Tuesday, November 15, 2016

சிதறல் செய்திகள்







எதற்கும் வாய்திறக்கா ரஜினி மோடிக்கு பாராட்டு தெரிவித்தது ஏன்? : இயக்குநர் அமீர் சீற்றம்


எதற்கும் சீறாத இவர், மோடியினை கண்டு சீறுவது ஏன்?


நேற்று மன்சூர் அலிகான், இன்று அமீர். நாளை யார் சீறுவார்களோ தெரியாது, அது ஏன் சினிமாக்காரர்களுக்கு கடுமையான கோபம்?





கருப்புபணமின்றி சினிமா இயங்காது என்பதை தவிர என்ன இருக்க முடியும்? ஒரு தேசத்து பிரதமர் சினிமாகாரர்களை கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டுமா?

அப்படி சினிமாகாரராக இருந்தும் மோடியினை பாராட்டிய ரஜினியும், குஷ்பூவும் பரவாயில்லைதான்.












உப்புக்கு தமிழகத்தில் என்ன பிரச்சினை என தெரியவில்லை,


ஆனால் சிலர் தண்டி யாத்திரை கிளம்ப தயாராகிகொண்டிருப்பது போல தெரிகின்றது., விரைவில் கடற்கரைகளில் உப்பு காய்ச்சிகொண்டே மோடி ஒழிக என சத்தம் கேட்கலாம்.


சோற்றுக்கு உப்பு குறைந்தாலும், "காவி பயங்கரவாதம் ஒழிக", "இந்துத்வா மோடி ஒழிக" என ஒப்பாரி வைத்து ஓடும் கூட்டம் அதிகரித்துவிட்டது





ஒன்று சொல்லலாம் 80% இந்து மக்கள் இந்நாட்டில் மகா அமைதியாக, சகிப்புதன்மையுடனே வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்துத்வா, காவி பயங்கரவாதம் என சொல்லி அவர்கள் அனைவரையும் மதவாதிகள் ஆக்கும் படு ஆபத்தான வேலையினை இத்தேசத்தின் சிறுபான்மை மதத்தினர் செய்துகொண்டிருக்கின்றனர்

இந்த்துக்கள் அமைதியாக இருக்கும் வரையே இத்தேசத்தில் அமைதி இருக்கும், தேசம் அப்படித்தான் இருக்கின்றது

அவர்களை சீண்டி பெரும் நாசகார கலவரங்களை ஏற்படுத்த்தும் நோக்கில் இந்த சிறுபான்மை மதத்தார் செய்துகொண்டிருக்கின்றனர்.

நாளையே அந்த இந்து சகோதரர்கள் மகா ஒற்றுமையாக எழும்பினால் அதற்கு காரணம் நிச்சயம் இவர்களே

இப்படி சொல்லலாம்

"பிதாவே இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கின்றார்கள், இவர்களை மன்னிக்காமல் மறக்காமல் வாயில் உப்பு அள்ளி போடும்"











கிலோ கத்தரிக்காய் வாங்கவோ, ஒரு லிட்டர் பால் வாங்கவோ 2000 ரூபாய் நோட்டை நீட்ட முடியுமா? கலைஞர் கேள்வி


ஆயிரம், ஐநூறு ரூபாய்களில் கைவைத்து விட்டு புதிதாக மாற்றி, அப்படியே 2000 ரூபாய் நோட்டையும் அச்சிட்டிருக்கின்றார்கள்.


மற்ற கரன்சிகளை தடை செய்ததாகவோ, அல்லது செல்லாது என அறிவித்ததாகவோ தகவல் இல்லை




2000 ரூபாய் மட்டுமே செல்லுபடியாகும் என சொன்னது போலவும், கத்தரிக்காய் வாங்க 40 ரூபாய் இல்லாதது போலவும் இவர் அறிக்கைவிட்டிருக்கின்றார்


இதே காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு இத்திட்டத்தை அறிவித்தால் எப்படி அறிக்கை வரும் தெரியுமா?


"சிரமம் பொறுப்போம், சிகரம் அடைவோம்"


"ஆயிரம் , ஐநூறு சிக்கல் கடப்போம், அவனியில் உயர்வோம்"


தலைவருக்கு என்ன இவ்வளவு அக்கறை?


எல்லா இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் அவர் கரங்களுக்கே வந்துவிட்டதோ?


வந்திருக்கலாம் அவர் ராசி அப்படி.







 

No comments:

Post a Comment