Thursday, November 17, 2016

நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள்...

இரு நாட்களுக்கு முன்பு மோடி அழுதார், இப்பொழுது கரன்சி பிரச்சினை தொடர்பாக என்னை முறைப்படி கலந்தாலோசிக்கவில்லை என நிதியமைச்சரே கண்ணை கசக்குகின்றார்


பாருங்கள் நாட்டின் நிதியமச்சருக்கே தெரியாமல் ரகசியம் காக்கபட்டிருக்கின்றது, 6 மாதமாக திட்டம் தீட்டினேன் என சொல்லும் பிரதமர் நிதியமைச்சரிடமே சொல்லவில்லையாம்


நிதியமைச்சரே கலங்கும் நேரத்தில், சாதாரண குடிமகன் ஏடிஎம் மெஷின் முன்னால் கலங்காமல் என்ன செய்வான்




ஆக எடிஎம் மிஷினிலோ வங்கியிலோ அழுபவர்கள், நிதியமைச்சரை பார்த்து ஆறுதல் அடையுங்கள்


இப்படி நாட்டு நலனுக்காக (யாரும் சிரிக்கவேண்டாம்..) தேசத்தின் உச்ச கணக்கு பிள்ளையான நிதியமைச்சரே (மறுபடியும் சிரிக்கவேண்டாம்..) பெரும் தியாகம் செய்திருக்கும் வேளையில், அதாவது தன் பதவிக்கு கொஞ்சமேனும் மதிப்பில்லாமல் போனபின்பும் அதில் அமர்ந்து பெரும் தியாகம் செய்யும் பொழுது


மக்களாகிய நீங்களும் (யார்டா மறுபடி சிரிக்கிறது..) அமைதிகாத்து தேசத்தினை காக்க வேண்டும்


டெல்லிவாசிகளே கொஞ்சம் கவனம், ஏடிஎம்மில் உங்களுக்கு அடுத்து நிற்பவர் நிதியமைச்சராக கூட இருக்கலாம்


தமிழகத்தில் தமிழிசையும், பொன்னாரும், வானதி சீனிவாசனும் எந்த இடத்தில் வரிசையில் நிற்கின்றார்கள் என்பது ரகசியம், அது வெளியானால்


கல்பாக்கம், கூடன்குள, விமான நிலைய பாதுகாப்பு படைகள் எல்லாம் அங்குதான் குவிக்கபடவேண்டி இருக்கும், சரி அவர்கள் வரமாட்டார்கள்


மறந்துவிடாதீர்கள், பணப்பிரச்சினை என்றால் நிதி அமைச்சரிடம்தான் குறைபடவேண்டும், நிதி அமைச்சரே கால்ங்கி நின்றால் நாம் எங்கு செல்ல...


சிலர் கையில் கருப்பு மை இருக்கலாம், அதனை அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை அழியாமல் காத்துகொள்ளுங்கள், காரணம் நமக்கு மறதி அதிகம்.


அது ஒருபுறம் இருக்கட்டும், இந்த ஆர்எஸ்எஸ் பயல்கள் பேச்சினை மோடி கேட்டால் நிலமை இன்னும் மோசமாகலாம்


காரணம் மத நல்லிணக்கமாக பெரும் வாழ்வு வாழும் நாடுகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. மத அல்லது இனவாதத்தில் மூழ்கி நாசமாய் போயிருக்கும் ஆப்கன், பாகிஸ்தான், இலங்கை, பர்மா, சில ஆப்ரிக்க நாடுகள் இவற்றை தாண்டி இவர்கள் யோசிப்பதில்லை


நல்ல நாடு எதனையாவது பின்பற்றுவார்களா என்றால் இல்லை, நாசமாய் போன நாடுகளை பின்பற்றி மோடிக்கு ஆலோசனை சொன்னால் இப்படித்தான் நாசமாய் போகும்


லெனின் பெரும் புரட்சியாளன், அதனை பின்பற்றி நாட்டை வளர்க்கபோகிறேன் என கிளம்பிய மாவோ சீனாவினை மாற்றி காட்டினான்


அதே லெனினை பின்பற்றுகிறேன் என போல்பாட் என்பவன் கம்போடியாவினை நாசமாக ஆக்கி, அதனை 100 ஆண்டுகள் பின்னோக்கி போகவிட்டான்


மோடி மாவோவாக ஆகவேண்டாம், இந்த போல்பாட் போல ஆகாமல் இருந்தால் சரி.


ஆனால் ஆர்எஸ்எஸ் அவ்வளவு சுலபத்தில் இந்தியாவில் ஒரு போல்பாட்டினை உருவாக்காமல் போகமாட்டார்கள் போல தெரிகின்றது


ஆடட்டும், களைக்கும் வரை ஆடட்டும், அடுத்தால் இவர்கள் ஆட்சிக்கு வர அந்த ராமன் என்ன? முப்பெரும் தெய்வங்கள் நினைத்தாலும் முடியாது.


ரகுராம் ராஜனை விரட்டியதே பெரும் தவறு, ஓரளவு அனுபவமும் விஷய ஞானமும் உள்ளவர் அவர்.


அருண் ஜெட்லி மட்டும் டம்மியாக்கபட்டார் என்றாலோ, விரட்டபட்டார் என்றாலோ இந்தியா போல்பாட்டின் கம்போடியா போல ஆகபோகின்றது அல்லது தாலிபன்கள் ஆட்சியின் ஆப்கன் போல ஆகபோகின்றது என்பதன் எச்சரிக்கை மணியாகவே இருக்கும்



No comments:

Post a Comment