Tuesday, November 22, 2016

அமெரிக்க அதிபர் கென்னடி : ஓர் நினைவாஞ்சலி



Image may contain: 1 person , suit


 தோற்றம் : 20-05-2017      ::       மறைவு : 22-11-1963



எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள்


இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர்.


அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை


அன்றைய செம்பூதம் ரஷ்யா, ஹிட்லரை ஒழித்துகட்டி தானே உலகின் ராஜா என சொல்லிகொண்டிருந்தது, ஸ்புட்னிக் என விண்வெளிக்கு ராக்கெட் விட்டு, நாயினையும் பின் மனிதனையும் அனுப்பி, வானில் கடவுளை காணோம் என அறிவித்துகொண்டிருந்தார்கள்


சோவியத், சீனா, வடகொரியா, வியட்நாம் என உலலில் பாதிக்கு மேல் செங்கொடி பறந்த காலம், அது கூட பிரச்சினை இல்லை அமெரிக்க காலடியில் கியூபா செந்தேசமாக மலர்ந்ததுதான் சிக்கல்


கியூபா அருகே சோவியத் ஏவுகனை தளம் அமைக்கும் பொழுதுதான் கென்னடி சீறினார், சீற்றம் என்றால் மகா சீற்றம். உலகம் அலறியது. அணுஆயுதப்போர் தொடங்கும் நொடிக்கு முன் சோவியத் பணிந்து வெளியேறிற்று


முன்னாள் அமெரிக்க கப்பல்படை வீரரான கென்னடியின் சில வியூகங்கள் அந்நாளில் உலகினை அச்சுறுத்ததான் செய்தன.


பெர்லின் சுவர் சர்ச்சையில் ரஷ்யாவுடன் நேரடியாக மல்லுக்கு நின்றதும் அவரின் இன்னொரு பக்கம்.


உலகின் மிகப்பெரும் ஆளுமையானார் கென்னடி, என்ன பெரிய சோவியத் ராக்கெட், விரைவில் அமெரிக்கன் நிலாவில் கால்பதிப்பான் என பகிரங்கமாக சவால் விட்டவர் அவர்தான்


அவர் தலமையிலே அமெரிக்க விண்வெளிதுறை மாபெரும் பாய்ச்சல் காட்டிற்று


கென்னடி விரைவில் கியூபாவினை நசுக்குவார் என உலகம் எதிர்பார்த்த வேளையில்தான் அவரின் மரணம் நடந்தது, நிச்சயம் கென்னடி அதற்கான ரகசிய திட்டத்தில் இருந்தார் என்கின்றார்கள்.


வீதியில் காரில் கைகாட்டியபடியே சென்றபொழுது ஓஸ்வால்ட் என்பவன் தலையில் சுட்டான். ஸ்னைப்பர் தாக்குதல் அது. சம்பவ இடத்திலே இறந்தார் கென்னடி


விசாரணை நடக்கும்பொழுதே அந்த ஓஸ்வால்ட்டினை ரூபி என்பவன் சுட்டான், பின் ரூபியினை விசாரித்ததில் மனநோயாளி என சொன்னார்கள்


இன்றுவரை கென்னடியினை கொன்றது யார் தெரியாது, பல கதைகள், அனுமானம், உள்குத்துக்கள், அமெரிக்க உளவுதுறைக்குள் ஊடுருவியிருந்த அந்நிய சக்திகள் என ஏராள சங்கதிகள்


இன்றுவரை முடிவு தெரியாதே தவிர,சில பதிலடிகள் நடந்தன‌


3 ஆண்டுகளில் அதுவரை விட்டுவைக்கபட்டிருந்த புரட்சியாளன் சே கொல்லபட்டான், கியூபா பெரும் அடியினை சந்தித்தது.


அதோடு கென்னடி கொலை மர்மம் சொல்லபடாமலே மூடபட்டது


பின்னாளில் அமெரிக்கர் நிலாவில் கால்பதித்தனர், பின் அமெரிக்கா பல போர்களை நடத்தியது, இன்று பெரும் எதிரி இல்லா தனிகாட்டு ராஜாவாக ஆட்டம் போடுகின்றது


இவை எல்லாம் கென்னடியின் கனவுகள், பிண்ணாளில் நிறைவேறின. அதனால்தான் அமெரிக்கர் மனதில் கென்னடிக்கு நீங்கா இடமுண்டு


மர்லின் மன்றோவுடன் கிசுகிசுக்கபட்டவர்தான் கென்னடி, கடுமையான கிசுகிசுப்பு.


ஆனால் அது அமெரிக்கர்களுக்கு பிரச்சினையே அல்ல, அவர் முனிவர் அல்ல அவள் பத்தினியும் அல்ல என அவர்களே முடிவு செய்து அவ்விஷயத்தை பிறந்தள்ளினார்கள்


காரணம் கென்னடி நாட்டிற்காய் செய்திருந்த காரியங்கள் அப்படி.


பல இக்கட்டான நிலையில் அதுவும் சோவியத் யூனியன் விண்வெளி யுத்த பலத்தில் முண்ணணியில் நின்று சவால் விட்ட வேளை, அமெரிக்காவின் பலம் குறைந்திருந்த வேளை துணிச்சலுடன் நாட்டை வழிநடத்திய தலைவன் என அவருக்கு பெரும் அடையாளம் இருந்தது


அது உண்மையும் கூட, அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவினை நொறுக்கி தள்ளும் ஆற்றல் சோவியத்திடமே இருந்தது.


அந்த காலகட்டத்தில் பெரும் துணிச்சலுடன் நாட்டை வழிநடத்தி, என்னென்ன காரியங்களில் நாம் சாதிக்கவேண்டும் என பட்டியலிட்டு சாதிக்க காரணமாயிருந்தவர் கென்னடி


இவ்வளவிற்கு நிலாவில் அமெரிக்க கொடி பறக்கும் முன்னமே அவர் கொல்லபட்டார். ஆனால் அவர் பாதையில் நடந்த அமெரிக்கா வெற்றிகொடி நாட்டிற்று


கென்னடி குடும்பத்தார் அரசியலுக்கு வந்திருந்தால் வெற்றி பெறும் அளவிற்கு கென்னடி எனும் பெயருக்கு இன்றுவரை செல்வாக்கு உண்டு. என்ன சாபமோ தெரியவில்லை அவரின் குடும்பத்தார், சகோதரர் என எல்லோரும் அற்ப ஆயுளிலே இறந்தனர்


மறுமணம் செய்த மனைவி அரசியலில் இருந்து ஒதுங்கினார், இல்லை என்றால் அவர் அமெரிக்க அரசியலை ஆட்டியிருக்கலாம்


கென்னடியின் குடும்பத்தாருக்கான சாபம் அவருக்கு பின் யாரும் வரமுடியாமல் போயிற்று


கென்னடியிடமிருந்து ஆளாளுக்கு எல்லோரும் நல்ல பாடங்களை படித்தனர், அவரின் பெரும் பொன்மொழிகள் எல்லாம் உண்டு


"நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டிற்கு நீ என்ன செய்தாய்? என்பதை யோசி" என அவர் சொன்னது இன்று எல்லா நாட்டிற்கும் வேதவாக்கு


இப்படி நாடுகள் நல்ல விஷயம் எடுத்துகொள்ள, ஈழத்து புலிகள் வித்தியாசமாக யோசித்தார்கள்


கென்னடி, ராஜிவினை போல இழம் வயது தலைவர். இன்றுவரை கென்னடியினை கொன்றது யார் என அறிவிக்கபடவில்லை. அப்படி ராஜிவினையும் தடயமில்லாமல் கொன்றுவிட்டால்.....


அப்படித்தான் செய்தார்கள், தடயமில்லாமல் செய்வதில் தாங்கள் கெட்டிக்காரர்கள் என தங்களுக்கே தாங்களே சொல்லிகொண்டு செய்தார்கள்


உலகில் மனித வெடிகுண்டு மூலம் கொல்லபட்ட முதல் அரசியல்தலைவர் ராஜிவ்காந்தியே.


உலகிற்கே சவாலான கொலை அது.


கிட்டதட்ட ராஜிவ் கொலையும் கென்னடி கொலைபோலவே நடைபெற்ற ஒன்று, இதிலும் அதே அந்நிய சக்திகள், அதே போன்று இந்திய கட்சிக்குள்ளும், சில அதிகாரத்திற்குள்ளும் ஊடுருவிய புலிகள் என ஏராள சிக்கல்


ஆனால் இந்திய துப்பறியும் துறை, எதனை செய்யவேண்டுமோ அதனை செய்தது, வஞ்சகமாக மரகதம் சந்திரசேகர் போன்றோரை இழுத்துவிட்டு புலிகள் ஏற்படுத்த இருந்த பல பயங்கர குழப்பங்களை அது சமார்த்தியமாக தடுத்தது,


எதனை மறைக்கவேண்டுமோ, எது புலிகளின் சூழ்ச்சியோ அதனை மறைத்தது. அத்னைத்தான் செய்யவேண்டும் செய்தது.


கென்னடி கொலையில் ரூபி என்பவனை மனநோயாளி என விட்டதை போல, இந்திய குழு வைகோ என்பவரை அதே வகையறா என வெளியே தள்ளிய ஒப்புமையும் நடந்தது,


மனிதர் இன்றுவரை அதனை நிரூபித்தும் வருகின்றார்.


கென்னடியினை கொன்றவர்களை மறைமுகமாக தூக்கி உருத்தெரியாமல் அழித்தது போல, ராஜிவ் கொலை குற்றவாளிகளும் இல்லாமல் போயினர்.


இன்று கென்னடியின் நினைவு நாள்


அவரை கொன்றதால் அமெரிக்காவினை அழிக்கமுடியும் என்பதா? அவர் கனவு கண்டதை விட அமெரிக்கா பன்மடங்கு வளர்ந்திருக்கின்றது


நல்ல தலைவர்களின் தியாகம் ஒருநாளும் வீணாகாது,


5 துண்டுகளாக உடைய இருந்த அமெரிக்காவினை ஒன்றுபட்ட அமெரிக்காவாக கட்டி காத்தவர் லிங்கன் என்றால், அந்த அமெரிக்கா உலகினை ஆள வழிவகுத்தவர் கென்னடி.


உலக வரலாற்றில் பெரும் தடம் பதித்துவிட்ட வசீகர தலைவன் அவர், ஒரு துணிச்சல் மிக்க தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரும் உதாரணம் கென்னடி.


இந்தியாவில் இந்திரா, ராஜிவ் என துடிப்பான தலைவர்கள் இருந்தனர்


அதன் பின் அந்த இடம் காலியாயிற்று


காலம் மோடியால் அந்த இடத்தினை நிரப்புமா? என்பது தெரியவில்லை, ஆனால் வாய்ப்பு இருக்கின்றது


இந்திய பழமொழி ஒன்று உண்டு "ராமன் ஆண்டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன? ராமன் செருப்பு ஆண்டால் என்ன?"


அயோத்தி செழிக்கட்டும்"


அவ்வாறே காங்கிரஸ் ஆண்டால் என்ன, பாஜக ஆண்டால் என்ன? பாரதம் செழிக்கட்டும் என்பதே எமது பிரார்த்தனை.


இந்திராவினையும், ராஜிவினையும் சில காரியங்களை செய்யாமல் தடுத்த காலம், மோடிக்காவது அதனை செய்ய அனுமதிக்கட்டும்

















No comments:

Post a Comment