Thursday, November 10, 2016

இதுதான் குஷ்பூ, இந்த தைரியம்தான் குஷ்பூ




Image may contain: 1 person , close-up


மோடியின் அறிவிப்பால் எல்லோரும் என்ன பேச என தெரியாமல் முழித்துகொண்டிருக்க, மிக தைரியமாக ஒரு குரல் வந்திருக்கின்றது அதுவும் எதிர்கட்சியிலிருந்து வந்திருக்கின்றது


அது குஷ்பூவின் குரல்


இது வரவேற்கதக்க நடவடிக்கை, கருப்பு பணத்தினை முடக்கும் நடவடிக்கை என சொல்லியிருக்கும் குஷ்பூ, அன்றாடம் உழைக்கும் மக்களின் நிலையினை அரசு கவனிக்கதவறிவிட்டது என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கின்றார்.





நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம் எனும் குஷ்பூவின் வார்த்தை மிக சரியானது

அதாவது நிச்சயமாக செய்யவேண்டிய விஷயம் ஆனால் இந்த அவசரம் கூடாது என்பது அவரின் கருத்து

நிச்சயம் காங்கிரஸ் புள்ளிகள் கண்டிக்கும், குதிக்கும் கொதிக்கும். ஆனால் அதனை எல்லாம் எதிர்பார்த்துதான் குஷ்பூ பேசியிருக்கின்றார்.

இதுதான் குஷ்பூ, இந்த தைரியம்தான் குஷ்பூ

இவ்வளவு தைரியமாக சொல்ல, அதுவும் சூட்டோடு சூடாக சொல்ல இன்றைய நிலையில் தமிழக காங்கிரசில் யார் இருக்கின்றார்? ஒருவருமில்லை

அந்த திடீர் திருநாவுக்கரசர் அடிக்கடி குஷ்பூவினை கண்டிக்கின்றாராம், ஏன்? தன்னிடம் இல்லா அந்த தைரியம் குஷ்பூவிடம் இருக்கின்றது என்ற அச்சம். அது ஒன்றே

அவரை எல்லாம்?.. அவருக்கெல்லாம்.. விடுங்கள்

குஷ்பூ வீட்டில் ஏதும் பழைய சேலை அல்லது சுடிதார் இருக்கின்றதா? அல்லது வீசிவிட்டாரா என தெரியவில்லை

அப்படி இருந்தால் அனுப்பவேண்டிய முகவரிகள் சில உண்டு.
















கொசுறு

நாடே ரூபாய் பரிவர்த்தனையில் சிக்கி தவிக்கின்றது, தமிழக அரசு இந்த இக்கட்டான நிலையில் மக்களுக்கு எப்படி உதவுகின்றது எனபார்த்தால் ஒரு சத்தமுமில்லை

அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் அப்பல்லோ டூ கோயில் என பிசியாக இருப்பதால் மக்கள் நிலை பரிதாபம்.

ஏதும் சொன்னால் எல்லா 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களையும் கோயில் உண்டியலில் அம்மா சுகம் பெற காணிக்கையாக்குங்கள் என சொல்வார்கள்


மக்களை பற்றி கொஞ்சமேனும் இம்மாநில அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை, அப்படி ஒரு அரசு இருப்பதாகவும் தெரியவில்லை

நல்ல வேளையாக நோட்டு அச்சடிக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை, இல்லாவிட்டால் ம.கோ ரா ஒருபுறமும் ஜெயலலிதா மறுபுறமும் உள்ள அம்மா நோட்டு இப்பொழுது வந்திருக்கும்

















No comments:

Post a Comment