Monday, November 14, 2016

மோடிஜி, தேசம் உங்கள் பின்னால் இருக்கின்றது



Image may contain: one or more people and outdoor



ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கவில்லை, அது மதிப்பிழந்து போயிற்று எனவும் அறிவிக்கபடவில்லை


இதனை மாற்றிகொள்ளுங்கள், கொஞ்ச சிரமத்தை எதிர்கொள்ளுங்கள் என்றே அறிவிக்கபட்டிருக்கின்றது, சில சிரமம் இருக்கலாம் அவ்வளவுதான்,


அதற்குள் மோடி எல்லோர் சொத்தையும் பிடுங்கி விட்டதை போலவும், சாப்பிட்டிகொண்டிருக்கும் பொழுது தட்டை பிடுங்கியதை போலவும், கல்லா பெட்டியினை பிடுங்கிவிட்டு கடைகாரனை விரட்டியது போலவும்


உடைகளை களைந்துவிட்டு மக்களை கோவணத்துடன் நிறுத்தியது போலவும் ஏக அழிச்சாட்டியங்கள்.


இந்த சிரமத்தை கூட தாங்கமுடியாத தேசத்து மக்கள்தான், பாகிஸ்தானை அப்படி அடிக்கவேண்டும், சீனாவினை இப்படி சாத்தவேண்டும், இலங்கையின இந்தவாக்கில் இடிக்கவேண்டும் என அரசுக்கு ஆலோசனை சொல்வார்கள்


நாளை யுத்தமொன்று வெடிக்குமாயின் இப்படி அல்ல, பணம் செல்லாததாகும், பொருள் கிடைக்காது, உணவு முதல் எல்லாம் திண்டாட்டமாகும், பொருளாதாரம் படுக்கும், இன்னும் தாங்கொணா துயர்கள் உருவாகும்.


வங்கிகள் திவாலாகலாம், பணம் என்பது இன்றுபோல் அல்ல நிரந்தரமாக குப்பை ஆகலாம்


அதிலிருந்து எழுவது கொஞ்சகாலத்திற்கு சாத்தியமில்லை,


அப்படியா நடந்துவிட்டது? சரி யுத்தத்தால் அப்படி நடந்தாலும் இப்படித்தான் ஒப்பாரி வைப்பார்களா?


ஒன்று தெரிகின்றது, மக்கள் பெரும் சுகவாசிகளாக ஆகிவிட்டார்கள், சுயநலம் பெருகிவிட்டது. நான் பாதிக்கபட்டேன், நேரடியாக பாதிக்கபட்டேன் என பராசக்தி வசனம் பேசுகின்றார்கள்


கென்ன்டி அன்று அமெரிக்கர்களை நோக்கி கேட்டார், "நாடு உனக்கு என்ன செய்தாய் என கேட்குமுன், நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என உன்னையே கேட்டுகொள்"


அதேதான் இங்கும் கேட்க வேண்டியிருக்கின்றது


ஒரு சிரமத்தை கூட தாங்கமுடியாத இந்த இந்திய மக்களா நாளை பெரும் யுத்தமென்றால் நாட்டை தாங்குவார்கள்??


பெரும் உல்லாச வாழ்க்கைக்கு பழகிவிட்டோம், சுயநல வாழ்க்கைக்கு பழகிவிட்டோம், அதனால் பேசுகின்றோம்


டிவி, ஷாப்பிங், மால் , டாஸ்மாக் என உல்லாசமாக வாழும் வாழ்க்கைக்கு இவர்கள் பழகிவிட்டார்கள்.


எங்கள் வாழ்க்கை முறையில் ஏன் தலையிடுகிறாய் என்பதை போல பிரதமரை கேள்வி கேட்கின்றார்கள். கொஞ்சமாவது நாடு என யோசிக்கின்றார்களா?


(ஏழை எளியவர் படும் பாடு உனக்கு தெரியுமா என்பார்கள்? இப்பொழுதுதான் அப்படி ஒரு வர்க்கம் இருப்பதே இவர்களுக்கு தெரியும்.இப்படி வழக்காக அரசியல்வாதிகள்தான் தேர்தல் நேரம் கவலைபடுவார்கள்)


எந்த நாடு நாட்டிற்காய் எதனையும் தாங்க தயாராக இருக்கின்றதோ, அதுவேதான் தன்னை முன்னிலையில் நிறுத்தும்.


தாங்கவேண்டும், தேசத்திற்கு ஒரு தேவை என்றால் இந்தியன் தாங்காமல் இலங்கையனும், இந்தோனேஷிய குடிமகனுமா வருவான்?


ஏதும் சொன்னால் அதானி, அம்பானி, டாட்டா என பொங்குவார்கள், ஆனால் அதே கம்பெனி பங்குகளை இவர்களும் வைத்திருக்கின்றார்கள் என்பதை மறைப்பார்கள்.


சிலருக்கு முன்பே அறிவித்திருக்கவேண்டுமாம். எதற்கு? 1 மணி நேரம் முன் கூட்டி அறிவித்திருந்தாலும் எப்படி எல்லாம் பதுக்கியிருப்பார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை.


ஒரு வாழைமரம் நட்டால் 1 வருடம் கழித்துதான் பலன் தெரியும், தென்னைமரம் பலன் கொடுக்க 5 வருடம் ஆகும். காத்திருக்கத்தான் வேண்டும்


மோடி அப்படித்தான் சில காரியங்களை செய்கின்றார், பலன் தெரியும் வரை காத்திருக்கலாம் அவ்வளவுதான்


சில மணிதுளிகள் பொறுமையாக காத்திருக்க முடியாதவர்கள் எல்லாம் எப்படி இந்த தேசத்தின் பெரும் சுமைகளை தாங்கவேண்டிய நேரம் வந்தால் தாங்குவார்கள்??


இப்பொழுதெல்லாம் மதவாதி முத்திரை குத்துவது மிக எளிது. யாரெல்லாம் அரசின் திட்டங்களை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் காவி கூட்டம், மதவாதிகள், பார்பண அடிவருடிகள்


ஆனால் மாற்றுமதத்தினர் வாழ இதனைவிட ஒரு நல்ல நாடு எங்கிருக்கின்றது, எந்த நாட்டில் இந்த அளவு சமத்துவம் பேணபடுகின்றது என்பதை, உலகினை சுற்றி பார்த்துவிட்டு, அரசுகளின் நிலைப்பாட்டினை பார்த்துவிட்டு


ஆயிரமோ, ஐநூறோ, இரண்டாயிரமோ சொல்லுங்கள்


எம்மை பொறுத்தவரை எல்லா மதத்தினரும் வாழ இதனை விட ஒரு நல்ல தேசம் இருப்பதாக தெரியவில்லை. மோடி வந்த இரு ஆண்டுகளில் அப்படி ஒரு பெரும் துவேஷம் வளர்ந்ததாகவும் தெரியவில்லை


உண்மையில் எதிர்ப்பவன் யாரனெ பார்த்தால், மத ரீதியாகவோ சிறுபான்மை ரீதியாகவோ எவன் பிழைத்துகொண்டும், சம்பதித்துகொண்டும் இருக்கின்றானோ அவனே, அவன் மட்டுதான் இது காவி பயங்கரவாதம் என ஒப்பாரி வைப்பான்


அதில் இப்பொழுது கருப்புபண, கள்ளநோட்டு கும்பலும் சேர்ந்துகொண்டது அவ்வளவுதான்


இதோ மோடி அடித்து ஆடுகின்றார், ஆடட்டும், நாடு வளரட்டும். நாடு வளர்ந்தபின், பாஜகவிலிருந்து நீக்கபட்டாலும் தனிநபராக அவரை ஆட்சியில் அமர்த்த நல்ல இந்தியர்கள் தயார்


ஒரு அதிரடி தலைவன் தேவை என்பது, அப்படி ஒருவன் வந்துவிட்டால் சர்வாதிகாரம் என ஒப்பாரி வைப்பது


இந்திராவினை அப்படித்தான் அழுது ஓய்த்தார்கள்


மோடிக்கு இனவாதி, சர்வாதிகாரி என பட்டம் சூட்ட ஆரம்பித்தாயிற்று, அவர் என்ன மிசா சட்டம் அறிவித்தா கரன்சியினை மாற்றிகொண்டிருக்கின்றார்??


ஒருவன் எல்லோரையும் திருப்திபடுத்தும்படி ஆளமுடியாது என்பது ராஜநீதி, அப்படி ஒரு ஆட்சி எங்கு அமையும்? மானிடர்கள் இருக்கும் காலம் வரை அப்படி அமைய முடியாது.


பிரதமர் மோடி, வீணாக கவலைபட்டு கண்ணீர் சிந்தி ஏன் வருந்துகின்றீர்கள்?


கண்ணை மூடிகொண்டு எதற்கும் வாய்திறக்காமல் கடமையாற்றுங்கள், வாய் திறப்பதாக இருந்தால் 120 கோடி பேருக்கும் பதில் சொல்லவேண்டி இருக்கும், அட குழந்தை கூட "நாயகன்" ஸ்டைலில் கேள்வி கேட்கும்


இத்தனை கோடி மக்களை வழிநடத்தும் தலைவன் ஏன் உடைந்து போகவேண்டும்?, அதுவும் தேசம் உங்கள் பின்னால் இருக்கும் போது.


நீங்கள் அதிரடியினை தொடருங்கள் மோடி, இப்படி அறுதிபெரும்பான்மையாக உங்களை அமர வைத்திருப்பதும் இதற்காகத்தான்.


தேசம் உங்கள் பின்னால் இருக்கின்றது,


வந்தே மாதரம்.















No comments:

Post a Comment