Tuesday, November 15, 2016

நிச்சயமாக நான் பெரும் குழப்பவாதி

கடுமையாக கேள்வி கேட்கின்றார்கள், நீ ஒருமுறை ஒன்றை எழுதுகின்றாய், இன்னொரு முறை இன்னொன்றை எழுதுகின்றாய், சரியல்ல, நீ சரியே அல்ல..


நீ குழப்புகின்றாய், உனக்கு எது சரி, எது நியாயம் என தெரியவில்லை (நான் என்ன சுப்ரிம் கோர்ட்டு நீதிபதியா??) கடும் தொணிகள்.


செல்லாது செல்லாது என நாட்டாமையாக தீர்ப்பிட்டு, பலர் வந்து கருத்து சொல்கின்றார்களாம், சிலர் அறிவுரையும் சொல்கின்றார்களாம், சொல்லட்டும்


அதாகபட்டது நானே இத்தேசத்தின் நடப்புகளை பார்த்து குழம்பியோய் இருக்கின்றேன்,


உன்னிப்பாக உலக விவகாரங்களையும், இந்திய அரசியலையும், ஈழ பிரச்சினை என பத்திரிகை தருவதையும் படித்தால் குழம்பித்தான் போவோம், உதாரணம் டிரம்பின் வெற்றி


அவ்வளவு ஏன்? நன்றாக பேசுகிறார், போன் செய்கிறார், பிரச்சாரம் செய்கிறார், தானே சுவாசிக்கின்றார், தானே நடக்கின்றார், பின் ஏன் தானே போயஸ் வரவில்லை என்றொரு குழப்பம்


ஸ்டாலின் என் அரசியல் வாரிசு என்றபின்னும் ஏன் அறிவாலயம் ஒப்படைக்கபடவில்லை என இன்னொரு குழப்பம்


திடீரென அறிவித்துவிட்டு கோவாவில் ஏன் மோடி அழுகின்றார் என அடுத்த குழப்பம்,


இப்படி குழம்பி நிற்கும் தருணம் ஏராளம்


நிச்சயமாக நான் பெரும் குழப்பவாதி


வாருங்கள் நீங்களும் சேர்ந்து குழம்புங்கள் என்றுதான் சொல்கிறேன்


குழம்புவோம், நன்றாக குழம்புவோ அதன் பின் உங்களுக்கு எது நியாயம் என ஓரளாவாவது புரியும்


காந்திய தத்துவம் ஒன்று உண்டு, அதாவது உண்மைக்கு பல முகங்கள் உண்டு, ஒரே ஒரு முகம் அல்ல, அல்லவே அல்ல‌


அப்படி ஒரு விஷயத்தை பல கோணங்களில் பாருங்கள், அந்த விஷயங்களில் பல உண்மைகள் புலப்படும்


இது அரசியல் உலகியல் தத்துவம்.


ஒரு பக்கம் பாருங்கள் கலைஞர் பெரும் திறமைசாலி, சும்மா சொல்லகூடாது அசாத்திய ஆற்றல், ஆயிரம் வருடம் ஒருமுறை பிறக்கும் அறிவாளி


ஆனால் இன்னொரு பக்கம் பாருங்கள் சினிமாவினை காட்டி மக்களை மயக்கும் முறையினை சொல்லிகொடுத்தவர், எப்படி சில சகிக்கமுடியாத செயல்களை செய்யவேண்டும் என அறிமுகபடுத்தியவர்


அதற்காக அவரை திட்டமுடியாது, காரணம் அவர் பட்டிருக்கும் அவமானமும் போராட்டமும் அப்படி


ஜனநாயக கட்சியினை எப்படி நடத்த கூடாது என்பதற்கும் அவர்தான் உதாரணம், கட்சியினை எப்படி கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதற்கும் அவர்தான் உதாரணம்


முழுமையாக அவரை விடவும் முடியாது, அப்படியே அவரை ஏற்கவும் முடியாது


சொல்லுங்கள், குழம்புகின்றீர்கள் அல்லவா? இதுதான் யதார்த்தம்.


அதனால் குழம்புங்கள், நன்றாக குழம்புங்கள், எது புரிகிறதோ அதனை எடுத்துகொள்ளுங்கள்


மாறாக ஏய்.அன்று அப்படி சொன்னாய், இன்று இப்படி சொன்னாய் என குதிப்பது அறமாகாது


இதற்கே சாடினால் எப்படி?


இன்னும் ஏராளம் குழப்ப இருக்கின்றது, அவ்வப்போது குழப்பலாம்

No comments:

Post a Comment