Saturday, November 19, 2016

அன்னை இந்திராவிற்கு இன்று பிறந்தநாள் !




Stanley Rajan's photo.    Stanley Rajan's photo.


 அன்னை இந்திராவிற்கு இன்று பிறந்தநாள்


இந்தியாவின் மிக துணிவான தலைவர்கள் வரிசையின் பிதாமகள் அவர், இனி எத்தனை தலைவர்கள் வந்தாலும் அது இந்திராவினை விட உயர்வா அல்லது அவரை விட குறைவா என்றே இந்திய அரசியலால் அளக்கபடும்


அப்படி ஒரு முத்திரை பதித்த சிங்க தலைவி அவர். எமக்கு காங்கிரஸ் பாஜக என்ற எந்த வேறுபாடுமில்லை என்பதால் சொல்லலாம், நாட்டில் இன்று இந்திராவிற்கு பின் மிக துணிவான பிரதமர் என்றால் நிச்சயம் மோடியே





லால்பகதூர் சாஸ்திரியின் துணிவும் சாதாரணம் அல்ல, அந்த சாஸ்திரி, இந்திரா வரிசையில் மோடியும் வருகின்றார்

இந்திரா மிக தைரியமாக இத்தேசத்திற்கு செய்த காரியங்களும், அதன் உச்சமாக தன் உயிரையே கொடுத்ததும் பெரும் தியாக வரலாறு.

இந்திரா என்றபொழுது ஈழமக்களுக்காக அவர் களமிறங்கிய காட்சிகளும் நிச்சயம் கண்முன் வந்துபோகும், சுடதெரியாமல் சுட்டுகொண்டிருந்த ஈழபோராளிகளை இந்தியா அழைத்து அவர்தான் சீர்படுத்தினார், கூர் படுத்தினார்.

பின் அந்த ஈழகத்தி மற்ற போராளிகளையும் உச்சமாக இந்திய ராணுவவீரர்கள் மீதும் கடைசியாக இந்திராவின் மகன் மீதும் பாய்ந்ததே ஈழ மக்களின் இத்தனை சிக்கலுக்கும் காரணம்

சென்னை பாண்டிபஜாரில் சிக்கி பேந்த பேந்த விழித்த பிரபாகரனை, தன் காலில் விழுந்து கதறி கேட்ட சிங்களனிடம் அவர் அன்றே ஒப்படைத்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கலாகியிருக்காது

நிச்சயமாக சொல்லலாம் பல இடங்களில் பிரபாகரனுக்கு உயிர்காத்து, அடைக்கலம் கொடுத்தது இந்திராவின் இந்தியா, இல்லையென்றால் 1980களிலே பிரபாகரனை போட்டு தள்ளியிருப்பார்கள்

பின்னாளில் பிரபாகரன் காட்டிய நன்றி, உலகறிந்தது

ஈழ‌ மக்களை நேசித்த இன்னொரு உத்தம தலைவன் பத்மநாபா, அவருக்கும் ஆச்சரியமாக இன்றுதான் பிறந்தநாள்

இந்த இரு தலைவர்களை போல ஈழ மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும் என களமிறங்கிய தலைவர்களில் ராஜிவ் குறிப்பிடதக்கவர்

இன்று மூவரும் இல்லை, இவர்களை விரட்டிய புலிகளாலும் ஒன்றும் கிழிக்கமுடியவில்லை

இன்னும் ஒரு நல்ல தலைவன் வராமல் ஈழ மக்களின் சிக்கலுக்கு தீர்வு வரப்போவதில்லை.

தீர்வு தரப்போகும் தலைவன் நிச்சயம் பத்மநாபா வழியில் உருவாகி வருவான், அவன் இந்திய உதவியுடன் ஈழ மக்களுக்கு ஆறுதல் கொடுப்பான், அதுதான் மக்களை நேசிக்கும் தலைவனின் நல்ல வழியாக இருக்கும்

இந்தியாவின் இரும்பு தலமையும் அதனை ஆதரிக்கும்,

இன்று இந்திராவின் இரும்பு ஆட்சியினை கொடுக்க மோடி வந்திருக்கின்றர், ஆனால் ஈழத்தில் இன்னொரு பத்மநாபா இல்லை

அப்படி ஒருவன் உதித்தால் எல்லா சிக்கலுக்கும் விடை உண்டு

இந்திராவும், பத்மநாபாவும் மறக்க கூடியவர்கள் அல்ல, இருவருமே சொந்த மக்களால் கொல்லபட்ட பரிதாபத்திற்குரியவர்கள். தங்களின் படித்த, வளமான எதிர்காலத்தை சமூக மக்களுக்காய் அர்பணித்தவர்கள், இருவருமே பாலஸ்தீன மக்களுக்கு துணை நின்றவர்கள்.

இந்திரா இந்தியருக்கு மோடி உருவில் திரும்பியது போல, ஈழ மக்களுக்கு பத்மநாபா யார் உருவிலாவது திரும்பி வரட்டும்.







No comments:

Post a Comment