Thursday, November 10, 2016

ரூ 500, 1000 நோட்டு செல்லாதாம் :இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை




பெரும் குழப்பத்தினை ஆரம்பித்துவிட்டது அரசு, இனி கொஞ்சநாளைக்கு மக்களின் இயல்புநிலை நிச்சயம் பாதிக்கபடும்


இது ஒருவகை எமர்ஜென்ஸி நிலை


எப்படிபட்ட குழப்பமெல்லாம் மக்களை பாதிக்கபோகின்றது என விரைவில் தெரியும்





இந்திய மக்கள் தொகை என்ன? புழங்கும் பல்லாயிரம் கோடிகள் என்ன? மக்களுக்கும் பொதுதுறை வங்கிகளுக்கும் உள்ள விகிதாச்சாரம் என்ன?

எப்படி மிக விரைவில் மக்களால் மாற்றமுடியும்?

எத்தனை பேர் அட்டை கொண்டு பண பரிவர்த்தனை செய்கின்றார்கள்? மிக முன்னேறிய தேசமென்றால் எல்லா பரிவர்த்னையும் டிஜிட்டல் முறையில் நடக்கும் தேசமென்றால் சரி

நமக்கு இன்னும் மின்சாரமே சரிவர கிடைக்கா நிலை, கைநிறைய சுமந்து சென்றே பொருள் வாங்கும் பெரும்பான்மையர் உள்ள நாடு இது

ஆக சிக்கல் விஸ்வருபமெடுப்பது தவிர்க்கமுடியாதது.

மொத்தத்தில் பெரும் குழப்பத்தை நோக்கி நாட்டை தள்ளுகின்றார்கள், பங்குசந்தை முதல் பரோட்டா கடை வரை இதன் விளைவு தெரியும்

இப்படி அவசரமாக செய்ய வேண்டிய விஷயம் இல்லை இது, மோடிக்கு பரபரப்பு விளம்பரத்தினை இது தரலாமே தவிர, நாடு பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்

இனி காங்கிரஸ் கட்சி ஏன் பிரச்சாரம் எல்லாம் செய்யவேண்டும்? அடுத்து அதனை ஆளும் கட்சியாக்கும் பெரும் பணியினை இந்த அரசு செய்துகொண்டிருக்கின்றது

சும்மாவே இந்திய பணம் சரிந்து கிடந்தது, இப்பொழுது புதைக்கின்றார்கள்

500. 1000 நோட்டு செல்லாதாம்

இனி என்னாகும், வெள்ளைக்காரன் பெரிய பையினை முதுகில் போட்டு சுற்றுவான் அல்லவா? அப்படி ஆளாளுக்கு சில்லறை மற்றும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை முதுகில் சுமந்து அலையலாம்

அவரவர் வசதியினை பொறுத்து சைக்கிள் கேரியர், தொட்டி ஆட்டோ முதல் கண்டெய்னர் வரை அமைத்து பணத்தை கொண்டு செல்லலாம்.

இப்படி செய்தால் கருப்புபணம் ஒழியுமாம், சரி சுவிஸ் வங்கியிலும், பனாமா வங்கியிலும், மொரீசியசிலும் இந்திய பணமா உறங்கிகொண்டிருக்கின்றது?

ஒருவேளை இனி அமெரிக்க டாலரும், யூரோவும் இந்தியாவில் செல்லாது என அறிவிக்கும் திட்டம் இருக்குமோ??

என்ன தேசமோ நள்ளிரவில்தான் பெட்ரோல் விலை உயர்கிறது, நள்ளிரவில் பணம் செல்லாது என அறிவிக்கபடுகின்றது

இனி எந்த இந்தியனாவது நள்ளிரவில் நிம்மதியாக தூங்குவான்? ம்ஹூம் நெவர்.

இன்னும் எதுவெல்லாம் செல்லாது என அறிவிக்கபோகின்றார்களோ தெரியாது

2 வருடம் முன்பு இந்திய‌ மக்கள் அளித்த வாக்கு செல்லாது என அறிவித்தால் எப்படி இருக்கும்?







No comments:

Post a Comment