Monday, October 31, 2016

தேவர் பெருமகனாருக்கு புகழ்வணக்கம் : சீமான்




தேவர் பெருமகனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகழ்வணக்கம் : சீமான்


அன்னாருக்கு பித்து உச்சத்திற்கு சென்றுவிட்டது, கொஞ்சமும் சுய நினைவோ, வெட்கமோ, கூச்ச உணர்வோ சுத்தமாக இல்லை


தேசியத்தை போற்றிய பெருமகனார் அவர், பாகிஸ்தானிய பிரிவினையே அவர் ஏற்றுகொண்டவரில்லை





இந்த சீமானோ காஷ்மீர் பிரியட்டும், பஞ்சாப் பிரியட்டும் என அந்த பிரிவினை தலைவர்களை எல்லாம் கூட்டி மாநாடு நடத்தியவர், இந்திய தேசிய எதிரியும், இந்தியாவின் ஒற்றுமைக்கு பெரும் சவால் விட்ட பிரபாகரன் படத்தினை சுமப்பவர்

இந்த பிரிவினை வாதி அந்த தேசாபிமானிக்கு புகழ்வணக்கம் செலுத்த என்ன தகுதி இருக்கின்றது? கொஞ்சம் நிதானித்தவன் யோசிப்பான், அன்னாருக்கு அறவே இல்லை

ஒரு படத்தில் கவுண்டமணி பேப்பர் தோசை லிவருக்கு நல்லது என வழிந்துகொண்டே சொல்லும்போது சத்யராஜ் சொல்வார் "அடேய் பேப்பர் தோசை வேணும்ணா, வேணும்ணு சொல்லு அதுக்கு ஏன் இப்படி அள்ளிவிடுற..."

அப்படி சீமான் நேரடியாகவே எனக்கு வோட்டு தாருங்கள் என கேட்கலாம், இப்படி ஏன் சம்பந்தமில்லாமல் புகழ்வணக்கம் சொல்லவேண்டும்???

விரைவில் பாருங்கள் அங்கிள் தன் ஸ்பெஷல் காமெடியினை விரைவில் செய்வார்

அது என்னவாக இருக்கும்?

அதே தான் விரைவில் இம்மானுவேல் சேகரனுக்கும் புகழ்வணக்கம் செலுத்துவார் பாருங்கள் (முன்பே செய்திருக்கின்றார்)

அங்கு நிற்கின்றார் அங்கிள் சைமன்

அங்கிள் சைமனால் இன்னும் புகழ்வணக்கம் செலுத்தபடாதவர் இருவர், விரைவில் அவர்களுக்கும் நடக்கும்

ஒன்று சிங்கள வெறியன் ஜெயவர்த்தனே இன்னொருவர் ராஜபக்சே..






இது மு.க ஸ்டாலின் வழி...

தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்


அன்று பெரியார் வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டும் என்றார், பின்பொருநாள் அண்ணா வழி வழிகாட்டும் என்றார், அவ்வப்போது கலைஞரின் திராவிட கொள்கை வழிகாட்டும் என்றார்




இப்பொழுது பசும்பொன் சிங்கத்தின் வழி வழிகாட்டும் என்கின்றார்


தேசியமும், ஆன்மீகமும் பேசியவர் தேவர் பெருமகன் அவர் வழி அப்படி


பிரிவினைவாதமும் நாத்திக வாதமும் பேசியவர் பெரியார் இவர் வழி இப்படி


அப்படியானால் இவர் என்ன சொல்ல வருகின்றார்?


ஆகவே தமிழர்களே எந்த வழியும் செல்லுங்கள், எப்படியும் போங்கள், ஆத்திகம் நாத்திகம் பேசுங்கள், பகுத்தறிவு பேசுங்கள், இந்தி படியுங்கள், படிக்காமலும் போங்கள், திராவிடம் பேசுங்கள் அப்படியே இந்திய தேசியம் வாழ்க என சொல்லுங்கள், எதுவேண்டுமானாலும் செய்து தொலையுங்கள்


ஆனால் வாக்கினை மட்டும் எங்களுக்கு தந்துவிடுங்கள் என்பது இவர் சொல்லவருவது,


இது மு.க ஸ்டாலின் வழி


எமது சிற்றறிவுக்கும், பகுத்தறிவுக்கும் அவ்வளவுதான் விளங்குகின்றது







 தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் படத்தைக் காட்டி வெற்றி பெறுவோம் : தம்பிதுரை

எங்களுக்கு ஆயிரத்தில் ஒருவனும், அடிமைப்பெண் படமும் வேண்டும் ,

பட்டிக்காடா பட்டணமா போன்ற இம்சைபடங்கள் எல்லாம் காட்டினால் வாக்களிக்க மாட்டோம்.




ஓர் சந்தேகம்:

மறவருக்கும், அகமுடையாருக்கும் புறனானூற்றில் விளக்கம் இருக்கின்றது,

கள்ளர் என்பது கூட பசுகூட்டத்தை யுத்தத்தின் முன்னறிவிப்பாக கவரும் வீரர்கள் என்கிறது பழம் இலக்கியம்

ஆனால் பிறமலை கள்ளர் என்றால் என்ன பொருள்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்,


பிறமலை என்றால் என்ன பொருள்? புற‌ மலையா? அல்லது பிறர் மலையா?

எனக்கு தெரிந்தது ம.கோ ராமசந்திரன் சொன்ன "மலை கள்ளன்" மட்டுமே..




கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்த வைகோ!

பழைய கலைஞராக இருந்திருந்தால் வை.கோவிற்கு பதில் எப்படி கொடுத்திருப்பார் தெரியுமா?

"நாதஸ்வரத்தினை கையிலெடுத்து மூச்சடக்கி ஊதும் அளவிற்கு வலுவாக இருக்கின்றான் இந்த கருணாநிதி"


அதன்பிறகு வைகோ வாய் திறப்பார்????




 



தலாக் முறை பெண்களுக்கு எதிரானது : குஷ்பூ

https://youtu.be/KkZ8r9b80hU

குஷ்பு - புதிய தலைமுறை : அக்னிப் பரிட்சை (29-10-2016) : காணொளி


தலாக் முறை பெண்களுக்கு எதிரானது : குஷ்பூ , இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள், குஷ்பூ மீது கடும் விமர்சனம்


குஷ்பூ பிறப்பால் ஒரு இஸ்லாமியர், அதன் சில பக்கங்களை விமர்சிக்க அவருக்கு தகுதி உண்டு, மனதில் பட்டதை சொல்கின்றார், உண்மையில் மூன்று தலாக் இடையே நீண்ட இடைவெளி கொடுக்கவேண்டும் என்ற மத கட்டுபாடு உண்டு, ஆனால் அது பின்பற்றபடவில்லை என்பார்கள்.


குஷ்பூ என்ற பிரபலம் சொன்னதற்காக குதிப்பவர்கள், அவர் பிறப்பால் ஒரு இஸ்லாமியர், ஆக இஸ்லாமிய பெண்ணே தலாக் முறை பற்றி விமர்சித்திருக்கின்றார் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.




குஷ்பூ சொன்னதில் தவறேது கண்டார்கள்?, எந்த மதமானால் என்ன? அதில் உள்ள சில குறைகளை சுட்டிகாட்ட கூடாதா?


இதில் சிலர் வந்து குஷ்பூவின் இந்த பேச்சு தமிழகத்தில் காங்கிரசை பாதிக்கும் என்கின்றார்கள், இதுதான் காமெடி


முதலில் காங்கிரஸ் எங்கிருக்கின்றது? அதனை பாதிக்க? இல்லாத காங்கிரசை எப்படி பாதிக்கமுடியும்?


குஷ்பூ இல்லாத நிலைதான் இனி காங்கிரசை பாதிக்கும் என்கின்றார் நண்பர் Venkatesh Mothilal


ஆக மதரீதியான சில வாத முடிவுகள் தலாக் முறைக்கு தேவை என பிரதமரே சொன்னபின், குஷ்பூ மட்டும் சொல்ல கூடாதாம்.


திடீரென மனைவியிடம் முத்தலாக் சொல்லிவிட்டு பிரித்துவிடுவது எம்மாதிரியான விஷயம்? இது பெண்களுக்கு எதிரானது என குஷ்பூ மட்டும்தான் சொல்வாரா?


தகுந்த உரிமை கொடுத்தால் பாதிக்கபட்ட இஸ்லாமிய பெண்களே கதறி அழுது சொல்வார்கள்.


தலாக் முறையினை ஒரு பூர்வீக இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்த இஸ்லாமியரான குஷ்பூ விமர்சிக்காமல் வேறு யார் விமர்சிக்க தகுதி இருக்கின்றது??



பன்ருட்டி ராமச்சந்திரனின் அமைதி



Image may contain: 2 people , indoor


இந்தியாவோடு ராஜிவ் காலத்தில் அமைதி பற்றி பேசிகொண்டே ஆயுதகடத்தலில் ஈடுபட்டு பின் யுத்தம் தொடங்கி தங்களை மிக சாமார்த்திய சாலிகளாக காட்டிகொண்டனர் புலிகள்


பின் நார்வே பேச்சுவார்த்தையின் போதும் அதனையே செய்து பின் நார்வேக்காரன் பாலசிங்கத்தை முறைத்து, அவர் பிரபாகரனை முறைக்க அத்தோடு உறவறுந்து ஓடினார் பாலசிங்கம், பின் சிங்கள பக்கம் சாய்ந்த சர்வதேசம் புலிகளை ஒழித்திருக்கின்றது


அதாவது நம்பகாதவர்கள் எனும் முத்திரை விழுந்ததே புலிகளின் அழிவுக்கு முதல்காரணம்,


இன்னொன்று கருணா பிரிவு, அவன் துரோகி அல்ல, மாறாக துரோகி ஆக்கியவர்கள் இவர்களே


அதாகபட்டது கிழக்கு தமிழருக்கும், வடக்கு தமிழருக்கும் பொருந்தாது. சிங்களன் புண்ணியத்தில் போராளிகளாக இணைந்திருந்தனர்,


ஆனால் வடமாநில போராளிகளுக்கு மாவீரர் துயிலும் இல்லமும் பல லட்சம் செலவில் அமைக்கபட, கிழக்கு போராளிகளின் உடல் வெறும் மண்மேட்டில் புதைக்கபட்டது வரை பல முரண்பாடுகள்.


வடக்கு மக்கள் பணம் கொட்டும் மரங்கள், கிழக்கு மக்கள் அவ்வளவு வசதியில்லாதவர்கள் கூடவே இஸ்லாமிய மக்கள் என பல சிக்கல்கள்


இன்னொன்று வடக்கத்திய இளைஞர்கள் கனடா, ஆஸ்திரேலியா என பறக்க கிழக்கு இளைஞர்கள் போராளிவேடம் பூண்டனர்


இந்த புள்ளியில் கிழக்கினை சேர்ந்த கருணாவிற்கும் மற்ற வடக்கு மாகாண தளபதிகளுக்கும் முட்டிகொள்ள பிரபாகரன் இப்படி யோசித்தார், சும்மா இருந்தால் மோதுவார்கள், யுத்தம் தொடங்கலாம்


அப்படி அவசரமாக தொடங்கபட்ட யுத்தம் திசைமாறி, கருணா பிரிந்து என்னென்னெவோ ஆயிற்று


ஆக புலிகளின் வீழ்ச்சிக்கு அவர்களே காரணம் தவிர கலைஞரும் சோனியாவும் அல்ல, வடக்கு தமிழருக்கு ஒரு அணுகுமுறை கிழக்கு தமிழருக்கு ஒரு அணுகுமுறை என செய்ததுதான் தவறு,


ஈழம் அமைந்திருந்தாலும் பின்னாளில் அடுத்த உள்நாட்டு போர் தொடங்கி இருக்கும், அதன் தன்மை அப்படி, சரி விட்டு விடலாம் தமிழகத்திற்கு வரலாம்.


இன்று சீமான் அவரின் அடிப்பொடிகள் என பலர் வரலாறு போல் எழுதியும் பேசியும் கொண்டிருக்கின்றனர்


ஆனால் தமிழகத்தில் பிரபாகரன் இருக்கும்பொழுது அவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ப.சிதம்பரமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பேச வேண்டியவர்கள் ஆனால் பேசவில்லை


அதிலும் பண்ருட்டி ராமச்சந்திரனே எல்லா ஆட்டங்களும் அறிந்தவர், ஐ.நா சபையில் ஈழபிரச்சினைக்காக பேசிய வரலாறு அவருடையது


1985களில் எம்ஜிஆர் உடல்நலமின்றி இருந்தபொழுது மறைமுக முதல்வர் பண்ருட்டியே


ராஜிவும் பிரபாகரனும் சந்தித்தபொழுது உடன் இருந்தவரும் அவரே, யார் உறுதிமொழியியினை மீறினார்கள் என்பதற்கு சாட்சியும் இன்றுவரை அவரே, அவர் ஒருவரே


என்ன நடந்தது? ராஜிவ் மீது தவறா? அல்லது பிரபாகரன் மீது தவறா என்பதனை பண்ருட்டி இன்றுவரை சொல்லவில்லை, ஆனால் அமைதிபடை தளபதி புலிகளோடு மோதுமுன் முதலில் கலந்தாலோசித்த பிரபலம் பண்ருட்டி ராம்சந்திரனோடுதான்,


காரணம் அவர்தான் அன்றைய நிழல் முதல்வர்


பண்ருட்டி ராமசந்திரன் அந்த மோதலை செய்யவேண்டிய தேவை எனில் செய்யுங்கள் என சொன்னதாகத்தான் செய்திகள் உண்டு


அப்படி ஈழ வரலாற்றின் பல சர்ச்சையான காலபக்கங்களுக்கு சாட்சி அவரே


ஆனால் அவர் பேசவே இல்லை, பேசவும் மாட்டார். அந்த அமைதி ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.


மனிதர் இன்றும் அதே கட்சியில்தான் இருக்கின்றார், ஆனால் என்ன செய்ய பன்னீர் செல்வம் கிடைத்துவிட்டார், பண்ருட்டி செய்த சகல கட்சி ஊர்வலமும் இன்னொரு காரணம்.


ஈழ போராட்டம் எப்படி இந்தியாவிலிருந்து தன்னை துண்டித்துகொண்டது, எப்படி அது திசைமாறியது என்பதற்கு பெரும் சாட்சி பண்ருட்டியார்


ஆனால் மனிதர் பேசமாட்டார், ஏன் பேச மாட்டார்?


காரணம் அவர் பேச ஆரம்பித்தால், அந்நாளில் கலைஞர் ஈழ போராட்டத்தில் எடுத்த பல நிலைப்பாடுகளை பேசவேண்டி வரும்,
அமைதிபடை அனுப்பும்பொழுதே கலைஞர் செய்த எதிர்ப்புகள் வரும், இன்னும் ஏராளம் வரும்.


தமிழகத்தில் ஈழதுரோகி என அறியபட்டிருக்கும் கலைஞரின் அன்றைய ஈழாபிமான செயல்பாடுகளை சொல்லவேண்டி வரும், அப்பொழுது கலைஞருக்கு பல பெருமைகள் சேரும், இந்த புலி அபிமானிகளால் தூண்டிவிடபட்டு வீசபட்ட‌ கலைஞர் மீதான சேறு கழுவபடும்


அவ்வளவு விஷயங்கள் வரும், அதில் எம்ஜிஆர் அரசு டம்மியான உண்மைகளும் வரும், நிச்சயம் வரும்.


அந்த வாய்ப்பினை கலைஞருக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை


ஆனால் இவரும் பேசி, கலைஞரும் பதிலுக்கு பேசினால் இந்த சீமான் கோஷ்டிகள், புதிதாக புலிவால் பிடிக்கும் அல்லக்கை கோஷ்டிகள் எல்லாம் சிதறிஓடும்


பண்ருட்டியாரும் பழுத்த அரசியல்வாதி, கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம், பின் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்?


டெப்பாசிட் இழந்த கட்சிகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும், என்ற ராஜதந்திரமாக இருக்கலாம், அதாவது பேசவேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை என நினைக்கலாம்


பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பின் பல ஈழ உண்மைகள் உறங்கிகொண்டிருக்கின்றன, மனிதர் சாதரமாணவர் அல்ல. பெரும் அரசியல் அனுபவம் கொண்டவர்


அவரை விலக்கியது விஜயகாந்த் செய்த பெரும் தவறு, உச்சகட்ட தவறு. இப்பொழுது விஜயகாந்திற்கு புரிந்திருக்கும்.


இப்பொழுது அதிமுக கட்சிக்கு சோதனையான காலம், பண்ருட்டியார் என்ன செய்து கொண்டிருப்பார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.


ஆனால் தமிழகத்தில் பிரபாகரன் பற்றியும், ராஜிவ் நடவடிக்கை பற்றியும் பேசும் தகுதியுள்ள ஒரு சிலரில் பண்ருட்டியார் முக்கியமானவர், அவருக்கும் ஒரு வரலாறு உண்டு.


அவரே அமைதியாக இருக்க இந்த அங்கிள் சைமனின் பித்தலாட்டமும் அதற்கு சில மங்கிகளின் கைதட்டலும்தான் கால கொடுமை.















இந்திரா காந்தி : நினைவு நாள்

https://youtu.be/V5ffAx8SVJQ

இந்த நாள் அன்று


அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார்.

தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம்.


இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது.


டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் சில உண்மைகள் புரியும்.


அதாவது இந்தியா அப்படித்தான். பல இடங்களில் அதன் போக்கு வித்தியாசமானது, கடுமையானது. இல்லாவிட்டால் இந்தியா இருக்காது.


இந்தியாவிற்கு அதிகம் உழைக்கும் அல்லது உழைத்த இனம் என பஞ்சாபியரை சொல்லலாம், இன்றும் இந்தியராணுவத்தை தாங்கி நிற்பவர்கள், சகல துறைகளிலும் பங்கெடுப்பவர்கள், கடும் உழைப்பாளிகள்.


மேலாக இந்திய விசுவாசிகள்.
பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலிகாலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள்.


பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 லட்சம் பஞ்சாபியர் செத்தனர். பிரிவினை வலி அவர்களுத்தான் தெரியும்.


திடீரென தமிழகத்தை இரு நாடுகளாக பிரித்து ஒரு பக்கம் செல்ல விசா தொந்தரவும், உளவாளி முத்திரை சித்திரவதை மரணமும் அன்றாடம் நடக்குமென்றால் சென்னை டூ மதுரை பயணம் எப்படி இருக்கும்? எந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்?, இது தான் பஞ்சாபியர் நிலை. ஏராளமான குடும்பங்களும், உறவினர்களும் எல்லைகோட்டுக்கு இங்கும் அங்கும் ஏக்கமாய் பார்த்துகொண்டே இருக்கும் நிலை.


இந்நிலையில் பஞ்சாபியர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர், அதாவது பஞ்சாப் மொழி பேசுபவருக்கு தனி மாநிலம், சீக்கிய மதத்திற்கு ஒரு மத அந்தஸ்து என சில கோரிக்கைகள், ஆனால் டெல்லி காதுகொடுத்தே கேட்கவில்லை (நாம் கச்சதீவு, ராமேஸ்வரம் மீணவர், ராஜபக்ஸே,காவிரி,மீத்தேன் என கத்தினாலும் கேட்கின்றார்களா அப்படித்தான்) அவர்களும் அசட்டை செய்யபட்டார்கள்.


விளைவு அகாலிதளம் மகா மக்கள் ஆதரவு பெற்றது, இது இந்திராவை சிந்திக்கவைத்தது, அப்படியும் பஞ்சாப் மொழி மாநிலத்திற்கு பதிலாக பிஞ்சிபோன பஞ்சாபை மேலும் பிரித்த்து ஹரியான உருவாக்கபட்டு சீக்கியர்களின் கோபம் மேலும் அதிகமானது.


அகாலிதளத்திற்கு எதிராக பிந்ரன்வாலேயினை சஞ்சய் உருவாக்கினாலும் அவன் அந்நிய கரங்களில் விழுந்தபின் நிலமை விபரீதமாயிற்று, அவனை எதிரி நாடுகள் உசுப்பேற்றிவிட்டு நிலமை பொற்கோயில் வரை சென்றது, வேறு வழியின்றி ராணுவம் அனுப்பபட்டது.


பொற்கோயிலில் ராணுவம் புகுந்தது ஒவ்வொரு சீக்கியனுக்கும் வலிதான், ஏற்கனவே இந்தியா தங்களை சரியாக அங்கிகரிக்கவில்லை எனும் கோபம் இருந்தது அது கூடிற்று.


ஆனாலும் ஒரு சிறிய மகிழ்ச்சி இருந்தது.


அதாவது பிந்திரன்வாலே கூட்டத்தை பெரும்பான்மை சீக்கிய‌ மக்கள் ஆதரிக்கவில்லை, அவன் தொலைந்ததில் நிம்மதியான சீக்கியர்கள் ஏராளம்.


பின்னர் ஏன் இந்திரா படுகொலை நிகழ்ந்ததென்றால், அதுதான் உலக அரசியல். பொற்கோயில் சம்பவத்தில் சீக்கியர்களுக்கு கோபம் இருந்ததே தவிர அவரை கொலை செய்யும் அளவிற்கு அல்ல.


ஆனால் கோபத்தை கூடுதல் பயமும் கூட்டி, இனி இந்திரா இருந்தால் சீக்கியர் வாழ முடியாது என ஒரு பிம்பத்தை உருவாக்கியது பல வெளிநாட்டு சக்திகள்.


சுருக்கமாக சொன்னால் உயிரோடு வைத்து பிந்திரன்வாலேயால் செய்யமுடியாததை அவன் செத்தபின்னால் செய்தார்கள்.


அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல் ஹக், திட்டம் கொடுத்தது ஒரு பெரிய கை.
அவர்களின் குறி இந்திய எல்லைகளில் பதற்றம் உண்டாக்குவது, அது முடிந்தது இந்திரா படுகொலையில்


எப்படி?


அந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார்.


இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி.


அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை கட்டி பறந்தது, அதாவது பாகிஸ்தான் ராணுவத்தினை உள்வாங்க விடுவாரம், பின்னர் விரட்டுகிறேன் என சகலத்தையும் அழித்துவிடுவாராம்.


கவனியுங்கள் இது முதலில் வெளிநாட்டில் இருந்து வந்த‌ செய்தி பின் ஒரு வாரத்தில் ஜியா உல்கக் பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாபில் படைகுவிக்கிறார், சும்மாவே சவுடால் பேசும் அவர் இம்முறை கடுமையாக பேசினார், போர் பரபரப்பு பற்றிகொள்கிறது.


இங்குதான் சீக்கிய சமூகம் அச்சத்தில் ஆழ்ந்தது, இந்திரா இனி தங்களை அழிக்காமல் விட மாட்டார் என பயத்தில் உறைந்தனர். இனி வாழ முடியாது என அவர்களுக்கு தோன்றிற்று, ஒரு கலாச்சாரமிக்க இனம் அழிவதை விட இருவர் அழிவது தவறில்லை என முடிவாயிற்று, பின்னர் நடந்த கொடூரம் உலகறிந்தது.


32 தோட்டாக்கள் இந்திரா மீது பாய்ந்தன.


அவரது பலமான உளவுதுறை அவருக்கு சீக்கிய காப்பாளர்களை மாற்ற சொன்னது, அப்படியானால் ராணுவத்து சீக்கியர்களை என்ன செய்வீர்கள் என கேட்டு மறுத்தார் இந்திரா


கிட்டதட்ட 7 முறை உயிர்தப்பிய இந்திரா, மெய்காப்பளரிடம் சிக்கினார். சஞ்சயின் மரணத்தின் பொழுதே கிட்டதட்ட மரணித்த இந்திரா, இம்முறை தப்பவில்லை.


ஒரு திட்டமிட்ட வதந்த்தி, அதற்கு வலுசேர்க்கும் படைகுவிப்பு என்ற மாயையில் நொந்திருந்த சீக்க்கிய சமூகம் சிக்கியதால் நிகழ்ந்த நிகழ்வு இது, பின்னாளில் அவர்கள் உண்மை உணர்ந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் இந்திய பார்வை இருந்ததே தவிர பஞ்ஞாப் எல்லையில் அல்லவே அல்ல.


சீக்கியருக்கு ஆபத்து என இறக்குமதியான வதந்தி, இப்படுகொலை மூலம் உண்மையானது கிட்டதட்ட 3000 சீக்கியருக்கு மேல் டெல்லியில் வன்முறையில் கொல்லபட்டனர்.
ஆனாலும் சீக்கிய இனம் உயர்வானது, சகல வலிகளையும் தாண்டி இன்னும் நாட்டிற்காக உழைக்கின்றது.


இந்திரா அமரர் ஆனார், இந்தியா பன்னாட்டுகம்பெனிகளின் வேட்டைகாடானது, தனியார் வங்கிகளை ஒழித்து வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா, இன்று இந்திய இன்சூரன்ஸ் கூட விற்பனை எனும் நிலை.


அண்டை நாடுகள் எல்லாம் ஆசுவாசமடைந்தன, சில திருமணவீடுகள் அல்லது மறைவு துக்கங்களில் எதிர் அரசியல்வாதிகள் எல்லாம் சந்திப்பார்கள், கேட்டால் நாகரீகம் என்பார்கள், ஆனால் அவர்கள் மனது ஆண்டவனுக்குத்தான் தெரியும்,


அப்படித்தான் இந்தியா மறைந்தபொழுது, எல்லா தலைவரும் வந்தார்கள்,சூத்திரதாரி பாகிஸ்தானின் இடி அமீன் ஜியா உல்கக் வந்தார், அஞ்சலி செலுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி சென்று சொன்னார்


"அல்லா இருக்கிறார், அமெரிக்கா இருக்கிறது, இந்திரா சாம்பலானார் இனி எனக்கென்ன கவலை"


இலங்கையின் நரி ஜெயவர்த்தனே வேறுமாதிரி சொன்னார், "இனி தெற்காசியா அமைதியாகும்"


இநதியாவும், அவர் உருவாக்கிய உளவுதுறையும் , இந்திரா உருவாக்கிகொண்டிருந்த புதிய இந்தியாவும் கதறி அழுதது.


எல்லாவற்றிற்கும் மேல் தங்களுக்கு இந்திரா ஒரு தீர்வினை கொடுப்பார் என மனமார நம்பிய ஈழமக்களும் அனாதைகளாகி அழுதனர், அது உண்மையும் கூட. இந்திரா இருந்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கலாகி இருக்காது.


இந்திரா காந்திக்கு அஞ்சலியாக‌ அன்று ஒரு அர்த்தமுள்ள வார்த்தை சொன்னார், அது நிதர்சனமான உண்மை


"இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல கண்ணீரில் மிதக்கின்றது"


எத்தனை பிரதமர்கள் இந்தியாவில் அமரலாம், ஆனால் இந்திரா போன்றதொரு பிரதமர் இனி அமையமாட்டார்.


காரணம் அவர் காந்தியின் கரங்களிலும், நேருவின் போதனையிலும் வளர்ந்தவர்


இந்த நாட்டிற்கு எது சரியோ அதனை மிக தைரியமாக செய்தவர், அதில் வாக்கு வங்கிபற்றியோ ஏன் உயிரினை பற்றிகூட கவலையின்றி அதனையும் நாட்டிற்காக கொடுத்தவர்.


ஆழ்ந்த அஞ்சலி
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்









Image may contain: 1 person




Sunday, October 30, 2016

தமிழ் கலாச்சாரத்தை காக்க அவதாரம் எடுத்திருப்பவர்கள்




 3 பதிவுகள்






தீபாவளியினை கொண்டாட மாட்டோம், வடக்கே இருந்து வருவதெல்லாம் தமிழனுக்கு எதிரி, அது தமிழ் கலாச்சாரத்தை அழித்துவிடும், நாங்கள் தமிழர்கள், தமிழ் கலாச்சாரத்தை மட்டும் பின்பற்றுவொம் என முழங்குபவர்கள் எல்லாம்


மட்டன் பிரியாணி, பரோட்டா சால்னா என வடக்கே இருந்து வந்த உணவுகளை கட்டி அடைத்துவிட்டு, அதற்கு மேலே குலாப் ஜாமூனும் , லட்டும் தின்றுகொண்டே சபதமெடுக்கின்றான்


பிரியாணியும், பரோட்டாவும் தமிழர் உணவா என நாம் கேட்டுவிட கூடாது.





இவர்கள்தான் தமிழ் கலாச்சாரத்தை காக்க அவதாரம் எடுத்திருப்பவர்கள்,

வடக்கத்திய உணவினை சத்தமில்லாமல் சுவைத்துவிட்டு, வடக்கு ஓழிக இந்தியம் ஒழிக, பார்பணம் ஒழிக, வடக்கத்திய கலாச்சாரம் ஒழிக என முழங்கிகொண்டிருப்பார்கள்.

எவனாவது கேப்பை கூழும், சோள காடியும், சம்பா அரிசு கஞ்சியும் குடித்துகொண்டு தமிழ் கலாச்சாரம் வாழ்க என சொல்கிறானென்றால் இல்லை .

இப்பொழுது கொஞ்சபேர் பெப்சியும், கோக்கும் பர்கரும் விழுங்கிகொண்டே சீனபொருள் வெளியேறு என சொல்லிகொண்டிருக்கின்றான்

அதாவது அமெரிக்க பொருள் பிரச்சினை இல்லையாம், சீன பொருள் இந்திய பொருளாதாரத்தை விழுங்குமாம்.

சீனா பாகிஸ்தானை தூண்டிவிடுகின்றதாம், அட பதர்களா பாகிஸ்தான் ராணுவத்தின் 80% ஆயுதம் அமெரிக்க தயாரிப்பல்வா? என சொன்னால் புரியாது.

எங்கிருந்து யோசிப்பார்கள் என்றே தெரியவில்லை, மகா சிந்தனையாளர்கள் உதித்துகொண்டே இருக்கின்றார்கள்.





மலையாள சினிமாவில் தனி இடம் பெற்றது செம்மீன் திரைப்படம்,


மீன்களின் சுவையில் தனி இடம் பெற்றிருப்பதும் செம்மீனே..


ஆக செம்மீன் என்பது எங்கிருந்தாலும் சுவையே..





சிகப்பு அரிசி சோறும், செம்மீன் குழம்பினையும் அடித்துகொள்ள இன்னொரு காம்பினேஷன் நிச்சயம் இல்லை.

"சிகப்பு நமக்கு பிடிக்கும்"







அவரின் தேசபற்றும், சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற அவரின் விருப்பமும் போற்றபடவேண்டியவை


தேசம் பிரிந்து எல்லையில் இரத்தகளறி நடந்தபொழுது தன் சேனைகளை அனுப்பி கலவரத்தை அடக்க விரும்பியிருக்கலாம், ஆனால் அது தூரம் என்பதால் சாத்தியமில்லை


பின் தென் தமிழகத்தில், வடக்கன்குளத்தில் சில சர்சைகள் நடந்தபொழுது, புனிதமான ஆலயம் கூட தேவர் மகன் சினிமாவில் வரும் ஆலயம் போல பூட்டி கிடந்தபொழுது,





இரு சமூகம் மோதிகொண்டபொழுது, நீங்களாக நிறுத்துகின்றீர்களா? இல்லை என் சேனைகளை அனுப்பட்டுமா? என கேட்டதும் கலவரத்தை நிறுத்தவே.

ஆனால் வடக்கன்குளம் சர்ச்சைகள் அதற்கு முன்பே முற்றுபெற்றதால், சேனைகள் வருவதற்கு அவசியமற்று போயிற்று.

அவரின் தலையீட்டுக்கு அஞ்சியே அது நிறுத்தபட்டிருக்கலாம்.

அப்படி அமைதியான சமூகம் அவரின் விருப்பமாக இருந்திருக்கின்றது.









Saturday, October 29, 2016

மலேசிய தீபாவளி..

மலேசிய தீபாவளி வழக்கம் போல கோலாகலம், கட்டணத்தில் வாங்கும் இந்திய‌ டிவி சேனல்களை கூட சில நாட்களுக்கு அரசு இலவசமாக கொடுத்திருக்கின்றது.


அரசு தொலைகாட்சியில் இந்திபடங்களும் கூடவே லிங்கா, சிவாஜி என இம்சைகள்.


கபாலி ஏன் போடவில்லை என கேட்டால் நிலை மகா சிக்கல் ஆகிவிடும், அது வரவும் வாய்ப்பே இல்லை.




ஒரு சேனலில் நெடுநாளைக்கு பின் விசுவின் நிகழ்ச்சி பார்க்க முடிந்தது, அவர் குரலே கிட்டதட்ட பாக்யராஜ் போல மாறி இருந்தது தெரிந்தது, எப்படி இருந்த குரல்? காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகின்றது


ஒரு சேனலில் சிம்பு அழிச்சாட்டியம் செய்து ஆடிகொண்டிருந்தார், கூடவே சரத்குமார் மகள் வரலட்சுமி


சரத்குமாருக்கு நாடார் என பேனர் வைத்து கொண்டாடுவர்கள், திருமண வாழ்த்து முதல் அஞ்சலி போஸ்டர் வரை அவர் படத்தினை வைப்பவர்கள் யாரும் அவரின் நாடார் புத்திரி படத்தினை வைப்பதில்லை, இவ்வளவிற்கும் அழகாக ஆடுகின்றார்


அது நாடார் சங்கத்தார் பிரச்சினை.


கடுமையான மழையில் இங்கே தீபாவளி, தமிழகத்தில் எப்படி என தெரியவில்லை, ஆனால் பல இடங்களில் மழை இல்லை என்றுதான் சொல்கின்றார்கள்


நரகாசுரனுக்கு வீரவணக்கம், முப்பாட்டன் நரகாசுரன் என கிளம்பிய பின் வருண பகவானுக்கும் சில கோபங்கள் இருக்கலாமோ?


அவர்களை பொருட்படுத்தாமல் வருண பகவான் வந்தருளட்டும்.






எவ்வளவு சுவையான விருந்துக்கள் என்றாலும் அதனை முழுமையடைய செய்வது வெற்றிலை பாக்கு


அள்ளி கட்டிவிட்டு, நிதானமாய் தாம்பூலம் தரிப்பதில்தான் எவ்வளவு சுகம்..







 

Friday, October 28, 2016

தமிழக அரசு சார்பில் தீபாவளி வாழ்த்து எப்படி வருகின்றது என பார்க்கலாம்?



தீபாவளிக்காவது முதல்வர் இலாக்காவினை கவனிக்கும் பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவிப்பாரா? என தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்த்திருக்கின்றது.


அம்மா சார்பாக வாழ்த்தா? அரசு சார்பாக வாழ்த்தா? கட்சி சார்பாக வாழ்த்தா? என எப்படி வாழ்த்துவது என தெரியாமல் பொதுவாக தீபாவளி வாழ்க என அவர் வாய்ப்பிருக்கின்றது


இப்பக்கம் உணவு பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் மாநில அரசு பணிந்துவிட்டது என பல சலசலப்புகள்.


தமிழகம் என்னவோ இன்னொரு நாடு போலவும், இங்கு மத்திய அரசுக்கே உரிமை இல்லை என்பதுபோலவும், தமிழக அரசு தோற்ற்றுவிட்டதாகவும் பல சர்ச்சைகள்


உணவு பாதுகாப்பு சட்டமென்பது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு உண்டு என பாதுகாக்கும் சட்டம், இதனை அமல்‍படுத்தினால் மாநில அரசுக்கு செலவு கூடுமாம்


சரி மாநில அரசு சேர்த்தபணத்தினை என்ன செய்கிறது? தெரியாது, ஆனால் திடீரென்று அவர் வீட்டில் அத்தனை கோடி, கண்டெய்னரில் இத்தனை கோடி என செய்திகள் வரும்


அதனை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது, அபச்சாரம் அவதூறு என்பார்கள்


இந்திய அரசின் சட்டம் எல்லா மாநிலத்து மக்களையும் காக்கும் போது தமிழகத்தை மட்டும் காக்காதாம், இவர்கள் அரசியல் இப்படி இருக்கின்றது தமிழக கட்சிகளின் அரசியல் நிலை


அப்படி தமிழக அரசு மத்திய அரசிடம் பணிந்துவிட்டது என சீண்டல்கள்


பின்னே பணியாமல் என்ன செய்யும்?


முதல்வர் இலாக்காவினை பார்ப்பவருக்கு பணிவினை தவிர என்ன தெரியும்?


பணியத்தான் செய்வார்? அது அவரின் தொழில், பணி என எல்லாமும் அந்த பணிவுதான்.


தமிழக அரசு சார்பில் தீபாவளி வாழ்த்து எப்படி வருகின்றது என பார்க்கலாம்?


ஒருவேளை புறக்கணிக்க சொல்லிவிட்டால்...................






தீபாவளி வாழ்த்துக்கள்!!!

https://youtu.be/9NOPgZcxrOc

தீதீ தீதீ தீதீ தீபாவளி 


போடு



தீதீ தீதீ தீதீ தீபாவளி 


 



தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் பண்டிகைகள், தேர்தல் போன்ற திருவிழாக்கவள் போல நிறைய வந்தாலும் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே.


மகா முக்கியமான காரணமாக சொல்லபடுவது பகவான் நாராயணன் நரகாசுரனை வதம் செய்தார் என்பது மகா ஆதாரமான நம்பிக்கை என்பது முதலாவது.


இன்னும் பல வகையான காரணங்களை சொல்வார்கள், ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை.




மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள்.


(ஆனால் சமணர்களில் ஒரு பிரிவினர், இந்நாளில் மகாவீரர் சமாதி அடைந்ததாகவும், அதனை பார்த்து நிம்மதி அடைந்த பிற மதத்தினர் எதிரி ஒழிந்தான் என கொண்டாட கிளம்பியதாகவும் ஒரு செய்தி உண்டு, ஆதாரமில்லை)


இன்னும் ஒரு தீபாவளி நாளில்தான் அமிர்தசரஸ் பொற்கோயிலை கட்ட அடித்தளமிட்டார்கள் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை, அவர்களும் சிறப்பிப்பார்கள்.


இவ்வாறாக சகல மக்களும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை, ஒளி வந்தது அல்லது இருள் அகன்றது,தீமை அகன்றது என்பதனை குறிக்கின்றது.


தீமைகள் நம்மை விட்டு அகலவேண்டும் என்பதற்காக முதல்கடமையாக எண்ணெய் குளியலை கட்டாயமாக்கி வைத்திருக்கின்றது. இன்னும் ஏராளமான கடமைகள் உண்டு, காலம் காலமாக தொடர்ந்து வருபவை அவை.


தீபாவளி பண்டிகை என்பது அந்த பெயரினை கேட்டபொழுதிலே பெரும் உற்சாகத்தை தர கூடியது.


அவ்வகையில் நமது நண்பர்களின் இல்லங்களிலும் தொழிலிலும் தீமைகள் அகலட்டும், நன்மைகள் பெருகட்டும் என வாழ்த்துவோம்.


பல நண்பர்கள் தீபாவளிக்காக பெரும் பயணத்தில் இருப்பார்கள், அவர்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துவோம்.


குடும்பத்தோடும், சொந்தங்களோடும்,சொந்த மண்ணில் தீபாவளி கொண்டாடுவது ஒரு பெரிய வரம்.


உறவுகள் ஒன்றாகி கொண்டாடும் தருணத்தை விட மேலான‌ சொர்க்கம் எங்கு இருக்கின்றது??


தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


 







No automatic alt text available.





நரகாசுரன் சிறப்புப் பதிவு



 Image may contain: 3 people , text


கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள், மடையன், கடவுள் இல்லவே இல்லை என சொல்வார்கள்.


ஆனால் அதே கடவுளால் கொல்லபட்ட நரகாசுரனை நம்புவன் சுயமரியதைக்காரன், திராவிடன், பகுத்தறிவுவாதி, இன உணர்வாளன், அறிவுள்ளவன் எனவும் சொல்கின்றார்கள்


எப்படி இருக்கின்றது திராவிட கொள்கை?





வீரப்பன் நல்லவன், அவனை கொன்ற ஜெயலலிதா அவனை விட நல்லவர் என்ற வித்தியாசமான சிந்தாந்தமும் நம் சிற்றறிவுக்கு எட்டாது.

இப்படி அரிய தத்துவங்களை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கம் இது.

இன்னும் என்னென்ன தத்துவங்களை சொல்லபோகின்றார்களோ??

வருங்காலத்தில் பெரியாரை நடுரோட்டில் விட்டுசென்ற அண்ணாவும் கலைஞரும் பார்பணர்கள் என சொல்லி போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை

பைபிளின் தாவீது கொன்ற கோலியாத்தும், அரேபியாவில் இஸ்லாமிய பெருமக்கள் கல்லெறிந்து விரட்டும் அந்த ஜந்துவும் ஒருவேளை திராவிடர்களாக இருக்கலாம் அல்லவா?

கோலியாத்திற்கு வீரவணக்கம், கல்லில் கட்டி அடிக்கபட்ட அரேபிய திராவிடனுக்கு வீரவணக்கம என்றேல்லாம் இவர்கள் கிளம்புவார்களா என்றால் நிச்சயம் மாட்டார்கள்

பகுத்தறிவினையும் திராவிட்த்தையும் இந்து மதத்தில் மட்டும் கவனமாக தேடுவார்கள்.

இந்த தலாக் சர்ச்சை குறித்து ஏதவாது இவர்கள் உருப்படியாக திராவிட பாணியில் கேட்டிருக்கின்றார்களா?

இல்லை. கேட்க மாட்டார்கள்.

நரகாசுரனை தொடர்ந்து, இனி பிரஹலாதனுக்கு துரோகி பட்டமும், இரண்யனுக்கு வீரவணக்க நிகழ்வும் நடைபெறலாம்

ஒரு மாதிரியான ஆசாமிகள் கூட்டம் இது.

மக்கள் மகிழ்வாக ஒரு பண்டிகையினை கூட கொண்டாட கூடாது, அவர்கள் மகிழ்வாக , குதூகலமாக இருந்துவிட கூடாது என்ற கொள்கையின் பெயர் பகுத்தறிவு
















இனி இந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் நரகாசுரன் சாகாமல் இருக்கட்டும்


அது என்ன சதுர்த்தசியோ, முன் கூட்டிய அம்மாவசையோ பஞ்சாங்கம் போடுபவர்கள் கொஞ்சம் மாத்திக்க கூடாதா?


ஆனனபட்ட வள்ளுவனே "பொய்மையும் வாய்மையிடத்து.." என சொல்லவில்லையா? அது நன்மை பயக்கும் அல்லவா?




அப்படி இப்படி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தால் எவ்வளவு பேருக்கு "நன்மை பயக்கும் .." தெரியுமா?


இந்த இஸ்லாமிய மன்னர்களும், வெள்ளையனும் படையெடுத்து வந்தது போல, இந்து மன்னர்களும் 4 நாட்டிற்கு படையெடுத்து மதம் வளர்த்திருந்தால்தான் என்ன?


அப்படி செய்திருந்தால் சீனர்கள் கூட இந்துக்களாக ஆகியிருப்பர்கள், விடுமுறை கிடைத்திருக்கும், அந்த மன்னர்களை
நினைக்கும்பொழுதே கோபமாக வருகின்றது.


இந்தியாவிற்குள்ளே சண்டை போட்டிருக்கின்றார்களே தவிர தாண்டி சென்று 4 பேரை மதம் மாற்றியதாக ஒரு வரலாறுமில்லை


அந்த நிலவு கொஞ்சம் மெதுவாக சுற்றி இந்த அம்மாவாசை வேலைநாட்களில் வந்து தொலையக்கூடாதா?


இந்த வங்கி பணியாளர் போல நிலவும் மெதுவும் இயங்கினால்தான் என்ன?


அப்பல்லோ டாக்டர்களை போல இவ்வளவு கடமை உணர்ச்சியா அதற்கு?


இங்கே தமிழர்கள் எல்லாம் கொண்டாட்டம் தொடங்கிவிட்டார்கள்,


சக தமிழன் விடுமுறையில் இருக்கும்போது அலுவலகம் கிளம்புவது எவ்வளவு கொடுமை.


வைகோவிடம் சிக்கியுள்ள திருமாவினை விட மோசமான நிலை என்பதை விட என்ன சொல்ல முடியும்?








இயேசு நாதர் போல கருணாநிதி அவர்கள் எழுவார் : ஆயர் சற்குணம்




Image may contain: 6 people , people smiling



இயேசு நாதர் மூன்றாம் நாள் உயித்தெழுந்தது போல கருணாநிதி அவர்கள் எழுவார் : ஆயர் சற்குணம்


இவர் என்ன சொல்ல வருகின்றார்? கலைஞர் மறுபடி உயிர்பெறுவாரென்றால் என்ன அர்த்தம்?


இதன் அடுத்த பாகத்தை நினைக்கும் பொழுதுதான் பகீர் என்கின்றது





அதவாது உயிர்பெற்ற கிறிஸ்து 40 நாளில் பரலோகம் சென்றார் என்பது பைபிள் சொல்லும் உண்மை, அப்படியானால் ஆயர் சொன்னபடி உயிர்த்தெழும் கருணாநிதி...

சீ சீ கண்டதெல்லாம் யோசிக்க கூடாது

கருணாநிதி மட்டும்தான் யேசுபோல எழுவாரா? இல்லை தயாளு ராசாத்தி எல்லாம் மரியாள் போல பூத உடலோடு விண்ணகம் செல்வார்களா? என்பதனையும் ஆயர் சொன்னால் நன்றாக இருக்கும்?

அது சரி ஆயரே, 3 நாட்களுக்கு முன் கலைஞரை இயேசுபோல‌ வதைத்தது யார்? அந்த ரகசியத்தையும் சொல்லி தொலையுங்கள்.

நோயுற்றோரை விசாரியுங்கள், அவர்களுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என்கிறார் பைபிளில் யேசு,

அப்படி அப்பல்லோ சென்று நீங்கள் ஜெபிக்கவில்லை ஆயரே ஏன்?

# இவர் ஆயர் சற்குணம் அல்ல,

ஆய் துர்மணம் ,

இடையில் ஏன் சிகப்பு கச்சை, அதனை மஞ்சளாக மாற்றினால்தான் என்ன?

ஆயர் அல்ட்ராசிட்டி இருக்கட்டும்,

இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் ஜெபிக்கும் பால் தினகரன் கும்பல் இப்பொழுது அப்பல்லோ முதல்வருக்காக ஜெபிக்கின்றதா இல்லையா?

((நல்ல கத்தோலிக்கர்கள் தமிழகத்தில் இருந்தால் என்றோ இவருக்கு மஞ்சள் கச்சை அனுப்பியிருப்பார்கள், ஜெகத் கஸ்பர் எனும் போலி பாதிரியினையே விட்டுகொண்டிருக்கும் அவர்களிடம் இதனை எதிர்பார்க்க முடியாது

ஆனால் மோடி ஒழிக, இந்துத்வா ஒழிக என எங்காவது சொல்லிகொண்டிருப்பர்கள்..)














மோடி தலமையில் இந்தியா எழுச்சி பெறுவதாக அமெரிக்க பத்திரிகை தகவல் : தினமலர்

அமெரிக்கா விழும், இந்தியா எழும். மோடி தலமையில் இந்தியா எழுச்சி பெறுவதாக அமெரிக்க பத்திரிகை தகவல் : தினமலர்


ஆசியாவில் யாரை எதிர்த்து யாருக்கு கொம்பு சீவிவிட்டு இருவரையும் அழிக்கலாம் என்பதே அமெரிக்காவின் கனவு, கொள்கை, இன்னபிற அழிச்சாட்டியம்


சதாமினை அப்படி வளர்த்து , ஈரானுக்கு எதிராக தூண்டிவிட்டு பின் அழித்தார்கள், பின்லேடன் அந்த வகையே. சில ஈழபோராளிகளும் அப்படியே




அவர்கள் பேச்சை கேட்டு ஆப்கனில் தீவிரவாதத்தினை வளர்த்த பாகிஸ்தான் கை பிசைந்து நிற்கின்றது


இப்பொழுது அமெரிக்க தேவை சீனாவினை எதிர்க்கும் முகாமில் வலுவாக ஒரு நாடு, அதற்கு இந்தியாவினை கொம்பு சீவுகின்றது அமெரிக்கா


அமெரிக்காவும் இந்தியாவும் இரு நாட்டு ராணுவ தளங்களை பயன்படுத்திகொள்ளலாம் எனும் வலை, மோடிக்கு விரிக்கபட்ட வலை, வசமாக சிக்கி கிடக்கின்றார் மோடி


அதாகபட்டது அமெரிக்கா நாளை யுத்தமென்றால் இந்திய தளங்களை பயன்படுத்தும், இங்கிருந்து ஆப்கன், ஈரான், ரஷ்யா என தாக்க அவர்களுக்கு ஒரு தளம் வேண்டும்


இப்படி கொடுத்திருப்பதால் நிச்சயம் ஈரான், ரஷ்யா நாடுகளின் கோபத்திற்கு இந்தியா ஆளாகியிருப்பது நிஜம். உண்மையில் ஈரானுடனோ அல்லது பக்கத்து நாடுகளுடனோதான் இம்மாதிரி ஒப்பந்தம் நாம் போட்டிருக்கவேண்டும்.


அமெரிக்கா அருகிருக்கும் கியூபா, மெக்ஸிகோவினை நாம் தாக்க போகின்றோமா? அல்லது இலங்கை அருகிருக்கும் அமெரிக்க மர்மதீவில் நம்மை விடுவார்களா? பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தளத்தை நாம் பயன்படுத்த பாகிஸ்தான் விடுமா?


ஆக இந்தியா மிக மோசமாக அமெரிக்க வலையில் சிக்கிவிட்டது, இந்தியாவினை யாருடனாவது மோதவிட்டு அவர்களையும், அப்படியே கொஞ்சம் வளர்ந்திருக்கும் இந்தியாவினையும் கீழே தள்ள பெரும் திட்டமிடுகின்றது அமெரிக்கா


அவர்கள் பத்திரிகை செய்தி நோக்கமும் அதுவே


இது புரியாமல் இங்கு மோடி அப்படி, மோடி இப்படி என எழுதி ஒரு மாதிரி கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்


ரஷ்யாவோ, ஈரானோ மோடியினை பாராட்டினால் அது கவனிக்கதக்கது, அட வடகொரிய அதிபர் பாராடினால் நிச்சயம் மோடி தைரியமானவர் என சொல்லலாம்


அப்படி எல்லாம் இல்லாமல் அமெரிக்க பாராட்டுகின்றதாம், சோழியன் குடுமி சும்மா ஆடாது.


தினமலர் கொஞ்சம் ஓவராகத்தான் மோடி புகழினை மிகைபடுத்தி சொல்லிகொண்டிருக்கின்றது. உண்மை அது அல்ல‌


ஒரு வஞ்சகத்தை பெரும் ஆச்சரிய செய்தியாக சொல்லிகொண்டிருக்கின்றது.


மிக தைரியமான இந்திய தலமையினை எப்படி அளவிடமுடியுமென்றால் பாகிஸ்தானுடன் போரோ, சீனாவுடன் மிரட்டலோ அல்ல‌


எந்த பிரதமர் இலங்கை அதிபரின் தூக்கத்தை கெடுக்கின்றாரோ அவர்தான் மிக தைரியமான இந்திய பிரதமர் என்பது மிக எளிதான கணக்கு


இந்திரா, ராஜிவிற்கு பிறகு யாரும் இலங்கையினை மிரட்டவில்லை, உலக அரசியல்படி முடியவில்லை, நாளை சீமானே பிரதமர் ஆனாலும் கச்சதீவினை தாண்டுவது சுலபம் அல்ல. உலக அரசியல் அப்படி


இப்படி சில நாடுகளின் இந்திய அணுகுமுறையினை கொண்டே சில நடப்புக்களை அவதானிக்க முடியும்


இந்திரா, ராஜிவிற்கு பின் அவ்விடம் காலியாகவே இருக்கின்றது,


அப்படித்தான் காலியாகவே இருக்கும்,


காரணம் அப்படி ஒருவர் வந்தால் உடனே முடித்து மறுபடியும் காலியாக்கி வைத்துவிடுவார்கள்


அதனை நிரப்ப ஒருவர் பின்னாளில் வரலாம், ஆனால் நிச்சயம் அது மோடி அல்ல.



சரவெடிச் செய்திகள்.....



கலைஞரை கவனித்துகொள்ளும் நித்யா யார்? பத்திரிகைகளில் பரபரப்பு செய்திகள்


அங்கே தோட்டகாவல் பூங்குன்றன் என்பார்கள், மருத்துவர் விவேக் என்பார்கள், சிவகுமார் என்பார்கள், திடீரென ராவணன் என்பார்கள், இன்னும் ஏராளமான மன்னார்குடி பாத்திரங்கள் வரும் போகும்


அவர்கள் யார் என்பதை பற்றி எல்லாம் மூச் இருக்காது


ஆனால் கலைஞருக்கு ஒரு உதவியாளன் கிடைத்துவிட்டானென்றால் உடனே அவன் யார்? அவன் வம்சம் என்ன? 5 வயதில் என்ன சாப்பிட்டான்? 10 வயதில் என்ன ஆடை அணிந்தான், அவன் ஜாதகம் என்ன? என கிளம்பிவிடுவார்கள்


கலைஞரின் ஜாதகம் இப்படி, இருக்கட்டும்


ஆனந்த விகடன் பேட்டியினை அடுத்து, அதாவது ஸ்டாலின் வாரிசு என அறிவித்த உடனே கலைஞருக்கு கொப்பளம் வருகின்றது, அவ்வளவு பேர் இருந்தும் நித்யா மட்டும் கவனிக்கின்றாராம்.


உடனே அழகிரி பறந்து வந்து பார்த்து, நலம் பெறுங்கள் என சொல்லியிருக்கின்றார் (முதலில் நலம்பெறுங்கள், அப்புறம் இருக்கிறது என சிலர் எடுத்துகொள்வார்கள்), அழகிரி பார்த்துவிட்டார் அல்லவா?


ஏற்கனவே ராசாத்தி கோபாலபுரம் வந்துவிட்டாராம் (அக்னி நட்சத்திர ஜெய சித்ரா, சுமித்ரா எல்லாம் கண்ணுக்குள் வருகின்றார்கள்)


கலாநிதி, தயாநிதி எல்லோரும் வருவார்கள், குடும்பம் ஒன்றாகும், அதன் பின் கலைஞர் ரேஸ் குதிரை போல முரசொலியில் துள்ளி வருவார்.


கடன் பேட்டியில் ஏற்பட்ட சலசலப்பு இனி அடங்கும்


முன்பே கொப்பளம் வந்து, அதனால் அறிக்கை விட்டு சிறிய சலசலப்பினை ஏற்படுத்திவிட்டு உடல் சுகவீனம், ஓய்வு என கலைஞர் அந்த கொப்பளத்தினை வைத்தும் அரசியல் செய்திருப்பாரோ என யாரும் சிந்திக்க கூடாது


ஆனால் சொல்லமுடியாது .


எது கிடைத்தாலும் அதனை வைத்து ஒரு லாபம் பார்த்துவிடுவது அவர் ஸ்டைல் அது கொள்கையோ கொப்பளமோ எதுவாக இருந்தாலும் சரி.







போனையே எடுக்காத அழகிரி இப்போதாவது நேரில் வந்து சந்தித்தாரே…… கருணாநிதி நெகிழ்ச்சி!

நெகிழ்ந்துவிட்டார் அல்லவா, இனி இந்த கொப்பளம், ஒவ்வாமை எல்லாம் இனி மருத்துவமனை செல்லாமல் சரியாகிவிடும்

ஆனால் மறுபடியும் இந்த நோய்கள் வராமல் கலைஞரை காக்கும் பொறுப்பு அழகிரி போனுக்கே இருக்கின்றது....


அழகிரி போனுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது









பைரவா படத்தின் டீசரை வெளியிட்டிருக்கின்றார்கள், விஜய் திருந்தும் வாய்ப்பு இனி கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை






காவிரி நீரை பெற சித்தராமையாவை திருநாவுக்கரசர் சந்திக்க வேண்டும் : தமிழிசை


அவர் சந்திப்பது இருக்கட்டும்,, பிரதமர் இவர்கட்சிக்காரர் அல்லவா? அவரை இவர் சந்தித்து காவேரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கோரிக்கை வைத்தால் என்ன?


அப்படியே எடியூரப்பாவினை சந்தித்து இடையூறு செய்யாதப்பா என சொல்லிவிட்டு வரலாம் அல்லவா?




ஒருவேளை எடியூரப்பா,மோடி பாஜக கட்சி என்பது இவருக்கு மறந்திருக்குமோ???


இவர்கள் மீதே இப்படி எல்லாம் வீக் பாயிண்ட் இருக்க, இவர் திருநாவுக்கரசை சீண்டி ரொம்ப விவரமாக இருப்பதாக காட்டிகொள்கின்றாராம்.


எவ்வளவு விவரமான ஆளு நம்ம அம்மணி.







 

Thursday, October 27, 2016

அம்மா ... இது வேற கணக்கு....




தொடர்ந்து இருமுறை அபாரமாக வென்றவர் ஜெயலலிதா, பாராளுமன்றதேர்தலிலும் தமிழக வெற்றி அவருக்கே


தமிழக தேர்தலில் 4 மாதம் முன்பு, தமிழகத்தின் பெருவாரியான மக்கள் அவரைத்தான் ஆதரித்து முதல்வராக்கினார்கள்


இதோ தீபாவளி நேரம் முதல்வர் மருத்துவமனையில் இருக்கின்றார்





ஆனால் ஜவுளிகடை, சந்தை என எல்லா இடங்களிலும் அதே மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது என்கின்றார்கள், பாதி தமிழகம் ஜெயலலிதாவினை ஆதரித்திருந்தது உண்மை என்றாலும் இன்று அங்கெல்லாம் பாதி கூட்டம் குறைந்திருக்கவேண்டும் அல்லவா?

இல்லை எல்லா மக்களும் மிக மகிழ்வாக தீபாவளி ஷாப்பிங் செய்கின்றார்களாம், இதில் வட்ட, மாவட்ட, ஒன்றிய செயலாளர்களின் குடும்பமும் உண்டாம்

"இந்த மக்களுக்ககாகவா தவ வாழ்வு வாழ்ந்தார் அம்மா?" என்ன கொடுமை

இதனை எல்லாம் குறித்து வைத்திருக்கின்றார்களாம், நம்பிகைக்குரிய சு.சாமியே ஜெயா வீடு திரும்புவதை அறிவித்துவிட்டார்

அவர் வரட்டும், அதன் பின்பு தெரியும்,






அக்பர்

https://youtu.be/mBB96mj2X38


  தோற்றம் : 15-10-1542         ::   மறைவு 27-10-1605








இந்தியாவினை எத்தனயோ அரசர்கள் ஆண்டனர், அவற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிடதக்கவர் அக்பர், மகா அக்பர்.


பாபரின் பேரன், எப்படியோ அனாதையாக திரிந்திருக்கவேண்டியவனை வளர்த்து அரசனாக்கினார் தாய் மாமன் பைரம்கான். அக்காலத்தில் அப்படிபட்ட ராஜவிசுவாசிகள் இருந்திருக்கின்றார்கள், இக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை, கொஞ்சம் அசந்தாலே தூக்கி கடாசிவிட்டு அமர்ந்துகொள்வார்கள்


அதனை காக்க சிரிய அதிபர் போல விடாபிடியோ அல்லது கலைஞர் போல மனதால் தூங்கா நிலையும் வேண்டும், அதனால்தான் விழிக்கும்பொழுதும் அவர் திமுக தலைவராகவே விழிகின்றார்.


அக்பர் அரசனானதும் நல்ல ஆட்சிதான் நடத்தி இருக்கின்றார், ஒரு விஷயம் அவருக்கு புலபட்டிருக்கின்றது, மனிதர் புத்திசாலி உணர்ந்துகொண்டார்.


இந்நாட்டில் ஆளலாம், ஆனால் மதரீதியான எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும், நம்க்கு முன்னாலும் பல இஸ்லாமியர் ஆண்டார்கள், ஆனால் ஏன் இந்நாட்டினை இஸ்லாமிய நாடாக மாற்றமுடியவில்லை


முடியாது, அது முடியவே முடியாது. இந்நாடு இந்துக்களின் நாடாகவே இருக்கும், நாம் இறங்கி போவோம் வேறுவழி இல்லை, இல்லாவிட்டால் ஆளமுடியாது.


அப்படி இந்நாட்டில் ஆட்சிபுரிய இந்துக்களின் ஆதரவு தேவை என முதலில் அவர்தான் சிந்தித்தார், சிந்தித்ததோடு மட்டுமன்றி ராஜபுத்திர இளவரசியினையும் மணம் புரிந்தார்.


ஒரு இஸ்லாமிய மன்னனுக்கு அது சவால், ஒரு வகையில் தோல்வியும் கூட‌


ஆனால் ராஜபுத்திரர்களின் மாப்பிள்ளையாகாமல் இனி அமைதியான ஆட்சி சாத்தியமில்லை என அவருக்கு வேறுவழி இல்லை.


அதன் பின் அவர் சிந்தனை மாறி இருக்கின்றது


இஸ்லாமை தவிர மற்ற மதங்களையும் நேசித்தார், ஒருங்கிணைந்த மத நல்லிணக்கமே இந்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என அன்றே சிந்தித்திருக்கின்றார்.


அன்றைய சீக்கியம், இஸ்லாம், இந்து, அன்றே இங்கு அலைந்த இயேசு சபை குருக்களை எல்லாம் தன் அரண்மையில் அமரவைத்து தீன் இலாஹி என புதிய மத தத்துவத்தை அறிவித்திருக்கின்றார், அதாவது இந்து, இஸ்லாம், சீக்கியம் கலந்த அமைதி வழி


(இஸ்லாமும் கிறிஸ்தவமும் வேறு அல்ல, ஆனால் வளர்ந்த கலாச்சாரம் வேறு. இது அக்பருக்கு புரிந்திருக்கின்றது, இரண்டையும் அவர் ஒரே கொள்கையாக கண்டிருக்கின்றார்.


நிச்சயமாக அவர் மேதை, நம்மவர்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரியாது)


அதில்தான் முகல் இந்தியா அமைதியாக இருந்திருக்கின்றது, செல்வம் கொட்டியிருக்கின்றது, தாஜ்மஹால் வரை எழும்பி இருக்கின்றது


பின்னாளில் இவரின் கொள்ளுபேரன் அவுரங்கசீப் மதத்தை பிரதானமாக்கி சில காரியங்களில் இறங்க, அது சிவசேனா எனும் வீரசிவாஜியின் எழுச்சிக்கு வித்திட்டது, அதன் பின் மொகல் வம்சம் வீழ்ச்சியினைத்தான் கண்டது


இந்திய யதார்த்தத்தை அதாவது சமய நல்லிணக்கமே இந்நாட்டின் வளர்ச்சியினை தீர்மானிக்கும் என முதலில் சிந்தித்த மன்னர் அவர்.


நல்ல புத்திசாலியாகவும் இருந்திருக்கின்றார், கலை ஆர்வமும் தனக்கு பின்னால் தன் பெயர் சொல்ல ஒரு நகரம் வேண்டும் என அலெக்ஸாண்டர் பாணியில் ஒரு நகரத்தினையும் நிர்மானித்து, சில நூல்களையும் எழுதி வைத்திருக்கின்றார்


இன்று அவரின் நினைவு நாள்


இந்தியாவின் மிகசிறந்த மன்னரான அவரின் கதை ஜோதா அக்பர் என மிக அழகாக எடுக்கபட்டிருந்தது, இந்தியாவின் மிக சிறந்த 10 படமாக கொண்டாடியிருக்கவேண்டிய படம் அது


அரண்மனை, படை, உடை, உணவு, தர்பார் அமைப்பு என எல்லாமே மகா பெர்பெக்சனாக அமைந்த படம் அது, அக்பர் காலத்திற்கே அழைத்து சென்றது


ஆனால் வடக்கத்தியர் வழக்கம் போல கொதித்தனர், இது சரியல்ல என ஆயிரம் வசனங்கள் பேசினர், நாங்கள் சொல்வதுதான் வரலறு என குதித்தனர், அப்படம் பெறவேண்டிய வெற்றியினை பெறவில்ல.


ஆனால் மிக அழகாக அமைக்கபட்ட வரலாற்று படம் அது, மிக ரசித்து பார்த்தபடம், ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் மிக அழகான தேர்வுகள்


அப்படம் பார்க்கும் பொழுது மருதநாயகம் படத்திற்கு மிக பொருத்தமான நடிகராக கமலஹாசன் வருவாரா? என்றே சிந்திக்க தோன்றியது, கமல் மிக திறமையானவர், சந்தேகமே இல்லை மகா அழகானவர், இன்றளவும் தோழி Uma Magi போல பெரும் ரசிக பட்டாளமே கொண்டவர்


ஆனால் ஆஜானுபாகுவான கேரக்டருக்கு தமிழில் நடிகர் நெப்போலியன் போன்றவர்கள்தான் செட்டாவர்கள், தனுஷினை எல்லாம் மருதநாயகமாக கற்பனை செய்யுங்கள், சிரிப்பு தானாக வரும்.


இந்த பேராசிரியர் வேல,ராமமூர்த்தி இளமையாக இருந்தால் சந்தேகமே இல்லை, மனிதர் மருதநாயகத்திற்கு அழகாக பொருந்துவார்,


கம்பீரம் அவருக்கு அமைந்திருகின்றது,


அவரின் அந்த கம்பீர நடிப்பிற்காகவே கிடாரி படத்தினை பார்க்கமுடிந்தது, சசிகுமார் எல்லாம் அப்படத்தில் சும்மா, வேல.ராமமூர்த்திதான் ஹீரோ, அது அவர் படம்தான்.


அட நம்ம சத்தியராஜ் கூட அட்டகாசமாக பொருந்துவார்.


ஆனால் கமல் படம், எல்லா வேடங்களிலும் கமலே வரும் சாத்தியம் உண்டு , சரி அது மருதநாயகம் பாடு விட்டுவிடலாம்


அக்பரை நினைக்கும் பொழுதெல்லாம், அம்மனிதர் இந்தியாவிற்கு விட்டு சென்ற அடையாளம் நினைவுக்கு வருகின்றது, மிக அழகான கட்டடம், கலைபொருட்கள், யுத்த நுட்பம் என பல உண்டு.


தான்ஸேன் எனும் இசைகலைஞனை அவர் ஆதரித்த விதமே அவரின் கலை மனதிற்கு எடுத்துகாட்டு


கோட்டை கட்ட தோதான இடங்களை தேர்ந்தெடுத்ததில் மனிதர் நிற்கின்றார், ஆக்ரா கோட்டை அவரால் உருவாக்கபட்டு பின் தாஜ்மகால் அங்கே அமைய அடித்தளமானது


மிக முக்கியமாக நல்ல மந்திரி சபையினை வைத்திருந்தார், நவரத்தினங்கள் எனபபடும் 9 அறிவு ஜீவிகளை தன்னோடு வைத்திருந்தார்.


இன்று அதே இந்திய அரசு, மோடி அரசவை ஆனால் அருண் ஜெட்லியினை தவிர சொல்லிகொள்ளும் அமைச்சர்கள் இல்லை, ஆனால் இதுபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, பேசினால் தேசதுரோகம் ஆகிவிடும்,


ஒரு மோடி 100 அக்பருக்கு சமம், ஜெட்லி அக்பரின் புகழ்மிக்க நிதியமைச்சர் தோடாமால் போல 1000 பேருக்கு சமம் என சொல்லிவிட வேண்டும், சொல்லியாயிற்று


மன்மோகன் பரவாயில்லை, சிதம்பரம், சசிதரூர் என பல திறமையான அடையாளங்கள் அவர் ஆட்சியில் இருந்தன,


அந்த நல்ல அமைச்சரவைக்கு கண் திருஷ்டி பரிகாரமாக அழகிரி போன்றவர்களும் இருந்தனர்.


அக்பர் போற்றபட முதல் காரணம், இந்நாடு அமைதியில் செழிக்க முதலில் பேணபடவேண்டிது மத நல்லிணக்கமே என சிந்தித்தது


இந்தியாவில் ஆளவரும், நல்ல ஆட்சி தர விரும்பும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் முன்னோடி அந்த அக்பரே


அவரின் இந்த நினைவுநாளில் அதுதான் நினைவுக்கு வருகின்றது, அவர் பெயர் ஜெலாலுதீன், அக்பர் எனும் சொல்லுக்கு பெரியவர் என பொருள்


அவர் மனமும் பெரியதாகவே இருந்திருக்கின்றது


இன்னொரு முறை ஜோதா அக்பர் படத்தினை பார்த்துவிட வேண்டியதுதான், ஐஸ்வர்யா ராயின் இயல்பான சோகம் கவ்விய ஆனால் அழகான அந்த முகம் ராணி ஜோத்பாயின் கதைக்கு மிக அழகாக பொருந்துகின்றது


நிச்சயம் வேறு நடிகை பொருந்தியிருக்க மாட்டார், காரணம் இந்துமத அரசி ஒரு இஸ்லாமிய மன்னனோடு நடக்கும் திருமணத்தில் எவ்வளவு தயக்கமும் கலக்கமும் இருக்கும், அதனை அம்முகம் அப்படியே பிரதிபலித்தது


ஆனால் வட இந்தியர்கள் படத்தினை ஓடவிடவில்லை, அவர்கள் ரசனை அவ்வளவுதான் இருந்திருக்கின்றது.


( இப்பொழுது வந்து உனக்கு தெரியுமா, அக்பர் இஸ்லாமிய வெறியன் என குதிப்பார்கள், கதகளி மோகினி குச்சுபுடி எல்லாம் இப்பொழுது தொடங்கும்...)


Stanley Rajan's photo.                Stanley Rajan's photo.






ஜெயமோகன் இன்னும் நிறைய சொல்வார்...



Image may contain: 1 person , close-up and outdoor


ஜெயமோகன் வங்கி அதிகாரியினை விமர்சித்துவிட்டார் என கடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள்


அவரைபற்றி ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம், மனிதர் ஒருமாதிரியானவர், எப்பொழுது என்ன பேசுவார் என்றே தெரியாது, ஒரு மாதிரியான சிந்தனையில் இருப்பவர்


முதன் முதலில் இவரை எச்சரிக்கை பார்வை பார்த்தவர் சாட்சாத் எழுத்தாளர் சுஜாதா, அதோடு இவருக்கு அவர் மீதான வெறுப்பு அதிகரித்து என்னவெல்லாமோ எழுதினார்


சுஜாதா இடத்தினை பிடிக்காமல் ஓயமாட்டேன் என அண்ணாமலை ரஜினி போல சவால்விட்டார்,


புலி வேறு புலி வேடம் வேறு அல்லவா?


நானே ஆகசிறந்த இலக்கியவாதி என கிளம்பினார், வின்னர் பட வடிவேலு போல "எஸ் பாஸ்..." ஒரு கூட்டம் கிளம்பி இவருக்கு வாசகர் வட்டம், விசிறிகள் சதுரம் என என்னவெல்லாமோ நடந்தது


பாரதி, தாகூர், மார்க்ஸ் என எல்லோரையும் போஸ்ட்மார்டம் செய்து ஆய்வரிக்கை சொன்னவர், அதனையும் அவரின் விசிறி கூட்டம் நம்பிகொண்டது.


அடிக்கடி இலக்கிய பரிசு வழங்கும் நோபல் கமிட்டியினை கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து திட்டிகொண்டிருப்பார்.


இவர் விமர்சிக்காத ஒரே ஒரு நபர் ஜெயலலிதா,


அவரை மட்டும் விட்டுவைத்தார், விமர்சித்திருந்தால் சிறையில் ஜெயமோகன் என பெரும் புத்தகம் வந்திருக்கும்,


"சுந்தர ராமசாமி சொன்னார் சிறை என்பது மானிட உணர்வின் சிந்தனை உள்ளோளியில்" என 400 பக்கத்திற்கு இவரும் எழுதியிருப்பார்.


இன்று ஏதோ வங்கியில் ஒரு பெண் மெதுவாக பணம் எண்ணிவிட்டாராம், அந்த வீடியோ காட்டி இவரின் விசிறிகளில் ஒன்று அலறியிருக்கின்றது


உடனே இவர் ஆமாம், அந்த கிழவியினை விரட்டவேண்டும், தேவாங்கு பெட்டர் என்றெல்லாம் புலம்பி இருக்கின்றார், காரணம் இவரின் பொன்னான நேரத்தை வங்கி புடுங்கிவிட்டதாம்


இணையத்தில் எழுதி குவிப்பவருக்கு, இணைய வங்கி பயன்படுத்த எவ்வளவு நேரமாகும்? அதனை செய்திருக்கலாம், செய்யவில்லை.


வங்கி பணி சிரமம் வாய்ந்தது, ஒரு நாளைக்கு ஆயிரம் வாடிக்கையாளர்களை அப்பெண் அதிகாரி சந்திப்பார். எது கள்ளநோட்டு, எது நல்லநோட்டு என அவர் சோதிக்கத்தான் செய்வார்


ஒரு ரூபாய் விடுபட்டாலும், ஒரு பூஜ்யம் அல்லது புள்ளிவிடுபட்டாலும் அந்த அதிகாரியின் நிலை மகா சிக்கலே அன்றி இந்த ஜெயமோகனுக்கு அல்ல‌


ஆலோசனை சொல்வதென்றால் வங்கிக்கு சொல்லலாம், கூட 4 வேலையாட்களை வைத்தால் என்ன? இன்னும் வசதிகளை கூட்டினால் என சொல்லலாம், அது ஏற்றுகொள்ள கூடியது


அதனை விட்டு விட்டு அவரை தேவாங்கு இவரை விட அப்பெண் சோம்பேறி என்பது, ஜெயமோகனை விட குரங்கு கையிலிருக்கும் பேனா நன்றாக எழுதும் என சொல்வதை போன்றது


சமீபத்தில்தான் சிங்கப்பூரில் சென்று ஒரு எழுத்தாளரிடம் வாங்கி கட்டி வந்தார், இப்பொழுது இங்கே தொடங்கிவிட்டார்.


மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் தரம் எட்ட இன்னும் 20 வருடம் ஆகுமென்று கோலாலம்பூரிலே தொடங்கினார், மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கு வேறு வேலை இருந்ததால் விட்டுவிட்டார்கள்.


வங்கி அதிகாரியினை மிக மட்டமாக இவர் சொன்னதை அடுத்து கடும் கோபமாக போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள்,


கோபமென்றால் கடல் பட ரிசல்ட் பார்த்து மணிரத்தினத்திற்கு வந்த கோபத்தை விட அதிகம்.


கடல் படம் மணிரத்தினைத்தை மூழ்கடித்த பின், காவிய தலைவன் படம் தயாரிப்பாளர் காப்பிக்கு வழி இல்லாமல் செய்த பின் அன்னாரின் கலைபயணம் நெல்லை, கன்னியகுமரி தமிழுக்கு மட்டும் சென்னையில் பயன்படுகிறது


இதனை நமது நெல்லை சிவாவோ, இமாம் அண்ணாச்சியோ செய்துவிடும் காரியம்.


மகாபாரதம் எவ்வளவு பெரும் காப்பியம், ஆனால் ராஜாஜி மிக சுருக்கமாக விளக்கம் எழுதினார், இன்னும் பலர் எழுதினர் மிக அருமையாக இருந்தது


அதில் ராஜாஜியின் எழுத்து இன்றுவரை சிலாகிக்க கூடியது.


ஆனால் நானும் பாரதம் எழுதுகிறேன் என சொல்லி கிட்டதட்ட 1 லட்சம் பக்கம் எழுதியிருக்கின்றார் எப்படி? எல்லாம் கற்பனை, மகா கற்பனனை


தாஜ்மஹால் இருக்கின்றது, அதில் இப்பக்கம் கொஞ்சம் கூடுதல் இப்பக்கம் கொஞ்சம் வெட்டுதல், உருவினை மாற்றுதல் என செய்து இதுதான் தாஜ்மஹால் என ஒன்றை காட்டினால் எப்படி இருக்கும்?


ஷாஜஹான் ஆவி விடுமா?


மகாபாரததினை பெரிதாக எழுதுகிறேன் என எதனையோ எழுதி மகா கற்பனை அபத்தமாக எழுதிவைத்திருக்கின்றார் அன்னார். இதனை ஒரு கிறிஸ்தவன், இஸ்லாமியன் எழுதினால் நிச்சயம் பொங்கி இருப்பார்கள்


ஆனால் ஒரு இந்த் மகாபரதம் எனும் காவியத்தை அவனவன் விருப்பத்திற்கு யாரும் வளைக்கலாம்


சத்தமே இருக்காது, இதுதான் இந்து அமைப்புகள் அரசியல்.


மகாபாரதம் மீது அபிமானமுள்ள இந்து இதனை நிச்சயம் கண்டித்திருப்பான், பைபிளை கண்டமேனிக்கு எழுதினால் கிறிஸ்தவன் விடுவானா? யேசுவின் வாழ்க்கையினை கற்பனையாக ஒரு வரி கூட்ட முடியுமா?


குரான் மொழிபெயர்ப்பினை இஷ்டத்திற்கு உங்கள் கற்பனையினை செலுத்தினால் என்ன ஆகும்?


ஆனால் ராமயணம், மகாபாரத்தினை இஷ்டத்திற்கு திரிக்கலாம், திரௌபதி அப்படி, துரியன் இப்படி என ஆளாளுக்கு சேர்த்துகொண்டே செல்லலாம்


யாரும் கேட்கமாட்டார்கள், எந்த இந்துவும் கேட்கமாட்டான். ஆனால் எங்காவது மாற்று மதத்துகாரன் சொல்லிவிட்டால் கொடிபிடித்து கிளம்புவார்கள்


முதலில் இந்துக்கள் தங்கள் அடையாளங்களை இம்மாதிரி இந்துக்களிடமிருந்து முதலில் காக்க வேண்டாமா?


ஆனால் செய்ய மாட்டார்கள், காரணம் இது மத அபிமானம் அல்லாத அரசியல், வெறும் அரசியல்.


ஜெயமோகன் இன்னும் நிறைய சொல்வார், அடிக்கடி சிக்குவார், நடக்கும்


காரணம் அவர் ஜெயமோகன் அல்ல, "சுய"மோகன் என பல இடங்களில் காட்டிகொண்டே இருக்கின்றார்.


அன்னார் முன்பு சொன்ன‌ பொன்மொழிகளில் சில‌


"பெரியார் செய்தது பெரிய காரியமே இல்லை, அவர் ஒன்றும் சாதிக்கவில்லை


பாரதி பெருங் கவிஞனே அல்ல, மகாகவி எனும் வார்த்தைக்கு தகுதி இல்லாதவன்


தேவதேவன் எனும் என் நண்பர் கண்ணதாசனை விட ஆயிரம் மடங்கு பெரும் கவிஞர்.


கலைஞர் எழுதியது எந்த வகையிலும் சேராது, அது ஒரு எழுத்தே அல்ல


தமிழை வளர்க்க, அதனை ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி எழுதினால் வளர்த்துவிடலாம்.


என் பாட்டி சொன்ன மகாபாரத்தினை நான் எழுதியிருக்கின்றேன்.


(எல்லா பாட்டியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பனையாகத்தான் சொல்வார்கள்) "


இப்படி ஏராளமான முத்துக்கள் உண்டு












கொசுறு









மாதம்தோறும் ரூ.2.50 லட்சம் பராமரிப்புத் தொகையாக வழங்குவதற்கு, தனது கணவருக்கு உத்தரவிட கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்துள்ளார்.

என்னது? மாதம் 2.50 லட்சம் பராமரிப்பு செலவா?

அந்த‌ மனிதனின் பின்னாலும் ஏதும் சோக கதை இருக்கலாமோ, பராமரிப்பு செலவினை தாக்கு பிடிக்க‌ முடியாமல் எங்கேனும் இவரை விட்டு ஓடியிருப்பாரோ?




இளையராஜாவும் தமிழ் இசையும் வேறு அல்லவே அல்ல..

https://youtu.be/VlFS4RcDZIY


சிலருக்கு சில விஷயங்கள் உறுத்திகொண்டே இருக்கும், அதில் இன்றளவுக்கு சிலருக்கு கடந்த 50 வருடமாக இருக்கும் உறுத்தல் இளையராஜா


அகல விரிந்த அவர்களின் கண்களுக்குள் அவர் உறுத்திகொண்டே இருக்கின்றார், கண்களுக்குள் விழுந்த மணலாக அவர் உறுத்துகின்றார், அவர் பெயர் காதோரம் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல அவர்கள் காதில் வலிக்கின்றது


எப்படி எல்லாம் நயமாக வசைபாடியிருக்கின்றார், அதவாது இளையராஜா உலகதரம் வாய்ந்தவர் எல்லாம் இல்லையாம், ஜெயமோகனே இதுபற்றி எழுதியிருக்கின்றாராம்


மொசார்ட், பீத்தோவன் போன்ற பெரும் ஜாம்பவான்கள் போல இளையராஜா இல்லையாம், இன்னும் ராஸ்டிரியாபோச் எனும் கலைஞன் போல இளையராஜா மக்களை திரட்டவில்லையாம்


கள் குடித்த கொக்கெய்ன் குரங்கு போல மனிதர் உளறிகொண்டிருக்கின்றார்


மொசாத்தும், பீத்தோவானையும் நமக்கு சொன்னது யார்? வெள்ளையன். அவன் இனத்தினை அவன் தாங்கி பிடிப்பதில் என்ன இருக்கின்றது, சொல்லத்தான் செய்வான்


ஆனால் மொசாத், பீத்தோவன் வாழ்ந்த காலமென்ன? இளையராஜவின் காலமென்ன?


இஸ்ரேலின் 1960 புகழ்பெற்ற தளபதி மோசே தயானையும் மாவீரன் அலெக்ஸாண்டரையும் ஒப்பிடமுடியுமா? அது தகுமா?


மனிதர் எப்படியெல்லாம் புலம்புகின்றார், கனடாவில் அவன் இசைத்தானாம், லண்டனில் இவன் இசைத்தானாம் அதனை எல்லாம் விட ராஜா மட்டமாம்


அதாவது மனிதர் சொல்வதென்ன?


பிரெஞ்ச் சாப்பாடு அப்படி, பிரிட்டானிய சாப்பாடு இப்படி, ஜெர்மன் ஹாட் டோக் இப்படி ஆகா, ஓஹோ, நமது ஊர் இட்லி சீஈஈஈ..


ஆனால் தமிழகத்தில் பிரெஞ் பிரட் ஸ்லைசும், ஹோட் டோக்கும், இத்தாலிய பர்கரும் யாருக்கு வேண்டும்?


இங்கு தேவை அருமையான தமிழர் உணவு


அப்படி தமிழருக்கு என்ன ரசனையோ அதனை இளையராஜா அற்புதமாக கொடுத்தார், திராவிட மொழிகளுக்கு எல்லாம் அற்புதமான இசை வடிவம் கொடுத்தார்


மக்கள் கலைஞனான அவரின் இசை இன்றும் உலகெல்ல்லாம் ஆராய்ச்சி செய்யத்தான் படுகின்றது, கொண்டாடாபடுகின்றது


மொசாத் கையில் வயலினோடு பிறந்தவன், பீத்தோவான் பெரும் இசை குடும்பம், இன்னும் இவர் சொல்லும் வெளிநாட்டவர் எல்லாம் 3 வயதிலே கீபோர்டில் கை வைத்தவர்கள்


இளையராஜா வறுமையிலும், சாதி கொடுமகைகளையும், புறக்கணிப்பினையும் தாண்டி வந்து உச்சம் தொட்டிருப்பவர். சந்தேகமே இல்லை இப்படி சொல்லலாம்


யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை


தமிழர் இசையினை திருடி, திருவையாற்றிலே, காவேரி கரை நாடக இடையினை கர்நாடக இசை என மாற்றி புகழ்பெற்ற அம்மும்மூர்த்திகளின் ஒரே வடிவம் இளையராஜா


காலத்தால் உயர்சாதியால் கொள்ளையடிக்கபட்ட இசை, ஒரு பச்சை தமிழனால் மறுபடியும் கொண்டுவரபட்டு தமிழிசையாக அடையாளம் காட்டபட்டது


எவ்வளவு தந்திரமாக அந்த திருவையாறு மும்மூர்த்திகளை அது என்னது, ஆம் தியாகபிரம்மம் எனும் தியாகராஜரை அந்த பித்தோவன்,மெசார்ட் இன்ன பிற மேற்கத்தியர்களோடு ஒப்பிடலாம் அல்லவா?


செய்தால் உலகமே வாய்விட்டு சிரிக்கும், இந்த தியாகராஜரின் இசையினை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "கிரேஸி மேன்" என ஒதுங்கிகொள்ளும்


ஆக அவாளின் உயர்ந்த அடையாளமான தியாகராஜர், முத்துசாமி, சியாமா சாஸ்திரி எல்லாம் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவாளாம்


ஆனால் இளையராஜாவினை மட்டும் உலக கலைஞர்களோடு ஒப்பிட்டு மட்டம் தட்டுவாராம்


எப்படிபட்ட நியாயம் இது


கலைஞர் மொழியில் சொல்வதென்றால்


"எல்லாம் வயித்தெறிச்சல், ஒரு தாழ்த்தபட்டவன், சாக்கடை புழுவாக நசுக்கபட்டவன் ஒரு அரியணையில் அமருந்து கிரீடம் சூட்டபடுவதை தாங்கமுடியாத இயலாமை"


அதுதான் அது ஒன்றேதான் இருக்கமுடியும்


அன்னார் ஒரு தமிழராம், தமிழில்தான் எழுதியிருக்கின்றார். தமிழனை எப்படி எல்லாம் மட்டம் தட்டியிருக்கின்றார் என தமிழர்கள் காண்பது நல்லது


மேற்கத்திய இசை அவர்களுக்கானது, மனதினை தொட்டு இவர் சொல்லட்டும் அது காதுகொடுத்து கேட்கமுடியுமா? புரியுமா?


திருவையாறு ஒப்பாரியே அல்லது முணுமுணுப்பே நமக்கு புரியாது (இவருக்கு புரியும் போல.)


இதில் நமக்கு தேவை என்ன? அழகான தமிழிசையும் மனதை உருக்கும் அற்புதமான பாடல்களும்


இளையராஜா அதனைத்தான் கொடுத்தார், ஒவ்வொரு தமிழனின் மனதினையும் அவரால் தொட முடிந்தது


ஆனால் இந்த கிராமத்தானுக்கு இவ்வளவு பெருமையா என பொறுத்துகொள்ளாதவர் எப்படி எழுதுவார்?


இப்படித்தான் எழுதுவார், துணைக்கு ஜெயமோகனையும் அழைப்பார்


சரி இவர்கள் எல்லாம் இசையில் என்ன கிழித்தார்கள், ஒரு டோலக்கோ அல்லது டி.ஆர் ஸ்டைலில் கொட்டாங்கச்சியோ வாசிக்க தெரியுமா என்றால் தெரியாது


ஆனால் உச்சம் பெற்ற கிராமத்தானை மட்டம் தட்டியே தீரவேண்டும் என்ற வன்மம் தெரிகின்றது


நான் என் பங்கிற்கு சொல்லிவிட்டேன், உங்களுக்கு இளையராஜாவினை பிடிக்கும் என்றால் இம்மனிதரை சற்று கவனியுங்கள்


அது தமிழ் இசைக்கு (பாஜக தமிழிசை அல்ல) நாம் செய்யும் மகத்தான காரியம்


இளையராஜாவும், தமிழ் இசையும் வேறு அல்ல, அல்லவே அல்ல‌


http://contrarianworld.blogspot.my/




மலேசியாவில் தீபாவளி...

https://youtu.be/QKq5LlhXHeg

மலேசியாவில் தீபாவளி  : மக்கள் எண்ணங்கள், வாழ்த்துக்கள் : காணொளி


தீபாவளி நெருங்கிவிட்டது, இந்தியாவின் நம்பர் 1 கொண்டாட்டம் அது, தமிழகத்திலும் தயாரிப்புகள் தீவிரமாக இருக்கலாம் அதிமுகவினரை தவிர.


மலேசியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை, இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழ், தெலுங்கு, சீக்கிய, மலையாள மக்கள் கலந்த இந்திய சமூகத்திற்கு அப்படி அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் சமூகம் பெரிய எண்ணிக்கை அதனால் தீபாவளி தயாரிப்பிற்கு பின்னி எடுக்கின்றது.


பொதுவாக குறைந்தது 1 வாரம் கொண்டாடுவார்கள், அதிகம் 20 நாள் கூட இருக்கலாம். இந்திய வம்சத்தின் மிகபெரும் பண்டிகை அது, இப்படி கொண்டாடாவிட்டால் எப்படி?




விமானநிலையத்தில் மிகபெரும் தீபாவளி கோலம் அமைத்திருக்கின்றார்கள், மெட்ரோ ரயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் என திரும்புமிடமெல்லாம் தீபாவளி அடையாளங்கள்.


பொதுவாக பண்டிகைகளை மலேசிய மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள், இஸ்லாமிய பண்டிகை, சீன புத்தாண்டு, கிறிஸ்மஸ் புதுவருடம் எல்லாம் பொது இடங்களில் விருந்து உபசரிப்பு நடக்கும், பல இடங்களில் விருந்து உபசரிப்பு நடக்கும்


ரயில் ஏற சென்றாலும் அங்கு ஒரு ஸ்டால் போட்டிருப்பார்கள், யார் சென்றாலும் மலர்ந்த முகத்தோடு வரவேற்று உணவு உபசரிப்பு வழங்குவார்கள்.


அதாவது எல்லா பண்டிகையினையும் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவார்கள், அற்புதமான விஷயம்


கபாலி படத்தினை பார்த்துவிட்டு நீங்களாக ஒரு முடிவிற்கு வந்துவிட கூடாது, அது காட்டியது 2% பக்கம், மீதி 98% மகா நல்ல விஷயங்கள் உண்டு.


தீபாவளி காலம் என்றாலே வானொலி முதல் தொலைகாட்சி வரை ஒரு மாதம் தீபாவளி பாடல் வரும், தமிழ் எஃப்.எம் வேறு உண்டு அதுவும் அரசு செய்தி நிலையமே முழுநேரம் நடத்துகின்றது, தனியார் தமிழ் வானொலியும் உண்டு


நல்ல தமிழ், மிக அழகான நிகழ்ச்சிகள், அற்புதமான பாடல்கள் அவ்வப்போது செய்திகள் என அந்நாளைய இலங்கை ரேடியோ போலவே மகா இனிமையானது அது.


அப்படி இப்பொழுதும் தீபாவளி பாடல்கள் தொடங்கிவிட்டன‌


பொதுவாக தீபாவளி கொண்டாட தமிழ் திரையுலகம் அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கின்றது, அவை குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறையாவது வருகின்றன‌


"உன்னை கண்டு நானாட..என்னை கண்டு நீயாட .." எனும் அற்புதமான பாடல்


"மத்தாப்ப சுட்டு சுட்டு போடட்டுமா.." எனும் நதியாவின் பாடல்


"தீபாவளி தீபாவளிதான்.." எனும் ஜனகராஜின் பாடல்


"நான் சிரித்தால் தீபாவளி.." எனும் நாயகன் பாடல்


"தல தீபாவளி.." எனும் அஜித்தின் பாடல் என பல பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன‌


இப்படி அழகான பாடல்கள் வரும் பொழுது இப்பொழுது மலேசிய தமிழ் தீபாவளி பாடல்களும் வருகின்றன‌


மலேசிய இந்தியர்கள் எல்லாமும் ரசிப்பார்கள், எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ரகுமான், அப்படியே மைக்கேல் ஜாக்சன், வெஸ்டர்ன் ஜாம்பவான் எல்லாவற்றையும் வரவேற்பார்கள்.


இப்போதுள்ள இளைஞர்களின் பாடல்களில் பெரும்பாலும் மேற்கத்திய இசை நிரம்பியிருக்கும்


அப்படி சில பாடல் வந்திருக்கின்றது, அதில் ஒன்று


"தீபாவளி வந்தால் ஜாலி ஜாலி
சட்டியில் வேகுது கோழி கோழி


ம்ம்ம்ம் முறுக்கா......
ஈஈஈஈஇ இருக்கா....


அய்யோ.. ஐ ஐ யோ....."


என ஒலிக்கின்றது ஒரு மேற்கத்திய ராப் இசையுடன் கூடிய தமிழ்பாடல்


மக்கள் மகிழ்ந்துகொண்டிருக்கும் நேரம், இதுபோன்ற பாடல்கள் கூடுதல் சுவாரஸ்யம் கொடுக்கின்றன‌


என்ன பாடல்கள் வந்தாலும், குஷ்பூ நடித்த தீபாவளி பாடல் ஏதுமில்லை எனும் சோகம் வரும், அவருக்கு மட்டும் "பூவே பூச்சுடவா" நதியா போல ஒரு பாடல் கிடைத்திருந்தால் எப்படி இருக்கும்?


அதனால் என்ன?பொங்கலுக்கு "பூ பூக்கும் மாதம் தை மாதம்" என பாடியிருக்கின்றார் என ஆறுதல் அடைந்துகொள்ளலாம்



Wednesday, October 26, 2016

வைகோ அரசியல்...



வைகோவிற்கு ஆதரவாகவும் சிலர் எழுதுகின்றார்கள், ஆனால் ஆதரவில் ஒளிந்திருப்பது அதே கலைஞர் எதிர்ப்பு


அதாகபட்டது ஈழதமிழர் விவகாரம் தொடர்பாக போராளிகளை சந்திக்கும் அனைத்துகட்சி கூட்டம் ஒன்றினை எம்ஜிஆர் கூட்டியபொழுது கலைஞர் அதனை புறக்கணித்தாராம்


அப்படி இன்று வைகோவும் செய்துவிட்டாராம்.


எம்ஜிஆர் ஒரு கூட்டம் கூட்டினார், அதற்கு ஒரு நாளைக்கு முன்பாக கலைஞர் ஒரு கூட்டத்தினை சாதுர்யமாக கூட்டினார் புலிகளை தவிர எல்லோரும் கலந்துகொண்டனர்.


எம்ஜிஆரின் முகம் கறுத்தது.


பின் கலைஞரின் அகில இந்திய டெசோ முயற்சியினை எம்ஜிஆர் கண்டுகொள்ளாமல் பிரபாகரனுக்கு ஆதரவளித்ததும், அந்த தைரியத்தில் அவன் சக போராளிகளை கொன்று குவித்ததும் அதன் பின் மனம் வெறுத்த கலைஞர் டெசோவினை நிறுத்தியதும் அன்று நடந்தது.


இப்படி திமுக அதிமுக விளையாட்டுக்கள் உண்டு, சரி இதில் என்ன ந்ன்மை ஈழ மக்களுக்கு விளைந்தது என்றால், அங்குள்ள போராளிகுழு எதுவும் உண்மையான விடுதலை நோக்கி போராடவில்லை, தமிழக கட்சிகளின் ஆதரவும் இப்படி நாடகமாகவே இருந்தது


ஆனால் உயிர்சேதம் குறைக்கபடவேண்டும் என்ற நோக்கில் எடுக்கபட்ட முயற்சிகளில் கலைஞரின் திட்டங்களே பெஸ்ட்


இருக்கட்டும். இப்படி திமுக் அதிமுகவின் அனைத்துகட்சி கூட்டங்களுமே ஒரு வகை வோட்டு அரசியல்தான், ஆனால் திறம்பட நடத்தவேண்டும் அல்லவா?


திமுக அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால், அதற்கு முந்தைய நாள் வைகோவும் ஒரு அனைத்துகட்சி கூட்டம் கூட்டினால் எப்படி இருந்திருக்கும்?


(தமிழகத்தின் உதிரிகட்சிகள் எல்லாம் அங்குதான் இருக்கின்றன)


ஆனால் செய்யவில்லை அல்லது செய்ய தெரியாது


பின் கலைஞர் அன்று எம்ஜிஆர் அழைத்து வந்தாரா?, அமெரிக்க அதிபர் அழைத்து வந்தாரா என துண்டை முறுக்கி வசனம் பேசவேண்டியது?


அந்த கழுத்தினில் தொங்க வேண்டியது கருப்பு துண்டு அல்ல...மாறாக‌...........






அரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் வீர சிவாஜிக்கு நினைவு சின்னம்

அரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் வீர சிவாஜிக்கு நினைவு சின்னம்


வெள்ளையன் கட்டி வைத்த ரயில் நிலையத்திற்கு சிம்பிளாக சிவாஜி பெயரினை சூட்டியாகிவிட்டது, இதனையாவது சொந்தமாக செய்யட்டும்


சிவாஜி முகலாய மன்னர்களை எதிர்த்தவர் சிலை வைத்தாகிவிட்டது, அடுத்து யார்?




தென்னகத்தில் இஸ்லாமிய அரசுகளை தடுத்த நாயக்க மன்னர்களுக்கா? அதுதான் அடுத்த திட்டமாக இருக்கலாம்


அப்படியானால் எங்கே வைப்பது? சிவாஜிக்கு அரபுகடல் என்றால் நாயக்க மன்னனுக்கு நிச்சயம் இந்திய பெருங்கடல்தான், அதாவது கன்னியாகுமரி கடலில்


அங்கிள் சைமன் மானஸ்தன், அப்படி ஒரு நிலை வந்தால் கயிற்றினை தூக்கிகொண்டு கிளம்பிவிடுவார்


நம் பங்கிற்கு கொஞ்சம் ஆலோசனைகளை அள்ளிகொடுப்போம், இனி இவர்கள் அடங்கமாட்டார்கள், சிலை வைத்துகொண்டே இருப்பார்கள்


இஸ்லாமியரை எதிர்த்து இந்துமதத்தினை காத்த‌ சிவாஜிக்கு சிலை, சரி


அன்று புத்தமத நாடாக இருந்த இந்தியாவினை மறுபடியும் இந்துநாடாக மாற்ற அரும்பாடுபட்ட ஆதிசங்கரருக்கும், சமண மத ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் இந்துமதத்தினை நிறுத்திய திருஞானசம்பந்தருக்கும் எப்போ சிலை வைக்க போறேள்....


வைக்க மாட்டேள், ஏன்னா அப்படி வச்சா பாகிஸ்தானுக்கும், இந்திய இஸ்லாமியருக்கும் கோபம் வராது பாத்தேளா..


வைக்க மாட்டேள்...வைக்கவே மாட்டேள்


இஸ்லாமியரை எதித்தவா மட்டும்தான் உங்களுக்கு இந்தியனா தெரியுராள்



சீனப்ட்டாசு மட்டும் வெடிக்கவே கூடாதாம்...



பெப்சியும் கோக்கும் குடித்துகொண்டே சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்,


சீன பட்டாசை வாங்காதே, சிவகாசி பட்டாசை மட்டும் வாங்கு என போதிக்க தொடங்கிவிட்டான்


அது என்ன சீனபட்டாசு மட்டும் விலக்கு?, அதனை தவிர எல்லாமும் வாங்கலாமா?


சீன பொருள் மலிவு, ஆனால் எப்படி மலிவு என்பதை யோசிக்கமாட்டார்கள், டிசைன் அப்படி.


அவர்களால் எப்படி இந்த விலைக்கு கொடுக்கமுடியும் ? அவர்களால் சல்லி விலைக்கு கொடுக்க முடிகிறதென்றால் என்ன அர்த்தம்.


இரண்டே விஷயங்கள்தான்


ஒன்று இது கட்டுபடியாகும் விலையே, இன்னொன்று அரசு கொடுக்கும் தொழில் ஊக்குவிப்புகளும் அங்கு குவியும் முதலீடுகளும்.


நிலையான அரசு, மோதல்களை அனுமதிக்காத அரசு, நொடியும் தயங்காமல் உழைத்துகொட்டும் மக்கள் என அவர்களால் இப்படி உற்பத்தியினை பெருக்க முடிகின்றது.


வியாபாரிகளை வைக்கவேண்டிய இடத்தில் சீனா வைத்திருக்கின்றது, வியாபாரிகளிடம் நன்கொடை பெற்று கட்சி நடத்தும் அவசியம் அவர்களுக்கு இல்லை,


கட்சி நன்கொடை இல்லை, தேர்தலுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் அழிச்சாட்டிய தேவை இல்லை, குவார்ட்டர் பிரியாணி, பேனர் செலவு இம்சை இல்லை. ஏகபட்ட இல்லை


அதனால் வியாபாரிகள், தொழிலதிபர்களை கட்டுபடுத்தி வைக்கின்றார்கள், காதினை திருகி வரி வசூல் செய்ய முடிகின்றது, அதனை தொழில்துறைக்கு திருப்பமுடிகின்றது


இந்திய நிலைக்கு டாடா, அம்பானி, மல்லையா, வைகுண்டராஜனே சாட்சி. தொடமுடியுமா? தொட்டுவிட்டு அரசு நடத்தமுடியுமா?


பின் எப்படி பொருள் விலை குறையும்?


இங்கு நிலை என்ன? விவசாயம் அழிந்து வியாபாரம் லாப சம்பந்தமான தொழில் என அறியபட்டிருக்கும் நாடு இந்தியா. உற்பத்தி பற்றி, அடக்க விலைபற்றி கவலைபடமாட்டோம்,


வியாபாரி வைத்ததே விலை.


ஆனால் அதனை உடைத்து இந்த விலைக்கு கொடுக்கலாம் என சீனன் சொன்னால் உடனே பற்றி எரியதொடங்குவார்கள்.


பிரச்சினை வியாபார இந்தியாவின் பார்வையில் இருக்கின்றது, வியாபாரிகள் வைக்கும் விலையில் இருக்கின்றது.


இதனை பற்றி எல்லாம் பேசினால் நீ தேசதுரோகி என பெப்சியினை குடித்துகொண்டு, கேஎப்சி கோழியினை கடித்துகொண்டே நம்மை நோக்கி சொல்வார்கள்,


அமெரிக்க கோக், பர்கர் என விற்கலாம், பிரான்ஸ் விமானங்கள் பறக்கலாம், ஜெர்மானிய எந்திரங்கள் புல்டோசர் என அலையலாம், தென்கொரிய, ஜப்ப்பானிய கார்கள் விரையலாம்


ஆனால் சீனப்ட்டாசு மட்டும் வெடிக்கவே கூடாதாம்.


அதுதான் விசித்திரம்.


அதனை விட ஒரு மவுன விசித்திரம் உண்டு, கொஞ்சநாளாகவே சீன பட்டாசுகளை மொத்தமாக வாங்கி, இந்திய அடையாளங்கள் ஒட்டி இந்திய பட்டாசு என விற்கின்றார்கள் என ஒரு சர்ச்சை வந்தது.


ஆக சீனபட்டாசினை இந்திய அடையாளத்தோடு வாங்கினால் இந்திய வியாபாரி சம்பாதிப்பான், மக்கள் எந்த விலையும் கொடுத்து தொலையட்டும்


ஆனால் சீனப்ட்டாசை மக்கள் நேரடியாக வாங்கினால் எந்த வியாபாரி சம்பாதிப்பான்?


ஆக மக்களே சீன பட்டாசினை இந்திய அடையாளத்தோடு விற்கும் இந்திய முதலாளிகளிடம் வாங்கினால் அது தேசபற்று


நேரடியாக சீனபட்டாசினை குறைந்தவிலைக்கு வாங்கினால் அது இந்தியன் வயிற்றில் அடிக்கும் செயல் என ஒரு தியரி எழுதபட்டு கொண்டிருக்கின்றது


இருக்கட்டும்


இந்தியாவிற்கு பட்டாசு விற்றுதான் தன் பொருளாதரத்தை நிறுத்தும் நிலையில் அவர்கள் இல்லை, நாளையே பாகிஸ்தானை தூண்டிவிட்டு நாலு விமானம் விற்றால் கணக்கு சரி


இன்னொரு பக்கம் அவர்களின் சில பலம் கவனிக்கவேண்டியவை, சமீபத்தில் இப்படி தீவு தொடர்பாக ஜப்பான் முறுக்கிகொண்டபொழுது சில அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்வதில்லை என முடிவெடுத்தபொழுது ஜப்பான் இறங்கிவரத்தான் செய்தது.


விவசாய பொருள் உற்பத்தியிலும் சீனா முண்ணணியில் இருக்கின்றது, ஆப்ரிக்க நாடுகளிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அவர்கள் விவசாய முதலீடு குவிந்திருக்கின்றன, அது பின் சீன பொருளாக விற்கபடுகின்றன‌


வெங்காயம் முதல் காரட் வரை பின்னி எடுக்கின்றார்கள்


ஆக சீனபொருளை வாங்காதே என சொல்லிகொண்டிருப்பதை விட, சீனாவினை போல நாம் எப்படி செய்துகாட்டலாம் என்பதே அர்த்தமுள்ளது.


உற்பத்தி துறையில் அவர்கள் தொட்டிருக்கும் உயரம் நிச்சயம் பெரிது.


நாளையே புல்லட் ரயில் அமைக்கவேண்டும் என்றால் ஜப்பானிய விலையினை விட, சீன புல்லட்ரயில் மலிவாகத்தான் இருக்கும்


அப்பொழுது நம் அரசு யாரிடம் வாங்க சொல்லுவோம்?


வீணாக அவர்களை குறை சொல்வதை விட இந்திய வியாபார உலகம் எப்படி சம்பாதிக்கின்றது என சிந்தியுங்கள்


அவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நம்மால் கொடுக்கமுடியவில்லை என சிந்தியுங்கள்


இந்நாடு வியாபாரிகளின் வேட்டைகாடாக மாறிவிட்டது என்பது தெரியும்






எம்ஜிஆரின் சீரியஸ் நடிப்பே சிரிக்க வைக்கும்




Image may contain: 5 people , text


உலகம் சுற்றுலிபன் என்றொரு படம் வந்தபொழுது கலைஞர் அதனை தடுக்க நினைத்து பெரும் நடவடிக்கை எடுத்தாராம்


அதனையும் மீறி படம் வந்து வென்றதாம்


பலபேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.




அப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்? தயாரிப்பாளர் அலுவலகமோ அல்லது கதாசிரியரான(!) எம்ஜிஆர் வீடோ வருமானவரி, அமலாக்கதுறை என ரெய்டு நடந்ததா?


சென்சார் போர்டு பிரச்சினை இருந்ததா?


அல்லது இன்றைய விஜய், சிவகார்த்திகேயன் போல எம்ஜிஆர் எங்காவது அழுதுகொண்டிருந்தாரா?


ஒரு மண்ணாங்கட்டியுமில்லை,


ஆனால் செய்திமட்டும் நிலைத்துவிட்டது.


இதனை எல்லாம் நம்பும் தமிழகம், முன்னாள் காவல்துறை அதிகாரி பகிரங்கமாக சொன்ன, அதாவது அந்நிய செலாவணி சட்டமிரட்டல் மட்டும் இல்லை என்றால் எம்ஜிஆர் கட்சி தொடங்கி இருக்கமாட்டார் என்பதை மட்டும் நம்ப மறுக்கின்றது


அவர்கள் நம்புவது, நம்பாதது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்


இப்படத்தினை தொடர்ந்து கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ என இரண்டாம் பாகம் எடுக்க எம்ஜிஆர் முயன்றாராம், அதற்குள் தேர்தல் வந்துவிட்டதால் அவர் முதல்வராகிவிட்டாராம்


அப்படி ஒரு படம் வேண்டாம் என முடிவெடுத்து அவரை முதல்வராகவே அமர்த்திய அந்நாளைய தமிழகம் வாழ்க‌


இந்த உலகம் சுற்றும் வாலிபன், (அவர் வாலிபன்??) படத்தினையே பார்த்து சிரித்து முடியவில்லை


(ஒரு எம்ஜிஆரின் சீரியஸ் நடிப்பே சிரிக்க வைக்கும், இதில் இரண்டு வேடம் வேறு)


தில்லுமுல்லு, தெனாலி ம.ம.காமராசன் படங்களை போல அதிக முறை பார்த்த காமெடி படங்களில் அதுவுமொன்று.


அப்படிபட்ட காமெடி படத்தினை கலைஞர் தடுக்க முயன்றிருப்பாரா?


கருணாநிதியின் நகைச்சுவை ரசனை உலகறிந்தது.












ஆளாளுக்கு ஒரு கொள்கை, அவனவனுக்கு ஒரு தெய்வம்

முதலில் நான் தமிழின துரோகி, பின் புலிகளை எதிர்த்த ஒட்டுகுழு, பின் திமுக எதிராளி, அதன் பின் மோடி எதிர்ப்பாளி, கபாலி படம் வந்த பொழுது தலித்தினை எதிர்க்கும் ஆண்ட பரம்பரை என கடும் வசவுகள்.


கஜினி முகமது பற்றி எழுதி அப்பட்டமான இஸ்லாமிய விரோதி என சிக்கிய கட்டமும் உண்டு.


இன்பாக்ஸில் வந்து தேவனாகிய கர்த்தர் உன்னை மனந்திரும்ப வைக்கட்டும் என ஜெபிக்கும் பிரிவினை கிறிஸ்தவர்களுக்கு நான் கிறிஸ்துவ எதிரி




போலி திராவிடத்தினை பற்றி சொல்லி நான் திராவிட எதிரியும் ஆகிவிட்டேன், ஆரிய அடிவருடி பட்டமும் கிடைத்தாகிற்று


இன்று தேவர் சாதி விரோதி என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்


இன்னும் என்னென்ன விரோதி பட்டியில் இடம்பெற போகின்றனொ தெரியவில்லை.


ஆளாளுக்கு ஒரு கொள்கை, அவனவனுக்கு ஒரு தெய்வம்


அதனை ஏற்றுகொள்ளாவிட்டால் உடனே நான் விரோதியாக்கபடுகின்றேன்


ஆக‌ உலகில் இருக்கும் எல்லா மானிட பிரிவுகளுக்கும் நான் பொதுவான எதிரியாக மாறிகொண்டே இருக்கின்றேன்..


ஆனால் குஷ்பூவின் எதிரியாக மாறாத வரத்தினை மட்டும் இறைவன் அருளட்டும்







ஜெ., சிகிச்சை பெறும் அப்பல்லோ அருகே இளைஞர் தூக்குப் போட முயற்சி :போலீஸ் விசாரணை

விட்டு தொலைக்கலாம், எல்லோரும் சென்று சேரட்டும், ஒரு பயலும் இருக்கவேண்டாம்

தமிழகம் சுத்தமாகும் வாய்ப்பு பிரகாசமாகும்.




 

திருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை



அவரின் ஜாதகம் எப்படி என்பதை திருமாவளவன் கொஞ்சம் பார்த்துகொள்வது நல்லது.


வைகோ என்பவர் ராசி வித்தியாசமானது, அவர் அருகில் அமர்ந்தவர்களோ அல்லது அவரின் பேச்சினை கேட்டவர்களோ உருப்படவே முடியாது என்பது வரலாறு


முதலில் அதனை உணர்ந்தவர் கலைஞர், பத்மநாபா கொலை கலைஞர் ஆட்சிக்கே கேடாக முடிந்தது. திமுக உறுப்பினராக வைகோ கள்ளதோணி ஏறியதும் நிச்சயம் கட்சிக்கு சிக்கலே


கலைஞர் யோசிப்பதற்குள் ராஜிவ் கொலை


ஆனால் வைகோ புலிவாலை பிடித்துகொண்டே நின்றார். இதற்கு மேலும் இனி யோசிக்க ஒன்றுமில்லை என வைகோவினை உதறினார் கலைஞர், அது செய்யவேண்டியது.


அதன்பின் கலைஞருக்கு அரசியல் நெருக்கடிகள் குறைந்தன‌


கொஞ்சம் கொஞ்சமாக வைகோ சாயம் வெளுக்க ஆரம்பித்தது


அதாவது புலிகள் நரிக்கு சாயம் அடித்திருந்தனர் அல்லவா? அது வெளுத்தவுடன் ஒவ்வொருவரும் பிரிந்து கலைஞருடன் இணைய ஆரம்பித்தனர்


முதலில் கொஞ்சபேர்தான், பின்னர் ஈழயுத்தம் தொடங்கியதும் பலர் வெளியேறினர், அது பயமா? இல்லை பங்கு வைத்த பிரச்சினையா என இறுதிவரை தெரியவில்லை


வைகோவினை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் ஓரளவு நிலைக்க ஆரம்பித்தனர், சிலருக்கு இன்னோவா கார்களாவது கிடைத்தது. சிலரால் சினிம படமவது எடுக்க முடிந்தது.


முதலில் சர்வதேச அளவில் வைகோ பெரும் குழப்பவாதி என கண்டுகொண்டவர்கள் நார்வேக்காரர்கள், ஈழபேச்சுவார்த்தையில் பேசி பார்த்துவிட்டு கழற்றியே விட்டனர்


அவர் இருக்கும் இடத்தில் குழப்பமே மிஞ்சும் என்பது அவர்கள் கணிப்பு, உண்மையும் கூட‌


வைகோ எப்படியானவர் என்றால், ஒரு கட்சி அல்லது இயக்கம் வளர்கிறது என்றால், அதனை அழிக்க வைகோவோடு உறவாடினால் போதும், சுத்தமாக அழிந்தே விடும்


எதனை செய்யவே கூடாதோ, அதனை மிக கச்சிதமாக செய்து மொத்தத்தையும் கெடுப்பது அவர் ஸ்டைல்


உதாரணம் புலிகள்


"அய்யா பிரபாகரனே நீங்கள் எவ்வளவு கோடிகளை கொட்டி கொடுத்தாலும், தமிழ்நாட்டில் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுத்தாலும் நான் முதல்வராக முடியாது, நீனும் ராஜிவ் கொலை எனும் குற்றத்தினை தாண்டமுடியாது.." என அவன் காதுபட சொல்லி இருந்தால் நிலமை இவ்வளவு மோசமாகி இருக்காது


பிரபாகரனும் முடிவிற்கு வந்திருப்பான்


ஆனால் தமிழர் எல்லாம் காங்கிரஸ் எதிரிகள், இது திராவிட பூமி அதனால் உன்னையும் என்னையும் ஏற்றுகொள்வர் என சொல்லி அவர்களை தொடர்ந்து தவறுகளை செய்ய வைத்த்தது சாட்சாத் இவர்தான்


கடைசிகட்டத்தில் புலிகள் தப்பியோ அல்லது இந்திய ஆலோசனையினை கேட்டு முடிவிற்கு வர இருந்தபொழுதோ குறுக்கே படுத்து அடுத்த பிரதமர் வாஜ்பாய் 2 நாள் பொறுங்கள் என சொன்னதும் இவர்தான் என்கிறது செய்திகள்


அதன் பின் நடந்ததுதான் முள்ளிவாய்க்கால் கொடூரம், பழி விழுந்தது கலைஞர் மேல்


அப்படியாக புலிகளை முடித்துவிட்டு என்ன செய்யலாம் என இவர் யோசித்தபொழுது கிடைத்தவர் விஜயகாந்த்.


அவரையும் மூலையில் அமரவைத்தாகிற்று, தமிழருவி மணியனை ஓடவே விட்டாயிற்று


இப்பொழுது சிக்கி இருப்பவர் திருமா.


கொஞ்சமேனும் வைகோவின் பழைய ராசிகளை திருமா திரும்பி பார்ப்பது நல்லது. அல்லது இப்பொழுதே சந்நியாசத்திற்கு தயாராவதும் மிக நல்லது


கிட்டதட்ட திருமாவினையும் வைகோ சடாமுடி கோலத்திற்கு தயாராக்கி கொண்டிருக்கின்றார்.


இப்படி பட்ட வைகோவின் ராசியினை தாமதமாகத்தான் கண்டார் கலைஞர், வைகோ திமுகவில் இருந்த காலமட்டும் அது பதவிக்கு வருவது மகா சிக்கல், வந்தாலும் நிலைப்பதில்லை


எப்படியோ பின்னாளில் கண்டுகொண்டார் கலைஞர், சுதாரித்தார்.ஜெயலலிதா பொடோவில் போட்டு பழிவாங்கினார்.
விஜயகாந்த் பட்டு திருந்தினார்


ஆனால் முதலிலே கண்டு கொண்டு ஒதுங்கியவர் யார் தெரியுமா?


ஆச்சரியமாக அங்கிள் சைமன்


அவர் அன்றே இவரை விட்டு விலகிநிற்பதால் ஏதோ குட்டிகரணம் போட்டுகொண்டிருக்கின்றார், வைகோவோடு இணைந்திருந்தால் சைமன் எப்பொழுதோ மண்வெட்டி எடுத்துகொண்டு வயலினை நோக்கி நடந்திருப்பார்


எப்படியோ, இப்பொழுது சிக்கி இருப்பவர் திருமா


மீள்வது எப்படி என அவர் யோசிக்கலாம், அல்லது ஜடாமுடி, தண்டம் சகிதம் சாமியார் ஆவது எப்படி என சிந்திக்கலாம்


இரண்டையும் தவிர வேறு வாய்ப்பு திருமாவிற்கு இல்லை


வைகோ மனதில் அடுத்து யார்? என யோசித்துகொண்டிருப்பார், இப்போதைக்கு அதிமுக நிலவரம் எப்படி என யோசித்துகொண்டிருக்கலாம்


அதாவது கலைஞர் எதிர்ப்பு என்பதை தவிர ஒன்றுமறியாத அரசியல்வாதி அவர்,


வடகிழக்கு பருவமழை ஏன் தாமதமாகின்றது என கேளுங்கள் உடனே கலைஞர் என்பார், சரி துபாய் விமானம் இன்று ஏன் ரத்து என கேட்டாலும் உடனே கலைஞரால்தான் என்பார்.


இவரின் அரசியல் அப்படி.


ஒருவேளை அதிமுக அணியில் இவர் ஐக்கியமானால்....


கலைஞருக்கு படு ஜாலி, காரணம் வைகோவின் ராசி அங்கு மட்டும் வேலை செய்யாமலா போய்விடும்???






கலைஞருக்கு என்ன ஆனது?

கலைஞருக்கு என்ன ஆனது?


மாத்திரை மாறிவிட்டது என்கிறார்கள், அலர்ஜி என்கின்றார்கள் , உடலெங்கும் கொப்புளம் என்கின்றார்கள்


விரைவில் குணமடைந்து வரட்டும்


அவரைபற்றி வதந்திகள் பரவுவது புதிதல்ல, அடிக்கடி நடந்துகொண்டே இருக்கும்.


அது அவரின் புரட்சி நாடக காலம் முதல், தொடக்க அரசியல் காலம் வரை பல இடங்களில் தொடர்ந்தது


அவரை அடித்து தெருவோரம் வீசிவிட்டு சென்றபொழுது, ரத்த காயங்களில் அவரை நொறுக்கி வீசியபொழுது என பல இடங்களில் அப்படி செய்திகள் வந்தன‌.


அதனை எல்லாம் தாண்டித்தான் கலைஞர் வளர்ந்தார்


சமீபத்தில் லியோனிக்கு வரும் சோதனை அது, அடிக்கடி அவர் இல்லாமல் போய்விட்டதாக தகவல்கள் பரவும், பல முறை நடந்தது, எல்லோரும் இது அப்படி, இம்மாதிரி வார்த்தைகளை பரவ விட கூடாது , வழக்கு தொடருங்கள் என நலம் விரும்பிகள் கடும் ஆட்சேபம்


லியோனி கலைஞரிடம் இதுபற்றி சொன்னபொழுது கலைஞர் சொன்னார்


"அதை விடுய்யா, நான் கூட பல‌ முறை இப்படி இறந்திருக்கின்றேன்"

யாழ்பாண மாணவர்கள் சுட்டுப் படுகொலை



யாழ்பாண மாணவர்கள் சுட்டுப் படுகொலை.


அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் மாபெரும் போராட்டம்: தி.வேல்முருகன்


ஒரு காலத்தில் யூதர், ஜப்பானியர் அடுத்து அறிவார்ந்த இனம் என தன்னை சொல்லி கொண்டது யாழ்பாணம் ,


JJJ (Jews, Japanese and Jaffna) என சொல்லி பெருமைபட்டு கொண்டார்கள்


எல்லாம் 1970 வரைக்குமே, பின் போராட்டம் வன்முறையாக மாறியபின் எல்லாம் மாறிற்று, அதுவும் 1975க்கு பின் நிலமை மகா மோசம்.


1975க்கு பின் யாழ்பாணத்தில் வன்முறை என்பது புதிதல்ல, ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழனை தமிழன் பிரபாகரன் சுட்டுகொன்றதிலிருந்து அது தொடங்கிற்று


பின் எண்ணற்ற படுகொலைகளை அது கண்டது, உச்சமாக சபாரத்தினத்தோடு சேர்ந்து 900 போராளிகளை புலிகள் அழித்தது உச்சம்


அதன்பின் மாத்தையா எனும் சக புலியினை சந்தேகத்து பேரில் 600 போராளிகளோடு சுட்டுகொன்றதும் அங்கேதான்


இன்னும் 1400 இந்திய வீரர்கள் இறந்ததும் அங்கேதான், அதன் பின் புலிகளின் ஏகபோகத்தில் கொல்லப்ட்டவர்கள் ஏராளம்


கோழிகுஞ்சு களவெடுத்தவனை எல்லாம் புலிகள் சுட்டுகொன்ற வரலாறு உண்டு, கிட்டு கால் போன கோபத்தில் கந்தன் கருணை இல்லத்தில் 70 போராளிகள் கொல்லபட்ட கோரம் உண்டு


இதனை எல்லாம் கடந்து கருணா பிரிவினை முடக்க நடந்த சண்டையில் 300 கிழக்கு புலிகள் செத்த காவியமும் உண்டு


ஆக எத்தனை தமிழர்கள் தமிழ்புலிகளால் கொல்லபட்டிருக்கின்றனர் என நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்


சமீபத்தில் யாழ்பாண மாணவி விந்தியா மிக கொடூரமுறையில் கற்பழித்து கொல்லபட்டார், அதனை செய்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்


இதற்கு வை.கோ,சீமான், வேல்முருகன் எல்லாம் ஒரு குரல் கண்டித்து எழுப்பியிருப்பார்கள் ????


தினமும் அங்கு வாள்வெட்டு , கொலை , கொள்ளை செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன, தமிழ் குழுக்களே குற்றம் சாட்ட படுகின்றன.


அதாவது ஈழ தமிழன் ஈழ தமிழ்பெண்ணை கற்பழிக்கலாம், ஈழ தமிழன் ஈழ தமிழனை சுட்டுகொல்லலாம் பிரச்சினையே இல்லை.


ஆனால் நள்லிரவில் போலிசார் எச்சரித்தும் நிற்காமல் சென்ற இருவரை சுட்டிருக்கின்றார்கள், பின் அது தவறு என ஐந்து காவலர்கள் கைதும் செய்யபட்டிருக்கின்றார்கள்


இதற்கு இங்கு வேல்முருகன் கொடிபிடிக்க போகின்றாராம்


முன்பு புலிகள் கொலைகளாக செய்த பொழுதும், சென்னையில் பத்மநாபாவினை கொல்லும் பொழுதெல்லாம் இவர்களிடம் சத்தம் இருக்காது


சரி சிங்கள அரசபயங்கரவாதம் என சென்னையில் கொடிபிடிப்பவர்களிடம் , அந்த மாணவி விந்தியாவிற்கு என்ன நடந்தது என கேட்டால் அது சிங்களன் கற்பழிக்கவில்லை அல்லவா? என நகர்ந்துவிடுவார்கள்


முன்பு கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்ய ஒரு சொல் வழக்கு உண்டு "மாஸ்கோவில் மழைபெய்தால் இந்தியாவில் குடைபிடிப்பார்கள்" என்பது அது


அப்படி ஈழத்தில் சிங்களன் மாட்டினால் இவர்கள் கொடிபிடிப்பார்கள், தமிழன் என்ன அட்டூழியம் செய்தாலும் கப்சிப்


காரணம் தொழில் பக்தி அப்படி.






Tuesday, October 25, 2016

உலகில் திருத்த முடியாதது வரலாறு மட்டுமே

சிலருடைய அல்ட்ராசிட்டிகள் தாளவில்லை, அதாகபட்டடது இவர்களை கேட்டுத்தான் வரலாற்றினை எழுதவேண்டும் என்கின்றார்கள்,


இவர்கள் வரலாற்று ஆசிரியர்களா? என்றால் இல்லை. ஆனால் தப்பு தப்பாக வரலாற்றினை சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


நாயக்கர் கால ஆட்சியில் 40 மண்டலங்களும் அவற்றின் உட்பிரிவான சேர்மை,சீர்மை அல்லது சீமை எனப்படும் உட்பிரிவுகள் இருந்தன‌


அப்படி நெல்லை சீமை, சிவகங்கை சீமை என பல சீமைகள் பிரிக்கபட்டன‌


இந்த சிவகங்கை சீமையின் ஆட்சியாளர் முத்து வடுக நாதர் என்பவர், அவர் மனைவி வேலுநாச்சியார்


இவர்களின் படையில் வீரர்களாக சேர்ந்தவர்கள் மருதுபாண்டியர்கள், மிக சிறந்த வீர்களான அவர்கள் பின்னாளில் தளபதிகளாக உயர்ந்தனர், முத்துவடுகநாதரும் அதன் பின் வீரமங்கை வேலுநாச்சியாரும் கொல்லபட அதன் பின் நாட்டை காக்கும்பொருட்டு தாங்களே வெள்ளையருடன் யுத்தம் புரிந்து வீரவரலாறு ஆயினர்


இதனை சொன்னால், ஏய் அவர்கள் அரசர்கள் தெரியுமா? என பொங்குகின்றனர்


எந்த பள்ளிகூடத்தில் படித்தார்கள் என தெரியாது, வரலாறு எப்படி சொல்கின்றது? 90% தென்னக மன்னர்களும் ஆற்காடு நவாப்பிற்கு வரி கட்டியவர்களே, அப்பொழுது வெள்ளையன் வந்தபின் வாரிசு தகறறில் பிரெஞ்ச் காரர்களும் , வெள்ளையனும் ஆற்காடு நவாப் வாரிசுகளுக்காக மோதி பின் வெள்ளையன் வென்றான்.


அவ்வெள்ளையப் ஆற்காடு நவாப் பிரித்த அதே வரியினை பிரிக்க வந்தபொழுதுதான் புலித்தேவன், கட்டபொம்மன், சிவகங்கை என எல்லா இடங்களிலும் யுத்தமாயிற்று


இதில் மருது சகோதரர்கள் அரசாண்டார்களாம், நான் தவறாக சாதிவெறியில் எழுதிவிட்டேனாம்


வரலாற்றினை எழுதுவதுமா? தவறு


உலகில் திருத்த முடியாதது வரலாறு, அது மட்டுமே


உங்களை கேட்டுத்தான் எழுதவேண்டிய அவசியமில்லை, விருப்பமில்லை என்றால் கிளம்பலாம்


உங்கள் விருப்பபடி "தேவர் காலடி மண்ணே" என பாட நான் வாலியுமல்ல, நீங்கள் தயாரிப்பாளரும் அல்ல‌


நன்றி, கிளம்புங்கள்