Thursday, November 10, 2016

ரஷ்ய புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்!



Stanley Rajan's photo.Stanley Rajan's photo.


முதலில் கடவுளாலும் பின் மன்னர்களாலும் ஆளபட்டு வந்த உலகில் நம்மை நாமே ஆண்டால் என்ன? என்ற குரல்கள் எழும்ப தொடங்கின‌


ரோம் அரசில் இருந்த சென்ட் சபையே இன்றைய மக்களாட்சியின் முன்னோடி, முதன் முதலில் 16ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் மக்கள் தான் பாராளுமன்ற ஆட்சி வேண்டும், மன்னராட்சி வேண்டாம் என சொல்லி மக்களாட்சி அமைத்தனர், அது செல்லுபடியாகவில்லை மன்னர் மறுபடி கொண்டுவரபட்டார்


பின் 17ம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் அதே கலவரம் வெடித்து அடங்கியது, அதன் பின் குரல் பிரான்சில் எழும்பியது, அங்கு குரல் எழும்பும்பொழுதே அமெரிக்கா பிரிட்டனிடமிருந்து விடுபட்டு மக்களாட்சியினை அமைத்துகொண்டது


மக்களால் தேர்ந்தெடுக்கபடும் அரசு அமைக்கபட்டது, ஆனால் மானிட உரிமைகள், தொழிலாளர் நலன், பெண் உரிமை என ஒன்றுமே இல்லை , எல்லாம் லாப நலன்


பின் புரட்சி பிரான்சில் வெடித்தது, மக்காளட்சி மலரும் நேரம்தான், அப்பொழுது கலவரங்களை அடக்க வந்த சாதாரண சிப்பாய் நெப்போலியன் தன் அசாத்திய திறமையால் அரசன் ஆனான், அதாவது மக்களாட்சி டூ மன்னராட்சிக்கு மாற்றினான், அவனின் தொடர் வெற்றிகள் பிரான்சின் எல்லையினை விரிவுபடுத்தியதால் மக்கள் புரட்சி பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை


பின் தொழில்புரட்சியும், சுரங்கம், பண்ணை என ஏராளமான தொழிலாளர்கள் உருவாக, கிட்டதட்ட அவர்கள் அடிமைகளாகவே இருக்கும்பொழுதுதான் அறிவாசான் கார்ல் மார்க்ஸ் வந்து, பெரும் தொழிலாளர் நல தத்துவங்களை சொன்னான்


தொழிலாளர் உலகம் அதனை பைபிள் போலவே வணங்க தொடங்கிற்று, அதனை பின்பற்றி ஆட்சி அமைக்க முயற்சி சில நாடுகளில் தொடங்கியது


இந்த புரட்சி, போராட்டம் எல்லாம் எங்கு வரும்? வறுமை இருக்கும் இடத்திலோ அல்லது சுரண்டபடும் இடத்திலோ உருவாகும். அமெரிக்காவில் விதிக்கபட்ட கொடிய வரி அதனை போராட சொன்னது, மன்னர்களால் பாதிக்கபட்ட பிரான்ஸ் மக்கள் தெருவுக்கு வந்து போராடி புரட்சி செய்தனர்


பின் நெப்போலியன் உலகெல்லாம் கொள்ளையடித்து கொடுக்கவும் மன்னரே போதுமென்றனர், அப்படித்தான் மனிதர்கள்


ரஷியாவில் ஜார் மன்னர்களும், ரஷ்ய திருச்சபைப்யும் செய்த அட்டகாசங்களில் வாழமுடியா மக்கள் போராட கிளம்பினர் புரட்சி ரஷ்யாவில் வெடித்தது. முதலில் தொடங்கியவர் லெனின் அண்ணன், அவரை பிடித்து அரசு கொன்றுவிட போராட கிளம்பினார் லெனின்


லெனினின் மகத்தான போராட்டத்தில் ஜார் வம்சம் ஒழிக்கபட்டு, அவர்களோடு இருந்த மத கும்பலும் ஒழிக்கபட்டு மக்களாட்சி அல்ல, மாறாக தொழிலாளர் ஆட்சி அமைக்கபட்டது


உலகில் தொழிலாளர்கள் அமைத்த முதல் அரசு அதுவே, நடந்த நாள் நவம்பர் 11, வருடம் 1916. எப்படியோ அரசனை விரட்டிவிட்டு நாடு எங்களது என்றார்களே தவிர முதலில் திணறினார்கள், காரணம் ஆள தெரியவில்லை


ஆனால் சுதாரித்து 1921ல் பொதுவுடமை ரஷ்யா என உலகிற்கு சொல்லி வளர ஆரம்பித்தார்கள், இன்னும் நாடுகள் இணைந்தன, சோவியத் எப்படி வளர்தது, ஆண்டது, வீழ்ந்தது என்பது பெரும் வரலாறு


உண்மையில் இந்த உலகின் வாழ்க்கை முறை சோவியத் ஒன்றியத்தால் மாறியது, தொழிலாளர்களுக்கு சொர்ர்கலோக வாழ்வு கொடுத்தனர். எட்டு மணிநேர வேலை, மகப்பேறு விடுமுறை, ஓய்வூதியம், பணிக்கொடை, வீடு, உலக சுற்றுலா, இன்னும் இன்றும் நாம் அனுபவிக்கும் எல்லா சலுகைகளையும் அன்றே தொடங்கி வைத்தார்கள்


உறுதியாக சொல்லலாம் தொழிலாளர்களை வாழ்வாங்கு வாழ வைத்த தேசமாக அது அன்று இருந்திருக்கின்றது, இதனை கண்ட மற்றநாடுகள் தங்கள் நாட்டிலும் தொழிலாளர் இம்மாதிரியான புரட்சிகளில் இறங்கலாம் என அஞ்சி தொழிலாளர் நலம் காக்க இறங்கின‌


அதற்கு முன்பு தொழிலாளி என்பவன் மாட்டுக்கு சமம், 16 மணிநேர ஓய்வில்லா வேலை, ஒன்று அவன் உழைக்கவேண்டும் அல்லது சாகவேண்டும், வேறு சாய்ஸ் இல்லை


சோவியத்தின் புரட்சி அந்நிலையினை மாற்றியது, உலகிற்கே வழிகாட்டியது, சோவியத்தால் தான் ஹிட்லர் வீழ்ந்தான், சோவியத் கொடுத்த நம்பிக்கையில்தான் பல நாடுகளில் புரட்சி நடந்தது


பிரிட்டன் எனும் பெரும் வல்லரசு இதனால்தான் தன் காலணிகளை விட்டு ஓடவேண்டியதாயிற்று, ஹிட்லர் அதில் கொள்ளியும் வைக்க பெரும் வல்லர்சான பிரிட்டன், மேடையிலிருந்து முன் வரிசைக்கு தள்ளபட்டது


இந்த சோவியத் யூனியனின் அமைப்பும், அதன் கோட்பாடும் தமிழகத்தில் எப்படி எதிரொலித்தது?


உலகெல்லாம் கம்யூனிச கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க இந்தியாவிலும் ஒலித்தது, பிரிட்டன் அதற்கு தடைவிதித்து பார்த்துகொண்டது


உண்மையில் மதகுருமார்களின் அட்டகாசத்தை தொழிலாளர்கள் இணைந்து முறியடித்ததே ரஷ்ய புரட்சி. தமிழகத்தில் உண்மையில் அது தொழிலாளர் ஒன்றிணைந்த புரட்சியாக வென்றிருக்கவேண்டும், அன்று விவசாய கூலிகள் கொஞ்சம் மில் தொழிலாளுகளுக்கு ஒரு தலைவன் இல்லை, அல்லது தலைவன் உருவாக வெள்ளையன் விடவில்லை


இந்த இடத்தில்தான் திராவிட கழகம் நுழைந்தது, ரஷ்யர்களை காப்பியடித்தார்கள். அவர்கள் போட்ட சிகப்பு சட்டையினை இவர்கள் கருப்பு சட்டையாக்கினார்கள். அவர்கள் ரஷ்ய திருச்சபையினை காட்ட இவர்கள் பிராமணனை காட்டினார்கள், அவர்கள் ரஷ்ய அரசனை சொல்ல, இவர்கள் மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
எல்லாமே பிரமணனால் என்றார்கள்


இதனை வெள்ளையனும் ரசிக்க தொடங்கினான், விளைவு பெரியார் தமிழகத்தின் பெரும் புரட்சியாளராக தொடங்கினார், அண்ணா கலைஞர் என ஒரு கும்பல் அவரிடம் உருவானது


அது பின்பு கட்சி, ஆட்சி என அடாகசம் செய்துகொண்டிருப்பது உங்களுக்கு தெரியாததல்ல, ரஷ்ய மக்கள் புரட்சியினை அறியாதவர்கள் எல்லாம் புரட்சி தலைவன் தலைவி ஆனார்கள். ரஷ்யா கண்ட புரட்சி அப்படி, தமிழகம் கண்டது இப்படி


அவர்களுக்கு லெனினும், ஸ்டாலினும் கிடைத்தார்கள், நமக்கு மகோரா, கலைஞர், ஜெயா என கிடைத்தார்கள்.


சரி சோவியத் ரஷ்யா என்னாயிற்று?


மக்கள் அப்படித்தான், வாழ வழியில்லாபொழுது புரட்சி பேசுவார்கள், வாழ வழி கிடைத்துவிட்டால் அப்படியே அமைதியாகிவிடுவார்கள், முன்னமே சொன்னோமே பிரிட்டன், பிரான்ஸ் மக்கள் போல ரஷ்ய மக்களும் பின் மாறினார்கள், அதாவது பின் வந்த தலைமுறைகளுக்கு போரடித்துவிட்டது


உலக ஆயுதபோட்டி, பொருளாதாரபோட்டி, அரபுநாடுகளில் உறிஞ்சபட்ட எண்ணெய் வளம் எல்லாம் சோவியத்தில் சிக்கலை ஏற்படுத்த, அமைதியாக பிரிந்தார்கள்


அதாவது உலகில் முதல் முதலாக தொழிலாளர்களுக்கு என அமைக்கபட்ட அரசு, பின்னாளில் பலர் முதலாளிகளாக வேண்டும் என்ற அடிப்படையில் வீழ்ந்தது,


சோவியத் கலைப்பு 1990க்கு பின் உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்திற்று


மறுபடியும் 14 மணி நேரவேலை, சலுகைகள் இல்லை, பென்சன் இல்லை, விடுமுறை இல்லை, உழைத்தால்தான் சோறு என எல்லா தொழிலாளர்களும் இன்று போராடிகொண்டிருக்கின்றனர்


தொழிலாளி என்றால் சுரங்கமோ, ஆலையோ அல்ல. டை கட்டிகொண்டு அலுவலகத்தில் இருக்கும் ஐ.டி ஊழியக்காரன் முதல் கார் கம்பெனி மேனஜர் வரை எல்லாம் அந்த ரகமே


இன்றைய நிலையில் எந்த தொழிலாளிக்கு பணி பாதுகாப்பும், நிரந்தரமும் இருக்கின்றது என நினைக்கின்றீர்கள்? ஒருவனுக்குமில்லை


எல்லாம் மகா அடிமைகளாக மாங்கு மாங்கென்று உழைக்கின்றன,


முன்பு இப்படி நிலையில்தான், அதோ சோவியத்தில் எப்படி தொழிலாளர் வாழ்கின்றனர் என காட்டி போராட முடிந்தது, இன்று காட்ட எந்த நாடு இருக்கின்றது?


அறிவியல் வளர்ந்திருக்கலாம், கல்விகள் கூடியிருக்கலாம் ஆனால் தொழிலாளர் நிலை 17ம் நூற்றாண்டிற்கு சென்றாயிற்று, அன்று அவர்கள் படிக்காத தொழிலாளர்கள், நாம் படித்த அடிமைகள் அவ்வளவுதான் வித்தியாசம்


அப்படி 1916ல் கடவுள் இல்லை, மனிதன் உண்டு என சொல்லி உருவான சோவியத் சிதைந்தபின் இன்று அங்கெல்லாம் கடவுள் நம்பிக்கை வந்தாயிற்று, அக்காலத்திற்கு அது பொருந்திற்று இனி அது பொருந்தாது, எல்லோரும் உழைத்து வாழும் காலமிது என ரஷ்யர்கள் மாறிவிட்டனர்


ஆனால் தமிழர்???


இன்னும் அதே திராவிடம், பொருந்தா புரட்சி பட்டங்கள் என பல இம்சைகளை சுமந்து அலைகின்றனர்


இதில் அடிக்கடி பிராமணியம், ஆரியம் என என்றோ ரஷ்யர்களிடமிருந்து இறக்குமதியான எதிர்ப்பினை சொல்லிகொண்டே இருப்பார்கள்.


100 வருடம் முன்பு எங்கோ மாஸ்கோவில் நிகழ்ந்த நிகழ்வு, சீனாவினை பாதித்தது இன்று அவர்கள் வல்லரசு, கியூபாவினை பாதித்தது அவர்கள் வளர்ந்தார்கள், வியட்நாம் கூட அமெரிக்கா முகத்தில் குத்தியது, பல நாடுகள் இப்படி பலனடைந்தன‌


தொழிலாளர் உலகமே நலமும் வளமும் பெற்றது


ஆனால் தமிழகத்தில் 1930களிலே கருஞ்சட்டை உருவில் தாக்கிய அந்த விளைவால் என்ன நடந்தது?


இன்று பன்னீர் செல்வம் நிழல் முதலமைச்சராக ஆண்டு கொண்டிருக்கின்றார்.


ஏதும் விவரம் தெரிந்த திராவிட கட்சிக்காரர்கள் இருந்தால் இப்படியாவது சொல்லி தொலைப்பார்கள்,


செருப்பு தைக்கும் தொழிலாளி மகனான ஸ்டாலின் (ரஷ்யாவின் ஸ்டாலிம், தமிழகத்து ஸ்டாலின் தந்தை மகராஜா) ரஷ்ய அதிபரானதை போல, தேனி பக்க பாமர விவசாயின் மகன் பன்னீர் செல்வம் மாநில முதல்வரானார் , எல்லாம் மார்க்ஸிய வழி, புரட்சி வழி


பரிதாபம் என்னவென்றால், அப்படி சமாளிக்க கூட அங்கு யாருமில்லை


ரஷ்ய புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்.


எந்த நாடு உருப்பட்டது என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்







No comments:

Post a Comment