Friday, November 18, 2016

இடைத்தேர்தல் இடையே கிடைத்தவை...

முதல்வர் நாற்காலியில் மட்டும்தான் கருணாநிதியின் முதுகு சாயுமா : விந்தியா


யார் முதுகு எப்பொழுது எதன் மீது சாயும் என்பது இவருக்கு சிலபேரினை பற்றி தெரிந்திருக்கலாம், ஆனால் கலைஞர் முதுகல்ல அவரின் ... பற்றி கூட இவருக்கு தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை


அம்மணி, நீ இருக்கும் கட்சி கலைஞரின் கட்சியில் இருந்து பிரிந்து சென்றது, அந்த ராமச்சந்திரன் எனும் நடிகனை புரட்சி நடிகராக்கியதே அவர், உங்களின் புரட்சி தலைவி அதிலிருந்தே உதித்தவர்.




அந்த சாயா முதுகின் உழைப்பில் அடிமட்ட உழைப்பில் உருவான கட்சியின் பிரிவில்தான் நீங்கள் இளைப்பாறிகொண்டிருக்கின்றீர்கள்


ஆக கலைஞரின் முதுகு அன்றே சாய்ந்திருந்தால் அந்த கட்சியுமில்லை, புர்ச்சி தலைவனுமில்லை, தலைவியுமில்லை, நீங்களுமில்லை.


அந்த முதுகு சாயாமல் இருப்பதால்தான் நீங்கள் எல்லாம் பேச முடிகின்றது


அது முதல்வர் பதவி என்றல்ல, எதிலுமே சாய்ந்து விடாதா அல்லது சாய்க்க முடியாத முதுகு


வளையாத வளைக்கமுடியாத முதுகு


கூலிக்கு குரல் எழுப்புபவர் எல்லாம் கலைஞரை கேள்வி கேட்கின்றாராம்


இது வேறொன்றுமில்லை, அம்மணி அடிக்கடி அக்கட்சியினரின் குனிந்த முதுகை அடிக்கடி பார்த்ததால் வந்த முதுகுமேனியாவினால் பேசிகொண்டிருக்கின்றது








ஜெ.  விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம் - அப்போலோ பிரதாப் ரெட்டி








இப்படி ஒரு மருத்துவமனை எங்காவது கிடைக்குமா? சுகமாகிவிட்டால் இனி செக்கப் மட்டும் வா என அனுப்பி வைக்கமாட்டார்களா?

விரும்பும்போது போகலாம் என சொல்வார்களா?


அது மருத்துவமனையா அல்லது வேடந்தாங்கல் சரணாலயமா?

டாக்டர் ரெட்டி வெரி நாட்டி





தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய மாநில அரசுகள்
இலங்கை அதிகாரிகளை சந்தித்து முறையிட வேண்டும் - ஸ்டாலின்

அதாவது தந்தை கடிதம் எழுதியது போல யாரும் எழுதகூடாது, இந்த அருமையான யோசனையினை அன்று ஏன் இவர் தந்தைக்கு சொல்லவில்லை


இப்பொழுதுதான் அரசியலில் குதித்திருக்கின்றார் என மனதை தேற்றிகொள்வோம்.







 தி.மு.க. தோல்வி பயத்தில்தான் இருக்கிறது..! சரத்குமார்



பாஜகவில் இணைய காலை 8 மணிக்கு சென்று விட்டு, 9 மணிக்கு மூச்சிறைக்க போயஸ் கார்டனில் விழுந்து கிடந்தவர் எல்லாம் பயத்தை பற்றி பேசுகின்றாராம்

திருச்செந்தூரில் திமுகவிடம் தோற்று 150 நாள் கூட ஆகவில்லை, அதற்குள் சத்தமா?


மனிதருக்கு மறதி அதிகம் போல‌




சீண்டி பார்க்கதீங்க…நான் மோசமானவன்: விஜயகாந்த்

வைகோவினை ஏன் மறைமுகமாக திட்டவேண்டும்???







வங்கி வரிசையில் நின்று கதறும் சில கிறிஸ்தவர்களுக்கு இந்த படத்தினை சமர்ப்பிக்கின்றோம்

பால் தினகரனை இப்பொழுதெல்லாம் காண முடிவதில்லை

 






Image may contain: 4 people , indoor















No comments:

Post a Comment