Monday, October 31, 2016

பன்ருட்டி ராமச்சந்திரனின் அமைதி



Image may contain: 2 people , indoor


இந்தியாவோடு ராஜிவ் காலத்தில் அமைதி பற்றி பேசிகொண்டே ஆயுதகடத்தலில் ஈடுபட்டு பின் யுத்தம் தொடங்கி தங்களை மிக சாமார்த்திய சாலிகளாக காட்டிகொண்டனர் புலிகள்


பின் நார்வே பேச்சுவார்த்தையின் போதும் அதனையே செய்து பின் நார்வேக்காரன் பாலசிங்கத்தை முறைத்து, அவர் பிரபாகரனை முறைக்க அத்தோடு உறவறுந்து ஓடினார் பாலசிங்கம், பின் சிங்கள பக்கம் சாய்ந்த சர்வதேசம் புலிகளை ஒழித்திருக்கின்றது


அதாவது நம்பகாதவர்கள் எனும் முத்திரை விழுந்ததே புலிகளின் அழிவுக்கு முதல்காரணம்,


இன்னொன்று கருணா பிரிவு, அவன் துரோகி அல்ல, மாறாக துரோகி ஆக்கியவர்கள் இவர்களே


அதாகபட்டது கிழக்கு தமிழருக்கும், வடக்கு தமிழருக்கும் பொருந்தாது. சிங்களன் புண்ணியத்தில் போராளிகளாக இணைந்திருந்தனர்,


ஆனால் வடமாநில போராளிகளுக்கு மாவீரர் துயிலும் இல்லமும் பல லட்சம் செலவில் அமைக்கபட, கிழக்கு போராளிகளின் உடல் வெறும் மண்மேட்டில் புதைக்கபட்டது வரை பல முரண்பாடுகள்.


வடக்கு மக்கள் பணம் கொட்டும் மரங்கள், கிழக்கு மக்கள் அவ்வளவு வசதியில்லாதவர்கள் கூடவே இஸ்லாமிய மக்கள் என பல சிக்கல்கள்


இன்னொன்று வடக்கத்திய இளைஞர்கள் கனடா, ஆஸ்திரேலியா என பறக்க கிழக்கு இளைஞர்கள் போராளிவேடம் பூண்டனர்


இந்த புள்ளியில் கிழக்கினை சேர்ந்த கருணாவிற்கும் மற்ற வடக்கு மாகாண தளபதிகளுக்கும் முட்டிகொள்ள பிரபாகரன் இப்படி யோசித்தார், சும்மா இருந்தால் மோதுவார்கள், யுத்தம் தொடங்கலாம்


அப்படி அவசரமாக தொடங்கபட்ட யுத்தம் திசைமாறி, கருணா பிரிந்து என்னென்னெவோ ஆயிற்று


ஆக புலிகளின் வீழ்ச்சிக்கு அவர்களே காரணம் தவிர கலைஞரும் சோனியாவும் அல்ல, வடக்கு தமிழருக்கு ஒரு அணுகுமுறை கிழக்கு தமிழருக்கு ஒரு அணுகுமுறை என செய்ததுதான் தவறு,


ஈழம் அமைந்திருந்தாலும் பின்னாளில் அடுத்த உள்நாட்டு போர் தொடங்கி இருக்கும், அதன் தன்மை அப்படி, சரி விட்டு விடலாம் தமிழகத்திற்கு வரலாம்.


இன்று சீமான் அவரின் அடிப்பொடிகள் என பலர் வரலாறு போல் எழுதியும் பேசியும் கொண்டிருக்கின்றனர்


ஆனால் தமிழகத்தில் பிரபாகரன் இருக்கும்பொழுது அவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ப.சிதம்பரமும், பண்ருட்டி ராமச்சந்திரனும் பேச வேண்டியவர்கள் ஆனால் பேசவில்லை


அதிலும் பண்ருட்டி ராமச்சந்திரனே எல்லா ஆட்டங்களும் அறிந்தவர், ஐ.நா சபையில் ஈழபிரச்சினைக்காக பேசிய வரலாறு அவருடையது


1985களில் எம்ஜிஆர் உடல்நலமின்றி இருந்தபொழுது மறைமுக முதல்வர் பண்ருட்டியே


ராஜிவும் பிரபாகரனும் சந்தித்தபொழுது உடன் இருந்தவரும் அவரே, யார் உறுதிமொழியியினை மீறினார்கள் என்பதற்கு சாட்சியும் இன்றுவரை அவரே, அவர் ஒருவரே


என்ன நடந்தது? ராஜிவ் மீது தவறா? அல்லது பிரபாகரன் மீது தவறா என்பதனை பண்ருட்டி இன்றுவரை சொல்லவில்லை, ஆனால் அமைதிபடை தளபதி புலிகளோடு மோதுமுன் முதலில் கலந்தாலோசித்த பிரபலம் பண்ருட்டி ராம்சந்திரனோடுதான்,


காரணம் அவர்தான் அன்றைய நிழல் முதல்வர்


பண்ருட்டி ராமசந்திரன் அந்த மோதலை செய்யவேண்டிய தேவை எனில் செய்யுங்கள் என சொன்னதாகத்தான் செய்திகள் உண்டு


அப்படி ஈழ வரலாற்றின் பல சர்ச்சையான காலபக்கங்களுக்கு சாட்சி அவரே


ஆனால் அவர் பேசவே இல்லை, பேசவும் மாட்டார். அந்த அமைதி ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.


மனிதர் இன்றும் அதே கட்சியில்தான் இருக்கின்றார், ஆனால் என்ன செய்ய பன்னீர் செல்வம் கிடைத்துவிட்டார், பண்ருட்டி செய்த சகல கட்சி ஊர்வலமும் இன்னொரு காரணம்.


ஈழ போராட்டம் எப்படி இந்தியாவிலிருந்து தன்னை துண்டித்துகொண்டது, எப்படி அது திசைமாறியது என்பதற்கு பெரும் சாட்சி பண்ருட்டியார்


ஆனால் மனிதர் பேசமாட்டார், ஏன் பேச மாட்டார்?


காரணம் அவர் பேச ஆரம்பித்தால், அந்நாளில் கலைஞர் ஈழ போராட்டத்தில் எடுத்த பல நிலைப்பாடுகளை பேசவேண்டி வரும்,
அமைதிபடை அனுப்பும்பொழுதே கலைஞர் செய்த எதிர்ப்புகள் வரும், இன்னும் ஏராளம் வரும்.


தமிழகத்தில் ஈழதுரோகி என அறியபட்டிருக்கும் கலைஞரின் அன்றைய ஈழாபிமான செயல்பாடுகளை சொல்லவேண்டி வரும், அப்பொழுது கலைஞருக்கு பல பெருமைகள் சேரும், இந்த புலி அபிமானிகளால் தூண்டிவிடபட்டு வீசபட்ட‌ கலைஞர் மீதான சேறு கழுவபடும்


அவ்வளவு விஷயங்கள் வரும், அதில் எம்ஜிஆர் அரசு டம்மியான உண்மைகளும் வரும், நிச்சயம் வரும்.


அந்த வாய்ப்பினை கலைஞருக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை


ஆனால் இவரும் பேசி, கலைஞரும் பதிலுக்கு பேசினால் இந்த சீமான் கோஷ்டிகள், புதிதாக புலிவால் பிடிக்கும் அல்லக்கை கோஷ்டிகள் எல்லாம் சிதறிஓடும்


பண்ருட்டியாரும் பழுத்த அரசியல்வாதி, கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம், பின் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்?


டெப்பாசிட் இழந்த கட்சிகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும், என்ற ராஜதந்திரமாக இருக்கலாம், அதாவது பேசவேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை என நினைக்கலாம்


பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பின் பல ஈழ உண்மைகள் உறங்கிகொண்டிருக்கின்றன, மனிதர் சாதரமாணவர் அல்ல. பெரும் அரசியல் அனுபவம் கொண்டவர்


அவரை விலக்கியது விஜயகாந்த் செய்த பெரும் தவறு, உச்சகட்ட தவறு. இப்பொழுது விஜயகாந்திற்கு புரிந்திருக்கும்.


இப்பொழுது அதிமுக கட்சிக்கு சோதனையான காலம், பண்ருட்டியார் என்ன செய்து கொண்டிருப்பார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.


ஆனால் தமிழகத்தில் பிரபாகரன் பற்றியும், ராஜிவ் நடவடிக்கை பற்றியும் பேசும் தகுதியுள்ள ஒரு சிலரில் பண்ருட்டியார் முக்கியமானவர், அவருக்கும் ஒரு வரலாறு உண்டு.


அவரே அமைதியாக இருக்க இந்த அங்கிள் சைமனின் பித்தலாட்டமும் அதற்கு சில மங்கிகளின் கைதட்டலும்தான் கால கொடுமை.















No comments:

Post a Comment