Friday, October 28, 2016

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

https://youtu.be/9NOPgZcxrOc

தீதீ தீதீ தீதீ தீபாவளி 


போடு



தீதீ தீதீ தீதீ தீபாவளி 


 



தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் பண்டிகைகள், தேர்தல் போன்ற திருவிழாக்கவள் போல நிறைய வந்தாலும் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே.


மகா முக்கியமான காரணமாக சொல்லபடுவது பகவான் நாராயணன் நரகாசுரனை வதம் செய்தார் என்பது மகா ஆதாரமான நம்பிக்கை என்பது முதலாவது.


இன்னும் பல வகையான காரணங்களை சொல்வார்கள், ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை.




மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள்.


(ஆனால் சமணர்களில் ஒரு பிரிவினர், இந்நாளில் மகாவீரர் சமாதி அடைந்ததாகவும், அதனை பார்த்து நிம்மதி அடைந்த பிற மதத்தினர் எதிரி ஒழிந்தான் என கொண்டாட கிளம்பியதாகவும் ஒரு செய்தி உண்டு, ஆதாரமில்லை)


இன்னும் ஒரு தீபாவளி நாளில்தான் அமிர்தசரஸ் பொற்கோயிலை கட்ட அடித்தளமிட்டார்கள் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை, அவர்களும் சிறப்பிப்பார்கள்.


இவ்வாறாக சகல மக்களும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை, ஒளி வந்தது அல்லது இருள் அகன்றது,தீமை அகன்றது என்பதனை குறிக்கின்றது.


தீமைகள் நம்மை விட்டு அகலவேண்டும் என்பதற்காக முதல்கடமையாக எண்ணெய் குளியலை கட்டாயமாக்கி வைத்திருக்கின்றது. இன்னும் ஏராளமான கடமைகள் உண்டு, காலம் காலமாக தொடர்ந்து வருபவை அவை.


தீபாவளி பண்டிகை என்பது அந்த பெயரினை கேட்டபொழுதிலே பெரும் உற்சாகத்தை தர கூடியது.


அவ்வகையில் நமது நண்பர்களின் இல்லங்களிலும் தொழிலிலும் தீமைகள் அகலட்டும், நன்மைகள் பெருகட்டும் என வாழ்த்துவோம்.


பல நண்பர்கள் தீபாவளிக்காக பெரும் பயணத்தில் இருப்பார்கள், அவர்களின் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துவோம்.


குடும்பத்தோடும், சொந்தங்களோடும்,சொந்த மண்ணில் தீபாவளி கொண்டாடுவது ஒரு பெரிய வரம்.


உறவுகள் ஒன்றாகி கொண்டாடும் தருணத்தை விட மேலான‌ சொர்க்கம் எங்கு இருக்கின்றது??


தீபாவளி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


 







No automatic alt text available.





No comments:

Post a Comment