Saturday, October 15, 2016

அஜித்திற்கு ஒரு நியாயம் சிவ கார்த்திகேயனுக்கொரு நியாயமா?



ah


ரெமோ படம் மொக்கை தான், அதனை விட்டுவிடலாம். ஆனால் அதன் கதை கலாச்சார சீர்கேடு என சிலர் பொங்கிகொண்டிருக்கின்றார்கள்.


திருமணம் நிச்சயயிக்கபட்ட பெண்ணை முன்னாள் காதலியானாலும் மனதால் நினைக்க கூடாது என்பதெல்லாம் ஆலயமணி எஸ்எஸ்ஆர் காலத்ததோடு, நெஞ்சில் ஒரு ஆலயம் காலத்தோடு அடக்கம் ஆகிவிட்டது.


இதே போன்றதொரு கதையினை அஜித்குமார் "காதல் மன்னன்" என முன்பு நடித்திருந்தார். அதே கதைதான், அப்பொழுதெல்லாம் கலாச்சாரம் காப்பவர்களை காணவில்லை, இன்று காக்க கிளம்பிவிட்டார்கள்





அஜித்திற்கு ஒரு நியாயம் சிவ கார்த்திகேயனுக்கொரு நியாயமா?

அஜித் என்ன கடவுளா?

அஜித்தினை விடுங்கள், எத்தனை சினிமாக்களில் ஹீரோயினுக்கு நிச்சயம் ஆகி, மணமேடையில் அமெரிக்க மாப்பிள்ளையினை விரட்டிவிட்டு ஹீரோவினை கரம் பிடிக்கின்றார்.

இந்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹீரோ செய்ததென்ன? ஒரு பெண்ணை நிச்சயம் செய்து ஏமாற்றவில்லையா?

இதனை எல்லாம் சொல்லாமல் சிவகார்த்திகேயன் கலாச்சாரம் கெடுக்க கிளம்பிவிட்டார் என்கின்றார்கள்.

அஜித்குமார் காதல் மன்னன் படத்தில் அதனைத்தான் செய்தார்.

அவர் அப்படி படம் நடித்தால் சரியாம், சிவ கார்த்திகேயன் நடித்தால் கலாச்சாரம் கெட்டுவிட்டதாம்.

ரஜினிகாந்த் அறிமுகமான காலங்களில் அவரின் தமிழ் உச்சரிப்பு சர்ச்சையானது (இன்றும் அப்படித்தான்), அரசியலில் பழ.நெடுமாறன் அன்று கொஞ்சம் திக்கி பேசுவார் என்பார்கள்

கலாய்பதெற்கென்றே மைக் பிடிக்கும் தீப்பொறி ஆறுமுகம் இப்படி இருவரையும் கலாய்ப்பாராம்

"எனக்கொரு ஆசை, இந்த ரஜினிகாந்த் என்பவனையும் , இந்த நெடுமாறனையும் ஒரே மேடையில் விவாதம் செய்ய வைக்க வேண்டும், இருவர் தமிழ்பேசுவதை கண்டு விழுந்து விழுந்து சிரிக்கலாம்..."

அப்படி எமக்கொரு ஆசை உண்டென்றால் இந்த அஜித்குமாரையும் , ஆர்யாவினையும் அமர வைத்து அன்று கலைஞர் எழுதிய வசனங்களையோ அல்லது விஜயகாந்த் பின்னி எடுத்த லியாகத் அலிகான் கோர்ட் சீன் வசனங்களையோ பேசவைக்க வேண்டும்.

எப்படி இருக்கு என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

(சிட்டிசன் படத்து கிளைமேக்ஸ் எல்லாம் நினைவுக்கு வராமல் பார்த்துகொள்ளுங்கள்)

அந்த டைரக்டரே அஜித்தின் காதல் மன்னன் கதையினை ரீமேக் செய்து சிவாவினை ஏமாற்றி இருக்கின்றார். அதனை சொல்லாமல் கலாச்சாரம், சீர்கேடு என ஆரம்பித்துவிட்டார்கள்

அஜித்குமார் காக்காத கலாச்சாரத்தினை சிவகார்த்திகேயன் காப்பாற்றியே தீரவேண்டுமாம்.

என்னா வில்லத்தனம்.....







 எக்ஸ்ட்ராஸ்



கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் நடிகை ஸ்ரேயா காதல்


நண்பர் Babu Rao அவர்களே உடனே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சில சிக்சர்கள் அடிக்காமல் உங்கள் இலட்சியம் நிறைவேறும் வாய்ப்பு குறைவு.


உடனே மட்டையினை தூக்கிகொண்டு ரஞ்சி டிராபியில் கலந்துகொள்ளுங்கள்




No comments:

Post a Comment