Monday, October 17, 2016

அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர்...

அதாகபட்டது சங்கலிங்கம் என்பவர் தமிழ்நாடு என தமிழகத்திற்கு பெயர் சூட்ட உண்ணாவிரதம் இருந்ததை காமராஜர் தடுக்கவில்லையாம், அதனால் அவரை தூற்றியே ஆகவேண்டுமாம். பஞ்சாயத்தில் முடிவெடுத்தார்களாம்.


அந்த சங்கரலிங்கம் ஒரு நாடார் என்பது தெரிந்தது. அன்று சும்மாவே காமராஜரை கன்னியாகுமரி இணைப்பில் நாடார்களுக்கு உதவினார் என முத்திரை குத்தியிருந்தார்கள்.


ஏன் அவர் கன்னியாகுமரியினை இணைத்தார்?


தேவி குளம், பீர்மேடு வேண்டுமா? கன்னியாகுமரி வேண்டுமா என கேரளம் கேட்டுகொண்டிருந்தது. ஏதாவது ஒன்றை விட்டுகொடுத்தே ஆகவேண்டிய நிலை. விட்டுகொடுப்பின்றி அரசியல் இல்லை.


நெல்விளைச்சல் முப்போகம் விளையுமிடத்தில் கன்னியாகுமரி முண்ணணியில் இருந்தது, அவர் அதனைத்தான் பெற்றார். அதனைத்தான் செய்திருக்கவும் வேண்டும்.


அப்படி நாடார் ஆதரவாளர் என முத்திரை குத்தபட்டவர். பலர் அவரை அப்படித்தான் சாடிகொண்டிருந்தார்கள். அண்ணா கும்பல் மனதில் ரசித்துகொண்டிருந்தது


இந்நிலையில்தான் சங்கரலிங்கம் தமிழ்நாடு என பெயர்மாற்று என கொடிபிடித்தார்.


காமராஜர் யோசித்தார், இவருக்கு சரி என சொன்னால் பின்னால் கொடிபிடிக்க கூட்டமே உண்டு


மதுரையினை பாண்டிய நாடு என அறிவி, தஞ்சையினை சோழநாடு என அறிவி, ராமநாதபுரத்தை சேது பூமி என அறிவி என தொடங்கிவிடுவார்கள்


அரசு மவுனம் காத்தது, தியாகி ஆனார் சுந்தரலிங்கம்.


அர்த்தமில்லா போராட்டம் என்றானது நிலை.


ஆனால் அறிவோடு போராடி, உண்ணாவிரதம் இருக்காமல் மக்களை திரட்டி ஆட்சியினை பிடித்து தமிழ்நாடு என பெயர் மாற்றினார் அண்ணா


அரசு அப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜரும், மக்களை திரட்டுவதன் மூலமே கோரிக்கையினை அடையமுடியும் என்பதற்கு அண்ணாவும் பெரும் எடுத்துகாட்டுகள்


அதனை விட்டு தனிநபராக உண்ணாவிரதம் இருந்து விரட்டியெல்லாம் யாரும் எதனையும் சாதிக்கமுடியாது, அது தவறான முன்னுதாரணமாக அமையும் ஆபத்து உண்டு


(அம்மணி இன்னும் திருந்தாது, அது குடித்து வளர்ந்த திராவிட பால் அப்படி....நம் பங்கிற்கு சொல்லி வைப்போம் அவ்வளவுதான் )

No comments:

Post a Comment