Monday, October 10, 2016

தமிழன் எங்கிருந்தாலும் இப்படியே இருக்கின்றான்...

இறுதி ஈழப்போர் நடக்கும் போது வராத கூட்டம், முன்பு புலிகள் பொங்கு தமிழ் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது வராத கூட்டம், சமீபத்தில் எழுக தமிழ் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது வராத கூட்டம், யாழ்பாணத்தில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சிக்காக கூடியதாம், பெருங் கூட்டமாம்


தமிழகத்திலும் காவேரிக்கு வராத கூட்டம், ஜல்லிகட்டிற்கு வராத கூட்டம், மீத்தேனுக்கு கூடாத கூட்டமெல்லாம் நயன் தாரா நகைகடை திறக்க வரும்பொழுது வருகின்றது


ஆக தமிழன் எங்கிருந்தாலும் இப்படியே இருக்கின்றான்.




சரி ஒருவேளை நாளை நடிகை குஷ்பூ யாழ்பாணம் சென்று எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் சாதனையினை முறியடித்துவிட்டால், இந்த சீமானிய அடிப்பொடிகள் எல்லாம் முகத்தை எங்கு வைத்துகொள்ளும்?


இவ்வளவு நடந்திருக்கின்றது


"என் இனம் அழியும் பொழுது கூடி தடுக்கா யாழ்பாணம், தெலுங்கனான எஸ்,பி பாலசுப்பிரமணியம் பாடும்பொழுது கூடி இருக்கிறதென்றால் அவ்வளவு மானங்கெட்ட, சுரணணை கெட்ட, ஈன தமிழன் அங்கு இருக்கின்றானா?..." என அங்கிள் சைமன் தன் டிரேட் மார்க் பாணியில் பொங்குவார் என பார்த்தால் சத்தமே இல்லை.


தமிழக தமிழர்களை எப்படி எல்லாமோ கண்டிக்கும் அங்கிள் சைமன், யாருக்காக போராடுகின்றாரோ அவர்கள் தெலுங்கனை பாராட்டும்போது சத்தமே இல்லை :)


அடிப்பொடிகளே இப்பொழுது அவர் ஏதாவது சொல்லலாம் அல்லவா? சொல்லுங்கள்



No comments:

Post a Comment