
களத்தூர் கண்ணமாவில் நடிக்கும்பொழுது கமலஹாசனுக்கு 6 வயது, அவரது நடிப்பில் கவரபட்ட மெய்யப்ப செட்டியார் செல்லமாக, "என்ன வேண்டும்?" என கேட்டார்
கமலஹாசன் கைகாட்டியது செட்டியார் காரினை, அதுபோன்ற ஒன்றை அவர் பரிசளித்தும் மகிழ்வித்தார்
நடிப்பில் 6 வயதிலே கார்வாங்கிய ஒரே நடிகர் கமலஹாசனே, பின்னாளில் ஏதோ ஒருவிழாவில் சிவாஜிகணேசன் "வாய்யா கோடீஸ்வரா.." என கமலை அழைத்த செய்தியும் உண்டு
அப்படிபட்ட கமலஹாசன் கவுதமி சொத்தினை ஆட்டையினை போடும் அவசியம் என்ன? ஆனால் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுகின்றார்கள்
உண்மை அவர்களுக்கும் தெரியும், ஆனால் உண்மை விற்பனையினை கூட்டுமா? பரபரப்பினை கொடுக்குமா? கொடுக்காதல்லவா?
அவரை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும், பணத்திற்கு அலையும் மனிதர் இல்லை அவர், அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் அவர் இந்தியாவின் பெரும் பணக்காரராக மாறி இருக்கலாம், மாதத்திற்கொரு படம் ரிலீஸ் செய்திருக்கலாம்.
நிச்சயம் பண ஆசை பிடித்த மனிதர் அவர் அல்ல, அப்படி ஆசை இருந்திருந்தால் அரசியலில் சில கட்சிகளுக்கு பச்சை கொடி காட்டினாலே தீர்ந்தது சிக்கல்.
அன்றே பணத்திற்காக அல்லாமல் நடன கலைஞர் வாணியினையும், பின் சினிமா தொடர்புடைய சரிகாவினையும்தான் தேர்ந்தெடுத்தார், கவுதமியின் தொடர்பும் சினிமா சம்பந்தமாகவே தொடங்கியது
எம்.ஆர் ராதா சொல்வது போல "டாக்டர் நர்ஸ் பொண்ணத்தான் கட்டணும், மேனேஜர் ஆபிசில டைப் அடிக்கிற பொண்ணத்தான் கட்டணும், கொத்தனார் சித்தாளத்தான் கல்யாணம் பண்ணனும், அப்பதான் வாழ்ழ்கை ஸ்மூத்தா போகும்"
கமலின் வாழ்க்கையினை பங்குபோட்ட பெண்களும் இப்படித்தான் அவரால் அனுமதிக்கபட்டார்களே அன்றி, பணத்திற்காய் அல்ல
அன்றைய காலங்களிலே பணக்கார பெண்கள் அவரின் பார்வைக்கு தவமிருந்த காலங்கள் உண்டு, அவர் ஏறேடுத்தும் பார்த்ததில்லை. அவரின் வாழ்வு அதனை சொல்கின்றது
1990 களில் அவரை சுற்றிய பெண்களின் கூட்டத்தை விட, நகைகடை கூட்டத்தில் சுற்றிய பெண்கள் குறைவு
பாகிஸ்தானுக்கு ஒரு இம்ரான்கான் எனில் இந்தியாவிற்கு ஒரு கமலஹாசன் என்ற நிலை இருந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல, வரிசையில் நின்றதில் பல கோடீஸ்வரன் வீட்டு பெண்களும் உண்டு
அந்த கமலஹாசன் கவுதமியினை சொத்திற்காக சேர்த்தாராம். சொத்து தகறாறில் பிரிந்தார்களாம்
நல்லவேளையாக கமலை நடிகராக்கியதே கவுதமி என சொல்லாதவரை நல்லது
No comments:
Post a Comment