Monday, October 17, 2016

முகநூலில் எழுதி என்ன கிடைக்கின்றது ?

முகநூலில் எழுதி என்ன கிடைக்கின்றது என ஏகபட்ட கேள்விகள், கேட்பவரகள் எல்லாம் நலம் விரும்பிகள் என தங்களை சொல்லிகொள்வார்கள், பாகம்பிரியாளுக்கு முதல் இடம்


என்ன கிடைத்தது என யோசித்தால் அருமையான நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள், அவர்களில் பல வகையுண்டு எனினும் மிக சிலர் குறிப்பிடதக்கவர்கள்


ஒரு நண்பர் கிடைத்தார், யாரோ என நினைத்து பழகினால் அவர் ஒரு சமையல் கலைஞராம், அவ்வளவுதான் அவருக்கு சனி என் வடிவில் பிடித்தது.




அதாகபட்டது வாழ்வது உண்பதற்கு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உண்டு, எல்லா நாடுகளிக்கும் சென்று, எல்லா நாட்டு உணவுகளையும் ருசிக்கவேண்டும் என்பது வாழ்க்கையில் விதிதிருக்கும் ஐம்பெரும் கட்டளைகளில் ஒன்று


குஷ்பூவினை தொலைவிருந்தாவது சந்தித்துவிடுவதும் அந்த ஐம்பெரும் கனவுகளில் ஒன்று


இதில் எல்லா நாடுகளுக்கும் செல்லமுடிய்மோ இல்லையோ, எல்லா நாட்டு உணவுகளையும் ஒரு ரவுண்ட் வந்தாயிற்று, மலேசியா அதில் பாராட்டவேண்டியது. எந்த நாட்டு உணவும் எப்பொழுதும் கிடைக்கும்,


ஆனால் நமது உணவுகள் அதன் ஒரிஜினல் சுவையில் கிடைப்பது மகா சிரமம்


அப்படி தவித்த இந்த வறண்ட நிலத்திற்கு மேகமாகத்தான் அவர் கிடைத்தார், சும்மா சொல்லகூடாது அட்டகாசமான ரெசிபிக்களை அள்ளிவிடுகின்றார்.


அவர் சொன்னபடி செய்தால் சுவை அப்படி நம்மை கட்டிபோடுகின்றது, வித்தைகளை எங்கு கற்றார் என தெரியவில்லை, கசடற கற்று அதற்கு தக எங்கோ சமையல் பணீ புரிகின்றாராம்


என் தாத்தா மட்டும் இந்த சொத்துக்களை ஒழுங்காக பாகம் பிரித்து வைத்திருந்தால், சந்தேகமே இல்லாமல் நானும் சமையல்காரனாகி இருப்பேன், விதி அன்றே அவர் உருவில் விளையாடிவிட்டது


அப்படி ஒரு அருமையான கலை அது, மணக்க மணக்க, சுவைக்க சுவைக்க ஒரு தொழில் உலகில் உண்டென்றால் அது சமையலைதவிர வேறு ஒன்றுமில்லை


நண்பர் Venkatesh Mothilal கொடுத்தவைகள் கிளிக் ஆகின்றன, விடாமல் விரட்டி கொண்டிருக்கின்றேன், அவரோ இவரிடம் வசமாக சிக்கிகொண்டோமோ என யோசிக்கின்றார்


நண்பர் ஐடி மாற்றினாலும், முகநூல் விட்டு ஓடினாலும் சர்வதேச போலிசிடம் சொல்லியாவது அவரை கண்டுபிடித்துவிடவேண்டும் என முடிவாகிவிட்டது


அவர் தலைமறைவாகும் வரை கதற கதற ரெசிப்பிக்களை வாங்கவேண்டிய ஆசையில் விரட்டிகொண்டிருக்கின்றேன்


நீங்களும் முயற்சித்து பாருங்கள், மகா அற்புதமான சமையல் கலைஞரை நண்பராக பெற்றதில் பெருமை அடைகின்றேன்


முகநூல் கொடுத்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று


நண்பர் Venkatesh Mothilal பல்லாண்டு சமைக்கட்டும்.



No comments:

Post a Comment