Wednesday, October 5, 2016

அம்மா இல்லாத உலகத்தில் இருக்கமாட்டாராம்..






Image may contain: 1 person


பொதுவாக கவிஞர்கள் வித்தியாசமாக சிந்திப்பவர்கள், அது அழகான மொழிகளோடு கவித்துவமாக உணர்ச்சிகளின் வரிகளில் வெளிவந்தால் ரசிக்கலாம்


ஆனால் விபரீதமாக சிந்தித்து, அதனையே செய்யவும் போகிறேன் என கிளம்பினால் எப்படி இருக்கும். சில நேரம் கண்டிக்கலாம், சில நேரம் கையில் கிடைத்ததை எடுத்து சாத்தலாம் போல இருக்கும்,, அவர்களில் ஒருவர்தான் இவர்.


டைனமிக் மேரேஜ் என உளறி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் கட்டிபிடித்து, மணபெண்ணை கூட எல்லோரையும் கட்டிபிடிக்க வைத்து , கிழவிகளையும் தலைகீழாக தூக்கி பெரும் தத்துதுவம் பேசியவர் சிநேகன்,





அன்றே அது பெரும் சர்ச்சையாகி அவரை ஒரு மாதிரி நோக்கினார்கள்,

இன்று முடிவே செய்தாகிவிட்டது

"என்னம்மா ஆச்சி உங்களுக்கு?.." என ஒரு அழுவாச்சி கவிதை படித்திருக்கின்றார் அல்லவா? அதிலே முழுதும் முடிவாகிவிட்டது

இது வைரமுத்து பாணி, அவரை தவிர யாருக்கும் இவ்வகை வரிகளில் அழுத்தம் சாத்தியமில்லை. அது கிராமத்து இயல்வு வகை. குயிலினை பார்த்து கோட்டான் காப்பிஅடிக்க முயற்சிக்கின்றது.

புலியினை பார்த்து பூனை டாட்டூ போட்டிருப்பது நன்றாக தெரிகின்றது,

மனிதர் எப்படி எல்லாம் புலம்பி இருக்கின்றார், அம்மா இல்லாத உலகத்தில் இருக்கமாட்டாராம், அம்மா இல்லாவிட்டால் அவ்வளவுதானாம்

முதலில் இவரை பெற்ற அம்மா எப்படி இருக்கின்றார் என முதலில் விசாரிக்க வேண்டும், அந்த அம்மா செருப்பால் இவரை அடிக்க சொல்ல வேண்டும்.

எதற்கும் அப்பல்லோ நிர்வாகம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, மனிதர் நள்ளிரவில் புகுந்து "என்னம்மா ஆச்சி உங்களுக்கு? என முதல்வரை எழுப்பி கலாட்டா செய்யலாம், கவனம்

எப்படியோ கராத்தே ஹீசைனி அமைதியான நிலையில் அவர் இல்லா குறையினை ஒரு கவிஞர் என சொல்லிகொள்பவர் தீர்த்து கொண்டிருக்கின்றார்,

இதற்காகவாது விரைவில் வந்துவிடுங்கள் அம்மா, இவனை போன்றவர்கள் இனி என்னென்ன இம்சைகள் செய்வார்களோ பயமாக இருக்கின்றது

இந்த இம்சைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றவாவது வந்து விடுங்கள் அம்மா...

(அடேய் இம்சைஸ், இதனை கண்விழித்து கேட்டுவிட்டால் அம்மா உடனடியாக அமெரிக்கா, சிங்கப்பூர் அல்லது ஜப்பானுக்கே ஓடிவிடும் அபாயம் உண்டு.

அப்படி ஒரு நிலைக்கு அவர்களை ஆளாக்கிவிடாதீர்கள்..)




கொசுறு




தமிழ்நாட்டின் கழுத்துக்கே பிரதமர் மோடி கத்தி வைத்து இருக்கின்றார்: வைகோ

காங்கிரசும், சோனியாவும்தான் தமிழக எதிரிகள். பாஜக ஆட்சி வந்தால் தமிழருக்கு எல்லா நியாயமும் கிடைக்கும், ஈழம் மலரும் என்றெல்லாம் பேசி, கூட்டணியில் துண்டுபோட்டு இடம் பிடித்தவரும் இவர்தான்

இன்று மோடி கத்தி வைக்கிறார் என கத்துவதும் இவர்தான்.


அப்படியனால் கத்தியினை கையில் கொடுக்கவேண்டும் என்றுதானே இவர் சொல்லியிருக்கின்றார்??









 ஜெ. நலமுடன் இருப்பதாக அதிமுக அமைச்சர்கள் தகவல்: அப்பல்லோவில் வேல்முருகன் பேட்டிஇதனை சொல்ல இவர் எதற்கு? அப்பல்லோ விசிட் எதற்கு?

திருமா, வேல்முருகன் என எல்லோரும் அட்டெண்டென்ஸ் போட்டாகிவிட்டது மிஸ்டர் கோப்பால்..வேர் ஆர் யூ???







சிநேகன் தொடங்கி வைத்திருக்கின்றார், இனி துபாய் லாலா எத்தனை வீடியோ விடபோகின்றானோ?

ஏ கடவுளே ஒன்று அம்மாவினை உடனே காப்பாற்று அல்லது இந்த இம்சைகளை பிடித்து எங்காவது மூழ்கடித்து எங்களை காப்பாற்று








 









No comments:

Post a Comment