Friday, November 11, 2016

வீர வணக்கம் யாசர் அராபத்...




Image may contain: 1 person , close-up


வீரமும் விவேகமும் நிரம்பிய சிங்கத்தின் நினைவு நாள் இன்று


ஒரு போராட்டம் எப்படி இருக்கவேண்டும், வெல்ல முடியாத எதிரியினை எப்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும், பேசவந்தவர்கள் எதிரிக்கு நெருக்கமானவர்கள் எனினும் எப்படி நியாயத்தை பெறவேண்டும் என்பதிலும் உலகிற்கு வழிகாட்டியவர்


அவர் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும், இன்றிருக்கும் பாலஸ்தீனம் இருந்திருக்காது,





இன்று சுவர்கட்டி இஸ்ரேல் அப்பக்கம் பாலஸ்தீனம் என ஒப்புகொண்டே ஆகிவிட்டதென்றால் அம்மனிதனால் மட்டுமே

போராளிகள் வரிசையில் மறக்கமுடியா மாமனிதன் அவன்

பாலஸ்தீன மக்கள் அனாதைகளான தினம் இன்று

விடுதலை வேண்டும் ஒவ்வொரு இனமும் படிக்கவேண்டிய வரலாறு மாவீரன் அராபத்.

அவர் தனிநாடு அடையாமல் இருந்திருக்கலாம், ஆனால் அழிவினை குறைத்து பெரும் அஸ்திவாரம் அமைத்துவிட்டே மறைந்தார்

ஒரு காலத்தில் உதிக்கும் பாலஸ்தீனம் அதனை அறுதியிட்டு சொல்லும்.

வீர வணக்கம் யாசர் அராபத்.

(எவனாவது வந்து பிரபாகரனும் அப்படியே என சொன்னால் வாயில் குத்தபடும், அவ்வளவு வலுவான இஸ்ரேலுடன் மோதி, தனிநாடு இல்லை எனினும் எல்லைகளையாவது பாலஸ்தீன தாயகம், சுயாட்சி என ஒப்புகொள்ள வைத்த வீரம் அராபத். இஸ்ரேலிடம் அவ்வளவுதான் முடியும்

தன் பலத்தினை பலமடங்கு பெரிதாக எண்ணி, உதவந்த இந்தியாவினை விரட்டி, இந்தியா வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்பூமி என உறுதிபடுத்தியதை சீரழித்து எல்லாம் நட்டாற்றில் போட்டுவிட்டு அழிந்தார் பிரபாகரன்

வரலாற்றில் பிரபாகரன் யாரை வழிகாட்டியாக கொண்டார் என்பது தெரியாது, (சீமான் அல்ல), நேதாஜி என சிலர் சொல்வார்கள்.

ஆனால் அராபத்தினை பின்பற்றி இருந்தால், இன்று ஈழம் இவ்வளவு அழிந்திருக்காது, பிரபாகரனும் இப்படி செத்திருக்க மாட்டார், (கலைஞர் மீதும் இவ்வளவு பழி வந்திருக்காது)

ஈழ சுயாட்சியாவது இருந்திருக்கும்.















No comments:

Post a Comment