Wednesday, October 19, 2016

இப்போதைக்கு "நாம் பூசாரிகள்"




‘சந்தன மரத்தையும் தந்தத்தையும் வீரப்பன் கடத்தவில்லை!’ : குருபூஜைக்குத் தயாராகும் சீமான்


ஆம், சந்தணமரங்கள் தானாக சென்று லாரியில் ஏறின, யானைகள் தந்தத்தை ஒடித்துகொடுத்துவிட்டு தானாக மலையிலிருந்து செத்தன. நாகப்பாவும், ராஜகுமாரும் தானாக வீரப்பனிடம் சேர்ந்து காட்டினை சுற்றிபார்த்தார்கள்.


வீரப்பன் செய்த கொலைகளும் கடத்திய தந்தங்களும், மரங்களும் நாடறியும், அவனது கடத்தல்களை சொல்லி தெரியவேண்டியதில்லை





ஆக 100 போலிசார் கொல்லபட்டத்தையும் மறைத்து அவன் இருந்திருந்தால் காவேரி வந்திருக்கும், அப்படி இருந்திருக்கும் என்பதெல்லாம் வெறும் பிதற்றல், அப்படியானால் கன்னடன் அவ்வளவு அணைகளையும் வீரப்பனை கேட்டுத்தான் கட்டினானா?

சத்தியமங்கலத்தில் கிடைக்கும் 4 வாக்குகளுக்காக பெரும் குற்றவாளிக்கு குருபூஜை என சீமான் கிளம்பியிருப்பது நிச்சயம் கண்டிக்கதக்கது, அப்படியானால் அந்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் சாவுக்கு என்ன பொருள்? கொழுத்து செத்தார்களா?

அவர் குருபூஜை கொண்டாடபோகின்றாராம்

நாம் காட்டு பயங்கரவாதத்தினை வெற்றிகொண்ட நாளாக காவலர்களோடு சேர்ந்து வெற்றி நாளாக கொண்டாடலாம்.

அது என்னமோ தெரியவில்லை மண்டையில் அடிபட்டு செத்த தமிழனை கண்டவுடன் இனச்சாமி, குலச்சாமி , மலைச்சாமி என ஒருவித சாமி இவருக்கு இறங்கிவிடுகின்றது

ஆக காவல்துறையினை விரட்டி கொன்றவன் எல்லாம் இனி ஏதோ ஒரு சாமி என அழைக்க்படும் அபாயம் தமிழகத்தில் இருக்கின்றது, கன்னியாகுமரி லிங்கம் விரைவில் கடல்சாமி எனவும், ஆட்டோ சங்கர் ஆட்டோ சாமி எனவும், இன்னும் பலவாறு போலிசிடம் சிக்கி செத்தவர்கள் சிலசாமிகளாகவும் இந்த ஆசாமியால் அறிவிக்கபடபோகின்றனர்.

காவல்துறையோ அல்லது மருத்துவதுறையொ இம்மனிதருக்கு என்ன பிரச்சினை என விளக்காதவரை தமிழக அமைதிக்கு ஆபத்து, இது மிக தவறான வழிகாட்டால்

மலையூர் மம்பெட்டியான், கரிமேடு கருவாயன், வடலிவிளை செம்புலிங்கம் இவர்களுக்கு எல்லாம் எப்பொழுது இவர் குருபூஜை நடத்தபோகின்றார்?

இன்னும் பல ரவுடிகள் விடுபட்டிருந்தால் இவரிடம் சொல்லுங்கள், உடனே பூஜை நடத்த கிளம்பிவிடுவார் இந்த முன்னாள் பெரியார் பேரன்,

ஆனால் தற்போது பூசாரி.

இனி அப்படியே கோயில்களில் மணியாட்டி பூஜை செய்யும் திட்டம் இருக்குமோ?

இப்போதைக்கு "நாம் பூசாரிகள்"






No comments:

Post a Comment