Tuesday, October 18, 2016

எண்ணெய் விலை என்ன விலை?

உலக கச்சா எண்ணெய் சந்தை, தமிழ்க பாஜக போல் பாய்விரித்து குறட்டை விடும் இந்த நேரத்தில் விலை குறைப்பு செய்யாதது ஏன் என கேட்டால்


உனக்கென்ன தெரியும், இந்தியாவில் விலை குறைந்தால் நாடு பொருளாதாரத்தில் சரிந்துவிடும் என ஒருவர் ஒப்பாரி வைக்கின்றார்


அன்பரே கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலரில் இருந்தபொழுது மன்மோகன் இந்நாட்டை வழிநடத்தவில்லையா? இந்திய பொருளாதாரம் வளர்ந்ததா? சீரழிந்ததா?




இன்று அதே எண்ணெய் விலை பேரலுக்கு 40 டாலராக சரிந்தபின், மிக திறமையானவராக மோடி இருந்தால் பெட்ரோல் விலை இந்தியாவில் குறைந்திருக்கவேண்டும்


அல்லது டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 50 ரூபாயாக எகிறி இருக்கவேண்டும்


இரண்டுமே நடக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?


இந்நிலையிலும் விலைகுறைத்தால் இந்திய பொருளாதாரம் படுத்துவிடும் என நீர் சொல்வது எப்படி இருக்கின்றது தெரியுமா?


கங்கை பிரவாகம் எடுத்து ஓடும்போது, அதன் ஆற்றங்கரை மரத்திற்கு தண்ணீர் ஊற்ற செல்லும் நபரை போல இருக்கின்றது உங்கள் கூற்று


சொல்வீர்களா அப்படி?, கங்கை எப்படியும் ஓடட்டும் ஆனால் நான் நீர் ஊற்றவில்லை என்றால் அம்மரம் பட்டுவிடும் நண்பரே..


நீர் செய்தாலும் செய்வீர் அய்யா.............


உம்மைபோன்ற நபர்கள் இருக்கும் வரையில், தமிழிசை சவுண்ட் விடுவதிலும், பொன்னார் தூங்குவதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை.



No comments:

Post a Comment