Thursday, November 10, 2016

ஓபாமா ஆட்சி எப்படி முடிந்தது என பல அலசல் நடக்கின்றது....

பிரிட்டனிடம் இருந்து போராடி சுதந்திரம் பெற்ற நாடு அமெரிக்கா, மற்ற நாடுகளை போல அது ஒரே கலாச்சாரம் கொண்டதல்ல மாறாக குடியேற்ற நாடு. அதனால் அதற்கான கலாச்சாரத்தை அவர்களாக உருவாக்கினார்கள்.


எப்படி?


எல்லாவற்றிலும் பிரிட்டனை கிண்டல் செய்தார்கள். அது ஆங்கில வழக்கிலும் இன்றுவரை எதிரொலிக்கின்றது. அவர்கள் பஸ் ஸ்ட்டாண்ட் என்றால் இவர்கள் பஸ் ஸ்டேசன் என்பார்கள், அவர்கள் பியுயல் என்றால் இவர்கள் கேஸ் என்பார்கள், அவர்கள் லைன் என்றால் இவர்கள் கியூ என்பார்கள்.


அவர்கள் பிரதமர் என்றால் இவர்கள் அதிபர் என்பார்கள்


பிரிட்டானியர் உடை கலாச்சாரத்தை மதிப்பவர்கள், உடைகள் மிக நேர்த்தியாக பொது இடத்திற்கு வருவார்கள். இவர்களோ காலசட்டையும் டி சர்ட்டும் போட்டுகொண்டு மாநாடு என்றாலும் வந்துவிடுவார்கள்


இப்படி பிரிட்டனை சதா காலம் சீண்டி சீண்டியே அவர்கள் தேர்தல் முறையும் மகா குழப்பமானதாகவே ஆகிவிட்டது


சிக்கல் என்றால் மாநில உரிமைகளை காக்கும் சட்டங்களை கொண்ட சில கணக்கு சிக்கல்கள், உள்நாட்டு போரினை கண்டவர்கள், பல இனம் வாழ்பவர்கள் என்பதால் கடும் சட்ட பாதுகாப்பு உள்ள நாடு அது, அதனால் தேர்தல் அப்படி


நம்ம நாடு என்றால் மக்கள் வாக்களிப்பார்கள், பணமோ அல்லது அபிமானமோ எதுவோ ஒன்று வாக்களித்துவிட்டு கையில் இங்குடன் போஸ் கொடுப்பார்கள், வாக்குகளை எண்ணிவிட்டு இந்த கட்சி வெற்றி என சொல்லலாம், அதன் பின் மெஜாரிட்டி மைனாரிட்டி என ஏதாவது ஒரு ஆட்சி அமையும்


அமெரிக்கா அப்படி அல்ல, மக்கள் வாக்களிப்பார்கள் அதிலும் வெல்ல வேண்டும், பின் மாநில பிரதிநிதிகளின் வாக்கெடுப்பிலும் வெல்ல வேண்டும், இல்லாவிட்டால் செல்லாது


இதில் மக்கள் அபிமானம் ஹிலாரிக்கு இருக்கலாம், ஆனால் பிரதிநிதிகள் ஆதரவு டிரம்பிற்கு விழலாம் என்கின்றார்கள்.


காரணம் அவர் தொழிலதிபர், அவருக்கு பின்னும் தொழிலதிபர் கூட்டம் இருக்கலாம் என்கின்றது தியரி.


இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவிலும் தொழிலதிபர்களின் ஆதிக்கமே அரசியலில், நமது ஊரைபோல ரோடு, பாலம், துறைமுகம், பாதாள சாக்கடை என்றல்ல மாறாக‌


அணுவுலை, ஆயுத தொழிற்சாலை, விண்வெளி ராக்கெட்,மருத்துவ உபகரணம் என பணம் கொட்டும் தொழில்கள்


ஒரு இழுபறியான நிலையிலே டிரம்பும் ஹிலாரியும் மல்லு கட்டுகின்றார்கள், பார்க்கலாம்


இந்த தேர்தல் ஒரு பக்கம் நடக்க ஒபாமா மூட்டை முடிச்சினை கட்டுகின்றார், ஆனாலும் இன்று ஹிலாரி போல 10 வருடத்தில் மிஷெல் ஒபாமா அரசியலுக்கு வரலாம் என்கின்றார்கள்


வாரிசு அரசியல் எங்கில்லை, இதோ உலகெல்லாம் இருக்கின்றது. உலகின் பலமான போதை என்பது பதவி, சுவைத்துவிட்டால் வெளிவருவது எளிதல்ல‌


கிளிண்டனுக்கும், ஓபாமாவிற்கும் முன்னோடி யாரென பார்த்தால் சத்தியமாக நமது லாலுபிரசாத் யாதவ்தான். மனிதர் பீகாரில் இருந்துகொண்டு உலகிற்கே வழிகாட்டியிருக்கின்றார்.


ஓபாமா ஆட்சி எப்படி முடிந்தது என பல அலசல் நடக்கின்றது, முதல் கருப்பு அதிபர் என்ற பெருமையினை பெற்றவர்


உலக அரங்கிலும் பல முத்திரை பதித்தவர், பகையாளியான கியூபாவுடன் உறவு கதவினை திறந்தவர், அமெரிக்க அச்சுறுத்தலான பின்லேடனை போட்டு தள்ளியது என பல முக்கிய நிகழ்வுகளை அவர் நிகழ்த்தினார்


ஈரானுடனான யுத்தம் தவிர்ப்பு, உக்ரைனில் சமாதானமாக விலகியது அதே நேரம் ஐரோப்பாவில் ரஷ்ய எதிர் கூட்டணியினை உருவாக்கியது என அவர் சில காரியங்களை செய்தார்.


மோடி போலவே உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்றார், அதாவது ஓபாமா அழைத்தால் செல்வார். மோடி அழைக்காவிட்டாலும் சென்று கதவினை தட்டுவார்.


புதிய அதிபருக்காக வெள்ளை மாளிகை தயாராகிறது, யார் வென்றாலும் கிறிஸ்துமஸ் முடிந்த ஒரு வாரம் பின்னமே அங்கு செல்வார்கள்


இன்றைய நிலையில் உலகின் நம்பர் 1 பணக்கார வல்லரசு அது, உலகினை கட்டுபடுத்தும் ஆற்றல் அதற்கே உண்டு. அதன் பொருளாதார வளம் அப்படி, எப்படி என்றால் எல்லா நாடுகளிலிருந்தும் கப்பமாகமோ, வியாபாரமாகவோ அல்லது
அறிவியல் பேட்டெண்டாகவோ குறிப்பிட்ட பணம் நொடிக்கொரு முறை அங்கு சென்று கொண்டே இருக்கின்றது


யார் அதிபராக வந்தாலும் அவர்கள் பாகிஸ்தானை கைவிட போவதுமில்லை, இலங்கையினை ஒரு மாதிரியாக கையாள்வதை நிறுத்தபோவதுமில்லை


இப்பொழுது புதிதாக சீனாவிற்கு எதிராக இந்தியாவினை கொம்பு சீவும் முயற்சியிலும் இறங்கி இருக்கின்றார்கள்.


பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்களை கொடுத்துகொண்டே இன்னொரு பக்கம் கண்டிப்பார்கள், சில நேரம் கண்ணடித்து சிக்னல் கொடுப்பார்கள்


உலக அரசியல் அப்படி, அது அதிபர்கள் மாறினாலும் மாறாதது


அது இருக்கட்டும், இனி வரும் அமெரிக்க அதிபருடன் எப்படி பேசுவது என இருவர் கடும் சிந்தனையில் இந்தியாவில் இருப்பார்கள். இவர்கள் இருவருமே அடிக்கடி அமெரிக்க அதிபரை பார்த்து கை குலுக்குவார்கள்


ஒருவர் மோடி, அவர் அப்படித்தான், இப்பொழுதே ஜனவரிக்கு டிக்கெட் போட்டு வைத்திருப்பார்


இன்னொருவர் யார்? அதே வைகோ தான், விரைவில் அமெரிக்கா கிளம்புவார் பாருங்கள், நிச்சயம் அடுத்த அதிபரை சந்திப்பார்


ஏன்?


அவர் அப்படித்தான், சரி அமெரிக்க அதிபர் ஏன் இவரை சந்திக்கவேண்டும்? அப்படி என்ன கரிசனை?


கரிசனை ஒன்றுமல்ல, சீனாவினை எதிர்க்கும் தலாய்லாமா முதல் துருக்கிய ஆட்சி எதிர்ப்பாளர், ஈரான் எதிர்ப்பாளர் என எல்லோரையும்வ தன் நாட்டில் வைத்து ஒரு வித அரசியல் செய்யும் நாடு அமெரிக்கா


யார் தன் சொந்த நாட்டை எதிர்க்கின்றார்களோ அவர்கள் மீது அமெரிக்காவிற்கு தனிபட்ட பாசம் பொங்கும்


இப்பொழுது புரிகின்றதா? வைகோ எப்படி அமெரிக்க அதிபருடன் போஸ் கொடுக்க முடிகிறதென்று?


சரி அங்கிள் சைமனை ஏன் அழைக்கவில்லை?? அவர் காமெடியன் என எப்பொழுதோ உளவு அறிக்கை அமெரிக்காவிற்கு பறந்திருக்கும்.

No comments:

Post a Comment