மோடி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும், சர்ச்சைகள் இருக்கட்டும், அது வேறு விஷயம்
ஆனால் நாட்டின் பிரதமர் கையால் விருது வாங்கமாட்டேன் என புறக்கணிப்பது நாட்டுபற்று ஆகாது, அது கண்டிக்கதக்கது, இது இந்நாட்டின் பிரதமர் எனும் உச்சபதவியினையே அவமதிப்பது
ஒரு நீதிமன்றம் ஒருவனை அழைக்கும்பொழுது செல்லாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும், பிடித்து உள்ளே தள்ளிவிடும் தேசம் இது, ஆனால் பிரதமரின் அழைப்பினை புறக்கணித்தால் அவர் புரட்சியாளன், புதுமை பித்தன் இன்னும் பல அழிச்சாட்டிய பட்டங்கள்.
இவரை கொண்டாட ஒரு கும்பல் வேறு, அத்தனைபேரையும் மவுலிவாக்கம் கட்டடத்தின் மீது நிறுத்தியிருக்கவேண்டும்
இத்தேசத்தின் முதல் சாபக்கேடு இம்மாதிரியான எழுத்தாளர்கள் எனப்படும் அறிவுஜீவி இம்சைகளே, ஏதும் சொன்னால் நம்மையும் காவி கும்பல் என்பார்கள்
இந்த அக்சையா முகுல் என்பவரால் இந்த தேசம் கண்டுவிட்ட நன்மை என்ன? கால்பிடி கோதுமை உற்பத்தி செய்தவரா? அல்லது நாட்டு மக்களுக்கு உழைத்தவரா?
ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, ஆனால் இவர் பிரதமர் இருக்கும் மேடையில் அமரமாட்டாராம், அப்படி அமர்ந்தால் இவருக்கு அவமானமாம்
எப்படி பட்ட அட்டகாசம்?
இம்மாதிரியான ஆட்கள் நிச்சயம் தேச அவமானம், மிக கடுமையாக கண்டிக்கவேண்டிய விஷயம் இது
நாட்டுபற்று இல்லாத, நாட்டின் கவுரவத்தினை மதிக்காத எந்த எழுத்தாளனின் படைப்பும் அவரின் மனம் போல குப்பையே, இந்த தேசத்தின் தூசிகளில் அவரைப்போல் ஒன்றே
No comments:
Post a Comment