Wednesday, October 19, 2016

இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது




"இஸ்ரேல் ராணுவம் செய்ததை நம் ராணுவமும் செய்துள்ளது" : பிரதமர் மோடி பெருமிதம்


அண்ட புளுகு, ஆகாச புளுகு வரிசையில் இனி மோடி புளுகினையும் சேர்த்துவிடலாம்


இஸ்ரேலின் சாமர்த்தியம் என்ன? அஞ்சாமல் அது செய்யும் அட்டகாசம் என்ன? ஒரு வீரனை இழந்தால் அது சகட்டுமேனிக்கு 100 தீவிரவாதிகளை அசாட்ல்டாக தூக்கும் துணிச்சல் என்ன?





எல்லாவற்றிற்கும் மேல் எல்லாவற்றையும் செய்துவிட்டு அச்செய்திகள் வெளிவரா வண்ணம் பார்த்துகொள்வதென்ன?

இன்றும் உலகில் அபாயகரமனா அணுஆயுதம் அவர்களிடம் உண்டென்றாலும், என்றாவது அவர்கள் சோதித்தார்கள் என செய்தி வருமா? ஆனால் சோதித்து பார்த்து தயாராக இருக்கின்றார்கள், எப்படி? எங்கு சோதித்தார்கள் என தெரியாது, அதுதான் இஸ்ரேல்

சதாம் காலத்தில் பைலட்டோடு விமானம் கடத்தியது என்ன? சிரியாவில் புகுந்து தீவிரவாதிகளை தூக்கியதென்ன, சதாமின் அணுவுலைகளை நள்ளிரவில் தகர்த்ததென்ன? எவ்வளவு சாதனைகள்.

சொன்னால் ஒரு நாள் தாங்காது, அவ்வளவு பெரும் சமத்துக்கள் அவர்கள்.

அவர்களும்மும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா? ஏன் ஏணி வைக்க முடியுமா?

பாகிஸ்தானில் புகுந்து தாவூத் இப்ராகிமை, மசூத் அசாரை கொன்றிருந்தாலாவது கொஞ்சம் சொல்லலாம்

சும்மா அரையடி தாண்டி சுட்டுவிட்டு நானும் இஸ்ரேலும் ஒன்று என்றால்?

தெருமுனையில் ரப்பர் பாலில் சிக்ஸர் அடிப்பவனும், ஆஸ்திரேலிய வேகபந்துகளை சிக்ஸ் அடிக்கும் டோனியும் ஒன்றா?

நமது பிரதமர் அப்படித்தான் என்கின்றார், நீங்களும் நம்புங்கள்

2 வருடமாக அவரின் அடிப்பொடிகள்தான் அள்ளிவிட்டுகொண்டிருந்தார்கள், 3ம் வருடம் பிரதமரே அள்ளிவிட தொடங்கிவிட்டார்,

இன்னும் 4ம், 5ம் வருடத்தில் யார் வந்து கண்ட கண்ட கப்சாக்களை அள்ளிவிடுவார்களோ தெரியாது நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்

இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதரகம் இப்பொழுது விழுந்து விழுந்து சிரித்துகொண்டிருக்கும்






No comments:

Post a Comment