Sunday, November 20, 2016

பத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..

https://youtu.be/vkJknBKctzE


பத்மநாபா படுகொலை சென்னையில் நடந்த போராளிகுழுக்களிடையிலான சண்டை, இது எப்படி இந்தியாவிற்கெதிரான புலி எதிர்ப்பாகும் என்கிறார் ஒருவர்.


பத்மநாபா இந்திய அமைதிபடையோடு சேர்ந்து இடைக்கால நிர்வாக மாகாண சபை அமைத்தவர், விடுவார்களா புலிகள் விரட்டினர். அமைதிபடை வெளியேறும்பொழுது அவர் சென்னை வந்தார்


அப்பொழுது மத்தியில் விபிசிங் அரசும், தமிழகத்தில் கலைஞரும் ஆட்சியில் இருந்தனர். அந்த கலைஞர் புலிகளின் அபிமானி, முரசொலிமாறன் புலிகளின் இந்திய பிரநிதிபொலவே பேசிகொண்டிருந்தவர்


சென்னை வந்த பத்மநாபா, கலைஞரிடம்தான் அடைக்கலம் கோரினார், அமைதிபடையினை வரவேற்கமாட்டேன் (இவர்தான் இந்தியாவின் தமிழ்மாநில முதல்வர், ஆனால் இந்திய ராணுவத்தை வரவேற்கமாட்டாராம்) என ஒற்றைகாலில் நின்ற கலைஞர் பத்மநாபாவினை எரிச்சலாக பார்த்து, உங்களுக்கு என்ன தேர்தல், உங்களுக்கு என்ன மாகாண சபை


புலிகள் சொல்வது போல் நடங்கள், எங்காவது போய் தொலையுங்கள் என்பது போல பதிலளித்தார்


பத்மநாபா நிதானமான தலைவர், முடிந்தமட்டும் இந்தியா முழுக்க தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார், புலிகள் கொலைவெறியொடு அலைய, தப்புவது சிரமமென்று மறுபடியும் கலைஞரிடமே அடைக்கலம் கேட்டார்


மறுபடியும் அதே பதில் கலைஞரிடமிருந்து வந்தது


இனி மத்திய அரசிடம் நேரடியாக கலைஞரின் புலி ஆதரவினை ஆதாரத்தோடு சமர்ப்பிக்கலாம் என அவர் தயாரானபொழுதுதான் சென்னையில் புலிகளால் கொல்லபட்டார்


அதாவது கலைஞர் புலிகளுடன் கொண்டிருந்த உறவு பற்றி ஆதாரமாக பத்மநாபா சொல்வது பலருக்கு பிடிக்கவில்லை


பத்மநாபாவினை கொல்ல வந்தவந்தான் ஒற்றை கண் சிவராசன், கொன்றுவிட்டு தப்பும்பொழுது தமிழக காவல்துறையால் கைதும் செய்யபட்டு பின் ராஜமரியாதையுடன் ஈழத்திற்கு அனுப்பட்டான்.


அதனால் கலைஞரின் ஆட்சியும் டிஸ்மிஸ் செய்யபட்டது.


மிக சரியாக 6 மாதத்தில் திரும்ப வந்த அவன் ராஜிவ் காந்தியினை கொன்றுவிட்டு பின் பெங்களுரில் கொல்லபட்டான்


பத்மநாபா படுகொலை விசாரிக்கபடவே இல்லை, இன்று வரை இல்லை. அது ஒழுங்காக விசாரிக்கபடுமானால் ராஜிவ் கொலை விவகாரமே யுடர்ன் எல்லாம் எடுக்கும்


சரி இவ்வளவு நடந்தது, பத்மநாபா படுகொலை எந்த தைரியத்தில், யார் துணை இருக்கின்றார் எனும் தைரியத்தில் நடந்ததோ அதே தைரியத்தில்தான் பின் ராஜிவ் கொலையும் நடந்தது


பின் என்ன ஆயிற்று?


திமுக காங்கிரஸ் கூட்டணியும் அமைந்தது, கலைஞர் சோனியாவை சொக்க தங்கம் என்பார். சோனியா கனிமொழியிடம் "ஹவ் இஸ் யுவர் பாதர்" என உருகினார்.


புலிகளை மன்னிக்கவே மாட்டோம் என சொன்ன தமிழக காங்கிரசார் கலைஞரை மட்டும் மன்னித்துகொண்டனர், ஏன் என்றால் அரசியல்.


இதுதான் அரசியல், சில இடங்களில் காரி துப்ப கூடிய அரசியல்


இப்படி பல அசிங்கமான‌ மர்மங்களில்தான் இந்தியா ஈழத்தில் அமைத்த மகாண சபையும், அதில் பத்மநாபா பங்கெடுத்ததும் , பின் அவர் சென்னையில் கொல்லபட்டதும் நடந்தது


மிக விவரமாக வைகோவினை கைகாட்டி விட்டு ராஜதந்திரமாக தப்பியதாக கலைஞர் எண்ணிகொண்டிருந்தார்


விதி அவர் செய்த தவறில் விட்டுவிட்டு செய்யாத தவறான 2009ல் "ஈழம் கொன்றான்.." என்ற பட்டத்தை கொடுத்துவிட்டது


அந்த வார்த்தையினை கேட்கும்பொழுதெல்லாம் கலைஞருக்கு நிச்சயம் பத்மநாபா நினைவு வந்துகொண்டே இருக்கும்


உண்மை தியாகங்கள் அழிவதில்லை.

No comments:

Post a Comment