Wednesday, November 30, 2016

காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌




பிடல் காஸ்ட்ரோ பெரும் போராளி, போராடி புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தவர்,மக்கள் நலம் காத்த வீரன்


ஆனால் அவரது கவனம் எல்லாம் வித்தியாசமானது, யார் போராளி? யார் கட்டபஞ்சாயத்து கும்பல் என்பதில் கவனமாக இருந்தார்.


இந்தியா அவருக்கு பிடித்தமான நாடு, சே குவாரேவினை கியூப பிரதிநியாக இந்தியாவிற்கு அனுப்பியவர் அவர், இது இன்னொரு பக்கம்





ஆனால் ஒரு இடத்திலும் புலிகளையோ அதன் தறுதலை போராட்டங்களையோ அவர் ஆதரித்ததாக ஒரு செய்தியும் இல்லை, ஒருபடி மேலே சென்று 2006ல் புலிகளுகளுக்கான தடையினை அவர் ஆதரித்திருக்கின்றார்

அதாவது மொத்த உலகமும் புலிகளை அடித்து துடைத்தொழிக்க கிளம்பியபொழுது , "ஆம், அது அழித்தொழிக்கவேண்டிய தீவிரவாத கும்பல்தான்" என ஒப்புதல் அளித்திருக்கின்றார்.

வர்க்க விடுதலை வேறு, குறுந்தேசிய வாதம் வேறு என்பதில் அவர் மிக சரியாக நிலையெடுத்திருக்கின்றார்.எது விடுதலை, எது தறுதலை என்பதில் அவருக்கு தெளிவு இருந்திருக்கின்றது

புலிகளை அவர் ஒரு போராளிகளாக ஒருநாளும் ஒப்புகொண்டதே இல்லை

ஆக காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌

பிரபாகரன் படத்தினை பிடித்துகொண்டே போராளி காஸ்டோர்விற்கு அஞ்சலி, வீர வணக்கம் என சொல்லிகொண்டிருக்கின்றன அங்கிளின் மங்கிஸ்

வைக்கோ பெரும் அஞ்சலி செலுத்துகின்றாராம், காஸ்ட்ரோவும் போராளி அவரும் பயங்கரவாதிகள் என‌ ஆதரவளித்து தடையான புலிகள் அமைப்பும் போராளிகளாம்

அதாவது காஸ்ட்ரோ நல்லவர், அவர் உலகிற்கே ஆகாது என சொன்ன புலிகளும் நல்லர்களாம்

இப்படிபட்ட கொள்கையுடன் முழங்கிகொண்டிருப்பவர்கள் சேணல் மாற்றும்பொழுதாவது உலக செய்திகளையோ, தலையணை இல்லாவிட்டால் புத்தகத்தை வைத்து தூங்குபவர்களாகவோ கூட இருக்க முடியாது

வைகோவும் தமிழ் பேசுகின்றார், பிரபாகரனும் தமிழ் பேசுகின்றார் ஆதலால் இருவரும் ஒன்று,

சீமான் தமிழில் பேசுகின்றார், பிரபாகரனும் தமிழில் பேசுகின்றார் ஆதலால் இருவரும் ஒன்று என லாஜிக் பேசுபவர்கள் உண்டு

அப்படியே

பிடல் கையிலும் துப்பாக்கி இருந்தது, பிரபாகரன் கையிலும் துப்பாக்கி இருந்தது, வீரப்பன் கையிலும் துப்பாக்கி இருந்தது அதனால் மூவரும் ஒன்று என லாஜிக்காக சீரியசாக சொல்வார்கள்,

உடனே இவர்களை நம்பவும் ஒரு கூட்டம் இருக்கின்றது.

காமராஜர் அமர்ந்த நாற்காலியில், கலைஞர் அமர்ந்த நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் பன்னீரும் அமர்ந்ததால் இவர்கள் நால்வரும் ஒன்று என சொல்லிவிட முடியுமா?

அப்படித்த்தான் சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

சுடுகாட்டிலும் தீ எரியும், கோவில் விளக்கிலும் தீ எரியும், எது புனிதமானது?

பிடலும் பிரபாகரனும் ஒன்று என லாஜிக் பேசுபவர்களிடம், ஆமாம் அப்படியே பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவும் ஒன்றா என கேளுங்கள்,

பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.







 இக்கட சூடு





எத்தனை அம்புகள் பாய்ந்து வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது: மு.க.ஸ்டாலின்

அதனை அழிக்க அம்பு எதற்கு?, அருகிலே இருக்கும் சொம்புகள் போதாதா?








முதல்வர் ஜெ., நடக்க பிசியோதெரபி சிகிச்சை

அது நடக்கட்டும், அப்படியே தமிழக அமைச்சர்களுக்கு முதுகு நிமிர ஒரு சிகிச்சை, முதல்வர் இலாக்காவினை கவனிக்கும் பன்னீர் செல்வத்திற்கு பேச்சு வர ஒரு சிகிச்சை என செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.




No comments:

Post a Comment