Saturday, October 29, 2016

மலேசிய தீபாவளி..

மலேசிய தீபாவளி வழக்கம் போல கோலாகலம், கட்டணத்தில் வாங்கும் இந்திய‌ டிவி சேனல்களை கூட சில நாட்களுக்கு அரசு இலவசமாக கொடுத்திருக்கின்றது.


அரசு தொலைகாட்சியில் இந்திபடங்களும் கூடவே லிங்கா, சிவாஜி என இம்சைகள்.


கபாலி ஏன் போடவில்லை என கேட்டால் நிலை மகா சிக்கல் ஆகிவிடும், அது வரவும் வாய்ப்பே இல்லை.




ஒரு சேனலில் நெடுநாளைக்கு பின் விசுவின் நிகழ்ச்சி பார்க்க முடிந்தது, அவர் குரலே கிட்டதட்ட பாக்யராஜ் போல மாறி இருந்தது தெரிந்தது, எப்படி இருந்த குரல்? காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகின்றது


ஒரு சேனலில் சிம்பு அழிச்சாட்டியம் செய்து ஆடிகொண்டிருந்தார், கூடவே சரத்குமார் மகள் வரலட்சுமி


சரத்குமாருக்கு நாடார் என பேனர் வைத்து கொண்டாடுவர்கள், திருமண வாழ்த்து முதல் அஞ்சலி போஸ்டர் வரை அவர் படத்தினை வைப்பவர்கள் யாரும் அவரின் நாடார் புத்திரி படத்தினை வைப்பதில்லை, இவ்வளவிற்கும் அழகாக ஆடுகின்றார்


அது நாடார் சங்கத்தார் பிரச்சினை.


கடுமையான மழையில் இங்கே தீபாவளி, தமிழகத்தில் எப்படி என தெரியவில்லை, ஆனால் பல இடங்களில் மழை இல்லை என்றுதான் சொல்கின்றார்கள்


நரகாசுரனுக்கு வீரவணக்கம், முப்பாட்டன் நரகாசுரன் என கிளம்பிய பின் வருண பகவானுக்கும் சில கோபங்கள் இருக்கலாமோ?


அவர்களை பொருட்படுத்தாமல் வருண பகவான் வந்தருளட்டும்.






எவ்வளவு சுவையான விருந்துக்கள் என்றாலும் அதனை முழுமையடைய செய்வது வெற்றிலை பாக்கு


அள்ளி கட்டிவிட்டு, நிதானமாய் தாம்பூலம் தரிப்பதில்தான் எவ்வளவு சுகம்..







 

No comments:

Post a Comment