்டிவைக்க அவர்களுக்கொரு காலம் இருந்தது என்றாலும் மருத்துவர் கைகளில் விழவும் ஒரு காலம் இருக்கின்றது


மருத்துவமனையில் இருக்கும் இந்த பிரபலங்களின் மனநிலை எப்படி இருக்கும்?


ஆட்சியும் அதிகாரமும் திரும்ப வேண்டும், கண்டிப்பாய் வேண்டும் என்றா இருக்கும்? நலம் பெற்று திரும்பினால் போதும் என்றுதான் கெஞ்சிகொண்டிருக்கும்.


ஆண்ட காலமும், அவர்கள் கோலோச்சிய காலமும் கனவுபோல தெரியும்,


மருத்துவமனையின் இந்நொடியே உண்மை என தோன்றும், அந்த வலி மிக ரணமானது,


எத்தனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்?, எத்தனை தேசங்களை அடக்கி வைத்தோம், இன்று இந்த நோயினை வெல்ல முடியாத வாழ்வா இது? என்றெல்லாம் மனம் சில கணம் யோசிக்கலாம்


எல்லா மானிடரும் ஒரு எல்லைக்குட்பட்டவரே, அதிகாரம் முதல் வாழ்நாள் வரை எல்லாம் ஒரு வரையரைக்குள் மட்டுமே.


மகா கொடுமையானது காலம், யாரை உயர்த்தி வைக்கின்றதோ அவர்களை முடக்கியும் வைக்கின்றது, தூக்கியும் கடாசுகின்றது.


இரக்கமற்ற எந்திரம் போன்றது காலம், அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.






 ஒரு மனிதருக்கு அதுவும் முதியவருக்கு நோய் வருவது இயற்கையானது


ஆனால் அந்த நோயோ, தளர்ச்சியோ கட்சி சம்பந்தமான பதவி அறிவிப்புகள் வெளியிட்டபின் வருவதுதான் ஏன் என தெரியவில்லை.

ஸ்டாலின் என் அரசியல் வாரிசு என சொன்னவுடன் கடந்தமுறை சென்றார், இம்முறை நேற்று ஏதோ செயல்தலைவர் பதவி என ஒன்றை அறிவித்துவிட்டு இன்றும் சென்றிருக்கின்றார்.


விரைவில் நலம் பெற்று வரட்டும்

விரைவில் திரும்பும் தலைவர் ஏதும் கட்சி அறிவிப்பினை அறிவித்து அது சர்ச்சையானால் அடுத்து என்ன நடக்கும் என ஓரளவு யூகிக்கலாம்

சென்னையில் மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை.







முதல்வருக்கு நீர்சத்து குறைபாடு ஆஸ்பத்திரியில் அனுமதி
எதிர்கட்சி கலைஞருக்கு அதே நீர்சத்து குறைபாடு அவரும் அனுமதி

தமிழகம் முழுக்க குடிக்க‌ நீரில்லாமல் மக்கள் கடும் வேதனை, அவர்களுக்கும் நீர் குறைபாடு


என்ன தமிழகமோ, எங்கு எங்கு நோக்கினும் நீர்சத்து அல்லது நீர் குறைவு,

டாஸ்மாக் தவிர. அதற்கு ஒரு குறையுமில்லை










இன்று உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினமாம்



எல்லா போலி சாமியார்களும் அவர்களின் அடிப்பொடிகளும் கவனத்தில் கொள்ளவேண்டிய‌ நாள் இது.


 









சொன்னாரு டொனால்ட் ட்ரம்பு

இனி வர்த்தகத்தில் ஈடுபடமாட்டேன், அமெரிக்க அதிபராக நாட்டினை வழிநடத்துவேன் : டொனால்டு டிரம்ப்

இப்படியே தமிழக அரசியல்வாதிகளும் தங்கள் பழைய தொழிலான நடிப்பு, மேடை முழக்கம், வசனம் எழுதுதல் போன்றவற்றை தலைமுழுகிவிட்டு உண்மையான மக்கட் பணியாராக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?




 

காதலிக்காக தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன்




காதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன், திருபத்தூர் அருகே பரிதாப‌ சம்பவம்


இவனை எல்லாம் ஏன் குழந்தை திருடும் கும்பல் பிறந்த‌ அன்றே தூக்கவில்லை, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் ஏன் கடத்தவில்லை?


காதலிக்காக கொலை செய்திருக்கின்றார், அதுவும் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும்.





இனி என்னாகும்? கொஞ்சநாளில் அப்பெண் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார். இவரோ குடும்பத்தை அழித்துவிட்டு, தானும் அழிந்து ஜெயிலில் செட்டிலாகிவிட்டார்

தனக்குரிய அழிவினை தாங்களே பெற்று வளர்த்திருக்கின்றனர், அந்த பரிதாபத்திற்குரிய பெற்றோர்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்த கோயில் இல்லை , பெற்றோரை விட தெய்வம் இல்லை என்ற கலாச்சாரத்திலும், மதத்திலும் ஊறிய இந்நாட்டில் இப்படியும் சிலர்.

ஐரோப்பாவில் ஒரு இளம்பெண் பெற்றோரின் மருத்துவ செலவிற்காக செய்ய கூடாத அறிவிப்புகளை செய்திருக்கின்றார், பெற்றோர் மீது அவருக்கு இருக்கும் பாசம் அப்படி

ஐரோப்பா கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி, பாசம், குடும்ப உறவு என கிழ்க்கு பாணிக்கு திரும்புகின்றது

இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக சுயநலம்,பேராசை,பெற்றோரை மதிக்கா கொடுமை என திசைமாறுகின்றது.

நாடுகளின் கலாச்சாரம் மாறிகொண்டிருக்கின்றது.







மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம்...

"ஒரு நாடு சரியாக வளராமல் அதன் நிர்வாகத்தில் மாற்றம் செய்தால் சோவியத் போல சிதறும், அதன் அடிப்படைகளை மிக வலுவானதாக செய்துவிட்டே மாற்றங்களை செய்யவேண்டும், அல்லாவிட்டால் குழப்பங்களும் மக்களிடம் வெறுப்புமே மிஞ்சும்" : முன்னாள் சீன அதிபர் டெங் சியோ பிங்


அதாவது வளர்ச்சி அடைந்த நாடுகளின் செயல்பாட்டினை வசதிகுறைந்த நாடுகள் முயற்சிக்க கூடாது, எல்லா வசதியும் பெற்றபின்பே சிக்கலான பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும்


மோடி அரசு இதனைத்தான் செய்ய தவறியது


கையிலும், பர்சிலும், சுருக்கு பையிலும், மடியிலும் கட்டாக பணம் கொண்டு செல்லும் கலாச்சாரம் இந்தியருடையது, மாற இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம்


எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைத்துவிடவில்லை


இதில் போன் மூலம் பணபரிவர்த்தனை, எல்லாமும் வங்கிகணக்கு என நிர்பந்திப்பது யானையினை குதிரை வேகத்தில் ஓட சொல்வது போன்றது


மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம், அவர்களுக்கென்ன? நிச்ச்யம் அடுத்தமுறை வரப்போவதில்லை அதனால் எல்லா ஆட்டமும் ஆடிவிட்டுத்தான் போவார்கள்.


அடுத்த தேர்தல் பற்றி அவர்களுக்கு இப்பொழுதே முடிவு தெரிந்துவிட்டது.

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் -
உச்சநீதிமன்றம் உத்தரவு


எல்லா நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் தேசிய கீதம் பாடுகின்றார்களா? இல்லையா? என தெரியாது, இனி தியேட்டரில் கட்டாயமாக‌ படிக்க வேண்டுமாம்,




எல்லா தொலைகாட்சி, வானொலி நிலையங்கள் தினமும் தேசிய கீதத்தை கண்டிப்பாக ஒளிபரப்ப சட்டம் இருப்பதாக தெரியவில்லை.


அது ஏன் திரையரங்குகளில் மட்டும், அங்கு இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களோ? என்னவோ


இனி திருட்டு விசிடியில் தேசிய கீதம் வந்தால் உள்நாட்டில் சுட்டது, வரவில்லை என்றால் வெளிநாட்டில் சுட்டது என நாமாக முடிவு செய்துகொள்ளலாம்


தியேட்டரில் தேசிய கீதம் பாடித்தான் தேசிய உணர்வை வளர்க்கும் நிலை, தமிழக அரசு எப்படி சிந்திக்கின்றது என தெரியவில்லை


இங்கே டாஸ்மாக் முதல் பல விவகாரங்கள் தமிழக அரசால் நடத்தபடுபவை, தேசிய கீதம் அல்ல தமிழ்தாய் வாழ்த்தினை பாடிவிட்டுத்தான் "கடை" திறக்கவேண்டும் என விபரீத சிந்தனைகள் வராத வரை நல்லது


"நீராடும் கடலுடுத்த.." என பாடிவிட்டு மணல் குவாரிகளும், கிரானைட் குவாரியும், கனிம மண் குவாரியும் அன்றாட பணி தொடங்கினால் பார்பதற்கு எப்படி இருக்கும்?



காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌




பிடல் காஸ்ட்ரோ பெரும் போராளி, போராடி புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தவர்,மக்கள் நலம் காத்த வீரன்


ஆனால் அவரது கவனம் எல்லாம் வித்தியாசமானது, யார் போராளி? யார் கட்டபஞ்சாயத்து கும்பல் என்பதில் கவனமாக இருந்தார்.


இந்தியா அவருக்கு பிடித்தமான நாடு, சே குவாரேவினை கியூப பிரதிநியாக இந்தியாவிற்கு அனுப்பியவர் அவர், இது இன்னொரு பக்கம்





ஆனால் ஒரு இடத்திலும் புலிகளையோ அதன் தறுதலை போராட்டங்களையோ அவர் ஆதரித்ததாக ஒரு செய்தியும் இல்லை, ஒருபடி மேலே சென்று 2006ல் புலிகளுகளுக்கான தடையினை அவர் ஆதரித்திருக்கின்றார்

அதாவது மொத்த உலகமும் புலிகளை அடித்து துடைத்தொழிக்க கிளம்பியபொழுது , "ஆம், அது அழித்தொழிக்கவேண்டிய தீவிரவாத கும்பல்தான்" என ஒப்புதல் அளித்திருக்கின்றார்.

வர்க்க விடுதலை வேறு, குறுந்தேசிய வாதம் வேறு என்பதில் அவர் மிக சரியாக நிலையெடுத்திருக்கின்றார்.எது விடுதலை, எது தறுதலை என்பதில் அவருக்கு தெளிவு இருந்திருக்கின்றது

புலிகளை அவர் ஒரு போராளிகளாக ஒருநாளும் ஒப்புகொண்டதே இல்லை

ஆக காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌

பிரபாகரன் படத்தினை பிடித்துகொண்டே போராளி காஸ்டோர்விற்கு அஞ்சலி, வீர வணக்கம் என சொல்லிகொண்டிருக்கின்றன அங்கிளின் மங்கிஸ்

வைக்கோ பெரும் அஞ்சலி செலுத்துகின்றாராம், காஸ்ட்ரோவும் போராளி அவரும் பயங்கரவாதிகள் என‌ ஆதரவளித்து தடையான புலிகள் அமைப்பும் போராளிகளாம்

அதாவது காஸ்ட்ரோ நல்லவர், அவர் உலகிற்கே ஆகாது என சொன்ன புலிகளும் நல்லர்களாம்

இப்படிபட்ட கொள்கையுடன் முழங்கிகொண்டிருப்பவர்கள் சேணல் மாற்றும்பொழுதாவது உலக செய்திகளையோ, தலையணை இல்லாவிட்டால் புத்தகத்தை வைத்து தூங்குபவர்களாகவோ கூட இருக்க முடியாது

வைகோவும் தமிழ் பேசுகின்றார், பிரபாகரனும் தமிழ் பேசுகின்றார் ஆதலால் இருவரும் ஒன்று,

சீமான் தமிழில் பேசுகின்றார், பிரபாகரனும் தமிழில் பேசுகின்றார் ஆதலால் இருவரும் ஒன்று என லாஜிக் பேசுபவர்கள் உண்டு

அப்படியே

பிடல் கையிலும் துப்பாக்கி இருந்தது, பிரபாகரன் கையிலும் துப்பாக்கி இருந்தது, வீரப்பன் கையிலும் துப்பாக்கி இருந்தது அதனால் மூவரும் ஒன்று என லாஜிக்காக சீரியசாக சொல்வார்கள்,

உடனே இவர்களை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கின்றது.

காமராஜர் அமர்ந்த நாற்காலியில், கலைஞர் அமர்ந்த நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் பன்னீரும் அமர்ந்ததால் இவர்கள் நால்வரும் ஒன்று என சொல்லிவிட முடியுமா?

அப்படித்த்தான் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

சுடுகாட்டிலும் தீ எரியும், கோவில் விளக்கிலும் தீ எரியும், எது புனிதமானது?

பிடலும் பிரபாகரனும் ஒன்று என லாஜிக் பேசுபவர்களிடம், ஆமாம் அப்படியே பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவும் ஒன்றா என கேளுங்கள்,

பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.







 இக்கட சூடு





எத்தனை அம்புகள் பாய்ந்து வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

அதனை அழிக்க அம்பு எதற்கு?, அருகிலே இருக்கும் சொம்புகள் போதாதா?








முதல்வர் ஜெ., நடக்க பிசியோதெரபி சிகிச்சை

அது நடக்கட்டும், அப்படியே தமிழக அமைச்சர்களுக்கு முதுகு நிமிர ஒரு சிகிச்சை, முதல்வர் இலாக்காவினை கவனிக்கும் பன்னீர் செல்வத்திற்கு பேச்சு வர ஒரு சிகிச்சை என செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.




Tuesday, November 29, 2016

கச்சதீவு அந்தோணியார் கோவில்



Image may contain: one or more people


கச்சதீவு அந்தோணியார் கோவிலில் தமிழக உரிமை புறக்கணிக்க படுகின்றது பெரும் சர்ச்சை


அந்தோணியார் என்பவர் போர்ச்சுக்கலில் வாழ்ந்த கிறிஸ்தவ மகான், ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அக்கால போர்த்துகீசியர் எல்லாம் அவரையே தங்கள் கடல் பயண பாதுகாப்பு தெய்வமாக கொண்டிருந்தனர்


வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு பத்திரமாக வந்தபின் அந்த நம்பிக்கை கூடிற்று, தமிழக கடற்பரப்பிலும் வட இலங்கையிலும் போர்த்துகீசியர் ஆண்ட காலத்தில் அந்த நம்பிக்கை இங்கும் வந்தது, கடலோடும் மீணவர்களின் தெய்வமாக மாறிப்போனார் அந்தோணியார்


போர்த்துகீசியர் சென்றபின்னும் இலங்கை, தமிழ் மீணவர்களும் அவரை மறக்கவில்லை, அன்றைய கச்சத்தீவு சர்ச்சை இல்லா பகுதி, ஆனால் ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான பகுதி. அன்று இலங்கை, தமிழக மீணவர்களிடையே பெரும் சிக்கல் எல்லாம் இல்லை


அப்பொழுது தமிழக மீணவர்கள் ஓய்வெடுக்கும் கச்சதீவில் தமிழக மீணவர்கள் கட்டியதுதான் அந்த அந்தோணியார் கோயில், ஆண்டு தோறும் இருநாட்டு மீணவர்களும் கூடி கொண்டாடுவார்கள்.


மக்கள் வாழ தகுதியில்லா கச்சதீவின் ஒரே கொண்டாட்டம் இந்த திருவிழா மட்டுமே


பின் கச்சத்தீவு கைமாறினாலும் ஒப்பந்தபடி தமிழக மீணவர்கள் வலை உலர்த்தி ஓய்வெடுக்கவும், அந்தோணியார் ஆலயத்தில் வழிபடவும் வழிவகை உண்டு


பின்னாளில் புலிகள் அழிச்சாட்டியத்தில் கச்சதீவு பெரும் சர்ச்சையான பகுதியாக மாற அந்தோணியார் ஆலய‌ திருவிழா கலையிழந்தது, புலிகளின் கடத்தல் நடைபெறுமிடம் கடல் என்பதால் இலங்கை கடற்படையும் அச்சத்தில் பல கொடூரங்களை நிகழ்த்திகொண்டிருந்தது


இன்று புலிகள் இல்லா காலம், மறுபடி அந்தோணியார் ஆலயம் சீரமைக்கபட்டு திருவிழா கொண்டாட்டத்திற்கு தயாராகின்றது, சிக்கல் என்னவென்றால் தமிழக மீணவர்களிடம் ஒரு வார்த்தையும் அவர்கள் சொல்லவில்லை, நன்கொடை கூட கேட்கவில்லையாம்


ஏற்கனவே அங்கு வலை உலர்த்தும் உரிமை பறிக்கபட்ட நிலையில், அந்தோணியார் ஆலயம் மீதான உரிமையும் போகிறதா? என ராமேஸ்வரம் பக்கம் கடும் கொந்தளிப்பு நிலவுகின்றது


மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கைகள் பறக்கின்றன‌


மத்திய அரசோ 100. 500 என ஏக சிக்கலில் இருக்கின்றது, இது வேறுமாதிரியான சிக்கல்


சும்மாவே கச்சதீவு பெரும் சர்ச்சை, இனி கிறிஸ்தவ ஆலயம் என்பதால் பாஜக மதவெறி அரசு மவுனம் காக்கின்றதா என கிளம்புவார்கள்


நிச்சயமாக மோடி அரசு தலையிட்டு சில காரியங்களை செய்து நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்ட அரசு, எம்மதமாயினும் காப்போம் என அழகாக அரசியல் செய்யலாம் தான்.


கச்சதீவில் தமிழர் உரிமையினை மீட்டு, தமிழிசை சென்று மெழுவர்த்த்தி ஏந்தி வழிபட்டால் எப்படி இருக்கும்?


ஆனால் இம்மாதிரியான அரசியல் எல்லாம் தமிழக பாஜகவிற்கு தெரியாது, ஒரு மாதிரியான அசமந்த கட்சி அது


இந்த கச்சதீவு சிக்கலுக்கு முதல் காரணம் யார் தெரியுமா?


இந்திராவோ, பண்டாரநாயகவோ, புலிகளொ அல்ல‌


முதலில் ராமர், அங்கு சென்றதே சென்றார், கச்சதீவில் தன் சேனைகளுக்கு ஒரு வியூகம் சொன்னால்தான் என்ன? அந்த அனுமார்தான் சஞ்சீவி மலையினை கொண்டு செல்லும்பொழுது அங்கு கொஞ்சம் இளைப்பாறிவிட்டு சென்றால் என்ன?


விட்டுவிடுவார்களா கங்கை கரை சாமியார் கூட்டம், ஆடி தீர்ப்பார்கள்


அடுத்து அந்த விவேகானந்தர்


மகான் அமெரிக்க சுற்றுபயணத்தை முடித்துகொண்டு கொழும்பு வழியாக பாம்பனுக்கு வரும்போது, ஒரு 10 நிமிடம் கச்சதீவில் தியானம் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?


விவேகானந்தர் மண்டபம், படகு போக்குவரத்து என பின்னியிருக்க மாட்டோமா? சிங்களன் கைக்கு அது சென்றிருக்கும்?


என்ன செய்ய மகான் விவேகானந்தர் மண்டபம் அமையவில்லையே.


இந்த இந்து தெய்வங்களும் வேறுமாதிரியானவை, அது காடுகள் மலைகள் ஆற்றங்கரைகளில் ஹாயாக அமர்ந்து அருள்பாவிக்குமே அன்றி, கடல்தாண்டி தீவுகளில் எந்த தெய்வமும் கோயில் கேட்கவில்லை


இத்தனை ஆயிரம் தெய்வங்களில் ஒன்றாவது கச்சதீவில் கோயில் கேட்டு 10 கிடா கேட்டிருந்தால் சிங்களன் அப்பக்கம் வரமுடியுமா?


கடல் ராசா, கடல் அன்னை என கடலுக்கு பெயரிட்ட இந்துமதம் கடலுக்கும் கடல்பயணத்திற்கும் ஒரு தெய்வத்தை கைகாட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படி ஒரு இந்து ஆலயம் இருந்தால் , நிலை இவ்வளவு சிக்கலாகியிருக்குமா?


அவ்வளவு ஏன் இந்த திராவிட பெருந்தலைகளின் நினைவிடமாவது அங்கு அமைந்து தொலைத்திருக்க கூடாதா, (நிச்சயம் அவர்களை அங்குதான் வைத்திருக்க வேண்டும்)


மெரீனா இன்னும் நன்றாக இருந்திருக்கும், மெரினா செல்லும் பலருக்கு அந்த கல்லறைகளை பார்த்து ரத்தகொதிப்பு வராமால் போயிருக்கும்


இதெல்லாம் அமையாமல் அந்தோணியார் ஆலயம் மட்டும் அமைந்துவிட்டதுதான் சிக்கல்


ஒரு இந்து ஆலயமோ, விவேகானந்தர் நினைவு காரியங்களோ, அனுமார் பாதமோ இருந்திருந்தால் நடப்பதே வேறு


இந்நாட்டில் மதங்களும், ஜாதிகளும் பெறும் வெற்றியினை இன உணர்வும், உரிமை போராட்டங்களும் பெற்றுவிட முடியாது


கச்சதீவு அதில்தான் சிக்கிகொண்டது.













காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது




Stanley Rajan's photo.    Stanley Rajan's photo.


முதற்படம் புலிகள், அடுத்தபடம் பூனைகள் 


பிடல் காஸ்ட்ரோ மறைந்ததிலிருந்து உலகின் பார்வை கியூபா மீது குவிந்திருக்கின்றது


காரணம் மற்ற தலைவர்கள் மறைவதற்கும், அமெரிக்க எதிர்ப்பு தலைவர்கள் மறைவதற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு


செல்வசெழிப்பாக இருந்த ஈராகும், லிபியாவும் இன்று சுடுகாடாய் கிடக்கின்றன, ஓரளவு எழும்பி வந்த வெனிசுலாவும் நாசமாய் சீரழிந்து கிடக்கின்றது





இவைகள் மூவற்றிற்கும் உள்ள ஒற்றுமை இவற்றின் முன்னாள் ஆட்சியாளர்களான சதாம், கடாபி, சாவேஸ் மூவரும் அமெரிக்க எதிர்ப்பார்ளர்கள், அவர்கள் வீழ்ந்த பின் அந்த தேசங்களை அமெரிக்கா வதைப்பது கொஞ்சமல்ல.

அப்படித்தான் செய்வார்கள், இந்த வலியில் அந்த உன்னத தலைவர்களை மக்கள் எப்படி நினைப்பார்கள், அவர்களுக்காக நினைத்து நினைத்து அழுவார்கள், பெரும் தியாகி ஆவார்கள் என்றெல்லாம் எண்ணாமல் வதைப்பார்கள்

மக்களோ அந்த பொற்காலத்தை எண்ணி எண்ணி தலையில் அடித்து அழுவார்கள், அழுது கொண்டிருக்கின்றார்கள்

அமெரிக்காவினை எதிர்த்த தேசங்கள் நிலை அப்படி

சதாமோ, லிபியா கடாபியா அமெரிக்காவினை முறைத்தவர்கள், சவால் விட்டவர்கள் ஆனால் காஸ்ட்ரோ அமெரிக்காவின் முகத்தில் அறைந்து கழுத்தினை நெறித்தவர்

இன்று அவரும் இல்லை

ஆக கியூபர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை காலம் தான் சொல்லும், ஆனால் கியூப மக்களுக்கு அவர் பெரும் வழி காட்டிவிட்டுத்தன் சென்றிருக்கின்றார், கியூப மக்களும் வரலாற்றை படைத்தவர்கள் என்பதால் பெரும் சிக்கல் இருக்காது

எனினும் உலகம் உற்றுபார்த்தபடியே இருக்கின்றது

கென்னடி செய்யாதை நான் செய்வேன் என அரியணை ஏறும் ட்ரம்ப் வேறு "காஸ்ட்ரோ" சர்வாதிகாரி என கரித்துகொட்டிகொண்டிருக்கின்றார்

காலம் பதில் சொல்லட்டும்

தேவர் மகனில் சிவாஜி சொல்வார் "எல்லா பயவுள்ளையும் ஒரு நாளைக்கு சாகவேண்டியதேன், ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையின வாழ்ந்துட்டு போகுறதுதான் சாவுக்கே பெரும"

காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது

கியூப மக்கள் கொடுத்து வைத்தவர்கள் சேவும் காஸ்ட்ரோவும் கிடைத்தார்கள்

தமிழக மக்களுக்கு புரட்சி தலைவனும், கலைஞரும்தான் கிடைத்தார்கள்

 
















என்.எஸ் கிருஷ்னன் : ஒரு நினைவாஞ்சலி

https://youtu.be/aCehtFHIMak

தோற்றம் : 29-11-1908    ::   மறைவு : 30-08-1957





இன்று என்.எஸ்.கே பிறந்த நாள்


மனிதர் சிரித்து சிந்திக்க வைக்கவே அவதரித்தவர், நாகர்கோவில் கொடுத்த மகா கலைஞர்களில் என்றும் முதன்மையானவர்


நிறைய எழுதியாகிவிட்டது


கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார்


பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர்


"காரை நடுரோட்டில் நிறுத்தி பழம் சாப்பிட்டால் போக்குவரத்திற்கு சிக்கல் அல்லவா?. அதனால் காரினை சரித்துபோட்டுவிட்டு யாருக்கும் இடையூறின்றி பழம் சாப்பிடுகின்றேன்"


இதுதான் கலைவாணர், எல்லா சூழ்நிலையினையும் மிக சாதரணமாக எடுத்துகொண்டு, சிரித்துகொண்டே வாழ்க்கையினை நடத்தியவர்


கோடி கோடியாக சம்பளம் வாங்கும்போது இருந்த அதே சிரிப்புதான் வீடு ஏலத்திற்கு வரும்பொழுதும் இருந்தது, திவால் அறிவிப்பு கொண்டுவந்த நீதிமன்ற ஊழியனிடம், "அட்டாட்ச்மென்ட் கொண்டு வந்திருக்க, நமக்குள்ள நல்ல அட்டாச்மென்ட் இருக்கு.." என சிரித்துகொண்டே கேட்டவர்


பெரும் வள்ளல், கேட்காமல் உதவியவர். அந்நாளில் பெரும் மதிப்பு அவருக்கு இருந்திருக்கின்றது, குழந்தை முதல் ஜி.டி நாயுடு வரை அவரின் ரசிகர்கள்.


எவனோ ஒரு தயாரிபாளன் மிக‌ சிரமபட்டு எடுத்தபடம் தோல்வியாக, பின் தானே சில காட்சிகளை நடித்து பின் அதே படத்தில் இணைத்து அதனை வெற்றியாக்கி தயாரிப்பாளன் கண்ணீரை துடைத்தவன்


இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளன் யாரென்றே அவருக்கு தெரியாது, அவரின் துயரம் கேள்விபட்டிருக்கின்றார், உதவி விட்டு அவர் போக்கில் சென்றுவிட்டார், ஒரு காசு வாங்கவில்லை


"சினிமா எடுக்க வருகிறவன், நஷ்டத்தோடு போக கூடாது" என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவர்,


எல்லாவற்றிற்கும் மேல் மனிதர் மகா கைராசிக்காரர், எப்படி?


சேலம் மார்டன் தியேட்டரில் ஒரு இளைஞனை அவர் முன் நிறுத்துகின்றார்கள், நன்றாக எழுதுவான் அய்யா என்கின்றார்கள், ஆனால் அவன் ஒல்லியாக தேகம், குள்ள உருவம்


எல்லோரும் அவனை ஏளனமாக பார்க்க, கண்டிக்கின்றார் கலைவாணர், உருவத்தை வைத்து எடைபோடாதீர்கள், இவன் இன்னொரு அகத்தியனாக இருக்கலாம் என்கிறார்.


தம்பி உனக்கோர் வாய்ப்பு தருகின்றேன், நீருபிப்பாயா என கேட்டு ,தன் பணம் படத்தில் அவனுக்கு வாய்ப்பு கொடுக்கின்றார்


"பணம்..முட்டாள்களிடம் சிக்கும், கல்மனத்தோருடன் கொஞ்சும், நல்லவர்களை கெஞ்ச வைக்கும்.." என சீறி வருகின்றது வசனம்


படம் பெரும் வெற்றி, மகிழ்ந்த கலைவாணர் அவரை வாழ்த்தி ஒரு காரும் பரிசளித்து ஆசீர்வதிக்கின்றார்.


ராம்சந்தர் என்ற பெயருடன் தெருதெருவாய் அலைந்த எம்ஜி ராமசந்திரனின் கஷ்ட காலங்களில், சிவாஜி கணேசன் எனும் மகா நடிகன் மெலிந்த தேகத்தோடு வாய்ப்பு தேடிய காலங்களிலே பெரும் தொகை சம்பளம் வாங்கி காரும் வாங்கினார் அந்த இளைஞர்.


சும்மா சொல்ல கூடாது, இளைஞர் அன்றே சம்பாதித்தியத்தில் உச்சம்.


அந்த இளைஞந்தான் நமது கலைஞர், தமிழக வரலாற்றை புரட்டி அதன் மீது அமர்ந்துவிட்ட இரண்டாம் அகத்தியர்


கலைவாணரின் வாழ்த்தும் கணிப்பும் அப்படி பலித்திருக்கின்றது


தமிழக சினிமா வரலாற்றில் மறக்கமுடியா மனிதர் கலைவாணர்


நாகர்கோவில் ஓழுகினசேரி தெருக்களிலும், வடசேரி சந்தையிலும் அவர் நினைவு வந்து வந்து செல்லும், அம்மனிதன் உருவாகிய இடங்கள் அவை


அங்குதான் தன் வேடிக்கை பேச்சினை அவர் தொடங்கினார் என்பார்கள்


சென்னை எத்திராஜ் கல்லூரியினை கடக்கும் பொழுதும் அவர் நினைவு வரும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்,கே சிக்கியபோது அவருக்கு வாதாட வந்தவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ், வித்தையில் ராம்ஜெத்மலானிக்கும் தாத்தா மாதிரியானவர்


அவரின் வாதத்தில்தான் என்.எஸ்.கே விடுதலையானர், ஆனால் சொத்துக்கள் கரைந்தன,


பின்னாளில் எத்திராஜ் காலேஜ் கட்டினார்


நிச்சயமாக அந்த கல்லூரி கட்டிடத்து கல்லில் என் எஸ் கிருஷணன் பணத்தின் செங்கல் நிச்சயம் ஒளிந்திருக்கும்


வாழ்ந்த காலமெல்லாம் அள்ளிகொடுத்த வள்ளலான கிருஷ்ணன், மறைமுகமாக அள்ளிகொடுத்த காரியங்களில் சில உண்டு, அதில் எத்திராஜ் கல்லூரி சுவரும் இருக்கலாம்,


விதி லட்சுமிகாந்தன் வழியில் விளையாடி இருகின்றது.


அந்த கொடும் வழக்கு தாண்டி தியாகராஜ பாகவதரால் திரையில் வெல்லமுடியாமல் போனது, ஆனால் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்,


ஆனால் விதி முந்திகொண்டது.


எல்லா சூழ்நிலையினையிலும் சிரித்து கொண்டே வாழ்வினை கழித்த நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணனை போல இன்னொரு கலைஞன் வரமுடியாது.


அன்று கிருஷ்னனின் பணம் படத்திற்கு அசாத்திய‌ வசனம் எழுதிய கலைஞர், இன்று கருப்பு பணம், கரன்சி என போராடிகொண்டிருக்கின்றார்


கருணாநிதி எனும் மனிதரின் ஜாதகம் நிதியினை சுற்றி சுற்றியே வருகின்றது, அவருக்கு கிடைத்திருக்கும் வரம் அப்படி.




புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது

புதிய 2000 நோட்டில் மைக்ரோ சிப் கிடையாது என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். எதிர் காலத்தில் ரூபாய் நோட்டுகளில் இது பொருத்தப்படலாம் என்று அவர் கூறினார்.


மிஸ்டர் எஸ்,வி சேகர் கேட்டுச்சா....புது 2000 ரூபாய் நோட்டில் அப்படி ஒரு சிப் இல்லையாம்


இந்த சுப்பிரமணியன் சாமி என்பவர் தலையில்தான் அப்படி ஒரு சிப்பினை பொருத்தவேண்டும், அப்பொழுதுதான் மனிதர் எங்கு செல்கிறார்?, யாரை சந்திக்கின்றார்?, என்ன பேசுகின்றார்? என்ற தகவல் எல்லாம் உலகிற்கு கிடைக்கும்.




அவர் தலையில் முதலில் பொருத்தவேண்டும்.


அடுத்து பிரதமர் தலையில் பொருத்தலாம், உலகில் எந்த நாட்டில் இருக்கின்றார் என தெரிந்துகொள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எளிதாக இருக்கும்.










விசா நடைமுறைகளை கடுமையாக்குகின்றார் டிரம்ப்

ஹெச்1 பி விசா போன்ற விசாக்களை விடுங்கள் டிரம்ப், எங்கள் மோடி அடிக்கடி நிச்சயம் வருவார், அவரை என்ன செய்ய போகின்றீர்கள் டிரம்ப்?

இந்த டிப்ளமேட்டிக் விசாக்களில் ஒரு கண் வைத்துகொள்ளுங்கள்,












ஏசப்பா எப்படியாவது ராஜபக்சே அங்கே மறுபடியும் ஆட்சிக்கு வரணுமப்பா...

கலைஞர் இங்கே மறுபடி முதல்வராகனுபப்பா.. எப்படியாவது அப்படி நடக்க வைங்க ஏசப்பா

இந்த இரண்டுபேரும் இல்லாம நான் எப்படி பொழைக்கிறது கர்த்தாவே..
..








Image may contain: 7 people , fire and night














Monday, November 28, 2016

அல்-குவைதா தொடர்புடைய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அல் - குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட, நான்கு பேர், மதுரையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.


விஸ்வரூபம் படம் வரும்பொழுது, கமலஹாசனுக்கு எதிராக பொங்கியர்கள் எல்லாம் எங்கே? மூடிகொண்டு படுத்துவிட்டார்கள்.


இப்படி ஒரு சாத்தியம் இருப்பது யாருக்கு தெரியாது? ரோஜாவில் மணிரத்னம் அதனைத்தான் சொன்னார், உடனே பம்பாய் படத்து மனீஷாவிற்காக குண்டு வீசினார்கள்.




விஸ்வரூபத்தில் கமல் அப்படி சொன்னார் என வரிந்து கட்டி அவரை பாடாய் படுத்தினார்கள்


இப்பொழுது என்ன செய்வார்கள்? யூகிக்கலாம்


இந்துத்வா மோடி அரசு தேசிய புலனாய்வு துறையினை ஏவிவிட்டு இஸ்லாமியரை கொடுமைபடுத்துகின்றது என கிளம்பலாம்


இது உலகளாவிய பிரச்சினை, இவர்களை கைகாட்டி கொண்டிருப்பது உலகின் பெரும் கைகள். இலங்கை, வங்கதேசம் போன்று இந்தியாவிலும் கைது நடக்கின்றது, அவ்வளவுதான்.


அன்று கமலஹாசனின் விஸ்வரூபத்தை நாங்கள் பார்க்காமல் விடமாட்டோம் என எப்படி களபேரம் செய்து ஏதோ டைரக்டர் போல காட்சிகளை மாற்ற சொன்னார்கள்?


இப்பொழுது அவர்களை, அதாவது அந்த போராட்டகாரர்களை சந்திக்காமல் விடமாட்டோம் என கமல் ரசிகர்கள் கிளம்பினால் எப்படி இருக்கும்?


எப்படியோ கமலஹாசன் புன்னகைக்கும் நேரம் இது.



மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள்

"என் தந்தை விதவைகளுக்கு பென்சன் கொடுக்கின்றார், இந்திரா காந்தி வந்தால் அவருக்கும் கொடுப்பார்" என சொன்னவர்தான் மு.க ஸ்டாலின்


(கலைஞர் அரசின் விதவைகள் உதவி திட்டம் திருக்குவளை மாமன்னர் முத்துவேலரின் பெரும் சொத்துக்கள் மூலம் செய்யபடுவதல்லவா? அதனால் சொல்லிவிட்டார்)


நிச்சயமாக சொந்த வரிகள் அல்ல, மாறாக யாரோ நாக்கில் எழுதிவிட்ட வரிகள்




அந்த வரிகள்தான் மிசா காலத்தின் பொழுது பாய்ந்தனவே தவிர, மிசாவினை எதிர்த்து அவர் போராடி அல்ல‌


இளமைக்கால கலைஞர் போராட்டம் பெரிது, அவர் களமிறங்கிய காலங்களில் அதன் வீரியம் மகத்தானது,


ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவரின் போராட்ட வீரியம் குறைந்தது, ஏதோ சமாளிக்க தொடங்கினார். மிசாவினையும் அப்படி ஒரு தற்காப்பாகத்தான் போராடினார், 1960களின் கலைஞராக அல்ல‌


ஆனால், மிசா காலத்தில் எத்தனையோ திமுகவினர் போராடினார்கள், உயிர்விட்டார்கள்


வைகோ இன்றுவரை காங்கிரசை வெறுப்பாக பார்ப்பதெல்லாம் அதன் தொடர்ச்சியே


ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் போராடியது போலவும், அதனால் திமுகவிற்கு அடுத்த தலைவர் அவரே எனவும் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், சொல்லட்டும்


மிசா இறுக, கலைஞர் என்ன செய்தார்? காமராஜரை சந்தித்து நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் பின் வருகின்றோம் என்றார்.


அதாவது இந்தி எதிர்ப்பு, கல்லக்குடி, நோசென்ஸ் என ஏக அழிச்சாட்டியங்களை செய்த கலைஞர், மிசாவினை எதிர்க்க மட்டும் காமராஜர் முன் சென்று ஒன்றுமே தெரியாதவர் போல நின்றார்


காமராஜர் அந்த தந்திரத்தில் சிக்கவில்லை, நீங்களே போராடுங்கள் என சொல்லிவிட்டார்


பின்னர் காமராஜரிடம் கேட்டார்கள், நீங்கள் ஏன் செல்லவில்லை? அவர் சொன்னார்


"என் மேல இன்னும் இவனுக சுமத்தாதது கொலைபழி ஒண்ணுதான்னேன், என்ன போராட சொல்லிட்டு இவனுக 10 பேரை கொளுத்துவாண்ணேன்


காமராஜ் போராட்டம் நடத்தி 10 பேர் செத்தாண்ணு இவனுகளே எழுதுவாண்ணேன், அதான் ஒதுங்கிட்டேண்ணேண்.."


இப்படி மிசாவிற்கு அஞ்சி காமராஜர் பின்னால் ஒளிய பார்த்து , அவரும் ஒதுங்கிய பின் சிறைக்கு சென்றவர்களை எல்லாம்


ஏதோ பெரும் போராளி போல பேசிகொண்டிருக்கின்றார்கள்


இந்திரா பற்றி சொல்லகூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டு சிறை சென்றவரை, மிசாவில் ஏதோ போராடி சென்றதை போல சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


அந்த இந்திராவினை அப்படி பழித்த ஸ்டாலினுடன் இந்திரா படத்தோடு காங்கிரசாரும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களாம்.


இந்த ஸ்டாலினின் சொம்புகள் இருந்தால் தானாக வெளியேறுங்கள், நீங்கள் ஜால்ரா அடிக்க மனுஷ்ய புத்திரன் போன்றோரின் பக்கங்கள் இருக்கின்றது.



இன்றைய அரசல் புரசல் செய்திகள்...








நடிகர் தனுஷ் யார் மகன் என‌ மேலூர் தம்பதிக்கும், கஸ்தூரி ராஜாவிற்கும் இடையே கடும் சர்ச்சை, மரபணு சோதனைக்கு கோரிக்கை விடுக்கபோவதாக‌ மேலூர் தம்பதி அறிவிப்பு

இவர்கள் இருவரும் தனுஷ் யாருக்கு மகன் என சண்டையிட்டு கொண்டிருக்க, அங்கு வரும் செய்திகளை பார்த்தால் தனுஷ் யாருக்கு மருமகன் என அடுத்த சண்டை வரும் போல‌

வரட்டும் அது ரஜினிகாந்த் பிரச்சினை


தனுஷின் சகோதரர் செல்வராகவனை தேடி யாராவது வந்தால் இன்னும் நன்றாக இருக்கும், அவரின் படத்தினை பார்த்த நீதிபதிகள் இருந்தால் அவர்களே ஒப்படைத்துவிடுவார்கள்

எப்படியோ தனுஷ் பிரச்சினை வேறுமாதிரி செல்கிறது, விரைவில் சிம்பு படங்களில் சில அதிரடி சென்டிமெண்ட் காட்சி வரலாம்.

"நான் எவனையோ அப்பாண்ணு சொல்லி முன்னுக்கு வந்தவன் இல்ல....

எனக்கிருக்கிறது சொந்த அப்பா,
தமிழ் தந்த அப்பா"

என்ற ரீதியில் வசனம் இருக்கலாம்







 மோடியின் அறிவிப்புக்கு 92 சதவீத பேர் எதிர்ப்பு: இளங்கோவன் பேச்சு




உங்களுக்கும் தான் கட்சிக்குள் 90% சதவீத எதிர்ப்பு, பதவியினை கூட பிடுங்கி விரட்டி விட்டார்கள், அதற்காக என்ன செய்தீர்கள்? ஜம்மென்று கட்சிக்குள் அமரவில்லையா?

அந்த 92%ம் என்ன கணக்கு? சத்யமூர்த்தி பவனில் இருக்கும் காங்கிரஸ் காரர்களா?


அப்படியானால் ஆதரித்த 8% யார்? அந்த தங்கபாலு கோஷ்டியாக இருக்குமோ?






யாரை கேட்டு நேரு இந்தியாவினை பிரித்தார்? அதுபோல மோடியும் யாரை கேட்காமல் கரன்சியினை முடக்கினார் : ஹெச். ராஜா

அதானே யாரை கேட்டு காந்தி போராடினார், யாரை கேட்டு அவர் உண்ணாவிரதம் இருந்தார்? யாரை கேட்டு தேசம் அவர் பின்னால் சென்றது? இப்படி எல்லாம் கேட்டால் பதில் சொல்ல முடியுமா?

சத்தியமாக யாராலும் பதில் சொல்ல முடியாது ராசா, ஆனால் உங்களால் ஒரு கேள்விக்கு பதில் சொல்லமுடியும்.


யாரை கேட்டு காந்தியினை கோட்சே கொன்றான்? , யாரை கேட்டு பாபர் மசூதியினை இடித்தார்கள்? யாரை கேட்டு குஜராத்தில் கலவரம் நடந்தது?

இதற்கான பதில் உங்களுக்கு தெரியும் அல்லவா? சொல்லுங்கள்

ஆனாலும் நாடி நரம்பெல்லாம் சாணியும், மாட்டு மூத்திரமும் ஓடும் ஒருவரை தவிர இப்படி குதர்க்கமாக கேள்வி கேட்க முடியாது

நாஞ்சில் சம்பத் எவ்வளவு பரவாயில்லை.





தி.மு.க. போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை: தமிழிசை பேட்டி

அகில இந்திய அளவில் காங்கிரஸ் போராட்டத்திற்கே பெரும் ஆதரவு இல்லை, இதில் தமிழகத்தில் என்ன ஆதரவு பெருகிவிட போகின்றது?

காவேரிக்கும், அணுவுலைக்கும், மீத்தேனுக்கும், ஜல்லிகட்டுக்கும் திரளா மொத்த தமிழகமா கரன்சிக்கு திரளும்?, தமிழன் தூங்கி நெடுநாள் ஆகிவிட்டது அம்மணி.


சரி அம்மணி, எப்படியோ ஒரு எதிர்ப்பினை திமுக செய்கிறது, குறைந்தபட்சம் சிறை நிரம்பவாவது, மண்டபம் நிரம்பவாவது ஒரு கூட்டம் சேர்கிறது

பாஜக ஆர்ப்பாட்டத்தில் சிறையின் ஒரு அறை நிரம்பவாவது , கூட்டம் சேர்ந்ததா?, முன்பு பாஜக ஆர்பாட்டத்தில் உங்களை தவிர யார் வந்தார்? உங்கள் குடும்பத்தாரை கூட காணவில்லையே

இதற்குத்தான் சொன்னது, ஸ்ருமிதி இராணி செருப்போடு சேர்த்து இவர் வாயினையும் தைக்க வேண்டும் என்பது






நோட்டு செல்லாது அறிவிக்க கூறினால் பதவியை ராஜினாமா செய்திருப்பேன்: ப.சிதம்பரம்

ஆனால் ஆயிரம் ஊழல் குற்றசாட்டு இவர் அமைச்சராக இருந்த‌ அரசு மீது சுமத்தபட்ட பொழுது இவர் கம்மென்று நிதியமைச்சராக‌ இருந்தவர் என்பதனை நாமெல்லாம் மறந்துவிடவேண்டும், மறந்து தொலைப்போம்.







மு.க.ஸ்டாலின் கைது

# ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன்., போராட்டமெல்லாம் நடத்திவிட்டேன், நானும் அரசியல்வாதிதான்.





 சென்னை மெட்ரோ ரயில் சேவையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்



தமிழக அரசாங்கமே தனியார் மயமாகி வெகுகாலம் ஆகிவிட்டது, இதில் மெட்ரோ ரயிலுக்கு மல்லுக்கு வந்து விட்டார் மருத்துவர் அய்யா




மோடியை திடீரென ஆதரிக்க காரணம் என்ன? - வைகோவுக்கு முத்தரசன் கேள்வி

அட அவரை விடுங்க, பிரீயா குடுத்தா பினாயிலையும் குடிப்பார்




 

Sunday, November 27, 2016

கோவையில் ஸ்மிருதி இரானி...

https://youtu.be/LbsRckDizwg

 



கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

அம்மா இராணி, அப்படியே அந்த தொழிலாளியினை இந்த தமிழிசை வாயினையும் தைக்க சொல்லுங்கள், புண்ணியமாய் போகும்.



நடிகர்களுக்கு ஒரு சங்கம், அதிலும் சண்டை ...

https://youtu.be/oMFPXH5f5o4



27-11-2016 : தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்ட கலக்கல் ஆல்பம்


மோடி ரூபாய் நோட்டு பிரச்சினையினை கிளப்பினாரோ இல்லையோ, சில விஷயங்கள் மக்கள் பார்வையிலிருந்து விலகுகின்றன‌


அவற்றில் ஒன்று பெரும் காந்தி வழி இந்திய தேசிய தியாகிகளான ராதாரவி,சரத் போன்றவர்களுக்கும், நேதாஜி வழியில் நாட்டிற்காய் போராடிய இந்த விஷால் என்பவருக்குமான சர்ச்சைகள்


அந்த ஏழை தியாகிகளுக்கு ஒரு சங்கம் உண்டாம், அதில் தேர்தலும் உண்டாம். காந்தி தியாகம் பெரிதா? நேதாஜி தியாகம் பெரிதா எனும் சண்டையில் இருவரும் மோதிகொள்வார்களாம்





இதற்கு எல்லையில் சண்டையிட்டு கை கால் இழந்த நாசர், கார்த்தி மற்றும் இந்திய பொருளாதரத்தை தூக்கி நிறுத்திய சிம்பு மற்றும் இன்னபிற சிந்தனையாளர்களின் ஆதரவும் உண்டாம்

இப்படியாக இந்த பத்திரிகைகள் இந்த பெரும் தியாகிகளின் சங்க போராட்டத்தை பெரிதாக சொல்லிகொண்டிருந்தன‌

இப்பொழுது ரூபாய் நோட்டு சிக்கலில் எல்லோரும் தவித்து கொண்டிருப்பதால் இந்த சண்டை பெரிய ஹிட் ஆகவில்லை

ஓரமாய் போய் சண்டை போடுங்கள் என மக்கள் சொல்லிவிட்டதால் இந்த தியாகிகள் கூட்டம் கடும் அப்செட்டாம்,

இதில் ராதாரவி எனும் முன்னாள் இந்திய ராணுவ ஜெனரலும், சரத்குமார் எனும் முன்னாள் ஒலிம்பிக் சங்க தலைவரும் வெளியேற்றபட்டதிலும் மக்களிடம் ஒரு சர்ச்சையும் இல்லை என்பதில் அவர்களுக்கு வருத்தமாம்.

நாட்டில் அவனவனுக்கு என்ன பிரச்சினை, இந்த கூத்தாடிகளுக்கு என்ன பிரச்சினை பார்த்தீர்களா?

சூட்டிங் மட்டும் செட்டுக்குள்ளும் அல்லது வெளிநாடுகளில் நடக்குமாம், கதை டிஸ்கசன் அடைக்கபட்ட அறையில் நடக்குமாம், சம்பள பரிவர்த்தனை மகா ரகசியமாக நடக்குமாம்

ஆனால் சண்டை மட்டும் பகிரங்கமாக போட்டு கொள்வார்களாம்

தயாரிப்பாளருக்கு ஒரு சங்கம், அதிலும் சண்டை

நடிகர்களுக்கு ஒரு சங்கம் அதிலும் சண்டை

இந்த பெப்சி என்றொரு அமைப்பு உண்டு, அதில் இப்பொழுது தற்காலிக அமைதி, விரைவில் வெடிக்கலாம்

ஆக பெரும் கலவரங்களை தூண்டும் இந்த சங்கங்களை தடை செய்தால்தான் என்ன? இவர்களால் நாட்டிற்கு என்ன பிரயோஜனம்? இவர்களை தடை செய்தால் என்ன அழிந்துவிடும்

ரூபாய் நோட்டை தடை செய்வது போல, இந்த சங்கங்களையும் இவர்கள் இம்சைகளையும் தடை செய்ய வேண்டும்.

நாடு உருப்பட கறுப்பு பணத்திற்கு பின் அடுத்த நடவடிக்கை அதுவாகத்தான் இருக்கும்.







https://youtu.be/Ex9fDc0L1_U

27-11-2016 : நடிகர் சங்க கூட்டத்தில் நடந்தவை

வைகோ : கைக்குள் ஏதும் கடிதம் இருக்குமோ?





Image may contain: 1 person , close-up





இப்பொழுதெல்லாம் இந்த கோபாலசாமி எனும் மர்ம மனிதரிடமிருந்து சில விஷயங்கள் வெளிவருகின்றன‌


அதில் முக்கியமானது புலிகள் கலைஞருக்கு எழுதிய கடிதம் என்னிடம் இருக்கின்றது, புலிகள் ராஜிவிற்கு எழுதிய கடிதம் என்னிடம் இருக்கின்றது என மனிதர் ஒரே அழிச்சாட்டியம்


எப்படி இவரிடம் சிக்கியது? அதுவும் புலிகள் இவரை கொடுத்த கடிதத்தை, ஒரு முதல்வருக்கும் பிரதமருக்கும் கொடுத்த கடிதத்தை பிரித்து படித்து, அதனை பிரதியும் எடுப்பது எவ்வளவு பெரும் அயோக்கியதனம்..





சில விஷயங்கள் கடுமையானது, இவர் அந்த கடிதங்களை ராஜிவிடமும் கலைஞரிடமும் கொடுத்தாரா? இல்லை தானே வைத்துகொண்டு பிரபாகரனை சிக்க வைத்தாரா என்பது வரை விபரீத விஷயம் இது.

ஆக மநகூ தலைவர்களே, ஏதும் கடிதம் இவரிடம் கொடுத்திருந்தால் இன்றே நீங்கள் அறிவித்துவிடுதல் நலம். இல்லை என்றால் இந்த தபால்பெட்டி எப்பொழுது அறிவிக்குமோ தெரியாது

மகா பயங்கர பொய்களை அவிழ்க்கின்றார்

டெல்லி அசோகா ஹோட்டலில் இருந்து பிரபாகரன் "இந்தியா என் முதுகில் குத்திவிட்டது" என பிரபாகரன் என்னிடம் சொன்னார் என முதலில் 1987ல் சொன்னதும் இவர்தான்

இன்று பிரபாகரன் அப்படி சொல்லவே இல்லை என்பவரும் இவர்தான்

இந்த வைகோவினை விட ஆபத்தானது ஆனந்த விகடன் எனும் விஷம்

அதுதான் இந்த ஈழவிவகாரங்களில் புலிகளுக்கு ஆதரவாக பொளந்து கட்டுவது, வைகோவின் பேட்டியினை அதுதான் வெளியிட்டுருக்கின்றது, அதில் வைகோ சொல்கிறார்

இந்திய கடற்படை புலிகள் கப்பலை தடுத்தபொழுதெல்லாம் நான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் வாஜ்பாயினை தொடர்புகொண்டு அதனை விடுவித்தேன் என பெருமை பேசியிருக்கின்றார்

இந்த வைகோதான், அதே வாஜ்பாயிடம் ஆனையிறவில் தோற்ற சந்திரிகா யாழ்பாணத்தை புலிகள் மீட்கபோகும் நேரத்தில் உதவி கேட்டு, வாஜ்பாய் அரசும் புலிகளை எச்சரித்து அவர்கள் பின்வாங்கும் போது பார்த்துகொண்டிருந்தவர்

30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் ஆயுதத்தில் ஈழம் அமைய இருந்த ஒரே வாய்ப்பு அது, அதனை சந்திரிகா வாஜ்பாய் மூலம் சரிக்க, அந்த அரசில அமைதியாக இருந்தவர் இதே வைகோ

இதனை எல்லாம் ஆனந்த விகடன் மறைக்கின்றது, அதிலொரு ஆனந்தம் அதற்கு

வைகோ ஒரு பொய்யர் என்றால், விகடன் அதனை மறைக்கும் இன்னொரு மகா பொய் மீடியா

ஆனந்தமிழந்த விகடனில், வைகோ அவிழ்த்திருப்பது பெரும் வஞ்சக பேட்டி, ஆனால் அவரே வசமாக சிக்கிகொள்ளும் பேட்டி

புலிகள் எழுதிய கடிதம் எல்லாம் எப்படி இவர் கையில் சிக்கியது, பிரதி எப்படி எடுத்தார்?? அல்லது மொத்தமாக மறைத்தாரா?

ஆனையிறவில் புலிகள் வெற்றிகொடி நாட்டியபொழுது வாஜ்பாய் அரசு களமிறங்கிய பொழுது இவர் அமைதியாக இருந்தது ஏன்?, இவர் என்றல்ல இந்த நெடுமாறன் , ஈழ கும்பலே மகா அமைதியாக இருந்தது ஏன்?

இதிலென்ன சந்தேகம், நாமாக ஒரு முடிவுக்கு வரலாம். இவர்கள் யாரும் உண்மையில் புலிகள் ஆதரவாளர்களோ அல்லது ஈழ அபிமானிகளோ அல்ல‌

மாறாக புலிகளை நம்ப வைத்து, கழுத்தறுத்து யாருக்கோ உதவிய உளவாளிகள்.

 







தமிழக பாஜக ரொம்ப சோம்பேறி....

சிங்கள உச்ச புத்த பிக்குவிற்கு இந்தியா விசா மறுப்பு : கொழும்பில் சர்ச்சை


அதாகபட்டது ஈழதமிழர் பிரச்சினைக்கு மூல காரணமே இந்த சிங்கள புத்த மத குருக்கள்தான். அவரில் ஒரு சுப்ரீம் லீடர் இந்தியாவிற்கு வந்திருக்கின்றார், ஏதோ விசா சர்ச்சையில் விரட்டியிருக்கின்றார்கள்


அரசின் கொள்கை அல்ல, மாறாக விசா குழப்பம் மட்டுமே




இதனை வைத்து இந்த தமிழக பாஜக எப்படி எல்லாம் அரசியல் செய்திருக்கலாம், மீணவர் பிரச்சினைக்காக மோடி புத்த குருக்களையே விரட்டினார். தமிழர்களின் காவலர் எங்கள் மோடி என கிளம்பவேண்டாமா?


செய்ய மாட்டார்கள், நாளை ஈழதமிழருக்கு ஏதும் மோடி செய்தால் கூட இந்த தமிழக பாஜக தூங்கிகொண்டுதான் இருக்கும்


இவர்களை வைத்து எப்படி தமிழகத்தில் உருப்படுவது??


இதே நிலையில் வைகோவோ, திருமாவோ, சீமானோ பாஜ கூட்டணியில் இருந்தால் எப்படி ஆர்ப்பரிப்பார்கள்??


"எங்கள் கோரிக்கையினை ஏற்று கொலைகார சிங்களை விரட்டிய மோடி வாழ்க, சிங்களனை விரட்ட குரல் கொடுத்து வெற்றி கண்டவன் நான்..." என கிளம்பிவிடுவார்கள்


தமிழக பாஜக ரொம்ப சோம்பேறி....







மத்திய அரசின் திட்டம் வரவேற்கதக்கது, நான் மோடியினை ஆதரிக்கின்றேன் : வைகோ

இதனை ஏதும் வங்கி வரிசை பக்கமோ, தெருவில் வியாபாரம் பார்ப்பவர்களிடம் சென்று சொல்லட்டும் பார்க்கலாம், கருப்புதுண்டிலே தொங்க விட்டுவிடுவார்கள்.

என்னவோ, சேர்ந்தாரை கொல்லி எனும் ராசிக்கு மகா பொருத்தமானவர் வைகோ, அவரின் வாழ்நாள் சாதனை அதனைத்தான் சொல்கின்றது


இவர்தான் ராஞ்சிக்கு ராஜபக்சே வரும்பொழுது மோடி ஒழிக என ஒப்பாரி வைத்தவர்.

பாஜகவினர் உஷாராகவேண்டிய நேரமிது.




.


ஆயிரம் பட்டங்களை அவள் வாங்கட்டும்..



Image may contain: 2 people , text


Michelle Pauline


மருத்துவமனையில் அவளை முதன் முதலில் கையில் ஏந்திய அந்த‌ நொடி கடந்து திடீரென 5 வருடம் கழிந்தது போல் இருக்கின்றது.


கைக்குள் சிணுங்கி கொன்டிருந்த மகள், கண் இமைக்கும் பொழுதிற்குள் வளர்ந்து யு.கே.ஜி முடித்துவிட்டாள்.


விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உலகிலே வேகமான விஷயம் ஒளி என்றாராம்





மானிட வாழ்வு அதனை விட மகா வேகமானது.

அதிலும் பெண் குழந்தை எனும் தேவதையின் வளர்ச்சி மின்னலை போன்றது.

வணங்கும் தெய்வங்கள் எல்லாம் அவளை வாழ்த்தட்டும்,

ஆயிரம் பட்டங்களை அவள் வாங்கட்டும்..




Saturday, November 26, 2016

யார் பிறந்த நாள்.. யார் ரத்தம் தானம்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் பிரபாகரன் பிறந்த நாள் விழா

அட திருமா? இது நிஜமா?

இரு நாட்களுக்கு முன்புதானே அய்யா காங்கிரசை ஆதரிக்கவேண்டும் என முழங்கினீர்? இப்பொழுது பிரபாகரனுக்கும் விழாவா?


அடுத்து என்ன? ராஜிவிற்கும் பிரபாகரனுக்கும் ஒரே மேடையில் அஞ்சலியா?

எப்படி இருந்த திருமா இப்படி ஆகிவிட்டார். அந்தோ பரிதாபம்.

இந்த பாவ‌ம் உங்களை சும்மா விடாது மிஸ்டர் வைகோ..




பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலமையில் ரத்த தானம்

இவர்கள் தலைவன் பிரபாகரன் இருக்கும் வரை ஈழத்தில் ரத்த ஆறுதானே ஓடியது, தமிழகத்திலும் சில இடங்களில் ஓடியது.

அவர்கள் கொள்கையே ரத்தத்தை ஓடவிடுவதுதானே...


தலைவனின் உண்மை தொண்டர்கள் என்றால், உயிர்காக்கும் ரத்தத்தினை ஓடவிடவேண்டுமா? இல்லை இப்படி பொறுப்பாக காப்பாற்றவேண்டுமா?

இது தலைவனுக்கும் அவன் கொள்கைகளுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?

என்ன தொண்டர்கள் இவர்கள்?

தலைவன் சிந்தி சிந்தி ஓடவிடுவானாம், இவர்கள் காப்பாற்றுவார்களாம்

அப்படியானால் பிரபாகரன் ஒழிக என சொல்லிட்டு அல்லவா ரத்தம் காக்க வேண்டும்

என்ன கட்சியோ?, என்ன தத்துவமோ? என கொள்கையோ? ஓன்றும் புரியாது.




 


பிடெல் காஸ்ட்ரோ : பெரும் சகாப்தம் முடிந்திருக்கின்றது

https://youtu.be/5UPZjOJM5Tg

தோற்றம் : 13-08-1926   ::   மறைவு : 26-11-2016





ஒரு சரித்திரம் சாய்ந்திருக்கின்றது, ஒரு பெரும் சகாப்தம் முடிந்திருக்கின்றது


லெனின், மாவோ, ஹோ சி மின் வரிசையில் வந்த காஸ்ட்ரோ எனும் மாமனிதன் காலமாகிவிட்டார்


ஸ்பெயின் தென்னமெரிக்காவினை பிடித்த காலத்திலிருந்தே சுரண்டல் தொடங்கியது, பின் நாடுகள் சுதந்திரமானாலும் ஒரு வகை அரசியல் நிலவியது, அது ஐரோப்பாவில் நடந்த மோதல்களில் தொடர்ச்சியாக அமெரிக்க கண்டத்திலும் தொடர்ந்தது


வட அமெரிக்க ஐக்கிய மாகானம், கன்டா எல்லாம் ஒரு கட்சி என்றால் தென் அமெரிக்க லத்தீன் நாடுகள் இன்னொரு வகை மத பிரிவு இனம் உட்பட பல மோதல்கள், அமெரிக்காவும் ஐரோப்ப்பாவும் என்ன செய்யும்?


தன் கையாட்களை வைத்து, தென் அமெரிக்காவினை சுரண்டும், நன்றாக சுரன்டும். பெரும் வளமான அந்நாடுகளின் கனிமம் முதல் எல்லா வளத்தையும் சுரண்டும், ஏதும் பிரச்சினை என்றால் அந்நாட்டு அதிபர்கள் நல்ல சொத்துக்களுடன் ஐரோப்பாவில் குடியேறுவார்கள்


அடுத்த அதிபர் வந்து சுரண்டுவார், சுருக்கமாக சொன்னால் இன்றைய தமிழக அரசியல்வாதிகளை நினைத்துகொள்ளுங்கள்


இந்நிலையினை மாற்ற பலர் போராட கிளம்பினர், ஜோசப் மாத்தி என்பவர்தான் முதல் நபர், அவர் ஏற்றி வைத்த தீ ஆங்காங்கு எரிந்தது, அதில் எரிய தொடங்கியர் காஸ்ட்ரோ


காஸ்ட்ரோ காலத்தில் கியூபா பாடிஸ்டுவா என்பவன் ஆட்சியில் இருந்தது, அமெரிக்க பிரதிநிதி போலவே நடந்தான் அவன், கியுபா அறிவிக்கபடா அமெரிக்க அடிமை மாநிலம் போல இருந்தது


போராட கிளம்பிய காஸ்ட்ரோவினை முதலில் கைது செய்து விடுவித்தான் பாடிஸ்டுவா, ஆனால் சே குவேரா எனும் மாமனிதனோடு சேர்ந்தபின் காஸ்ட்ரோ தூள்பறத்தினார், பாடிஸ்டுவாவினை விரட்டி கியூபாவினை கம்யூனிச நாடாக்கினார்


உலகம் அதிர்ந்தது , உலகின் சகல மூலையிலும் கம்யூனிசத்தை வேறறுத்துகொண்டிருந்த அமெரிக்கா தன் காலடியில் ஒரு பொதுவுடமை நாடு உருவாவதை பொறுக்குமா?


பெரும் வன்மத்தோடு அது களமிறங்கியது, காஸ்ட்ரோ அபாரமாக ஆடினார். உலகின் சர்க்கரை கிண்ணம் எனப்படும் அளவு சர்க்கரை வளம் கொண்ட கியூபாவின் சர்க்கரைக்கு தடை விதித்தது அமெரிக்கா


அவ்வளவுதான் கியூபாவில் இருந்த அமெரிக்க நிறுவணங்கள் இனி அரசுடமை என அவர் அறிவிக்க, உலகளவில் அமெரிக்கா மீது கரி பூசிய அவமானம், சிறிய போர் தொடுத்தும் அமெரிக்காவால் காஸ்டோர்வினை தொட முடியவில்லை,


பெரும் போரென்றால் களமிறங்க சோவியத் தயாராக இருந்தது.


அதன் பின் அமெரிக்காவிற்கு கியூபாவிற்கும் தூதரக உறவு கூட இல்லை


இதனை பற்றி எந்த கவலையுமின்றி நாட்டை வழிநடத்தினார் காஸ்ட்ரோ, மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன, உலகின் மிகசிறந்த மருத்துவ வசதிகளும், வாழ்க்கை வசதிகளும் கொண்ட நாடாக கியூபா திகழ்ந்தது


பொதுவாக முதலாளித்துவ நாடுகள் இந்த கம்யூனிச நாடுகளின் மக்கள் வாழ்வினை பற்றி மிக சோகமாக எழுதும்படி பத்திரிகைகளை தூண்டும், காரணம் அம்மாதிரி மக்களில் சமத்துவ வாழ்க்கையினை, நிறைவான வாழ்க்கையினை தன் மக்களும் கேட்டு புரட்சி என இறங்கி விடுவார்களோ என்ற அச்சம்


அப்படி சோவியத்தின் மக்கள் சொர்க்கலோக வாழ்க்கையினை எப்படி மாற்றி எழுதினார்களோ அப்படி கியூப நல்லாட்சியினையும் மறைத்தார்கள்


ஆனால் தென் அமெரிக்காவில் மிக சிறந்த நாடாக கியூபா திகழ்ந்தது, இன்னும் திகழ்கின்றது


பொறுக்குமா அமெரிக்காவிற்கு தன் உளவுதுறையினை ஏவி விட்டது, சிஐஏ எனும் பெரும் சக்தி ஒரு மனிதனிடம் தோற்றது என்றால் அது காஸ்ட்ரோவிடம்


ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டதட்ட 700 முறை தோற்றது, குண்டு வைப்பார்கள், சாப்பாட்டில் விஷம் வைப்பார்கள், ஊசி போட முயல்வார்கள், சுருட்டில் விஷம் தடவுவார்கள்


காஸ்ட்ரோ தப்பிகொண்டே வந்தார், இடையிடையே சே வினை கொன்றது காஸ்ட்ரோ எனும் பெரும் வதந்தி வருமாறும் பார்த்துகொள்வார்கள்.


கியூப மக்கள் காஸ்ட்ரோவினை கடவுளுக்கும் ஒரு படி மேலாக பார்த்த்தால் எல்லா வதந்திகளையும் கடந்து சென்றார்கள்.


உலகெல்லாம் போர்களையும், குழப்பங்களையும் சர்வ சாதரணமாக விதைக்கும் அமெரிக்காவால் கியூபாவினை நெருங்க கூட முடியவில்லை, ஒரு குழப்பத்தையும் அவர்களால் விதைக்க முடியவில்லை


அமெரிக்காவின் பெரும் ஆயுதமான பொருளாதார தடை கூட கியூபாவினை அசைக்க முடியவில்லை


நாசர், சதாம், , கடாபி என பெரும் ஜாம்பவன்களை துரத்திய அமெரிக்கா, ஓடவிட்டு அடித்த அமெரிக்கா. எத்தனையோ வெற்றிகளை பெற்ற அமெரிக்கா காஸ்ட்ரோ எனும் மனிதனிடம் தோற்றிருக்கின்றது


அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும், அமெரிக்கா தோற்ற வெகுசில இடங்களில் முதலிடம் நிச்சயம் காஸ்ட்ரோவிற்கு, இதனை விட ஒரு போராளிக்கு என்ன பெருமை வேண்டும்


இதுதான் பிடல் காஸ்ட்ரோ எனும் பெருமகனின் அசைக்கமுடியாத புகழ்.


பெரும் நீண்ட வரிசையினை கண்டவர் காஸ்ட்ரோ, இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து எல்லா அமெரிக்க அதிபர்களை கண்டிருக்கின்றார், சோவியத் அதிபர்கள், சீன மாவோ , வியட்நாம் ஹோ என பெரும் சிகரங்கள் காலத்தில் வாழ்ந்தவர்


தென் அமெரிக்காவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் மர்ம யுத்ததிற்கு காரணத்தை அன்றே சொன்னவர்.அவர்கள் பிரிவினை கிறிஸ்தவர்கள், நாங்கள் பாரம்பரிய கத்தோலிக்கர்கள்


உலக பொருளாதாரம் பிரிவினை கிறிஸ்தவர்களிடம் இருக்கின்றது, ஐரோப்பிய சக்தி வாய்ந்த போப் பதவி ஐரோப்பியர்களிடம் இருக்கின்றது, அவர்கள் எங்களை சுரண்டுவார்களே தவிர உதவமாட்டார்கள்.


தென் அமெரிக்க நாடுகளில் நல்ல அரசு அமைய அவர்கள் உதவ மாட்டார்கள், நல்ல அரசு அமைந்தால் எங்களை சுரண்ட முடியாது அல்லவா?


சே குவேரா தென் அமெரிக்க நாடுகளில் பெரும் புரட்சியினை செய்துவிடுவான் என்றுதான் கொன்றார்கள், என்னையும் கொல்லபார்த்தார்கள், கியூபாவினை தவிர எந்த தென்னமெரிக்க நாட்டிலாவது புரட்சி வெடித்திருக்கின்றதா? வெடிக்காது


போதை கும்பல்கள், ரவுடிகள் என அந்த தேசங்களை குழப்பம் நிறைந்தவைகளாக அவை ஆக்கி வைத்திருக்கின்றன எம்மக்களை நான் காத்து கொண்டேன் அவ்வளவுதான்


ஒரு நாள் அமெரிக்காவில் ஒரு கறுப்பின அதிபரும் , வாட்டிக்கனில் ஒரு லத்தீன் அமெரிக்க போப்பாண்டவரும் அமரும்பொழுது எங்களை தேடி வருவார்கள்


எங்கள் வலி அவர்களுக்குத்தான் புரியும் என்றார்,


அவர் சொன்னபடி ஒபாமா அமெரிக்க அதிபராகவும், அர்ஜெண்டினாவின் ஒருவர் போப்பாண்டவராகவும் வந்தபின் அமெரிக்க கியூப உறவுகள் துளிர்விட்டன‌.


இருமாதத்திற்கு முன்புதான் 50 வருடங்களுக்கு பின் கியுப தூதரகமே அமெரிக்காவில் தொடங்கபட்டது, கியூப விமானம் அமெரிக்கா சென்றது.


உலகினை, அது எப்படி மாறினால் எது நடக்கும் என்பதை மிக தீர்கமாக சிந்தித்ததில் காஸ்ட்ரோவினை தவிர யாரும் இருக்கமுடியாது


தனது கணிப்பு மிக சரியாக நிறைவேறியதை அறிந்த காஸ்ட்ரோ அதன் பின்னேதான் தன் முதிர்ந்த வயதில் தன் தம்பியிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்


இன்று வானுறையும் தெய்வத்தில் ஒருவர் ஆனார்


ஒரு போராளி, தன் மக்களையும் மண்ணையும் மனதார நேசித்து , எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து போராடினால் எத்தனை பெரிய வல்லரசையும் தூக்கி எறியலாம் என உலகிற்கே சொல்லி காட்டியவர் காஸ்ட்ரோ


அமெரிக்க காலடியில் சுமார் அரைநூற்றாண்டு காலம் செங்கொடியினை பறக்கவிடுவது என்பது சிங்கத்தின் மீது சவாரி செய்ததற்கு சமம்


அவர்களையும் சமாளித்து , தன் மக்களையும் காத்து, நாட்டையும் வளர்பது என்பது சாதாரணம் அல்ல,


காஸ்ட்ரோ அந்த பெரும் சாதனையினை செய்தார். ஒரு போராளி எப்படி இருக்கவேண்டும், எப்படி போரட வேண்டும், எப்படி மக்களை காக்க வேண்டும் என்பதற்கு காஸ்ட்ரொ பெரும் எடுத்துகாட்டு


ஈழபோராட்டத்தில் இந்த காஸ்ட்ரோ வழியில் போராடியவர் பத்மநாபா, அவரின் அணுகுமுறை காஸ்ட்ரோ போலவே இருந்தது, அவர் வழியில் ஈழப்போராட்டம் தொடர்ந்திருக்குமானால் இன்று சே, காஸ்ட்ரோவின் தொடர்ச்சியாக பத்மநாபாவும் வாழ்ந்துகொண்டிருப்பார்


கம்யூனிச பத்மநாபாவினை கொன்றவர்கள் யாரின் முகவர்களாக செயல்பட்டிருப்பார்கள் என்பதை நீங்களே யூகிக்கலாம்


இந்த காஸ்ட்ரோ வழியினை விட்டுவிட்டு , கண்ணில் பட்டவனை எல்லாம் கொன்றொழிக்க போகிறேன் என கிளம்பினால் ஈழம் கிடைக்குமா? அல்லது ஈமசடங்கு செய்ய பிணம் கிடைக்குமா?


அவரை பின்பற்றாததன் விளைவே ஈழ அழிவு. ஒரு தலைவன் தன் பின் திரளும் கூட்டத்தை, மக்கள் திரளை நல் வழியில் பயன்படுத்தி விடுதலை பெற்றுகொடுப்பான், அம்மாதிரி புரட்சிகளே வென்றிருக்கின்றன‌
நான் சொன்னபடியெல்லாம் சாவுங்கள் என சொன்ன தலைவனின் போராட்டம் உலகில் எங்கும் வெற்றிபெற்றதில்லை, ஈழத்திலும் அதுவே நடந்தது


இப்போதைக்கு உலகில் எந்த புரட்சியும் சாத்தியமில்லை, மாறிவிட்ட உலகிது. வசதியான வாழ்க்கைக்கு பழகிவிட்ட மக்கள் இப்பொழுதெல்லாம் போராட்டம், புரட்சி என்பதை எல்லாம் மறந்துவிட்டு, ஏதும் பேசினால் இருப்பது போகுமோ? பேசாமல் இப்படியே சகித்துகொண்டிருக்கலாம் என சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்


இந்த புரட்சிகள், விடுதலைகள் எல்லாம் இனி கொஞ்ச காலத்திற்கு வாய்ப்பே இல்லை. வறுமையும், பசியும் இறுக்கும் இடத்தில் மக்கள் ஒன்றாய் திரள்வார்கள், நல்ல தலைவன் கிடைக்கும் பட்சத்தில் அது புரட்சியாய் வெடிக்கும்


வசதியான மக்கள் இருக்கும் இடத்தில் புரட்சி வெடிக்காது, ஈழத்தில் சிங்கள கொடுமையில் 15 லட்சம் தமிழர்கள் வாழ்ந்தாலும் போராட கிளம்பியது எத்தனைபேர்?


பெரும் இயக்கம் என தன்னை சொல்லும் புலிகளிலே 8 ஆயிரம் பேர் கூட தேரவில்லை என்கிறது கணக்கு, அதாவது விடுதலை, புரட்சி என்பதெல்லாம் மக்கள் திரண்டு வருவதை பொறுத்தது,


"நான் போராளியாகிவிட்டேன் நீனும் வரவேண்டும், இல்லாவிட்டால் கையில் இருப்பதை கொடுக்கவேண்டும், இல்லை சாவுதான்


நாடு அடைந்தால் நானே அதிபர், அரசன். என்னை பின்பற்றி மட்டுமே போராட வேண்டும், வேறு யார் தனியாக போராடினாலும் தொலைத்துவிடுவேன்


நான் கேட்பதை கொடுத்து, பிழைத்து வாழுங்கள் காரணம் நான் போராடுவது உங்கள் விடுதலைக்காக, அதாவது உங்களை நான் ஆளபோகும் அந்த விடுதலைக்காக‌.


இங்கே இரண்டே வகை என்னை பின்பற்றினால் நீ தியாகி, மாவீரன் இல்லாவிட்டால் துரோகி உன்னை கொல்வேன்,


எவனும் பேசவந்தால் அவனை கொல்வேன், எதிரியினை கொல்வேன், என்னுடன் இருப்பவனை கொல்வேன்.." என்பது போராட்டம் ஆகாது,


அது தாவூத் இப்ராகிமின் கடத்தல் கும்பல் போன்றது


ஈழத்தில் அப்படி நடந்து நாசமாய் போயிற்று


அதனால் இனி இந்த உலகில் இப்போதைக்கு போராட்டம், புரட்சி, விடுதலை எல்லாம் சாத்தியமில்லை, சோவியத் யுனியன் இருந்தவரை அப்படி ஒரு பின்புலம் இருந்தவரை புரட்சி வெடித்தது, இனி அப்படி அல்ல‌


ஆக நம் தலைமுறையில் வாழ்ந்த ஒரு பெரும் விடுதலை வீரன், புரட்சியாளன் காஸ்ட்ரோ மட்டுமே


அவருக்கு வரலாற்றை படித்தவர்கள் எனும் முறையில், வரலாற்றை உருவாக்கியவருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம்.


வீர வணக்கம் எனும் அர்த்தமுள்ள வணக்கத்திற்கு பொருத்தமானவர் காஸ்ட்ரோ.


பொதுவாக அம்மானிதனை நினைக்கும் பொழுது கண்களில் சில சொட்டு நீர் வடியும்,


ஈழத்திற்கு அப்படி ஒரு தலைவன் கிடைத்திருந்தால் எப்படி இருக்கும் என நெஞ்சு விம்மும். கியூபாவில் வழிகாட்டிய தலைவன் இருந்தும் ஈழம் ஏன் ரத்தகாடானது என ஆயிரம் சிந்தனை வரும்


இன்று காஸ்ட்ரோ காலமானார் என்றவுடன் கண்களில் பெரும் கண்ணீர் பெருக்த்தான் செய்கின்றது


இனி உலகில் பார்க்கவே முடியாத அபூர்வ மனிதல்லவா, அதனால்தான்..








Image may contain: 1 person , beard










கலைஞர் இரங்கல்




எத்தனை பேர் கியூபாவினை பற்றி பேசினாலும், கலைஞர் பேசியிருக்கும் அழகு வராது, முன்பே பேசியிருந்தார், இப்பொழுது ஆங்காங்கு தென்படுகின்றது


அவர் நச்சென்று சொன்னது இது


" ‘கியூபா’ சின்னஞ் சிறிய நாடு ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு!




தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?


தெரியாமல் அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் - அந்தக் கூடு காக்கும் காவல்காரர் தான் பிடல் காஸ்ட்ரோ!"


இதனை விட கியூப நிலை, அமெரிக்க தோல்வி, காஸ்ட்ரோ புகழினை சொல்லமுடியுமா?


இன்னமும் சொன்னார்


"தென்னை, வாழை, பெரு மரங்களை எல்லாம் சரித்து விழுங்கும் யானை, அங்குசத்தை விழுங்குமா?


அமெரிக்கா யானை என்றால் காஸ்ட்ரொ அங்குசம்.."


எப்படி கியூபானினை அமெரிக்க காலடியில் வைத்து சோவியத் யூனியன் விளையாடியது என்பதை இதனை விட எப்படி விளக்க முடியும்


கலைஞர் எல்லா நாளும் கலைஞராக, சுவாரஸ்யமிக்கவராக இருப்பது இப்படித்த்தான்


சரி இத்தனை தலைவர் இருக்கும்பொழுது காஸ்ட்ரோ மீது அவருக்கு அப்படி என்ன பற்று?


தன் தம்பிக்கு அதாவது குடும்த்தினருக்கு தனக்கு பின் தன் வாரிசாக பதவியினை கொடுத்த காஸ்ட்ரோ கலைஞரை கவர்ந்திருக்கலாமோ?


இருக்கலாம்


ஆனால், அந்த தேன் கூடு, யானை , அங்குசம் என்ற வார்த்தைகளை இப்பொழுது காஸ்ட்ரோவொடு பொருத்தி பாருங்கள்


கலைஞரை தேடி சென்று கட்டியணைக்க தோன்றும்..






வைகோ வீர வணக்கம்







இருதயத்தில் துன்ப ஈட்டியைச் சொருகி உள்ளது: காஸ்ட்ரோவிற்கு வீர வணக்கம் : வைகோ

தீயில் எது நல்ல தீ, கெட்ட தீ

ஈட்டியில் எது இன்ப ஈட்டி, துன்ப ஈட்டி?


ஒருவேளை விஜயகாந்த் நடுதெருவிற்கு வந்தது துன்ப ஈட்டியாகவும், அம்மா வென்றது இன்ப ஈட்டியாகவும் இருக்குமோ?

என்னது துன்ப ஈட்டியினை சொருகுகின்றார்களா?

எல்லா தேர்தலிலும் தமிழக மக்கள் இவருக்கு பி.....ல் சொருகிகொண்டிருக்கின்றார்களே

அது என்ன வகை ஈட்டி சார்?













Friday, November 25, 2016

ஐரோப்பா வானில் அப்படி என்ன மர்ம சத்தமோ தெரியவில்லை

அவ்வப்போது சில மர்ம விஷயங்கள் உலகில் நடக்கும், விண் கல் விழுந்தது என்பார்கள், மர்ம ஒளி என்பார்கள், ஏலியன்ஸ் என்பார்கள் இன்னும் ஏராளம்


அப்படி இப்பொழுது ஒரு பரபரப்பு வந்திருக்கின்றது


ஐரோப்பாவில் வானம் இடிந்து விழுந்ததை போல சத்தம் கேட்டதாம், பல நாடுகளில் அது உணரபட்டிருக்கின்றது




தாமதமாக விசாரிக்க தொடங்கிய வான்வெளி விஞ்ஞானிகள், அது வேறு எங்கோ கிரகம் வெடித்திருக்கலாம், அங்கு பூமி அதிர்ச்சி போல ஏதும் நடந்திருக்கலாம் அது இங்கு கேட்டிருக்கலாம் என்கின்றார்கள்


அந்த அலறல் அல்லது அதிர்ச்சி கிறிஸ்தவர்கள் பற்றி தெரியும் அல்லவா?


அடுப்பில் தீ பிரகாசமாக எரிந்தாலே "அய்யய்யோ கடைசி காலம், அதோ இயேசு வருகின்றார்" என கிளம்புவார்கள்


இப்பொழுது வானத்தில் இருந்து வேறு சத்தம் வந்துவிட்டதா, கேட்கவே வேண்டாம். இது தேவனின் எக்காள ஒலி என ஆரம்பித்து விட்டார்கள். வாய்ப்பினை விடுவார்களா?


இந்தியா கிறிஸ்தவ தேசமாக இருந்திருந்தால் நமக்கும் கேட்டிருக்கும், ஆனால் தேவனாகிய கர்த்தன் தன்னை நம்பும் விசுவாசிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கின்றார் என கிளம்புகின்றார்கள்


ஐரோப்பா வானில் அப்படி என்ன மர்ம சத்தமோ தெரியவில்லை


இனி ஐரோப்பியர்களை கவனமாக அந்த சத்தத்தை கேட்க சொல்லவேண்டும், ..பணம்..இந்துத்வா. என இரு வார்த்தைகள் வந்தால் போதும், அது இந்தியர் குரல்தான்


நிலாவில் எதிரொலித்து ஐரோப்பாவில் கேட்டிருகலாம்.






ஜெ செய்தி


முதலமைச்சர் ஜெயலலிதா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். வார்டு மாற்றபட்டார், அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் : பிரதாப் ரெட்டி


என்ன இயல்பு நிலை?


என்ன வார்டு மாற்றம்?




என்ன வீடு திரும்பலாம்?


"திரும்ப திரும்ப பேசுற நீ,


திரும்ப திரும்ப பேசுற நீ.."


(என்றோ பார்த்த வடிவேலு இன்று டாக்டர் வேடத்தில் தெரிகின்றார்.)


ஆனாலும் டாக்டரும் அந்த வடிவேலு போலவே சளைக்காமல், அசராமல் சொல்கின்றார் அல்லவா? அதுதான் பரிதாபம்.









நன்றிகெட்ட தமிழரடா பிரபாகரா..

நாளை அடிப்பொடிகள் மாவீரர் நாள் என கிளம்புவார்கள், அதாவது பிரபாகரன் நடத்திய கட்டபஞ்சாயத்து இயக்கத்தின் பெயர் போராட்டம், அதில் வேறு வழியின்றி வந்து உயிர்விட்டவர் மாவீரர்


பிரபாகரனையும் அவரின் அடிப்பொடிகளையும் தவிர ஈழபோராட்டத்தில் கொல்லபட்ட இதர தமிழர்கள் சிவகுமார், குட்டிமணி குழு என்பதெல்லாம் மாவீரர் அடையாளம் அல்ல‌


பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் மட்டுமே மாவீரர்கள், அதாவது பிரபாரனை ஆதரித்தால் தமிழன், உணர்வாளன். அவர்களின் கட்ட பஞ்சாயத்து ரவுடியிசத்தை கண்டித்தவன் எல்லாம் வாழ தகுதியில்லா துரோகிகள்.




ஆனால் எத்தனையோ பேரினை சாக கொடுத்த புலிகளிடம், இத்தனை ஈழமக்கள் செத்திருக்கின்றார்கள் அல்லவா, அப்படி பிரபாகரனையோ பொட்டு அம்மானையோ இந்தியாவிடம் சரண்டைய சொல்லுங்கள் என்றபொழுது முடியாது என்றார்கள்.


பின் பல்லாயிரம் பேரினை மாவீராக்கிய புலிகளே வெள்ளைகொடி காட்டி சிங்களனிடம் சரணடைந்த நிகழ்வும் நடந்தது


அதனை இந்தியாவிடம் சரணடைந்தால் கூட காட்சி மாறி இருக்கும், அங்கோ எல்லாம் தலை கீழ்


ஆக மாவீரம் எல்லாம் அடுத்தவன் சாவுதான், தனக்கு என்றால் சரண்டைதல் மட்டுமே, சயனைடு கடி எல்லாம் இல்லை.


சரி இத்தனை ஆயிரம் மாவீரர்களை உருவாக்கிய அந்த கும்பல் தலைவனுக்கு எவனாவது மாவீரர் நாளில் மாலைபோட்டு அஞ்சலி செலுத்துகின்றானா என்றால் இல்லை


அட பிரபாகரா, எத்தனை பேருக்கு மாலைபோட்டீர், உமது படத்துக்கு நீர் உருவாக்கிய மாவீரர் தினத்தில் மாலை போட ஒரு பயலும் தயார் இல்லை


தமிழீழ தேசிய தலைவன், மேதகு என உன்னை சொல்லி பணம் குவிக்கும் இந்த வைகோ, சீமான் அம்மான் கூட உன் படத்திற்கு அஞ்சலி செலுத்தவில்லையே பிரபாகரா


நன்றிகெட்ட தமிழரடா பிரபாகரா..



மாவீரன் கிட்டு : முன்னோட்டம்

https://youtu.be/Ax6SWtL6egs



பெரும் பிழைப்புவாதிகள் யாரென்றால் தமிழக சினிம்மாக்காரர்கள், அவர்கள் தொழில் அப்படி. கதையினை பணமாக்க எப்படி வேண்டுமானாலும் யோசிப்பார்கள்


இப்பொழுதெல்லாம் அவர்கள் வசூல் கனவு வெளிநாடு, அதுவும் ஐரோப்பா கனடா அமெரிக்கா, அங்கே தமிழர்கள் யார் அதிகம்
என்றால் ஈழதமிழர்,





போதாதா? அவர்களை குறிவைத்தே சில படங்கள் வருகின்றன‌

அதிலொன்று "மாவீரன் கிட்டு"

கதை என்ன கருமாந்திரமோ தெரியவில்லை, தலைப்பு இம்மாதிரி, ஈழதமிழர் கொண்டாடுவார்களாம், அந்த கிட்டுவின் பெயராம்

கிட்டு பற்றி அவரின் நன்றிகொன்ற தனம் பற்றி, ராஜிவ் சாகுமுன் அவரை 15 நாட்களுக்கு முன் வந்து பார்த்து நடித்ததை பற்றி, ராஜிவ் கொலை நடந்த பின் முடிந்தால் கண்டுபிடியுங்கள் என சவால் விட்டதை பற்றி எல்லாம் நிரம்ப பார்த்தாகிவிட்டது

அந்த பராக்கிரமசாலி பின் இந்தியாவால் நடுகடலில் கொல்லபட்டது வரை சொல்லிவிட்டோம்,

சரி இப்பொழுதெல்லாம் பிரபாகரனை புலியினை விட்டு அடுத்தகட்ட தலைவர் பெயர் சூட்ட ஆரம்பித்தாகிவிட்டது

இனக்காவலர் பெயருக்கு பின் அவர் நண்பர் பெயரில் படம்

அடுத்து வனக்காவலர் வீரப்பனுக்கு பின் அவரின் நண்பரின் பெயர்களில் படம் வரலாம், எப்படி?

"மாவீரன் சேத்துகுளி கோவிந்தன்"
"மாவீரன் சந்திர கவுடா"

என்றெல்லாம் இனி படங்கள் வரலாம்.

தமிழகம் அப்படித்தான், எந்த எதிரி நாட்டு தீவிரவாதி பெயரிலும் படமெடுக்கலாம்

இதே அமெரிக்காவின் ஹாலிவுட்டில் "மாவீரன் பின்லேடன் " " வீராதி வீரன் ஹிட்லர்" என்றோ படம் எடுக்க முடியுமா?

மாவீரன் மவுனாலா மசூத் என லஷ்கர் தலைவன் பெயரில் இந்தி படம் எடுத்து மும்பையில் ஓடவிட முடியுமா?

இப்படிபட்ட தமிழ்சினிமாகாரர்களை என்ன செய்யலாம், இவர்கள் சினிமாவும் செல்லாது என சொல்லி தடை செய்தால் எப்படி இருக்கும்?

செய்யலாம் என்ன கெட்டுவிடும்.

நிச்சயமாக சென்சார் போர்டு கடமைகளில் இதுவும் ஒன்று















பாரத கர்ணனின் இன்றைய உருவம் மன்மோகன் சிங்



Image may contain: beard, hat and one or more people


 முழு நல்லவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள், வந்தாலும் முழு நல்லவர்களாக இருக்கமாட்டார்கள், பெரும் சமரசம் செய்யவேண்டியது அரசியல் என்றான் ரூசோ


அரசியல்னு வந்துட்டா ஆயிரம் சமரசம் செய்யணுமுங்க, அது நம்ம அடையாளத்த மறைச்சுபோடுமுங்க அதனால நா அரசியலுக்கு வரலீங்க என கொங்கு தமிழில் சொன்னார் பெரியார்


இன்று மன்மோகன் சிங்கினை அப்படித்தான் பார்க்கவேண்டி இருக்கின்றது


பெரும் பொருளாதார மேதை, கிட்டதட்ட 20 டாக்டர் படங்களை ஆய்விற்காக வாங்கியவர், அமைதியானவர், இந்தியாவின் தூண்களான சீக்கிய வம்சத்தின் பெரும் அடையாளம் என அவருக்கு இருக்கும் இமேஜ் மிக பெரிது


தொடக்க கால மன்மோகன் சிங் அரசியல்வாதி அல்ல, ஆனால் 1971ல் இருந்தே இந்திய பொருளாதார ஆலோசகர். ராஜிவிற்கு பின்னரான காலங்களில் அவர் உச்சம் பெறுகின்றார், அமைச்சராகின்றார்


1990களுக்கு பின் உலக நாடுகளுக்கு இந்திய சந்தையினை திறந்துவிட்டது அவரால், இன்றிருக்கும் பெரும் வேலை வாய்ப்பிற்கும் விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்திய பொருளாதார சந்தைக்கான வாய்ப்பு அவராலேயே கொண்டுவரபட்டது


நல்ல திறமையாளர், ஆனால் பிரதமர் பதவியில் அவரை கூட்டணி எனும் பெயரில் பாடாய் படுத்தினார்கள். எத்தனையோ ஊழல்களை அவரால் கட்டுபடுத்தமுடியவில்லை


பல இடங்களில் கண்களை மூடிகொண்டுதான் ஆட்சிநடத்தினார்


2008 உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த தேசத்தை அவர் காத்தார் என்பது அவரின் பெரும் முத்திரை


அப்படிபட்ட பெரும் பிம்பமான மன்மோகன் சிங், அரசியல் விளையாட்டில் களமிறக்கபட்டார்


நேற்று அவர் பேசியது சுருக்கமாக இருந்தாலும், சில இடங்களில் நிர்வாக குழப்பம் என சொன்னாலும், மனதை கல்லாக்கி கொண்டு அவர் எழுப்பிய வினா ஒன்று உண்டு


எந்த தேசம் மக்களின் பணத்தினை எடுக்கவிடாமல் செய்தது?


இதுதான் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்


உலகில் எத்தனை நாடுகளில் மக்களின் பணம் ஒரே நாளில் நிரந்தர மதிப்பிழந்து குப்பை ஆகியிருக்கின்றது


1998ல் இந்தோனேசியா ஒரே நாளில் புரட்டபட்டது, சில ஆப்ரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் ஆனது


ரஷியாவில் சோவியத் பிளவின் போது வங்கியே திவாலாகி மக்கள் பணமெல்ல்லம் கோவிந்தா ஆனது


சமீபத்தில் கீரிஸில் நடந்தது என்ன?


இன்று சுவிஸ் பேங்க், பனாமா பேங்க் என பதுக்குபவர்கள் (இந்தியரும் உண்டு) எல்லாம் எதற்காக பதுக்குகின்றார்கள்? அனுபவபட்டவர்கள், தங்கள் நாடு திடீரென பறிக்கும் என அஞ்சுபவர்கள் அங்கே குவிக்கின்றார்கள்


ஆக எல்லா நாடுகளும் செய்ய கூடிய விஷயம்தான், அடித்து பறிக்கும் நாடுகளும் உண்டு, மறைமுகமாக வரி என சுரண்டும் நாடுகளும் உண்டு.


இந்தியா அப்படி அல்ல, நம் நியாயமான பணத்தின் ஒரு பைசா கூட அரசு எடுக்கவில்லை, கணக்கினை காட்டி மாற்றிகொள் என்கின்றார்கள்


லட்சகணக்கான் டிப்பாசிட் எல்லாது அன அறிவித்தார்களா? அல்லது எல்லா வங்கி பணமும் அரசுக்கே என பறித்தார்களா?


இது எல்லாம் மன்மோகனுக்கு தெரிந்தும் மறைக்கின்றார், இங்குதான் நிலக்கரி ஊழலிலும், அலைகற்றை ஊழலிலும் சூழ்நிலை கைதியாக தெரிந்த மன்மோகன் முகம் மறுபடியும் தெரிகின்றது


எவ்வளவு நீண்ட அனுபவம் கொண்டவர் மன்மோகன் சிங்


கொஞ்சம் நினைவுகளை சுழற்றுங்கள் மன்மோகன்


இந்திரா இந்திய பணமதிப்பினை கணிசமாக குறைத்தபொழுது இத்தேசத்தின் விலைவாசி சட்டென ஏறவில்லையா? அப்பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள்?


வங்கபோரின் பொழுது நாட்டின் பொருளாதாரம் எப்படி எல்லாம் பாதிக்கபட்டது, இத்தேசத்து மக்கள் கொட்டி கொடுத்து காப்பாற்றவில்லையா? அரிசி முதல் உப்பு வரை கிடைக்காவிட்டாலும் வாழ்க இந்தியா என அவர்கள் சிரமம் பொறுத்தது தெரியவில்லையா?


மிசா கொடுமை எவ்வளவு காலம் நீடித்தது? அதில் இந்தியா என்ன அழிந்ததா? அல்லது ஆப்கன் போல சீரழிந்ததா? மனதை தொட்டு சொல்லுங்கள், தேசம் அதன் பின் எழும்பவில்ல்லை?


போபல் விபத்திற்கு காரணமான ஆண்டர்சன் எப்படி தப்பினார்? அம்மக்களுக்கு இன்றுவரை கிடைத்திருக்கும் நஷ்ட ஈடு என்ன? அவர்கள் பாதிக்கபடவில்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?


23 ஆண்டுகளுக்கு முன்பு செல்லுங்கள் மன்மோகன்சிங்


காட் ஒப்பந்தம் வேண்டாம், தாராளமயமாக்கல் வேண்டாம் அது இந்திய விவசாயத்தை அழிக்கும், விலைவாசி கூட்டும், பணம் மதிப்பில்லமல் ஆகும் என இந்திய முழுக்க கலவரம் வெடித்ததே


நிதியமச்சரான நீங்கள் கொஞ்சமாவது கண்டு கொண்டீர்களா?


இது நாட்டின் நலனுக்கான செயல் என டர்பனை காதோடு சேர்த்துகட்டிக்கொண்டு அமைதியாக இல்லை


அதன் பின் நடந்தது என்ன?


மொத்த உலகமும் இந்தியாவில் நுழைந்தது, வேலை வாய்ப்பு பெருக பெருக இந்திய கரன்சி மதிப்பிழந்தது. அது பெட்ரோல் விலையில் தெரிய தெரிய விலைவாசி கூடியது, கரன்சி சரிவில் தங்க விலை தகிர்த்தது, விவசாயம் வீழ்ந்தது.


ஆனால் வேலைவாய்ப்பு பெருகியிருக்கின்றது ஒப்புகொள்கின்றோம், ஆனால் வாழும் வாய்ப்பு பெரும் சவாலாக மாறிவிட்டதல்லவா? அதாவது உங்கள் நோக்கம் நல்லதாயிலும் எத்தனை பக்க விளைவுகளை கொண்டுவந்துவிட்டது


அன்று தாராளமயமாக்கல் வேண்டாம் என இந்த தேசம் எப்படி எதிர்த்தது? இதே பாராளுமன்றத்தில் எத்தனை வாதங்கள் வந்தன? மக்கள் கதறபொகின்றார்கள், தேசம் சுடுகாடாய் போக போகின்றது என கதறும்பொழுது என்ன சொன்னீர்கள்?


நாட்டு நலன் காக்க பொறுத்துபாருங்கள் என சொல்லிவிட்டு அமரவில்லையா?


இன்று மோடியும் அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கின்றார், பொறுத்து பார்க்கலாம் அல்லவா?


அன்று 1993ல் உங்கள் சீர்திருத்தம் பலன் கொடுக்க 15 ஆண்டு ஆனது, அதன் பின்னமே இத்தனை வளர்ச்சிகள், கூடவே பல எதிர்பாரா விலையேற்ற கொடுமைகள்


அப்படி மோடியின் திட்டமும் பலன் கொடுக்கலாம், பொறுத்து பார்க்கலாம் அல்லவா?


தாராளமயமாக்கலில் உங்களுக்கு ஒரு நியாயம் , பண நடவடிக்கையில் மோடிக்கு ஒரு நியாயமா?


பண மதிப்பினை குறைத்த இந்திரா, மக்கள் உரிமைகளை மீறிய இந்திரா, தாராளமயமாக்கலை கொண்டுவந்த நீங்கள் எல்லாம் நாட்டுபற்றோடு செய்தீர்கள் என்றால், மோடி செய்வது மட்டும் மக்கள் அழிப்பு திட்டமா?


அதாவது உங்களுக்கே தெரிகின்றது மிஸ்டர் மன்மோகன் சிங், உங்கள் மனதின் ஆழத்திலிருந்து நீங்கள் பேசவில்லை, சில முகங்களுக்காக உங்கள் உதட்டிலிருந்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு சென்றிருக்கின்றீர்கள்


இந்த நாடு என்றுமே சிக்கலை கடந்து செல்லும்


வெள்ளையன் இரு துண்டாக உடைக்கும் பொழுது கஜானா காலி, நாடு கடந்தது


பெரும் பஞ்சம் உண்ண அரிசி கோதுமை இல்லை அப்படியும் பாகிஸ்தானுட‌ போரிடும் பொழுதும் ஆயுதம் வாங்க பட்ஜெட் இலலை, நாடு தாங்கியது


சீன வஞ்சகம் மறுபடியும் போர் என இத்தேசம் தாங்கியது.


இந்திராவின் பண மதிப்பு குறைப்பு, வங்கப்போர், அணு ஆயுதம் என பல சிக்கல் இத்தேசம் தாங்கியது


அதன் பின் எமர்ஜென்சி, அய்யகோ இனி இந்தியாவில் தொழிலே இல்லை என உலக கம்பெனிகள் ஓட்டமெடுக்கும் போதும் இந்தியா தாங்கியது


சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என எத்தனையொ நல்ல தலைவர்களை இழந்தும் இத்தேசம் ஓடிகொண்டிருக்கின்றது, ஆக தேசம் அழியபோகின்றது என நீங்கள் சொல்வது சரியல்ல.


சூழ்நிலைகள் சிலறை சிக்க வைக்கும் மிஸ்டர் சிங்.


எல்லா தலைவர்களும் மனிதர்களே, சில தவறுகள் நடக்கும்


சீனாவினை தவறாக எடைபோட்டு சிக்கினார் நேரு


தமிழகமெங்கும் அணைகட்டி, ஆலைகட்டி,பள்ளி கட்டிய பெருமகன் காமராஜர்தான் சீமை உடைமரன் எனும் பெரும் சிக்கலில் தமிழ்நாட்டினை சிக்க வைத்தவர், அவரை அறியாமல் மாட்டினார்.


இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகவேண்டும் என நீங்கள் கொண்டுவந்த தாராளமயமாக்கலும், காட் ஒப்பந்தமுமே இன்றைய இந்தியாவினை தாங்கி நிற்கும் வளர்ச்சி. இன்றைய இளைஞர்கள் எனக்கு 90கே அவனுக்கு 70 கே என பல்லாயிரங்களில் சம்பளம் வாங்கும் வளர்ச்சி


ஆனால் விலைவாசி? டாலருக்கு நிகரான கரன்சி வீழ்ச்சி? வீட்டு விலை? தண்ணீர் பாட்டில் வியாபாரம்?, விவசாய நிலை?


இவை எல்லாம் யாரால் விளைந்தது மிஸ்டர் மன்மோகன் சிங், நிச்சயம் உங்களால்.


அப்படி மோடியும் கருப்புபணம் ஒழிய சில நடவடிக்கைகளை எடுக்கின்றார், சில சர்ச்சைகள் வரும் நல்ல அனுபவஸ்தரான நீங்கள் அதற்கு வழிகாட்ட வேண்டுமா? அல்லது ராகுலின் முறைப்பிற்கு பயந்து உளறவேண்டுமா?


நாட்டுபற்றுள்ள சீக்கியன் இப்படி செய்வானா?


என்றுமே உங்கள் மீது எங்களுக்கு பெரு அபிமானமும் மரியாதையும் உண்டு, அப்துல் கலாம் போன்ற பதவி ஆசை இல்லா, மதவெறியில்லா, ஆரவாரமில்லா மிக அமைதியான மேதைகளில் நீங்கள் ஒருவர்


ஆனால் அங்குசத்திற்கு கட்டுபடும் யானை போல நீங்கள் இத்திட்டத்தினால் பொருளாதாரம் படுக்கும், நாடு 50 நாளில் நாசமாகும் என சொன்னதுதான் வருத்தம்


நாசமாகட்டும்


எத்தனையோ முறை பொருளாதாரம் நாசமான தேசம்தான், பின் துள்ளி குதித்து எழும்பியிருக்கின்றது


கருப்பு பண ஒழிப்பிலும் அப்படி நடந்தால் இத்தேசம் மறுபடியும் எழுந்து நிற்கும்


காலம் காலமாக எத்தனையோ கொள்ளையர்களால் அடித்து நொறுக்கபட்ட தேசமிது. ஆப்கன், அரேபிய இஸ்லாமிய மன்னர், வெள்ளையர், இன்றைய சில கள்ள அரசியல்வாதிகள் வரை உறிந்து துப்பட்ட தேசம்தான்


ஆனல் கொஞ்சநாளில் தன்னை புதுப்பித்துகொண்டு எழும்பிவிடும், இந்நாட்டின் தன்மை அப்படி


அப்படி இந்நடவடிக்கையால் பொருளாதாரம் படுத்தாலும் கொஞ்சநாளில் எழும்பிவிடும், பல்லாயிர ஆண்டு பாரத வரலாறு அதனைத்தான் சொல்கின்றது


இந்தியா வீழ்வது போல் தெரியும் நாடு, வீழாது மிஸ்டர் மன்மோகன்சிங் , இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்தபின் அதனை ஏன் அரசியலாக்குகின்றீர்கள்?


சூழ்நிலை கைதி அல்லது செஞ்சோற்று கடன் என்பதற்கு இன்றைய முழு வடிவம், அல்லது பாரத கர்ணனின் இன்றைய உருவம் மன்மோகன் சிங்


அவரின் நேற்றைய உரை அதனைத்தான் சொல்கின்றது.
















கொசுறு

வானம் பொழிகின்றது, பூமி விளைகின்றது உனக்கேன் வரி என கட்டபொம்மன் வசனம் பேசினால் கைதட்டலாம்,

இங்கே இந்திய பிரதமரை பார்த்தே இப்படி கேட்டால் என்ன செய்யலாம்??

இவர்களை எல்லாம் அப்படியே கண்டெய்னரில் ஏற்றி ஐஎஸ் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்


வரியே கட்டாமல் வாழ்வது என்றால் எந்த நாடு சாத்தியம்?

அரபுநாடுகள் முன்பு சாத்தியம், இப்பொழுது பொருட்களின் விலைவாசியினை கூட்டி சுதாரித்துகொண்டார்கள், மறைமுக வரி

வேறு எந்தநாட்டிலும் சாத்தியமே இல்லை, பிடித்து நசுக்கி விடுவார்கள்

சம்பாதிக்கும் பணமெல்லாம் எனக்கே என கட்டபொம்மன் வசனம் பேசுபவர்கள் ஒன்று அமேசான் காட்டுக்கோ அல்லது அந்தமான் பழங்குடி மக்களிடமோ சென்று வசிக்கலாம்

ஆடைக்கு கூட வரியில்லை, ஏன் ஆடையே இல்லா அற்புத வாழ்வு அது




.













Thursday, November 24, 2016

சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார்




சிறையில் நளினி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார் என ஏக அலப்பறைகள், அதில் முருகன் வெளிநாடு செல்ல இந்தியா வந்ததாகவும், சிவராசனை ஒரு ஏஜன்ட் என்ற முறையில் சந்தித்ததாகவும், இன்னும் ஏராளமான பொய்மூட்டைகளை அவிழ்த்திருக்கின்றார்


இன்னொரு இடத்தில் பேரரிவாளனை காப்பாற்ற இவர் சொல்லியிருக்கும் ஒரு பொய், இவரது புத்தகத்தை அப்படியே தூக்கி தூர எறிய வைக்கின்றது


அதாவது பேரரிவாளனும் புகைப்பட கலைஞனாம், அவனும் ஹரிபாபு போலவே குற்றமில்லாதவனாம், இதில்தான் வசமாக சிக்குகின்றார் நளினி





பேரரிவாளன் சிறுவயது முதல் புலி தொடர்பு உள்ளவர் என்பதும், யாழ்பாணம் சென்று அவர் புலிகளுடன் நேரடியாக பழகியவர் என்பதும் ரகசியம் அல்ல, நிரூபிக்கபட்ட விஷயம்

செத்துபோன ஹரிபாபு காரியம் முடிந்தவுடன் யாழ்பாணம் தப்ப இருந்ததும், அவன் 6 மாத காலம் புலிகளுடன் தொடர்பில் இருந்ததும் அவன் காதலி சுந்தரி என்பவள் எழுதிய கடிதங்களிலே தெரிகின்றது, அவள் எச்சரித்த வரிகள் ஹரிபாபுவிற்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பினை நிருபிக்கின்றன‌

புலிகள் செய்த பெரும் பிழை ராஜிவ் கொலையினை படம் எடுத்தது, அதுதான் மறுநாள் எல்லா பத்திரிகையிலும் வருமே என்ற அடிப்படை அறிவு இருந்தது பின் எதற்கு படமெடுத்தார்கள்?

எல்லா குண்டுவெடிப்புகளையும் படமெடுத்து அது வெடித்த சக்தி என்ன? எத்தனை பேர் செத்தார்கள்? எப்படி எல்லாம் சிதறி செத்தார்கள் என ரசிப்பதில் புலிகளின் ஆனந்தம் அப்படி

(கிட்டதட்ட 10,000 புகைபடங்களை அப்படி பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து கைபற்றியதாக சிங்கள தளபதி சமீபத்தில் சொன்னது நினைவிருக்கலாம்)

அப்படி ஒரு கொடூரமான ரசனை புலிகளிடம் இருந்திருக்கின்றது

பாதுகாப்பான தூரத்தில் படமெடுத்த ஹரிபாபு, கூட்ட நெரிசலில் முன் தள்ளபட்டு இறந்தான்.

ஆக ஹரிபாபு அப்பாவி, பேரரிவாளன் அப்பாவி என புலம்புகின்றார் நளினி

இன்னொரு விஷயம் நளினி மேலான நம்பக தன்மையினை அப்படியே உடைக்கின்றது

கைதான பின்புதான் அவர் கர்ப்பமானது உறுதிபடுத்தபட்டது. ஒரு சிறிய அதிர்வோ, அல்லது மெல்லிய தாக்குதலோ கூட அக் கருவினை கலைய செய்யும் என்பது தெரியாததல்ல‌

ஆனால் பத்துமாதம் அவளை சிறையில் பராமரித்திருக்கின்றார்கள், விசாரணை நடந்தாலும் வேளா வேளைக்கு மருத்துவ சோதனை எல்லாம் செய்து அவள் சுகமாக குழந்தையும் பெற்று அதுவும் கொஞ்சநாள் சிறையிலே வளர்ந்திருக்கின்றது

கவனியுங்கள் இவர் எழுதியிருப்பது போல சித்திரவதை , கண்ணீர் அடி உதை என்றால் கர்ப்பம் தங்கி இருக்குமா?

இன்னொன்று தாய் அழுதுகொண்டே இருந்தால் கர்பத்து குழந்தை மனபாதிப்புடனோ அல்லது வளரும் போது தாய் அடிவாங்குவதை பார்த்து வளர்ந்தால் ஒரு மாதிரி மன கிலேசத்தில் வளரும் என்பது இயற்கை

ஆனால் நளினி மகள் இதோ மருத்துவராகி இருக்கின்றார்...  எப்படி?

சிறையில் மிக நல்லமுறையிலேதான் நளினியினை கவனித்திருக்கின்றார்கள் இல்லை என்றால் இதெல்லாம் எப்படி சாத்தியம்?

ஆக பல விஷயங்களை மறைக்கின்றார் நளினி

இன்னும் யாரையோ நம்பி பொய்மேல் பொய் சொல்லிகொண்டிருந்தால் தன் தலையிலே மண் அள்ளிபோடுகின்றார் என்றே அர்த்தம்.







 கொசுறு


கறுப்புப் பணத்திற்கு காரணமானவர்கள்  நிம்மதியாக இருக்கிறார்கள் : மு.க ஸ்டாலின்






இவரின் நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு செல்லாத கலைஞரின் குடும்பத்தாரையும் கட்சி நிர்வாகிகளையும் வேறு எப்படித்தான் கண்டிப்பது?










கரன்ஸி விவாதம் ...

கரன்சி பிரச்சினை குறித்து பொதுவாக விவாதிக்க தயாரா என அருண்ஜெட்லி கேட்டிருந்தார், மன்மோகன் சிங்கினையே பங்கெடுக்க சொல்லுங்கள் என அவர் அழைப்பும் விடுவித்திருந்தார்


மன்மோகன்சிங்கின் பேச்சினை கேட்க தேசமே ஆவலாக இருந்த பொழுது இன்று அவர் பேசினார்


பெரும் பிரச்சினையில் மன்மோகனையே பேச அழைத்தார்கள், அவரும் பேசியாகிவிட்டது, நல்ல அரசியல் மாண்பு தெரிகின்றது




சுருக்கமாக ஆனால் யதார்த்தத்தை பேசினார் மன்மோகன் சிங்


அவர் பேச்சின் சாரம்சம் இதுதான்


இந்த திட்டத்தினை வரவேற்கின்றோம், ஆனால் நிர்வாக தரப்பில் ஏற்பட்ட பெரும் குழப்பத்தில் ஏழை மக்கள் பாதிக்கபடுகின்றனர், ரூபாயின் மதிப்பு வீழ்கின்றது, இனி மக்களுக்கு பாதிப்பில்லா திட்டங்களை அறிவிக்கலாம் என சொல்லியிருக்கின்றார் மன்மோகன்சிங்


சரி அவ்வளவு பெரிய அறிவாளியான மன்மோகன்சிங், இப்படி செய்திருக்கலாம் என ஒரு ஆலோசனை சொல்லியிருக்கின்றாரா? அல்லது சிக்கிகொண்ட அரசுக்கு இப்பொழுதாவது ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்கின்றாரா என்றால் இல்லை


அதாவது இதனை செய்யவேண்டும், செய்தால் இப்படித்தான் நடக்கும், சில சர்சைகள் கஷ்டங்கள் வரும், வந்துவிட்டது என சொல்லியிருக்கின்றார், ,மாற்றுவழி சொல்லவில்லை


மாற்றுவழி இருந்தால் இந்நேரம் சொல்லி காங்கிரசார் அசத்தி இருக்கமாட்டார்களா?


நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆட்சி கவிழ்ப்பு எல்லாம் சாத்தியமே இல்லை என்பதால் இந்த எதிர்கட்சியினர் இவ்வளவுதான் செய்யமுடியும், செய்திருக்கின்றார்கள்


இத்தோடு முடியும் சங்கதி அல்ல, இனி ஜிஎஸ்டி அமல்படுத்தினால் சட்டென அடுத்ததொரு அதிர்வு வரும், பல விலைகள் கூடும். ஆனால் அது காங்கிரசாலே அறிமுகபடுத்த்தபட்ட சீர்திருத்தம்


நெருப்பாற்றினை கடந்துகொண்டிருக்கின்றது மோடி அரசு, இன்னும் ஏராளம் வரும்


அவற்றிற்கெல்லாம் அசைந்துகொடுப்பவராக மோடி தெரியவில்லை.


சரி ஒரு பிரச்சினையில் ஒரு அனுபவஸ்தரை எதிர்கட்சி பிரமுகரை அழைத்து பேச சொல்லி ஜனநாயக நாட்டு மாண்பினை காத்திருக்கின்றது மோடி அரசு


தமிழக அரசு என்ன செய்கின்றது?


ஒரு முதல்வர் நோயுற்றிருக்கும்பொழுது என்ன செய்யவேண்டும் என வழிகாட்ட, அண்ணா காலத்து கலைஞரும் எம்ஜிஆர் காலத்து பிரமுகர்களும் இன்னமும் உண்டு


அக்கட்சியினர் யாராவது இவர்களை அழைத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கின்றார்களா? அப்படி எதிர்பார்க்க முடியுமா?


ஒரு காலமும் இல்லை


இந்த விஷயத்தில் அருண்ஜெட்லியின் அழைப்பும், மன்மோகன் சிங்கின் பெருந்தன்மையும் நல்ல வழிகாட்டும் உதாரணங்கள்.






கொசுறு


நான் இந்தி கற்றுக்கொண்டால் என்ன? - மனுஷ்யபுத்திரன்

இவர் இந்தியில் மட்டும் எழுத தொடங்கிவிட்டால் இந்தி தெரிந்தவர்கள் பாடு அதோ கதிதான், மனிதர் கவிதை எழுதியே அவர்கள் இந்தியினை மறக்கடித்துவிட மாட்டாரா?

இதனை கட்சி தலமையிடம் அல்லவா சொல்லவேண்டும்? ஏன் தனியாக புலம்பிகொண்டிருக்கின்றார்?


ஓஹோ இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி மீது ஆசை வந்துவிட்டது,

பதவிக்காக எல்லாம் திமுகவினர் இந்தி படிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்களா? கட்சியின் கொள்கை வளர்ச்சி அப்படி இருக்கின்றது.




 


இனிய நன்றி நல்கும் நாள் வாழ்த்துக்கள்...




Image may contain: flower, plant, nature and text


https://youtu.be/-BQSOkkoDjc

இன்று நன்றி தெரிவிக்கும் நாளாம், நவம்பர் கடைசி வியாழ கிழமையினை அப்படித்தான் வெள்ளையர் சொல்கின்றனர்


வெள்ளையர் சொல்லிவிட்டால் உடனே உலகம் கொண்டாட கிளம்பும் அல்லவா?, கிளம்பிற்று ஆளாளுக்கு நன்றி நன்றி என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


இந்த முகநூலில் என்னோடு வரும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி நன்றி என நாமும் சொல்லி கொள்வோம்





என்னையும் மதித்து உற்சாகபடுத்துவதாலும், நண்பராக ஏற்றிருப்பதாலும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்

சீமானின் அல்ட்ராசிட்டிகள் எல்லை மீறி செல்ல, அதன் உண்மை நிலையினை எழுத தொடங்கியபின் நண்பர்கள் குவிந்தார்கள்

அதன் நாம் சிலாகித்து எழுதியதை சிலாகித்தவர்கள் வந்தார்கள்

கலைஞரை கலாய்க்க தொடங்கினாலும் வந்தார்கள், அவரை ரசித்தாலும் வந்தார்கள்

ஆக எமக்கு பல நண்பர்களை கொடுத்ததில் நன்றிகள் அங்கிள் சைமனுக்கும் கலைஞருக்குமே சாரும்.

இன்னும் புலிகள், வைக்கோ, திருமா, இஸ்ரேல், யூதர், அமெரிக்கா என பெரும் வில்லன்கள் வரிசை உண்டு, அவர்களுக்கும் நன்றிகள்

அவதாரம் குஷ்பூவிற்கும் சிறப்பு நன்றிகள், அவரை வியந்து பார்க்கும்பொழுது உற்சாகபடுத்தவே பலர் வந்தார்கள்,

இப்படி ஏராளமானோர்

அவர்கள் மூலமாக எவ்வளவோ நன்மைகள் கிடைத்தன, உலக அரசியல், பொருளாதாரம், பிராமணியம், திராவிடம், விஞ்ஞானம் என பல வகையான விஷயங்களை கூர்மைபடுத்த முடிந்தது

அற்புதமான சமையல் குறிப்புகளை பல நண்பர்கள் கொடுத்தார்கள்

குஷ்பூ வீட்டு போன் நம்பர் கொடுக்கின்றேன் என சொன்ன நண்பரை காணவில்லை, ஆனால்
நிச்சயம் எனக்காக தேடிகொண்டிருப்பார்,

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என அடிக்கடி கண்களை துடைத்துகொள்வேன்

அப்படி பல நண்பர்களை கொடுத்த முகநூல் இது.

ஒரு விஷயம் சொல்லமுடியும்

மொழி,இனம்,கட்சி,அரசியல் தாண்டி இந்தியன் எனும் வகையில் ஏராளமான நண்பர்கள் இருக்கின்றார்கள், அதுதான் மகிழ்ச்சிகுறியது அவர்களுக்கும் நன்றிகள்

எல்லா நண்பர்களுக்கும் நன்றி, கோட்டான கோடி நன்றி.







பத்திரிகையாளர்களை மோடி சந்திப்பதே இல்லையாம்....

பத்திரிகையாளர்களை மோடி சந்திப்பதே இல்லை, அதனை எதிர்கொள்ள அவர் பயப்படுகின்றார் என பலர் கிளம்பியிருக்கின்றார்கள்


ஒரு பிரதமராக மோடி நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரையாற்றுகின்றார், எல்லா நாட்டு சபைகளிலும் எல்லா நாட்டு அதிபர்களிடமும் பெரும் ஆலோசனைகளை நிகழ்த்தத்தான் செய்கின்றார்


நாட்டு மக்களுக்கான உரைகளை அந்தந்த நேரங்களில் நிகழ்த்திகொண்டே தான் இருக்கின்றார்


இதில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிகொண்டே இருக்க என்ன இருக்கின்றது? அரசின் அறிவிப்புக்கள் செய்திகளாக அவர்களுக்கு தரபடுகின்றன, இது இப்போதைய நிலைப்பாடு என அறிவிக்கபடுகின்றது


பின் ஒவ்வொரு பத்திரிகையாக அவர் அழைத்து சொல்ல என்ன இருக்கின்றது?


ஒரு பிரதமர் பார்லிமெண்டை கூட்டி பேசுவாரா? இல்லை ஒவ்வொரு பத்திரியாளையாக பார்த்து பேசுவாரா?


தொழிலதிபர்களும், நடிகர்களும், நடிகைகளும், போலி அரசியல்வாதிகளுமே பத்திரிகைகாரர்களை அழைத்து விழுந்து விழுந்து கவனித்து கெஞ்சுவார்கள்


அக்காலத்தில் இன்றிருக்கும் தகவல் தொடர்பு இல்லை, நேருவோ காமராஜரோ பத்திரிகைகள் மூலம் மக்களை தொடர்பு கொள்ளும் அவசியம் இருந்தது


இன்று நிலை என்ன?


டிவிட்டர் முதல் முகநூல் வரை ஒவ்வொருவருவரிடமும் தனிபட்ட முறையிலே பிரதமரின் செய்திகள் நொடியில் சென்றடைகின்றன‌


பத்திரிகை என்பது கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழக்கும் காலம், அப்படித்தான் சென்றுகொண்டிருக்கின்றது


மோடி என்ன செய்கின்றார், எங்கிருக்கின்றார், என்ன பேசுகின்றார் என நொடிக்கொரு முறை நமக்கெல்லாம் தெரிந்துகொண்டே இருக்கின்றது, இதில் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு எதற்கு?


அடைமழை பெய்யும்பொழுது யாராவது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்களா?


அப்படி எல்லாம் எல்லா மக்களுக்கும் தெரிந்துகொண்டிருக்கும் பொழுது,அவரின் அறிவிப்பும் கண்ணீரும் நொடியில் ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும் பொழுது எதற்கு தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு????


அவர் நாட்டிற்கு ஏதோ செய்கின்றார் அல்லது செய்ய முயற்சிக்கின்றார், நிச்சயம் சுயநலமோ அல்லது கட்சி நலமோ இருப்பதாக தெரியவில்லை


பார்க்கலாம், மிஞ்சி போனால் 3 ஆண்டுகள். அதன்பின் மக்கள் அவர் வேண்டும் என நினைத்தால் வருவார் இல்லாவிட்டால் ஓய்வாக அமர்ந்திருப்பார் அவ்வளவுதான்


விளைவுகளை பார்க்கலாம், நாட்டிற்கு நல்லதென்றால் பாராட்டலாம், சரி இல்லை என்றால் அவரை அடுத்த தேர்தலில் வீட்டிற்கு அனுப்பலாம்


அதனை விட்டுவிட்டு அவர் இப்படி செய்யவில்லை, பத்திரிகையாளரை சந்திக்கவில்லை என்பதெல்லாம் குதர்க்கம்


ஒன்று புரிகின்றது


அவர்மேல் தனிபட்ட குற்றசாட்டோ பெரும் குறைகளோ இல்லை, அவருக்கு குடும்பமும் இல்லை, குடும்பத்தார் அவருடனும் இல்லை


எந்த வகையில் அவரை விமர்சிக்கலாம் என பார்த்துகொண்டே இருக்கின்றார்கள்


அம்பானி, அதானி என்பார்கள், உலகம் சுற்றுகின்றான் என்பார்கள் (ஒரு பிரதமர் மற்ற நாடுகளுக்கு சென்று சில திட்டங்களை ஈர்ப்பது தவறா?), இன்னும் ஏராளம் சொல்வார்கள்


கருப்புபணம் ஒழிப்பில் அவரை நேரடியாக விமர்சிக்க முடியாது என்பதால் தகுந்த மாற்றுவழி செய்யவில்லை என கிளம்பிவிட்டார்கள்


இப்பொழுது பத்திரிகையாளர் மாநாடு நடத்தவில்லை என்கின்றார்கள்


அவர் சந்திக்கின்றாரோ இல்லையோ, மோடியின் ஆட்சி உள்ளங்கை நெல்லிக்கனி, மக்களுடன் அவர் தொடர்பிலே இருக்கின்றார், அடிக்கடி வேண்டுகோளோ கோரிக்கையோ வைத்தபடியே வலம் வருகின்றார்


இந்த அப்பல்லோவில் என்ன நடக்கின்றது என யாருக்காவது தெரியுமா? ஒரு தகவல் 100% உண்மையோடு வெளிவந்திருக்கின்றதா?


இவ்வளவிற்கும் மாநில முதல்வரின் உடல்நிலை செய்தி


இதனை பற்றி எல்லாம் கேட்கமாட்டார்கள், மாறாக மோடி ஏன் பத்திரிகையாளரை சந்திக்கவில்லை என குதிப்பார்கள்.


அப்படி பத்திரிகைகள் என்ன உண்மையினை எழுதுகின்றன?, தைரியமிருந்தால் அப்பல்லோ பற்றி எழுதட்டும் பார்க்கலாம்


இவர்கள் பத்திரிகையாளர்களாம், இவர்களிடம் மோடி பேசவில்லையாம் கவலை வேறு.

புரிந்துகொண்டு வாருங்கள், ஒரு குழப்பமும் இருக்காது...



மனிதருக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை, கொஞ்சமேனும் ரசனை இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு மாதிரி திரிகின்றார்


இது கீழ்பாக்கம் கேஸா அல்லது கோபாலபுரத்தில் வாசலில் கட்டபட்டிருந்த ஜந்து சங்கிலி அவிழ்ந்து முகநூலுக்கு வந்ததா என்றே புரியவில்லை


அதாகபட்டது அக்காலத்திலிருந்தே பெரும் போராட்டம் நடத்துவது கலைஞர் ஸ்டைல்.


அரசாணையினை எரிப்பது, எதிலும் கருப்பு மை பூசுவது என தீவிரமாக போராடிய போராளி அவர், அவ்வகையில் ரூபாய் நோட்டுகளையும் எரிப்பாரோ, கரி பூசுவாரோ என சொன்னால்


ஒரு சராசரி மனிதனுக்குள்ள சாதாரண ரசனையுமின்றி ஏய் என குதிக்கின்றார் மனிதர், மிக மிக சிரியசானவராக திரிகின்றார்


போங்கள் அய்யா, முகநூலில் கம்பு சுத்தி ஒன்றும் ஆகாது, கிடைப்பவர்களை கலாய்த்துவிட்டு நகரலாம். மற்றபடி கொள்கை, கட்சி,புரட்சி, காவல், தற்கொலைபடை எல்லாம் இங்கு சாத்தியமில்லை


பெரியாரின் தடி உம்மிடம் இருக்கின்றதோ இல்லையோ, இப்படியே புலம்பி சீரியசாக அலைந்தால் கலைஞரின் வீல்சேர் அல்லது அப்பல்லோ படுக்கை என ஏதாவது ஒன்று விரைவில் உமக்கு கிடைக்கும்


இம்மாதிரி சீரியஸ் பார்ட்டிகள் எல்லாம் சென்றுவிடுங்கள்,


அங்கே பார்த்தீர்களா, ஹேய்ய்.. இது மோடி பல்டி, இது கலைஞர் தந்திரம், இது ஜே கோல்மால், இது சீமானின் பிராடு, இது வைகோவின் பரிதாமம், இது விஜயகாந்தின் காமெடி இது திருமாவின் குருமா என ரசிக்க ஏராளம் உண்டு.


தன்னை தலைவன் என சொல்லிகொள்பவனை போட்டு ஜாலியாக போட்டு கலாய்க்கும் , எதனையுமே சிரியசாக எடுக்காதவர்கள் இங்கு இருக்கலாம்,


மகா சீரியசானவர்கள் இங்கு தேவையே இல்லை


நடிகர்களை போட்டு வறுக்கலாம், அவ்வப்போது உலக விவகாரங்களை கவனிக்கலாம்


முக்கிய செய்திகள் என்றால் இன்னொரு நோக்கில் பார்க்கலாம்


குஷ்பூ போன்ற அவதாரங்கள் என்றால் சிலாகிக்கலாம்.


உலக அரசியல் எப்படி இருக்கின்றது, அது இந்தியாவில் எப்படி எதிரொலிகின்றது என்பதை பார்க்கலாம்


எதனையும் நாம் மாற்ற முடியாது, நாமெல்லாம் புரட்சியாளர்களோ அல்லது சமூகத்தை திருந்த வந்தவர்க்ளோ அல்ல. நம்மால் முடியவும் முடியாது.


காந்தியும், காமராஜரும் திருத்தமுடியா தேசத்தையா நாம் திருத்த போகின்றோம், நெவர்.


ஆனால் சிரித்து மகிழலாம், அப்படி ஆகிவிட்டது நிலை.


பார்க்கும் விஷ்யங்களை வேறுவிதமாக பார்கின்றோம், எப்படி எல்லாம் கட்சி தலைவர்கள் ஏமாற்றுகின்றார்கள் என வேடிக்கையாக சொல்கின்றோம், அதோடு நகர்கின்றோம்


எது நம் மனதிற்கு மகா வேடிக்கையாகவும் அல்லது துக்கமாகவும் மாறுகின்றதோ அதனை பகிர்கின்றோம் , இதனை விரும்புகின்றவர்கள் கூட வரலாம்


அதனை விட்டுவிட்டு உங்கள் கட்சி விசுவாசத்தையும், உங்கள் பக்தியினையும் என்னிடம் காட்ட அவசியமில்லை


அதனை உங்கள் தலமையிடமோ, Gopal Krishnan நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையான தலைவனின் டவுசரிடமோ முடிந்தால் அதற்குள்ளோ (அதாவது கட்சியின் செயற்குழுவிற்குள்ளோ) சென்று உங்கள் விசுவாசத்தை காட்டுங்கள்


எந்த கட்சிக்குள்ளும் சிக்காமல், எந்த தலைவனுமில்லாமல் அதே நேரம் கொஞ்சமேனும் நாட்டுபற்றோடு சிந்திப்பவன் இங்கே இருந்தால் போதும்


நான் பாஜக அல்ல, மசூதி இடித்த அந்த கட்சி எனக்கு விருப்பமானதே அல்ல., ஆனால் நாடு எனும் அளவில் மோடி எனும் பிரதமர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒரு குடிமகனாக ஆதரவு உண்டு என்பது மட்டுமே நான் சொல்வது


கலைஞரை பற்றி எழுதியதால் நான் திமுகவோ, சீமானை பற்றி சாடியதால் திமுகவோ என எவனாவது இணைந்திருந்தால் நீங்களும் விலகுங்கள்


கலைஞரை பற்றி எழுத எல்லா துறையிலும் ஆட்கள் இருப்பார்கள், அவரின் சாதனை அப்படி, அதற்காக திமுக முத்திரை குத்துவது எப்படி?


எங்கள் தளபதி யார் தெரியுமா? என்பதை மு.க அழகிரியிடம் சென்று கேளுங்கள், விளக்கம் நன்றாக கிடைக்கும்


நாம் எந்த கட்சியும் இல்லை, எந்த கட்சியும் யோக்கியமும் இல்லை


கட்சி வேறு, நாடு வேறு


கட்சிகள் வரும் போகும், அவர்கள் கொள்கை வரும் போகும் ஆனால் நாடு என்பது 120 கோடி மக்களின் வாழ்வு, மூச்சு எல்லாம்


அதனால் கட்சி அபிமானம் தாண்டி நாட்டை பாருங்கள், மாநிலத்தை பாருங்கள்


அதனை புரிந்துகொண்டு வாருங்கள், ஒரு குழப்பமும் இருக்காது.


இதனை எத்தனை முறைதான் உனக்கு சொல்வது Gopal Krishnan , இனி மிதிதான்


அதனால் முன்னாள் நண்பர் Gopal Krishnan அவர்களே, மிதிக்கின்றேன், சாணி காலோடு மிதிக்கின்றேன்


ஆனானபட்ட இஸ்ரேலையும் அதன் மொசாத்தையுமே , ஏன் பிரபாகரனையுமே கிழித்து போட்டு விமர்சிப்பவர்கள் நாங்கள்,


நீ எல்லாம், உன் கட்சி எல்லாம் ச்சீ போடா...


ஓடிப்போ இத்தோடு ஒழி.










கொசுறு

லண்டனில் வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக அமர்ந்து மது அருந்த அனுமதிக்கும் நிர்வாண பார் ஒன்று திறக்கப்பட உள்ளது

இதற்கு எதற்கு இப்படி சிறப்பு அறிவிப்பு??, புல்லாக ஏற்றிவிட்டால் இறுதியில் தானாக அந்த நிலைக்கு சென்றுவிட போகின்றார்கள், தமிழகத்தில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

ஒருவேளை குடித்து ஆடை களைந்துவிட கூடாது எனும் கவனத்தில் அங்கு குடிமக்கள் சரிவர அங்கு குடிக்கவில்லையோ, ஆடை களைந்தபின் அந்த கவலையின்றி குடிக்கலாம் என உற்சாகபடுத்துகின்றார்களோ??


இங்கே நாம் கடைசியாக செய்வதை இவர்கள் முதலிலே செய்யபோகின்றார்களாம் என்ன லண்டன் வாசிகளோ?