
டிவி சீரியலில் சீதையாக நடித்த ஸ்ருமிதி ராணி தற்போதைய அமைச்சர், அப்படியே திரவுபதியாக நடித்த நடிகை ரூபா கங்குலியும் இப்பொழுது எம்.பி ஆகிவிட்டார், அப்படியே அமைச்சர் ஆனாலும் ஆகலாம் என்கின்றார்கள்
சீரியலுக்கே இப்படி என்றால், பழைய அஞ்சலி தேவி, சாவித்திரி எல்லாம் இல்லா நிலையில் "ஸ்ரீராமராஜ்ஜியம்" படத்தில் சீதையாக நடித்த நயன் தாரா அடுத்த மத்திய அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வானத்தை பார்த்து நன்றி கூறியபடியே இருக்கின்றார் Babu Rao
நண்பரின் கனவு நிச்சயம் நனவாகலாம், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் நியமணமும் அப்படித்தான் இருக்க்கின்றது
ஆனால் கே.ஆர் விஜயாவும், ரம்யா கிருஷ்ணனும் நயந்தாராவின் எம்பி பதவிக்கு கடும் சவால் என நண்பருக்கு தெரியுமோ என்னமோ?
சீதை பாத்திரத்தில் நடித்திருப்பதால் நயனுக்கே வாய்ப்பு அதிகம் என்பது நண்பர் Babu Rao கணக்கு, மத்திய அரசு சீதைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அப்படி என்கிறார்.
ஆக நயன் எம்பி ஆனாலும் ஆகலாம், அமைச்சர் ஆனாலும் ஆகலாம்.
எப்படியோ எம்பி ஆகப்போகும் நயன், தம்பி என நண்பரை அழைத்தால் என்னாகும்?
நண்பரின் பிஞ்சு மனம் எப்படி தாங்கும்? அப்பல்லோவில் வேறு ஆள் நுழையமுடியா அளவிற்கு நிலமை இருக்கின்றது.
ஆக வாழ்த்து சொல்லுமுன் நிதானித்து சொல்லுங்கள் நண்பரே
No comments:
Post a Comment