முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்தேன் : ராகுல் காந்தி
இதற்கு டெல்லியிலிருந்து ஒரு போன் கால் போதாதா?
இங்கு வந்துதான் டாக்டர்களிடம் கேட்க வேண்டுமா?
அதே பதில்....
ஆக இன்றைய பிரபலம் ராகுல்காந்தி, நாளைய பிரபலம் அருண் ஜேட்லியாக இருக்குமோ?
நீதிபதி குமாரசாமி மாறுவேடத்தில் வந்து சென்றிருக்கலாம் என்கின்றார்கள்.
ஹாலிவுட் ஸ்டார் ஆர்னால்டு விரைவில் வரலாம் என்கிறது ஒரு கூட்டம்.
ஆம், ஹிலாரியும் வந்து மருத்துவரிடம் பேசியிருப்பார், இந்த டிரம்ப் என்பவரால் அம்மணிக்கு ஏக பிரச்சினை.
அந்த டிரம்ப் கலைஞர் கட்சியாக இருக்கலாமோ?
இன்னும் சற்று நேரத்தில் ஜெ.வை சந்திக்க அப்பல்லோ வருகிறார் ராகுல்
இன்றைய விசிட்டிங் பிரபலம், பெரும் பிரபலமாய் இருக்கின்றது. இவர் என்ன சொல்கின்றார் என பார்க்கலாம்
அவருக்கென்ன அவர் வந்துவிட்டு உடனே கிளம்பிவிடுவார், ஆனால் அதன் பின் தமிழக காங்கிரசார் ஒவ்வொருவராக சென்று பார்த்து அறிக்கை இம்சை விடுவதை தாங்க எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
இளங்கோவன் செல்வாரா? யாரும் முதல்வரை இன்னும் நேரடியாக சந்தித்ததாக தகவல் இல்லை என்பதால் அவரும் செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது
நீண்டநாள் சிகிச்சையில் முதல்வர் இருக்கவேண்டும் என அப்பல்லோ சொல்லிவிட்டதால் இனி பல இன்னிங்க்ஸ்களில் தலைவர்கள் வருவார்கள்
எல்லாம் பேசிமுடித்து ஒரு தீர்வுக்கு வந்தபின் நிச்சயம் கலைஞரும் செல்வார், அடித்து சொல்லலாம்
அவர் அப்படிபட்டவர். அரசியல் தாண்டியும் சில விஷயங்களில் அவர் பண்பு வேறு
அதனால் நிச்சயம் வருவார்.
கொசுறு
முதல்வரை கி.வீரமணி இன்னும் நலம் விசாரிக்க செல்லாதது ஏன்?
கடவுள் நம்பிக்கை போலவே இப்பொழுது மருத்துவர்கள் மீதான நம்பிக்கையும் போய்விட்டதாக இருக்குமோ?
சீக்கிரம் செல்லுங்கள் வீரமணி, என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் உங்கள் கண்முன் சமூக நீதியினை காத்த வீராங்கனை அல்லவா?
No comments:
Post a Comment