Sunday, October 9, 2016

இன்னும் என்னவெல்லாம் கிளம்பபோகின்றதோ...

முதல்வர் உடல்நலம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை, அப்பல்லோ வாசலில் தமிழிசை பேட்டி

பின்னே, அங்கே நின்றுகொண்டு கோட்டையில் காவிகொடி பறக்கும், எல்லா மாநகராட்சிகளையும் பா.ஜ கைபற்றும் என காமெடி செய்தால் நன்றாகவா இருக்கும்?



தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் அரசியல் நேர்முக உதவியாளர் சத்தியா என்கிற சத்தியநாராயணா விபச்சார வழக்கில் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.


என்னது? காவேரியில் அநியாயம் செய்யும் கன்னடத்தில் தமிழக அமைச்சரின் உதவியாளரே "தொழில்" செய்திருக்கின்றாரா? எப்படிபட்ட எதிர்ப்பு அடையாளம் இது?


ஆனாலும் அக்கட்சியினர் வித்தியாசமானவர்கள், கோர்ட்டில் நீதிபதி சம்பிரதாய கேள்விகளை கேட்கும் பொழுது "இதய தெய்வம்....... ஆணைக்கிணங்க" என அவர்கள் பிராண்ட் வசனங்களை சொல்லாமல் இருக்கட்டும்.




ஆனால் சிந்திக்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு, அது பெரும்பாலனான இன்றைய அரசியல்வாதிகளின் பின்புலம் இப்படித்தான் இருக்கின்றது, அதாவது தன் பின்னால் அலைபவன் எப்படி சம்பாதித்தாலும் அதனை கண்டிக்க முடியதா நிலை அவர்களுக்கு


காரணம் கண்டித்தால் வாழ்க கோஷம், பேனர் கட்டுதல், அடுத்த முதல்வர் என கோஷமிட ஒரு பயலும் பின்னால் வரமாட்டான்.


இப்படியான செய்திகள் ஆட்சிக்கு அவபெயர் என்பதால் இவை எல்லாம் முன்பு பத்திரிகைகளில் வராமல் தடுக்கபட்டடது, இன்று ஆட்சியே அப்பல்லோ ஐ.சி.யூவில் படுத்துகொண்டதால் இவற்றை கவனிக்க ஆளில்லை


தமிழக ஊடக தர்மம் இத்தகையது,


இன்னும் என்னவெல்லாம் கிளம்பபோகின்றதோ, பார்க்கலாம்


ஒருவேளை கன்னடரை பழிவாங்க இப்படி ஒரு வழியில் பெங்களூரில் இறங்கி இருப்பாரோ? இருக்கலாம்.


அம்மா இருந்த பெங்களூர் சிறையில் இருப்பதை பெருமையாக நினைக்கின்றேன் என இவர் முழங்கினால் நிலை என்னாவது?



No comments:

Post a Comment