Sunday, October 23, 2016

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு









Stanley Rajan's photo.

Stanley Rajan's photo.







பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு : செய்தி


நன்றாக படித்து பார்த்தால் ஒரு மர்மமும் விடுபடவில்லை, வழக்கமாக வரும் அனுமானங்களில் ஒன்று வந்திருக்கின்றது. 100001 வது அனுமானகமாக, அதாவது அறுங்கோண வடிவில் மேகங்கள் வருவதால் அப்பகுதியில் மர்ம சக்தி நிலவுகின்றதாம்.


சரி உலகில் எங்கும் இல்லா வகையில் அங்குமட்டும் அறுங்கோணம் எப்படி வருகின்றது, இதுவரை காணாமல் போன கப்பல்கள் எங்கு சென்றன, இன்னொரு ஆளில்லா விமானத்தை அனுப்பி சோதிக்கலாம் அல்லவா? என்றல்லாம் நாம் கேட்க கூடாது.





ஆக பர்முடா முக்கோண மர்மம் இன்னும் தொடர்கின்றது, இன்னும் தொடரும்

கொலம்பஸ் காலம் தொடங்கி இன்றுவரை அந்த கடல்பகுதி பெரும் மர்மமே, அதில் திடீரென காணாமல் போகும் கப்பல்கள் என்னாகின்றன, விமானம் என்னாகின்றது எனும் ஆராய்ச்சி ஒருபுறம்.

கடலுக்குள் இருக்கும் அட்லாண்டிஸ் கண்டத்தின் அனுமாஷ்ய சக்தி, ஏலியன்ஸ், இந்த விண்வெளிக்கும் மற்றொரு விண்வெளிக்கும் உள்ள, ஐன்ஸ்டீன் சொன்ன வேர் ஹோல், என பல மாதிரியான சந்தேகங்கள் உண்டு

அக்கப்பல்கள் தொலையவில்லை மாறாக மாணிட கண்களுக்கு புலனாகாத வேறு வடிவில் அவை மாறிவிடும் என வயிற்றில் புளியமரத்தினை கரைக்கும் விஷயங்களும் உண்டு.

சிலநாடுகளோ இவை பாதுகாப்பிற்காக அமெரிக்கா கிளப்பிவிடும் வதந்தி என சந்தேக கண்கொண்டு பார்க்குமே அன்றி, அவைகளும் அங்கு கப்பல் செலுத்த துணியாது.

ஆக ஆயிரம் செய்திகள் அதனை பற்றியும் வந்துகொண்டே இருக்கின்றன, எல்லாம் குழப்பத்தையே கொடுக்கும்.

அப்படி அந்த மர்மம் பறக்கும் தட்டு போல புரிந்தும் புரியாமலும் தொடர்கிறது.

அந்த மர்ம முடிச்சு அவிழ்ப்பு இன்னும் தொடரும்

நமக்கு என்ன? யார் எந்த மர்மத்தை அவிழ்த்தால் என்ன? அவிழ்க்காவிட்டால் என்ன?

நம்மால் இந்த சென்னை அப்பல்லோ மர்மத்தையே முழுமையாக அறியமுடியவில்லை.

அதனை பற்றி சொன்னாலே வதந்தி என்பார்கள், கைது என்பார்கள்.

அதனால் அதனைபற்றி எல்லாம் நாம் பேசகூடாது.















No comments:

Post a Comment