Friday, November 11, 2016

மீத்தேன் திட்டத்தினை ரத்து செய்திருக்கும் மோடிக்கு நன்றி...

யாரேனும் நல்ல இந்தியன் தஞ்சாவூர் பக்கம், டெல்டா பக்கம் இருந்தால் மீத்தேன் திட்டத்தினை ரத்து செய்திருக்கும் மோடிக்கு நன்றி சொல்லுங்கள்


நிச்சயம் இது வரவேற்கதக்கது, தமிழக கோரிக்கையினை ஏற்றிருக்க்கின்றார்கள், நியாயமான விஷயங்களுக்கு செவி மடுத்ததற்கு வாழ்த்துக்கள்


ஆக இந்திய திருநாட்டில் ஒரு தேசிய கட்சியே நம்மை நல்லவிதமாக நடத்த இயலும் என இனியாவது சிந்திக்கலாம்


அதாகபட்டது, திமுக அதிமுக என ஆதரித்து அவர்கள் ஏதாவது ஒரு தேசிய கட்சியினை ஆதரித்து அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்க என்ன இருக்கின்றது?


இதுவரை அப்படி என்ன கிடைத்தது? ஒரு மண்ணாங்கட்டியுமில்லை ஆனால் இழந்தது அதிகம்


ஆக இந்த திராவிட கட்சிகள் செய்ததெல்லாம் புரோக்கர் வேலை, தமிழர்களே நீங்கள் எங்களை ஆதரியுங்கள், நாங்கள் டெல்லி ஆட்சியினை ஆதரிக்கின்றோம் உங்களுக்காக பேசுகின்றோம்


நாம் நேரடியாக மத்திய அரசுடன் பேச இவர்கள் எதற்காக இடையில்?? கமிஷனுக்கா?


இந்த தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் கட்சி வளர்க்கும் வித்தையும் தெரியவில்லை


இந்த பாஜகவினையே பாருங்கள் எத்தனை விஷயம் சொல்லலாம்


தேசிய நெடுஞ்சாலை, கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்பொழுது எவ்வளவு வேகமாக வரலாம், செய்தது யார்?


இந்திய மீணவர்கள் இலங்கை கடலில் வாரத்தில் சிலநாட்கள் மீன் பிடிக்கலாம் என செய்திருப்பது யார்?


இதோ கருப்பு பணத்தினை எல்லாம் வீதிக்கி கொண்டு வந்திருப்பது யார்?


தமிழரான கலாமிற்கு பெரும் அங்கீகாரம் கொடுத்திருப்பது யார்?


இன்று மீத்தேனை ரத்து செய்திருப்பது யார்?


நிச்சயமாக பாஜக, சொல்லி வாக்கு கேட்கலாம், சரி இம்மாதிரி சாதனைகளை பத்திரிகைகளில் வர செய்து கட்சி வளர்க்கலாம்


இல்லாவிட்டால் ஒரு குஷ்பூ போல ஒரு வசீகர தலமையினை தமிழக பாஜகவிற்கு கொண்டுவரலாம், தமிழக காங்கிரசில் எலிகள் பின் வாலாய் இருப்பதை விட, குஷ்பூ அங்கு சிங்கத்தின் தலையாக இருப்பார்


போகிறார் என்கின்றார்கள். போனால் அவருக்கும் நல்லது தமிழக பாஜகவிற்கு இன்னும் நல்லது.


இது இந்தியநாடு, அவ்வகையில் இம்மாநிலம் திராவிட கட்சிகளுக்கு பட்டா போட்டு கொடுக்கபட்டது அல்ல‌


அப்படி ஏதாவது உருப்படியாக கிழித்திருந்தாலும், ஆமாம் அவர்கள் பரவாயில்லை எனலாம்


ஒரு விஷயமும் உருப்படியாக செய்யாதபொழுது தேசிய கட்சிகள் முயன்று பார்ப்பதில் தவறில்லை, அப்படியாவது நன்மை விளையட்டும்


மீத்தேன் நிறுத்தம் போல‌


எத்தனை போராட்டம், எவ்வளவு குமுறல். இதோ மீத்தேன் நிறுத்தம் என அறிவித்துவிட்டார்கள்


பெரும் மகிழ்வும், நன்றி பரபரப்பும் வரவேண்டும் அல்லவா?


வராது, அல்லது வரவிடமாட்டார்கள்


திராவிட கட்சிகளுக்கும் தமிழக மீடியாக்களுக்கும் உள்ள உறவு அப்படி


ஏதும் சர்ச்சை என்றால் பத்திரிகைகளும் கட்சிகளும் கூடி அழுவார்கள், தேசிய கட்சி தமிழனை கொல்வதாக ஒப்பாரி வைப்பார்கள், கதறுவார்கள்.


ஊர்வலம் நடத்துவார்கள், 10 பேர் சாகவேண்டும் இல்லா அழிச்சாட்டியம் எல்லாம் நடக்கும்


அதுவே மத்திய அரசு நல்ல விஷயங்களை செய்யும்பொழுது மகா அமைதியாக வாயினை மூடி வீட்டுக்குள், கட்டிலுக்கு அடியில் பதுங்கிகொள்வார்கள்,


ஊடகங்களுக்கு சமிக்கை காட்டியிருப்பதால் அவைகளும் மைக்கையும், கேமராவினையும் எங்காவது திருப்பிகொண்டு சமூக கடமை ஆற்றிகொண்டிருக்கும்.


தமிழனை அப்படியே வைத்து தனக்கு தேவைக்கு பயன்படுத்திகொள்ள அந்த கட்சிகளுக்கும் தமிழக மீடியாக்களுக்கும் உள்ள ரகசிய ஒப்பந்தம் அப்படி.


இதனை உடைக்காமல் தமிழக மாற்றம் சாத்தியமில்லை.


நல்ல விஷயங்களை வரவேற்கவேண்டும் அல்லவா?, நாம் வரவேற்போம்


இப்படி தமிழருக்கு ஆதரவாக இருந்தால், அடுத்த‌ ஆட்சி நிச்சயம் தமிழகத்தில் உங்களுக்குத்தான்.


ஐந்து ஆண்டு ஒரு தேசிய கட்சிக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஒன்றும் குறைந்துவிடாது,


பன்னீர் செல்வம் வழிநடத்தும் மாநிலத்தில் இன்னொருவர் அந்த பதவிக்கு வந்தால் என்ன கெட்டுவிடும்? அல்லது இன்னும் கெட என்ன இருக்கின்றது?


வாழ்த்துக்கள் மோடி,


(அப்படியே குஷ்பூ பிஜேபி பக்கம் வந்தால் தமிழக பிஜேபி தலைவராக ஆக்குங்கள் :) )






கொசுறு


சி.பி.எஸ்.சி .பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து தவறாக குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை நீக்கக்கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரிடம் மனு கொடுத்தார்.


தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்க, மணல் கொள்ளை முதல் மயான கொள்ளை வரை நடக்க, அன்னாரின் பிரச்சினை எங்கே இருக்கின்றது, எல்லாம் ஜாதி வோட்டு


எப்படியோ ஒரு வழியாக லேடி சரத்குமார் ஒருவர் உருவாகிகொண்டிருகின்றார்




நீங்கள் ஆடுங்கள் அம்மணி, அப்பல்லோவில் இருந்து அவர் வரும் வரை ஆடுங்கள் அம்மணி.


நாடார் ஜாதிக்காக உழைக்கதானே உங்களை எம்.பியாக டெல்லிக்கு அனுப்பி இருக்கின்றார்கள்








No comments:

Post a Comment