Monday, October 24, 2016

பெரும் மானிட அழிவு சிரியாவில் நடக்கின்றது...



பெரும் மானிட அழிவு சிரியாவில் நடக்கின்றது, அலிப்போ நகரினை ரஷ்ய படைகள் போட்டு தாக்குகின்றன, கிட்டதட்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாகலாம் என்றொரு பெரும் துயர செய்தி வருகின்றது.


ஒபாமா திணறுகின்றார், அவரால் பின்வாங்க முடியவில்லை. பொருளாதார தடை என சொன்னாலும் இன்னும் அழிய இங்கு என்ன மீதி இருக்கின்றது என சிரிய அரசு அசால்ட்டாக இருக்கின்றது, ஜெர்மன் அதிபர் பேசி பார்க்கின்றார்


ஆனால் நிலமை சாதகமாக இல்லை, பெரும் அழிவு நடந்துகொண்டே இருக்கின்றது


ஈராக்கில் மொசூல் எனும் எண்ணெய் வளமிக்க நகரினை ஐ.எஸ் இயக்கத்திடம் இருந்து மீட்கிறோம் என அமெரிக்க+ ஈராக்கிய படைகள் மக்களை கொன்று குவிக்கின்றன‌


கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் பலியாகலாம் என சொல்லபடுகின்றது, ஈராக்கிய அரசோ எமக்கு வேறு வழியில்லை, விட்டால் 5 லட்சம் மக்களும் ஐ.எஸ் இயக்கமாக மாறினால் பேராபத்து அல்லவா? எனும் ரீதியில் கொல்கிறது


மானிட நேயம், சர்வதேசம், ஐ.நா எல்லாம் சுத்தாமாக வாய் மூடி நிற்கும் நேரம்


கொத்துகொத்தாக மக்கள் கொல்லபட்டுகொண்டே இருக்கின்றனர்


சிரியாவின் அலிப்போவும் , ஈராக்கின் மொசூலும் குதறபட்டுகொண்டிருக்கின்றன‌


கேட்பார் யாருமில்லை


இதுதான் உலகம், இதுதான் உலக அரசியல்


இப்படி யாழ்பாணத்தை சிங்களன் குதறும்பொழுதுதான் களம் புகுந்து தடுத்து தன் ராணுவத்தையும் அனுப்பி பாதுகாத்தது இந்தியா


நாங்கள் கிழித்துவிடுவோம் என விரட்டிவிட்டு, மொத்தமாக மக்களையும் அழித்து, இந்தியாவினையும் பகைத்து அழிந்தனர் புலிகள்


இந்த உலகம் அப்படித்தான், யார் அழிந்தாலும் கண்டுகொள்ளாது. அப்படித்தான் கிளிநொச்சி, முள்ளிவாய்க்காலிலும் நடந்தது


இன்று அரபு மக்களை காக்கும் பொறுப்பு சிரிய கிளர்ச்சிகாரர்கள், ஐ எஸ்க்கு இருப்பது போல அன்று புலிகளுக்கும் இருந்தது, அவர்களோ சுத்தமாக பொறுப்பினை ஏற்றது இல்லை


இந்தியா தடையினை நீக்கவேண்டும், களம் இறங்க வேண்டும் , காப்பாற்றவேண்டும் என அலறினார்கள், அவர்கள் பின் தமிழகத்திலும் சில ஒப்பாரிகள் இருந்தன‌


சரி தடை எதற்காக போடபட்டது என புலிகளும் சொல்லவில்லை, இந்த உணர்வாளர்களும் சொல்லவில்லை, மறைத்தார்கள்.


ஆக அலிப்போ, மொசூல் நகரங்களின் முன்னோடியாக முள்ளிவாய்க்கால் அமைந்திருக்கின்றது, அதாகபட்டது இனி தீவிரவாதிகளை அழிக்கும்போது எவ்வளவு மக்கள் செத்தாலும் கவலை இல்லை என எங்கோ ஒரு சட்டம் இயற்றபட்டு உலகெல்லாம் செயல்படுத்தபட்டுகொண்டிருக்கின்றது


நடக்கும் நிகழ்வுகள் அதனைத்தான் காட்டுகின்றன, இனி தீவிரவாதம் என்றொரு பேச்சே இருக்க கூடாது என அவை முடிவு கட்டியிருக்கின்றன‌


இந்தியா அதிலும் நிதாமனாக காஷ்மீரை கையாள்கின்றது, போட்டு சாத்திவிட்டு மொசூலையும், அலேப்பேவினையும் கைகாட்ட இந்தியாவிற்கு வெகுநேரம் ஆகாது


ஆனால் மிக நிதானமாக காஷ்மீர் எல்லையினை கையாள்கின்றது


சரி சிரிய நிலவரமும், ஈராக்கிய நிலவரமும் அச்சமும், கண்ணீரும், திகைப்பினையும் கொடுக்கின்றன‌


இன்று மோடி அரசு அதனால் சத்தமில்லை


இதே கலைஞர் ஆதரவில் காங்கிரஸ் அரசு அமைந்திருந்தால் எப்படி தொடங்குவார்கள் தெரியுமா?


அரேபியாவில் பெரும் அழிவிற்கு காரணம் காங்கிரசும், கலைஞரும்.


எப்படி என்றால் அருமையான கதையும் வைத்திருப்பார்கள்


அரேபியாவில் தமிழர்கள் உழைத்து பிழைத்து கொண்டிருந்தார்கள், மத்திய அரசு தலையிட்டு தீர்வு கொடுத்தால் தமிழர்கள் எண்ணெய் கிணற்றில் வேலை செய்து பிழைத்திருப்பார்கள்


இன்று யுத்தத்த்தினால் அவர்கள் பிழைப்பு போயிற்று.


இங்கே காங்கிரசும் கலைஞரும் விவசாயத்தையும், மீன்பிடியினையும் அழித்ததால் அங்கே உழைக்க சென்ற தமிழர்கள் அவர்கள்.


இங்கே வாழவிடாத அவர்களை கலைஞர் அங்கேயும் வாழவிடவில்லை


ஆக தமிழரின் வாழ்வினை அரேபியாவில் கெடுத்த காங்கிரசும், கலைஞரும் தமிழின துரோகிகள்


உடனே அதற்கும் ஒரு கூட்டடம், ஆம் காங்கிரஸ் ஒழிக, கட்டுமரம் ஒழிக, என தொடரும்,


உடனே அடுத்த கோஷம் எடுத்துவிட படும்


ஜெயலலிதா வாழ்க, இரும்பு பெண்மணி வாழ்க‌


அதன் பின் வைகோவும், சீமானும் அமைதியாக சிரிப்பார்கள்


தமிழக அரசியல் நிலை இப்படி இருக்கின்றது.






No comments:

Post a Comment